PDA

View Full Version : மரண சாகுபடி



சிவா.ஜி
13-08-2008, 02:51 PM
துப்பாக்கிப் பிடித்து
தோட்டா நட்டு
செந்நீர் பாய்த்து
தலை அறுவடை....
"போர"டித்து உயிர் பிரித்து....
நிறைந்த குதிர்களாய் கல்லறைகள்!

தீபா
13-08-2008, 02:56 PM
பல்வேறு கல்லறைகளில் இதுவும் ஒன்று.

எனக்கென்னவோ கவிதையில் ஒரு Zigzag தெரிகிறது.. புரிதலின்பிழையாக இருக்கக்கூடும்.

மரண சாகுபடி.. தலைப்பே கவிதை!! உள்கட்டமைப்பும் அழகு

இளசு
13-08-2008, 05:40 PM
நீண்ட நாட்களுக்குப் பின் சிவாவின் கவிதை!

உவமைகள் திரிபடாமல்
உள்ளம் வலிக்கும் உண்மை சொல்கின்றன..

நமக்கு என்றால் -
பரங்கியர் தலைகளைப் போரடித்து
நெற்கதிர்களாகக் குவித்துவிடும் ஜாக்கிரதை..
எனப் பெருமைப்படும் நாம்...

பொதுவாகவே போர், தீவிரவாதம் இவற்றால் எந்த சேதமுமில்லை -
இவற்றால் இறந்தவர்களின் உறவுகளின் இழப்பைத் தவிர -
என்ற பொன்மொழியை இன்று எண்ணுகிறோம்..

காலம் மாறும் தன்மையது!

வன்முறை எதிர்க்கும் கவிதைக்கு வாழ்த்துகள் சிவா!

பூமகள்
13-08-2008, 05:46 PM
குறுங்கவியில்..
பெரும் அர்த்தம் புதைந்திருக்கிறது..

உவமைகளில்... அசத்தல்..
கவிதை தலைப்பே... இரு சொல் கவிதை..!!
பாராட்டுகள் சிவா அண்ணா. :)

உங்களின் முத்திரை பளிச்சிடும் கவிதைப் பகுதிக்கு அடிக்கடி வருகை தந்து படைப்புகள் தர எனது கோரிக்கை..!!!

இல்லாமல் போகட்டும்..
இவ்வகை போர்களும்..
இழப்புகளும்...!!

மனம் வெதும்புகிறது...
மனிதர் மனம் மாற வேண்டும்..!!

காலம் மாற்றுமென்று நம்புவோம். :)

அமரன்
13-08-2008, 05:52 PM
நமக்கு என்றால் -
பரங்கியர் தலைகளைப் போரடித்து
நெற்கதிர்களாகக் குவித்துவிடும் ஜாக்கிரதை..
எனப் பெருமைப்படும் நாம்...

போர்கள் பற்றிய என் பலநாள் நிலை.. உரிமைக்கான போர்.. அடக்குமுறைக்கான போர்.. அதர்மத்துக்கு எதிரான போர்.. அதிகாரப் போர்... இப்படி எப்படி சொன்னாலும் உயிர்பலி இருபக்கமும்தானே.. போரில்லா காலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒதுக்குப் புறமாக அமர்களம் அமைந்த இதிகாச காலமாவது மீண்டும் மலரட்டும் என்ற சின்ன ஆசை எனக்குள்.. தமிழ் மன்னர்கள் எங்கெங்கோ ஆண்டார்கள் என்று மார்த்தடும் நாம் வெள்ளையர்கள் எம்மை அடிமைப்படுத்தினார்கள் என்கிறோம்.. என்ன ஒரு முரண்... பசியும் பஞ்சமும் தம் ஆட்சிப்பரப்பை விஸ்தரித்தாலாவது இவர்கள் போராட்டம் திசை மாறுமோ.. அல்லது கிடைக்கும் செல்வத்தை சொந்தமாக்க அடித்துக் கொல்வார்களோ..

சிவா...
கவிதையின் முதல் நான்கு வரிகள் சொன்னதை கடைசி இரு வரிகள் "சுருக்"கமாகச் சொல்லிவிடுகின்றன. ஆனாலும் சாகுபடியை பொருத்தியதை ரசிக்க முடிகிறது.. காதலர்களுக்கு முரணும் இனிக்குமாமே.. உணர்ந்தேன். தொடர்ந்து விதைக்க வாழ்த்துக்கள்.

Keelai Naadaan
13-08-2008, 06:17 PM
வித்தியாசமான அதேசமயம் சரியாய் பொருந்தக்கூடிய உவமை. பாராட்டுக்கள்.
கலைஞர் வசனத்தில் சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் நாடகத்தில் போருக்கு பின் போர்க்களத்தில் புத்த பிட்சு சொல்கிறார்

அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக ஜோதி
அன்பு தான் உலக மகா சக்தி

அறிஞர்
13-08-2008, 07:33 PM
மரண சாகுபடி....
அன்பு எங்கும் பரவ வேண்டும்..
திருந்த வேண்டும் மக்கள்...

செல்வா
13-08-2008, 07:42 PM
சற்று ஆழ்ந்துச் சிந்தித்தாலே மனதை உலுக்கும் கவிதை. உலகையும் உலுக்கட்டும்.

ஆதி
13-08-2008, 08:11 PM
குருதிச் சேற்றில் நெடுநிலத்தை ஊற வைக்க
உறுதிப் பூண்ட வன்மனங்கள் ஓர்ந்து மாறி
இறுதியுற செய்யுமா கடியவைகளை..

வலியாலான கவிதை சிவா அண்ணா.. வாழ்த்த இயலவில்லை..

சிவா.ஜி
14-08-2008, 04:14 AM
நன்றி தென்றல். எப்போதும் போல நீட்டிமுழக்காமல், சொற்சிக்கனத்தைக் கையாள ஒரு முயற்சி. பிழையிருப்பின் பொறுக்கவும்.

சிவா.ஜி
14-08-2008, 04:18 AM
ஆம் இளசு. போர் செய்ய பலருக்கும் பல காரணங்கள். முடிவில், இறப்பவருக்கு நிம்மதி, இருப்பவருக்கு ஆயுட்கால அல்லல். அழிதல் விட்டு அன்புசெய்வோம்.."எதிரி" இறந்துவிடுவான். நன்றி இளசு.

சிவா.ஜி
14-08-2008, 04:21 AM
உண்மைதான் பூ. போரில்லா வாழ்க்கையில், அரைவயிறு உண்டாலும்....அமைதி கிடைக்குமே...புலிக்கு முன்னால் ஆட்டைக் கட்டிவைத்து பெருந்தீனி போட்டாலும், ஆடு பெருக்காது. மிக்க நன்றி பூம்மா.

சிவா.ஜி
14-08-2008, 04:25 AM
நீங்கள் சொன்னது சரிதான். இருவரிகளே போதும். கீழைநாடன் சொன்னதைப்போல உவமைகளைப் பொருத்திப்பார்க்க விரும்பி நாலு வரிகளை நீட்டிவிட்டேன். நன்றி அமரன்.

சாம்ராட் அசோகனுக்கு நேர்ந்த மனமாற்றம்..இன்று பலருக்குத் தேவைப்படுகிறது கீழைநாடன். எப்போது என்பதுதான் நமக்கு முன்னாலுள்ள கேள்வி.

சிவா.ஜி
14-08-2008, 04:28 AM
பின்னூட்டத்திற்கு நன்றி அறிஞர். நன்றி செல்வா.

ஆதியின் பின்னூட்டக் கவிதையும், கிஷோரின் கவிதையும் என் கவிதையைப் பெருமைபடுத்துகின்றன. அருமையான பின்னூட்டக் கவிதைகளுக்காக மிக்க நன்றி.

யவனிகா
14-08-2008, 04:37 AM
நன்றி தென்றல். எப்போதும் போல நீட்டிமுழக்காமல், சொற்சிக்கனத்தைக் கையாள ஒரு முயற்சி. பிழையிருப்பின் பொறுக்கவும்.

சிக்கனமாய் இருந்தாலும் சீற்றமாய் இருக்கிறது கவிதை...

சிவா.ஜி
14-08-2008, 04:46 AM
நன்றிம்மா யவனிகா. உங்களைப்போல மயில்களைப் பார்த்து சின்னதாய் ஆடும் வான்கோழி நான்.

நாகரா
17-08-2008, 01:35 PM
துப்பாக்கிப் பிடித்து
தோட்டா நட்டு
செந்நீர் பாய்த்து
தலை அறுவடை....
"போர"டித்து உயிர் பிரித்து....
நிறைந்த குதிர்களாய் கல்லறைகள்!

அன்பைப் பிடித்து
அறிவை நட்டு
ஆற்றலைப் பாய்ச்சி
உயிர்மெய் சாகுபடி
மாயப் பொய்யடித்து மரணம் பிரித்து
நிறைந்த பூரணக் க்திர்களின் அறுவடை!

கவிதை அருமை சிவா.

நாகரா
17-08-2008, 01:39 PM
குருதிச் சேற்றில்
மனிதம் புதைத்து
உயிர்களின் அறுவடை


அன்பு மண்ணில்
அமர தேவமாய் எழும்
மனிதப் பயிர்

நாகரா
17-08-2008, 01:43 PM
குருதிச் சேற்றில் நெடுநிலத்தை ஊற வைக்க
உறுதிப் பூண்ட வன்மனங்கள் ஓர்ந்து மாறி
இறுதியுற செய்யுமா கடியவைகளை..


அன்பு நீரில் வன்பு மனத்தை ஊற வைக்கப்
பண்பட்டுத் தோன்றும் இருதய நன்செய்
விளைவிக்கும் ஈர மனிதப் பயிர்

நாகரா
19-08-2008, 04:03 AM
மனிதனின்
குருதி தாகத்தை
தீர்த்து வைக்கும்
அப்பாவி-
துப்பாக்கித் தோட்டா


மனிதனின்
ஆன்ம தாகத்தைத்
தீர்த்து வைக்கும்
இன்ப ஊற்று-
இறை அருள்