PDA

View Full Version : மகா மோசமான தர வரிசையில் சச்சின்..!ராஜா
14-08-2008, 04:10 AM
http://thatstamil.oneindia.in/img/2008/08/sachin11250_13082008.jpg


துபாய்: தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் 23வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு 23வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சச்சின் போனதில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க சச்சினுக்கு 171 ரன்களே தேவைப்பட்டது. இதை இலங்கை டெஸ்ட் தொடரில் சாதித்து விடுவார் என எல்லோருமே எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கை தொடரில் மொத்தமே 95 ரன்களை மட்டுமே எடுத்து
சாதனையை தவற விட்டார் சச்சின்.

இலங்கை தொடருக்குப் போனபோது அவர் 13வது ரேங்க்கில் இருந்தார். ஆனால் இலங்கை தொடரில் மோசமாக விளையாடியதால் 23வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

1992ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு மோசமான ரேங்குக்கு சச்சின் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

முதல் பத்து இடங்களில் கடைசியாக 2002ம் ஆண்டுதான் இருந்தார் சச்சின். அதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான். கடந்த 6 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூடமுதல் பத்து இடங்களுக்குள் வரவே இல்ைல.

ஆனால் வீரேந்திர ஷேவாக்குக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மார்ச்சுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தற்போதைய நிலவரப்படி முதல் பத்து இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீரர் ஷேவாக் மட்டுமே.

இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 344 ரன்களைக் குவித்த ஷேவாக் டெஸ்ட் தர வரிசையில், 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவருக்கு அடுத்துள்ள வீரர் வி.வி.எஸ்.லட்சுமண். இவர் 15வது இடத்தில் இருக்கிறார்.

முன்னாள் கேப்டன் ராகுல்டிராவிட் 16வது இடத்தில் இருக்கிறார். தர வரிசையில் இரு இடங்கள் முன்னேறியுள்ளார் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினை விட மோசமான நிலையில் இருப்பவர் கங்குலி. அவர் 25வது ரேங்க்கில் உள்ளார். இதற்கு முன்பு 26வது இடத்தில் இருந்தார். அந்த வகையில் கங்குலி பரவாயில்லை.

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோர் தலா ஒரு ரேங்க் குறைந்து, முறையே 10, 12, 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வழக்கம் போல முத்தையா முரளீதரன்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அஜந்தா மெண்டிஸ், முதல் 30 இடங்களுக்குள் முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மூலம் : தட்ஸ் தமிழ்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

தீபா
14-08-2008, 04:34 AM
அவரும் எத்தனை நாளைக்குத்தான் தொடர்ந்து பத்து இடத்துக்குள்ள இருக்கிறது!!!!!

என்னைக் கேட்டா, நல்லா சிறப்பா ஆடிட்டு இருக்கும்போதே ரிடயர்ட் ஆகிறதுதான் அவருக்கு சிறப்பு!!!!!

இளையவருக்கு வழி விடலாம்..

(பேட்ல அடிச்சா, பதிலடி கொடுத்துட்டாருனு எல்லாத்தையும் மறக்கறதும் நம்மாளுங்கதான், இந்தமாதிரி ரேங்கிங் கீழ வந்தாலும், ஒழுங்கா ஆடறதில்லைனு சொல்றதும் நம்மாளுங்கதான்...)

அய்யோ அய்யொ!!

உதயசூரியன்
14-08-2008, 05:04 AM
சச்சின்.. போன்றோர்.. தேவைக்கு அதிகமாக இந்தியாவிற்கு பெயர் எடுத்து கொடுத்தனர்..
அவரே 10 இடத்தில் வரனும்னு நினைப்பது போதும்.. இளையவர்கள் இத்தனை பேர் வருவதும் போவதுமாக இருக்கிறார்களே...???
அவர்களை என்னத்தை சொல்வது...??
வாழ்க தமிழ்

shibly591
14-08-2008, 05:16 AM
அவர் ரிடயரட் ஆவதே சரியான வழி...

கில்கிறிஸ்ட் திறமையை அஷஅதிகம் வெளிப்படுத்த வாய்ப்பஷபு இருந்தும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தார் இல்லையா...???

அதுவும் ஒரு வீரனுக்கு அவசியமானதே...

பாவம் சச்சின்..

தீபா
14-08-2008, 05:17 AM
சச்சின்.. போன்றோர்.. தேவைக்கு அதிகமாக இந்தியாவிற்கு பெயர் எடுத்து கொடுத்தனர்..
அவரே 10 இடத்தில் வரனும்னு நினைப்பது போதும்.. இளையவர்கள் இத்தனை பேர் வருவதும் போவதுமாக இருக்கிறார்களே...???
அவர்களை என்னத்தை சொல்வது...??
வாழ்க தமிழ்

கரீட்டா ொன்னீங்க,....!!!!!!!!! :)

ராஜா
14-08-2008, 05:29 AM
அவர் ரிடயரட் ஆவதே சரியான வழி...

கில்கிறிஸ்ட் திறமையை அஷஅதிகம் வெளிப்படுத்த வாய்ப்பஷபு இருந்தும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தார் இல்லையா...???

அதுவும் ஒரு வீரனுக்கு அவசியமானதே...

பாவம் சச்சின்..

கில்லிக்கும் ஆண்டுக்கு 100 கோடி வருமானம் வந்தால் ஓய்வு எடுத்திருப்பாரா நண்பரே..!

நீங்ககூட மேலெழுந்தவாரியாக கருத்து தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது அன்பரே..!

ஓவியன்
14-08-2008, 05:55 AM
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

ஆமாம், சச்சின் முன்பு தன் நிலை அறிந்திருந்தார்...
ஆனால், இப்போது தன்னிலை அறியாமல் இருக்கிறார்..!!

அதனால்தான் இந்த தலை குனிவு..!! :rolleyes:

தீபன்
16-08-2008, 03:30 AM
ஏறுமுகம் இறங்கு முகம் விளையாட்டில் சகஜம்தானே... அவரவிட வயசான ஜெயசூரியா விளையாடலையா... சொதப்பலா விளையாடி ஓய்வெடுத்து மீண்டும்வந்த்து கலக்கலையா... இயலாமல்போகும்போதுதான் ஓய்வெடுக்கணும்... இளையவர்களுக்கு வளிவிடணும்னு சொல்வது இளையவர்களை கேவலப்படுத்துவதுபோல் உள்ளது. அவர்களுக்கான வளியை அவர்கள் தங்கள் தகுதியை கொண்டு உருவாக்கணும். வளிவிடுவதென்றால் அது பிச்சை எடுப்பதுபோலல்லவா...
ரஜினி சிறப்பு வேடமென்றாலும் குசேலன் ரஜினி படம்... அதுபோல் சச்சின் சிறப்பா விளையாடாட்டாலும் அது சுவாரஸ்யமான கிரிக்கெட்தான்.

மதுரகன்
18-08-2008, 06:28 PM
ரஜினி சிறப்பு வேடமென்றாலும் குசேலன் ரஜினி படம்... அதுபோல் சச்சின் சிறப்பா விளையாடாட்டாலும் அது சுவாரஸ்யமான கிரிக்கெட்தான்
இது பேச்சு

இது போன்ற நிலைமைகளும் பிரச்சினைகளும் சச்சினுக்கு புதிதல்ல
தன்னைப்பற்றி விமர்சனங்கள் எழும்போதெல்லாம் துடுப்பால் பதிலளிப்பார்.
இந்தத்தொடரில் சச்சின் சரியாக செய்யவில்லைதான் ஆனால் ஒரு தொடரை வைத்து முடிவெடுக்க இயலாது இதற்கு முந்தைய தொடரில் இரண்டு செஞ்சரிகள் அடித்து தொடரில் அதிகளவு ஓட்டங்களை குவித்திருந்ததை மறக்க இயலாது..

arun
18-08-2008, 07:20 PM
விளையாட்டுல அப்ல இருக்குறவங்க டவுனுக்கும் டவுன்ல இருக்கறவங்க அப்புக்கும் போறது சகஜம்

aren
19-08-2008, 12:23 AM
ஏற்கெனவே விளம்பர வருமானம் பாதியாக குறைந்துவிட்டது. இனிமேல் வேறு எது குறைந்தால் என்ன. ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன.

அடுத்து ரிடையர்மெண்ட்தான் பாக்கி.

"பொத்தனூர்"பிரபு
24-08-2008, 05:58 PM
......................
ஏறுமுகம் இறங்கு முகம் விளையாட்டில் சகஜம்தானே... அவரவிட வயசான ஜெயசூரியா விளையாடலையா... சொதப்பலா விளையாடி ஓய்வெடுத்து மீண்டும்வந்த்து கலக்கலையா... இயலாமல்போகும்போதுதான் ஓய்வெடுக்கணும்... இளையவர்களுக்கு வளிவிடணும்னு சொல்வது இளையவர்களை கேவலப்படுத்துவதுபோல் உள்ளது. அவர்களுக்கான வளியை அவர்கள் தங்கள் தகுதியை கொண்டு உருவாக்கணும்.//////////////

சரியா சொன்னீங்க
தொடர்ந்து ஒருவர் சிறப்பக விளையாட முடியாது
சச்சின் மிக சிறந்த வீரர்
சமீபத்திய ஆஸ்திராலியா தொடரில் அவர் சிறப்பாகத்தான் செயல்பட்டார்
இடைவேளை விட்டு விளையாடுவதால் அப்படி தோனுது