PDA

View Full Version : ஒலிம்பிக் : வியப்பூட்டும் தகவல்கள்..!ராஜா
14-08-2008, 06:16 AM
http://www.olympicgames.lt/wp-content/uploads/2008/05/800px-olympic_flag_svg.png


ஒலிம்பிக் கொடி..

பியர் டி கூபர்டின் என்பவரால் 1914 ல் வடிவமைக்கப்பட்டது. என்றாலும் 1920 ல் தான் நடைமுறைக்கு வந்தது.

ஐந்து வட்டங்களும் அப்போதைய ஐந்து கண்டங்கள். நட்புணர்வை வெளிப்படுத்த, எல்லாம் ஒன்றோடொன்று கை கோர்த்திருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே.

ஐந்து வட்டங்களும் ஐந்து நிறங்கள் கொண்டவை. இது ஏன் என்று தெரியுமா..?

இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் ஏதாவது ஒன்று.... அனைத்து நாடுகளின் தேசியக்கொடிகளிலும் இடம் பெற்றிருப்பதே காரணம்..!


ஒலிம்பிக்கின் குறிக்கோள் வாசகம்..

"விரைவாக... உயரமாக.. வலுவாக.." இதை வடிவமைத்தவரும் நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று போற்றப்படும் பியர் டி கூபர்டின் தான்..!

தன் நண்பர், "ஃபாதர் ஹென்றி டைடோன்" என்பாரிடமிருந்து அறிந்துகொண்ட இலத்தீன் சொற்களான
சிடியஸ், ஆல்டியஸ், போர்ஷியஸ் என்பனவற்றின் வேற்று மொழி வடிவங்களே ஒலிம்பிக் குறிக்கோள் வாசகங்கள்..!

சிவா.ஜி
14-08-2008, 06:21 AM
உண்மையாகவே எனக்கு இதுவரைத் தெரியாத செய்தி. இன்று தெரிந்துகொண்டேன். பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி ராஜா சார்.

ராஜா
14-08-2008, 06:27 AM
ஒலிம்பிக் உறுதிமொழி..

ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் அனைத்து வீரர்கள் சார்பாக ஒரு வீரர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் செய்தி நீங்கள் அறிந்ததே.

இதையும் கூபர்டின் தான் 1920 போட்டிகளில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். முதன்முதலில் இவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டவர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்திச்சண்டை வீரர் விக்டர் போயின்.

உறுதிமொழி வாசகம்..

"In the name of all competitors, I promise that we shall take part in these Olympic Games, respecting and abiding by the rules that govern them, in the true spirit of sportsmanship, for the glory of sport and the honor of our teams."

"'விளையாட்டு வீரர்களாகிய நாங்கள், உண்மையான விளையாட்டு உணர்வோடு, எங்கள் அணியின் மேன்மையையும் புகழையும் உயர்த்தும் வண்ணம் இந்த ஒலிம்பிக் போட்டிகளில், விதிகளை மதித்து அதன்படி நடப்போம்' என்று, அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதி கூறுகிறேன்."

ராஜா
14-08-2008, 06:44 AM
ஒலிம்பிக் சுடர்..!

ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நடைமுறை, பழங்கால ஒலிம்பிக்ஸிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பியா(கிரீஸ்)வில் சூரியனின் ஒளியிலிருந்து சுடர் ஏற்றப்பட்டு, போட்டிகள் முடியும் நாள்வரை அணையாது பாதுகாக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

தற்போது இருக்கும் சுடர், 1928 ல் ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் ( இன்னொரு சம்பவமும் நினைவில் இருக்கிறது அல்லவா..?) முதன் முதல் பொருத்தப்ப*ட்டது.

தூய்மை, புனிதம், முழுமை உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை ஒலிம்பிக் சுடர் சித்தரிக்கிறது.

இப்போது உலகமெங்கும் உலாவரும் சுடர் ஏந்தித் தொடரோட்டம் என்னும் நடைமுறை..1 936 ல் அப்போதைய ஒலிம்பிக் அமைப்புக்குழு தலைவர் கார்ல் டியெம் என்பாரால் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

பழங்கால ஒலிம்பிக் நிகழ்விடமான 'ஒலிம்பியா'வில் குவி ஆடி மூலம், சூரியக்கதிர்கள் ஒருமுகமாக குவிக்கப்பட்டு, சுடர் உயிர் பெறுகிறது. பின்னர் ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். போட்டி முடிவடையும்வரை அணையாவிளக்காக சுடர் விடும்.

பழங்கால போட்டிகளில் இருந்து நவீன ஒலிம்பிக்குக்கு தொடர்வதை குறிப்பிடும்வகையில் சுடர் தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படுகிறது.

ராஜா
14-08-2008, 06:56 AM
http://farm1.static.flickr.com/184/467124441_8e65542d40.jpg

பதக்கங்கள்.

1912 *வரை தங்கப்பதக்கங்கள் உண்மையாகவே தங்கத்தில் இருந்தன..! அப்படியானால் இப்போதைய தங்கப்ப தக்கம்..? ஹி..ஹி.. இருங்க சொல்றேன்..

இப்போதைய பதக்கங்கள், போட்டிகளை நடத்தும் நாட்டின் ஒலிம்பிக் அமைப்புக்குழுவால் வடிவமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதக்கமும், குறைந்தது 3 மி.மீ. கனமும், 60 மி.மீ. விட்டமும் கொண்டிருக்க வேண்டும். தங்க, வெள்ளி பதக்கங்கள் குறைந்தது 92.5 விழுக்காடு வெள்ளி உலோகம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

தங்கப்பதக்கத்தின் மீது 6 கிராம் அளவுக்காவது தங்க முலாம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

ராஜா
14-08-2008, 07:08 AM
நாடல்ல... நகரம்..!

ஒலிம்பிக் போட்டிகள், அவை நிகழவிருக்கும் நாடுகளின் பேரில் குறிப்பிடப்படுவதில்லை. நகரத்தின் பெயரில்தான் குறிப்பிடப்படுகின்றன.

{உ _ ம்} சீனா ஒலிம்பிக்ஸ் அல்ல.. பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்..!


ஒலிம்பிக் கீதம்.

ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்போது ஒலிம்பிக் இசை முழங்குகிறது. அதற்கு இசையமைத்தவர், ஸ்பைரோஸ் சமராஸ். கவிதை..? கோஸ்டிஸ் பலாமாஸ்..! ( ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப காத்து அடிக்குதில்ல..?)

முதன் முதல் கீதம், 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் இசைக்கப்பட்டது. எனினும் 1957 ல் தான் அதிகாரப்பூர்வ அஸ்தஸ்து, ஐ ஓ சி யால் வழங்கப்பட்டது.

அமரன்
14-08-2008, 07:25 AM
நல்லதொரு ஆவணத்தொகுப்பு.. என்னைப் போன்ற சூன்யங்களுக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் பயன் தர வல்லது. நன்றி அண்ணா..

ராஜா
14-08-2008, 07:29 AM
நவீன ஒலிம்பிக்கின் (1896) முதல் தங்கப் பதக்கம் பெற்றவர்..

ஜேம்ஸ் பி கன்னோலி. (அமெரிக்கா)

நவீன ஒலிம்பிக்ஸில் முதல் (பதக்கத்தைத் தீர்மானிக்கும் ) போட்டியான தத்தி, தப்படி, தாண்டுதலில் வெற்றி பெற்று அந்தச் சாதனையைச் செய்தார்.


முதல் மாரத்தான் வீரர்..

கி.மு. 490 ல் ஃபெய்டிப்பிடெஸ் என்னும் கிரேக்க போர்வீரர், பெர்சியர்களின் ஊடுருவலைப் போராடி வென்ற கிரேக்க படையின் வெற்றிச்செய்தியை ஏதென்சுக்கு சுமார் 25 மைல் தூரம் ஓடிவந்து அறிவித்தார். அவரது வெற்றுக்கால்களில் கல்லிலும், முள்ளிலும், காட்டிலும், மேட்டிலும் ஓடிவந்ததால் இரத்தம் வழிந்தது. இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், ஃபெய்டிபிடெஸ் அங்கேயே விழுந்து மரணமடைந்தார்.

1896 ல் ஃபெய்டிப்பிடெஸின் தீரத்தை போற்றும் விதமாக, ஏறக்குறைய 25 மைல் தூர ஓட்டப்பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே மாரத்தான்..!
இன்னும் ஏராளமான உண்மைகளும் அதிசயங்களும் உள்ளன.. களமும், காலமும், கை விரல்களும் அனுமதிக்குமானால் அவை அனைத்தையும் அறியத் தருகிறேன்.

தீபா
14-08-2008, 07:35 AM
ஆஹாஅ அர்ருமையான தகவல்கள்....

செல்வா
14-08-2008, 08:10 AM
தெரியாதப் பலவற்றைத் தெரியத் தந்த இராஜா அண்ணாவுக்கு நன்றிகள்.

அக்னி
15-08-2008, 07:09 PM
அருமையான அரிய தகவல்கள்...
பகிர்ந்து கொண்ட ராஜா அண்ணாவுக்கு நன்றிகள்...

களமும், காலமும், கைவிரல்களும் என்றும் உங்களை மன்றத்துக்குள்,
அனுமதித்துக் கொண்டிருக்கட்டும்...

அறிஞர்
15-08-2008, 07:52 PM
சுவாரய்சமான தகவல்கள்.. நன்றி ராஜா...

இன்னும் தொடருங்கள்.. தெரிந்துக்கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்.

mukilan
16-08-2008, 01:05 AM
விளையாட்டுத் தகவல் பெட்டகமே! சுவையான வியத்தகு தகவல்கள். நன்றி! நன்றி!!

ராஜா
16-08-2008, 04:35 AM
http://tbn0.google.com/images?q=tbn:_96HCtE5MCSYyM:http://www.mercycycling.com/pics/2008/graphics/olympic-logo.gif

மகாராணிக்காக மாற்றப்பட்ட மாரத்தான் தூரம்..!

1908 ஒலிம்பிக் வரை, மாரத்தான் பந்தய தூரம் ஏறக்குறைய 25 மைல் என்ற அளவில்தான் இருந்தது. 1908 ல் மாரத்தான் பந்தயத்தை, தன் வின்ட்சர் கோட்டையிலிருந்து துவக்குமாறு அரச குடும்பம் கேட்டுக்கொண்டது.. தங்கள் செல்லக் குழந்தைகள் பந்தயம் துவங்குவதை பார்க்க விரும்புவதால் அவ்வாறு செய்யவேண்டும் என்று கோரப்பட்டது.

அரசாங்க கோழிமுட்டை ஏழை வீட்டு அம்மிக் கல்லையே உடைக்கும்போது இது எம்மாத்திரம்..? பந்தயம் அங்கிருந்தே துவக்கப்பட்டு ஒலிம்பிக் அரங்கம் வந்தடைந்தது. இடைப்பட்ட தூரமான, 42.195 கி.மீ (26 மைல், 385 கெஜம்) 1924 ல் இருந்து மாரத்தான் பந்தய தூரமாக கணக்கில் கொள்ளப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

ராஜா
16-08-2008, 04:38 AM
http://tbn0.google.com/images?q=tbn:_96HCtE5MCSYyM:http://www.mercycycling.com/pics/2008/graphics/olympic-logo.gif

1900 ஒலிம்பிக் முதல்தான் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

ராஜா
16-08-2008, 04:50 AM
http://tbn0.google.com/images?q=tbn:_96HCtE5MCSYyM:http://www.mercycycling.com/pics/2008/graphics/olympic-logo.gif


முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக, 1916, 1940, 1944 ஒலிம்பிக்குகள் நடைபெறவில்லை.

1924 வரை விளையாடப்பட்டுவந்த டென்னிஸ் போட்டிகள் பின்னர் தடை செய்யப்பட்டுவிட்டன.

1988 ல் தான் மீண்டும் ஒலிம்பிக்கில் டென்னிஸ் அனுமதிக்கப்பட்டது. அதில் தங்கம் வென்றதுடன் அல்லாது, மற்றைய டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அனைத்தையும் அதே (1988) ஆண்டில் வென்று கோல்டன் ஸ்லாம் சாதனை செய்த ஒரே டென்னிஸ் நட்சத்திரம் யார் தெரியுமா..?

ஸ்டெஃபி கிராஃப்.. (ஜெர்மனி)

ராஜா
16-08-2008, 05:00 AM
http://tbn0.google.com/images?q=tbn:_96HCtE5MCSYyM:http://www.mercycycling.com/pics/2008/graphics/olympic-logo.gif


ஜிம்னாசியம் என்றால் என்ன தெரியுமா..?

ஜிம்னாசியம் என்ற சொல் கிரேக்க சொல்லான 'ஜிம்னோஸ்' என்பதிலிருந்து உருவானது. ஜிம்னோஸ் என்றால் நிர்வாணம் என்று பொருள்.ஜிம்னாசியம் என்றால் நிர்வாண உடற்பயிற்சிப் பள்ளி என்று பொருள்.

பண்டைய ஒலிம்பிக்கில் வீரர்கள் நிர்வாணமாகத்தான் பங்கேற்றனராம்..!

ராஜா
16-08-2008, 05:11 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif


ஸ்டேடியம் என்ற சொல் வந்தது எப்படி..?

முதன் முதலில் கி.மு. 776 ல் ஒலிம்பிக் போட்டி நடந்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது நடந்த ஒரே போட்டிக்குப் பெயர் 'ஸ்டேட்'. ( the stade.).

ஸ்டேட் என்றால் சுமார் 600 அடி தொலைவைக் குறிக்கும். அந்த தூரம்தான் முதல் ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயம் நடந்தது. அந்த பந்தயத்துக்கு பெயர் 'ஸ்டேட்' என்றும், அது நடக்கும் இடம் 'ஸ்டேடியம்' என்றும் வழங்கலாயிற்று.

ராஜா
16-08-2008, 05:42 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

ஒலிம்பியாட் என்றால் என்ன..?

ஒரு ஒலிம்பியாட் என்பது 4 ஆண்டுகள். ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுக்கொரு முறை நிகழ்கின்றன. அவ்வகையில் 1896 ல் நிகழ்ந்த நவீன ஒலிம்பிக் போட்டி, முதல் ஒலிம்பியாடாகக் கொண்டு (இடையில் உலகப்போர்களால் 3 ஒலிம்பிக்குகள் ஸ்வாஹா ஆனாலும்கூட அவையும் சேர்க்கப்பட்டு..) தற்போதைய பெய்ஜிங் ஒலிம்பிக் 29 ஆவது ஒலிம்பியாட் என்று குறிப்பிடப்படுகிறது.

அடுத்த 30 ஆவது ஒலிம்பியாட் எங்கு தெரியுமா..?

லண்டன். (2012).


http://www.theage.com.au/ffximage/2007/06/06/2012_narrowweb__300x338,0.jpg

ராஜா
16-08-2008, 06:10 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

நவீன ஒலிம்பிக் போட்டிகள் : ஆண்டு, நிகழ்ந்த இடம்.


1896 ஏதென்ஸ் , கிரீஸ்,
1900 பாரீஸ், ஃப்ரான்ஸ்.
1904 செயிண்ட் லூயிஸ், அமெரிக்கா.
1908 லண்டன், இங்கிலாந்து.
1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்.
1916 நடக்கவில்லை.
1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்.
1924 பாரீஸ், ஃப்ரான்ஸ்.
1928 ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து.
1932 லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.
1936 பெர்லின், ஜெர்மனி.
1940 நடக்கவில்லை.
1944 நடக்கவில்லை.
1948 லண்டன், இங்கிலாந்து.
1952 ஹெல்சிங்கி, ஃபின்லாந்து.
1956 மெல்பர்ன், ஆஸ்திரேலியா.
1960 ரோம், இத்தாலி.
1964 டோக்யோ, ஜப்பான்.
1968 மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ.
1972 மியூனிச், (மேற்கு) ஜெர்மனி.
1976 மாண்ட்ரீல், கனடா.
1980 மாஸ்கோ, சோவியத் ரஷ்யா.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.
1988 சியோல், தென் கொரியா.
1992 பார்சலோனா, ஸ்பெயின்.
1996 அட்லாண்டா, அமெரிக்கா.
2000 சிட்னி, ஆஸ்திரேலியா.
2004 ஏதென்ஸ், கிரீஸ்.

2008 பெய்ஜிங், சீனா.

2012 லண்டன், இங்கிலாந்து.

இளசு
16-08-2008, 06:52 AM
[B][COLOR="Navy"]இன்னும் ஏராளமான உண்மைகளும் அதிசயங்களும் உள்ளன..
களமும், காலமும், கை விரல்களும் அனுமதிக்குமானால்
அவை அனைத்தையும் அறியத் தருகிறேன்.


மூன்றும் முழுதாய் அனுமதிக்க -
முத்துகள் இன்னும் கொ(ட்)டுங்கள் இங்கே!

தங்கமங்கை ஸ்டெபி, அம்மியை உடைத்த அரண்மனை முட்டை -
அசத்தலான தகவல்கள்.. அருமை ராஜா அவர்களே!

சுவையாகக் கற்பிக்கும் வளமைக்கு வந்தனம்!

aren
16-08-2008, 11:03 AM
ஐயோ இத்தனை விஷயங்கள் இருக்கிறது. ஒன்றுகூட எனக்கு இதுவரை தெரியாது. இன்னும் கொடுங்கள் தெரிந்துகொள்கிறேன்.

ராஜா
19-08-2008, 04:16 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

1896 ஏதென்ஸ் * முதல் நவீன ஒலிம்பிக்ஸ்..


* முதலாவதாக வந்து வெற்றி பெற்றோருக்கு வெள்ளிப்பதக்கமும், இரண்டாமிடம் பெற்றோருக்கு வெண்கலமும் அளிக்கப்பட்டது. (அதாவது, தங்கப் பதக்கம் கிடையாது..!)

* சர்வதேச போட்டி என்று அழைக்கப்பட்டாலும், 13 நாடுகளே பங்கு பெற்றன. சுமார் 300 வீரர்கள் போட்டியிட்ட, 1896 ஒலிம்பிக்ஸில், மூன்றில் இருவர் கிரேக்கர்கள்..!
________________________________________________________________

1900 பாரீஸ் ஒலிம்பிக்ஸ்..

* போட்டிகளைக் காண வந்திருந்த பார்வையாளர்களைவிட, பங்குபெற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகம்..!

* முதலாவது குழு விளையாட்டாக, கால்பந்து இடம்பெற்றதும் இந்த ஒலிம்பிக்கில்தான்..!

* முதலாவது பதக்கம் வென்ற வீராங்கனை என்று வரலாற்றில் இடம்பிடித்தவர், ஷார்லோட் கூப்பர் (இங்கி) டென்னிஸ் ஒற்றையர் போட்டி.

* அதே ஒலிம்பிக்கில் இன்னொரு அநியாயமும் அரங்கேறியது. புறாக்களைப் பறக்கவிட்டு அவற்றை சுட்டுவீழ்த்தும் போட்டிதான் அது..! நல்லவேளையாக அந்த ஒலிம்பிக்குடன் அந்த விபரீதப் போட்டி முடிவுக்கும் வந்தது.

ராஜா
19-08-2008, 04:32 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

1904 செயிண்ட் லூயிஸ். (அமெரிக்கா) ஒலிம்பிக்ஸ்..

* இதுவும் சர்வதேச பங்கேற்ற போட்டி என்று கூறவியலாத ஒன்றாகவே இருந்தது. 85 விழுக்காடு வீரர்கள் அமெரிக்கர்கள். 8 விழுக்காட்டினர் கனடியர்கள். ஒரே ஒரு வீரர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர். பிரிட்டிஷார் எவருமிலர்..!
__________________________________________________________________

1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸ்..

* அமெரிக்கச் செவ்விந்தியரான ஜிம் தார்ப், டெக்கத்லான் மற்றும் பெண்டத்லான் போட்டிகளில் தங்க பதக்கங்கள் வென்றார்.. ஆனால், அவர் ஒருமுறை தொழில்முறை பேஸ்பால் போட்டியில் பங்கேற்றவர் என்பதைக் காரணம் காட்டி, அவரிடமிருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டுவிட்டன..!

* நீச்சலில் முதன்முதலாக தங்கம் வென்ற பெண் என்னும் பெருமை, ஆஸி வீராங்கனை சாரா ட்யூராக் என்னும் அம்மணியைச் சாரும்..! அம் 'மணி' வென்றது 100 மீ. ஃப்ரீ ஸ்டைல் போட்டியில்..!!

ராஜா
19-08-2008, 04:44 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif


1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்ஸ்..

* இந்தப் போட்டியிலிருந்துதான், ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கும் நடைமுறை துவங்கியது.
__________________________________________________________________


1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்..

* அமெரிக்க வீராங்கனை மில்ட்ரெட் டிட்ரிக்சென், உயரத் தாண்டுதல், தடை ஓட்டம், ஈட்டி எறிதல் ஆகிய மூன்றிலும் தங்கம் வென்றார். இம்மூன்றிலும் தங்கம் வென்ற ஒரே நபர் என்ற சாதனை இன்றளவும் மிஞ்சப்படாமல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
________________________________________________________________

1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ்..

* முதன்முதலாக போட்டிகள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. (தடகளப் போட்டிகளில், தடங்கல் ஓட்டத்தை ஒளிபரப்புகையில் எத்தனை முறை தடங்கலுக்கு வருந்தினார்கள் என்ற விபரம் தெரியவில்லை..!)

ராஜா
19-08-2008, 05:01 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

1948 லண்டன் ஒலிம்பிக்ஸ்..

* புகழ்பெற்ற வெம்ப்ளி அரங்கத்தில் போட்டிகள் துவங்கிய ஜூன் 29ம் நாள், வேறொரு நிகழ்வாக லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸி அணியிடம், 409 ஓட்டங்கள் வேறுபாட்டில் மரண அடி வாங்கியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி..!

* ஹாலந்து நாட்டு வீராங்கனை, ஃபானி ப்ளாங்கர்ஸ் கோயன், தடகளப் போட்டிகளில் 4 தங்கங்களைக் குவித்தார். இதில் என்ன புதுமை என்று கேட்போருக்காக..

30 வயது ப்ளாங்கர்ஸ், 2 குழந்தைகளுக்குத் தாய்..! ( அம்மணி ரெம்ப பிஸியாட்ருக்குங்..!)
__________________________________________________________________


1952 ஹெல்சிங்கி...

* சோவியத் ரஷ்யா முதன்முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

* ஒரே ஒலிம்பிக்கில், 5000மீ, 10,000மீ மற்றும் மாரத்தான் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே மனிதர் என்ற சாதனை படைத்தவர்.. எமில் ஜடோபெக்.. (செக்கோஸ்லோவேகியா).

Mano.G.
19-08-2008, 05:09 AM
யப்பா!! சொல்ரதுக்கு ஒன்னுமே
இல்லை எங்கையா கெடச்சது இந்த தகவல்கள் அற்புதம் ,

தக்க நேரத்துல சொன்ன செய்திகள்.

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

ராஜா
19-08-2008, 05:31 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif

1956 மெல்பர்ன் ஒலிம்பிக்ஸ்..

* உலகின் தென்பாதிக்குச் சென்ற முதல் ஒலிம்பிக்ஸ் இதுவே..!

* ஒலிம்பிக் சுடரை அரங்கத்துக்குள் உயர்த்திச் சென்ற 19 வயது இளைஞரை அப்போதைய விளையாட்டு உலகம் அறிந்திருக்கவில்லை. பின்னாளில், (அறுபதுகளில்) தொலைதூர ஓட்டப்பந்தயங்களில் புகழ்பெற்ற ரான் க்ளார்க் என்பாரே அவர்.
__________________________________________________________________

1964 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்..

* எத்தியோப்பிய மாரத்தான் வீரர், அபேபே பிகிலா அடுத்தடுத்த ஒலிம்பிக்குகளில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதில் இன்னொரு சங்கதியும் இருக்கு.. இரண்டாவது தங்கம் வென்றபோது மட்டுமே அவர் காலணி அணிந்து ஓடினார்..!

ராஜா
19-08-2008, 05:46 AM
http://www.williambrahms.com/images/OlympicLogo_100x100.gif


1968 மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக்ஸ்..

* உயரமான இடத்தில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்ஸ் இதுவே.. (கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2240 மீ). உலகின் "உயர்ந்த" விளையாட்டுப் போட்டி என்று சொல்லலாம்தானே..?
__________________________________________________________________

1972 ம்யூனிச் ஒலிம்பிக்ஸ்..

* மிகவும் முதிர்ந்த வயதில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.. இங்கிலாந்து குதிரை ஏற்றப் போட்டி வீராங்கனை லார்னா ஜான்ஸ்டன். வயசு..?
அதிகமில்லை மக்களே.. 70 வயது முடிந்து 5 நாட்களே ஆகியிருந்தது. (போட்டியில் பாட்டி..??????)

* இப்போதைய ஒலிம்பிக்ஸில் ஃபெல்ப்ஸ் மிஞ்சிக்காட்டிய, ஒரே ஒலிம்பிக்கில் (நீச்சலில்) 7 தங்கம் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டதும் 1972 ஒலிம்பிக்கில்தான்.. சாதனையாளர்..?

மார்க் ஸ்பிட்ஸ் (அமெரிக்கா). ஏழு தங்கங்களுமே உலகச்சாதனை நேரங்கள்..!

அறிஞர்
19-08-2008, 02:03 PM
ஓவ்வொரு தகவலும் வெகு அருமை..

மன்மதன்
19-08-2008, 02:18 PM
இதுவரை அறிந்திராத தகவல்களை திரட்டி தரும் ராஜாண்ணாவுக்கு நன்றி..

இந்தியாவில் ஒலிம்பிக் நடக்க வாய்ப்புள்ளதா?

arun
19-08-2008, 06:39 PM
ஒலிம்பிக் பற்றி அரிய பல தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி