PDA

View Full Version : பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!



selvamurali
13-08-2008, 12:16 PM
பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க autrorun.inf என்ற பெயரில் ஒரு போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.ஏனெனில் பென் ட்ரைவில் வரும் வைரஸ் பைல்கள் எல்லாம் autorun.inf பைலை அடிப்படையாக வைத்தே வருவதால் அந்த பைலிற்க்கான பெயரில் ஒரு போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
விண்டோஸ் ஐ பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கோப்பில் ஒரே பெயரில் ஒரு போல்டரையும், பைல்களையும் அனுமதிக்காது. எனவே autorun.inf என்ற பெயரில் ஒரு போல்டரை கிரியேட் செய்து கொள்ளுங்கள். இதன் படி autorun.inf பைல் உருவாகாது.

சின்ன விஷயம்,, ஆனா பெரிய பாதுகாப்பு

முயற்சித்து பருங்கள்

shibly591
13-08-2008, 12:18 PM
வாவ்...

அருமையான தகவல் நண்பரே....

நன்றிகள்

வெற்றி
13-08-2008, 12:26 PM
autrorun.inf எப்படி உருவாக்குவது
அல்லது autorun.inf என்ற பெயரில் டம்மியாக ஒரி போல்டர் கிரியேட் செய்தால் போதுமா??

selvamurali
13-08-2008, 12:33 PM
பென் ட்ரைவில் ரூட்டில் autorun.inf என்று டம்மியாக ஒரு போல்டரை உருவாக்கினால் போதும்.

வெற்றி
13-08-2008, 12:58 PM
பென் ட்ரைவில் ரூட்டில் autorun.inf என்று டம்மியாக ஒரு போல்டரை உருவாக்கினால் போதும்.

அப்படி செய்து பார்த்தேன்...(ஆனால் ஏற்கனவே அதத போல் ஒரு பைல் இருப்பதாக பிழைச்செய்தி வந்தது...)
அதனால் பென் ட்ரைவை பார்மேட் செய்து விட்டு பிறகு autorun.inf என கிளியேட் செய்தேன் ..இப்போது சரி புதிய போல்டர் வந்து விட்டது

மிக்க நன்றி

praveen
13-08-2008, 01:47 PM
நல்ல தகவல், ஆனால் எங்களை மாதிரி ஆட்கள் ரகசியமாக வைத்திருப்பது இது, எல்லோருக்கும் தெரிந்தால் நல்லது தான். அப்படியே மறக்காமல் அந்த போல்டரை ரைட் கிளிக் செய்து ரீட் ஒன்லி மற்றும் ஹிட்டன் செட்டிங்க்ஸ்ம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தேவையில்லாமால் யாராவது அந்த போல்டரை அழித்து விடக்கூடும். மேலும் சில வைரஸ்கள் அந்த மாதிரி அந்த ஆட்டோரன்.ஐஎனெப் உருவாக்க முடியாமல் போனால் அந்த (முன்னரே நாம் உருவாக்கிய) போல்டரிலே திரும்ப அந்த பைலை போடுவதையும் பார்த்திருக்கிறேன்.

சரி மேலே சொன்னது பாதுகாக்க ஒருவேளை நண்பர் மொக்கைக்கு நேர்ந்தது போல ஏற்கெனவே வைரஸ் இருந்து அப்படி ஒரு போல்டர் உருவாக்க முடியவில்லை என்றால் கீழே கண்ட பைலை இயக்கி அதனை நீக்கலாம்
http://www.drsafemode.com/download/Flash_Disinfector.exe

மேலதிக விளக்கத்திற்கு
http://www.drsafemode.com/2008/01/16/remove-thumdrive-virus/

வெற்றி
13-08-2008, 01:58 PM
நல்ல தகவல், ஆனால் எங்களை மாதிரி ஆட்கள் ரகசியமாக வைத்திருப்பது இது, எல்லோருக்கும் தெரிந்தால் நல்லது தான். அப்படியே மறக்காமல் அந்த போல்டரை ரைட் கிளிக் செய்து ரீட் ஒன்லி மற்றும் ஹிட்டன் செட்டிங்க்ஸ்ம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தேவையில்லாமால் யாராவது அந்த போல்டரை அழித்து விடக்கூடும். மேலும் சில வைரஸ்கள் அந்த மாதிரி அந்த ஆட்டோரன்.ஐஎனெப் உருவாக்க முடியாமல் போனால் அந்த (முன்னரே நாம் உருவாக்கிய) போல்டரிலே திரும்ப அந்த பைலை போடுவதையும் பார்த்திருக்கிறேன்.

சரி மேலே சொன்னது பாதுகாக்க ஒருவேளை நண்பர் மொக்கைக்கு நேர்ந்தது போல ஏற்கெனவே வைரஸ் இருந்து அப்படி ஒரு போல்டர் உருவாக்க முடியவில்லை என்றால் கீழே கண்ட பைலை இயக்கி அதனை நீக்கலாம்
http://www.drsafemode.com/download/Flash_Disinfector.exe

மேலதிக விளக்கத்திற்கு
http://www.drsafemode.com/2008/01/16/remove-thumdrive-virus/

நன்றி..நன்றி..மிக நல்ல தகவல்கள்....

tamilambu
13-08-2008, 03:24 PM
உண்மையிலேயே அருமையான பயனுள்ள தகவல்.
செயல் சிறிதாயினும் பயன் பெரிது.

அன்புரசிகன்
13-08-2008, 03:29 PM
அண்மையில் நம் அலுவலகத்தில் bar311.exe என்ற பூச்சி பெரும் தொல்லை கொடுத்தது. அது தொற்றி சரியாக ஒரு வாரத்தில் கணினி login ஆகி தானாகவே logout ஆகிவிடும். Safe mode ற்கும் போகமுடியவில்லை. அது தொற்றியவுடன் அதை dos மூலமும் அழிக்க முடியவில்லை... அதை மக்காஃபே இப்போது நீக்குகிறது....

பூச்சியை வரவிடாது தடுக்கும் புதிய தடுப்பூசி தந்த நண்பருக்கு நன்றிகள்...

lolluvathiyar
13-08-2008, 03:37 PM
மிக மிக பயனுள்ள தகவல் உடனே பயன்படுத்துகிறேன். (இன்னும் ரிசல்ட் தெரியவில்லை)

பூமகள்
13-08-2008, 05:20 PM
நானும் செய்துட்டேன்..!!
திரி துவங்கிய செல்வ முரளி அண்ணாவுக்கும் வழிகாட்டிய ப்ரவீண் அண்ணாவுக்கும் நன்றிகள். :)

பிரவீண் அண்ணா...
ஒரு தரம் வெளி கணினியில் போடப்பட்டு வந்த என் பென் ட்ரைவ்.. திறக்க மறுத்துவிட்டது..

பின்பு.. முழுதும் பார்மேட் செய்து பின் தான் திறந்தது.. இந்த சூழலை எப்படித் தவிர்க்கலாம்??

எதனால்.. திறக்க மறுத்தது?? வைரஸ் காரணமாகவா??

praveen
14-08-2008, 04:44 AM
நானும் செய்துட்டேன்..!!
திரி துவங்கிய மொக்கைசாமி அண்ணாவுக்கும் வழிகாட்டிய ப்ரவீண் அண்ணாவுக்கும் நன்றிகள். :)

பிரவீண் அண்ணா...
ஒரு தரம் வெளி கணினியில் போடப்பட்டு வந்த என் பென் ட்ரைவ்.. திறக்க மறுத்துவிட்டது..

பின்பு.. முழுதும் பார்மேட் செய்து பின் தான் திறந்தது.. இந்த சூழலை எப்படித் தவிர்க்கலாம்??

எதனால்.. திறக்க மறுத்தது?? வைரஸ் காரணமாகவா??

நல்ல கேள்வி கேட்டீர்கள், சொந்த கணினி பல பென் டிரைவ் அல்லது பல கணினிகளுக்கு சென்று வரும் பென் டிரைவ் எனில் அதன்மூலம் நமது கணினியில் தொற்று அல்லது பென் டிரைவிற்கு பாதிப்பு வராமாலிருக்க ஒரு மென்பொருள் உள்ளது.

http://www.zbshareware.com/ மேலே கண்ட தளத்தில் உள்ளது.

அந்த மென்பொருள் பணம் கொடுத்து வாங்கியது. என்னிடம் உள்ளது. தேவைப்படுவோர் தனிமடலில் (உங்கள் இபணத்தில் 1% கொடுத்து :)) பெற்றுக்கொள்ளவும்.

பூமகள்
14-08-2008, 05:03 AM
ஆபத்பாண்டவரே....!!

பிரவீண் அண்ணா வாழ்க.... அவரால் கணினி வைரஸ்கள் ஒழிக...!!

அண்ணே... இப்படியெல்லாம் கோசம் போட்டு உங்க புகழை நிலைநாட்டும் தங்கையிடமே காசு கேக்கறீங்களே.... ஹூம்.. ஹூம்... ஹூவ்............

இருந்தாலும் எனக்கு இலவசமாகத்தான் தருவீங்கன்னு உள் மனசு சொல்லுது... ஹீ ஹீ...

பதிவிறக்கி பதிஞ்சாச்சே....!! :icon_rollout::icon_rollout:

நன்றிகள் ப்ரவீண் அண்ணா. :)

ஸ்ரீதர்
14-08-2008, 05:29 AM
கலக்கலான , உபயோகமுள்ள தகவல். மிக்க நன்றி.

தீபன்
14-08-2008, 06:45 AM
திரி துவங்கிய மொக்கைசாமி அண்ணாவுக்கும் வழிகாட்டிய ப்ரவீண் அண்ணாவுக்கும் நன்றிகள். :)


திரி ஆரம்பித்தது நண்பர் செல்வமுரளி தங்கையே:icon_p:.

நல்ல தகவல். உபயோகமான தகவல்களை தொடர்ந்து வழங்கிய பிரவீணிற்கும் நன்றிகள்.

அனுராகவன்
14-08-2008, 07:00 AM
அடடே!! மிக நல்ல முயற்ச்சி,
என் நன்றி..

selvamurali
14-08-2008, 07:40 AM
அட்டே நன்றி நண்பர்களே! எப்படியாயினும் பயன்பட்டால் சரி

MURALINITHISH
14-08-2008, 09:04 AM
பயனுள்ள தகவல்தான் மக்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

leomohan
14-08-2008, 09:07 AM
மிக்க நன்றி முரளி.

பூமகள்
14-08-2008, 09:33 AM
திரி ஆரம்பித்தது நண்பர் செல்வமுரளி தங்கையே:icon_p:.

அச்சச்சோ... :eek::eek:
செல்வமுரளி அன்பரே.. என்னை மன்னியுங்கள்...:icon_rollout:
தவறுதலாக சொல்லிவிட்டேன்..:icon_ush:
உங்களுக்கு தான் முதல் நன்றி. :)

சுட்டிக் காட்டி குட்டியமைக்கு நன்றிகள் சகோதரர் தீபன். :)

தங்கவேல்
14-08-2008, 10:07 AM
பெரிய கொடுமையா இருந்த விஷயம் இது. நன்றி...

சூரியன்
14-08-2008, 01:07 PM
பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

நேசம்
14-08-2008, 02:16 PM
நல்ல தகவல்.பகிர்தலுக்கு நன்றி

ஷீ-நிசி
14-08-2008, 02:42 PM
முரளி சூப்பரப்பு! கலக்கிபுட்ட... இதுபோல குட்டி குட்டி டிப்ஸ் அப்பபோ கொடுக்கனும்.. என்ன புரியுதா?! :)

selvamurali
14-08-2008, 06:47 PM
அச்சச்சோ... :eek::eek:
செல்வமுரளி அன்பரே.. என்னை மன்னியுங்கள்...:icon_rollout:
தவறுதலாக சொல்லிவிட்டேன்..:icon_ush:
உங்களுக்கு தான் முதல் நன்றி. :)

சுட்டிக் காட்டி குட்டியமைக்கு நன்றிகள் சகோதரர் தீபன். :)


ஹாஹா இதில் என்ன இருக்கிறது.

நன்றி!

அறிஞர்
16-08-2008, 05:13 PM
அருமையான தகவல்.. நன்றி முரளி...

பிரவீன் சொன்ன கூடுதல் தகவலுக்கும் நன்றி..
-------
முரளி தங்களுக்கு தெரிந்த தகவல்களை இன்னும் பரிமாறிக்கொள்ளுங்கள்.

selvamurali
16-08-2008, 06:21 PM
நிச்சயமாக நண்பரே!

slwaran
23-08-2008, 03:56 PM
மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றிகள்

சாலைஜெயராமன்
23-08-2008, 04:13 PM
இரண்டு நாட்களாக பாடாய்படுத்திக் கொண்டிருந்த என் பென் டிரைவின் தொல்லைக்கான காரணம் புரியாமல் தவித்த வேளையில் முரளியின் தகவலால் சீர்செய்து கொண்டேன். autorun.inf பைல் ஏற்படுத்தப் போனால் ஏற்கனவே இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால் அந்த பைல் இருப்பதைக் காணவும் இயலாததால் அதை அழிப்பதும் சிரமமாயிருந்தது. சுலபமாக அதை அழிக்கும் முறையையும் இதன் மூலம் கற்றுக் கொண்டேன்.

நல்ல பயனுள்ள தகவலைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

sakthim
24-08-2008, 03:27 AM
அனைவருக்கும் மிக பயனுள்ள தகவல்.பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

anna
13-11-2008, 06:56 AM
அருமையான ரகசியத்தை போட்டு உடைச்சிட்டீங்களே.எப்படிங்க உங்க பென்டிரைவில் வைரஸ் வரவில்லையே என கேட்பவருகெல்லாம் அதெல்லாம் தொழில் ரகசியமுனு சொல்லிகிட்டு இருநதோம் .ஓகே ஓகே எல்லாரும் கற்றுக்கொண்டால் நல்லது தானே.

razaktha
14-11-2008, 02:43 PM
மிக மிக பயனுள்ள தகவல் உடனே பயன்படுத்துகிறேன். (இன்னும் ரிசல்ட் தெரியவில்லை)

வெங்கட்
11-12-2008, 02:43 PM
தற்போது தான் முதன்முதலாய் வாங்கிய எனது பென் ட்ரைவில் இத்திரியில் குறிப்பிட்டபடி autorun.inf போல்டரை உருவாக்கி விட்டேன். தகவல் தந்த செல்வமுரளி மற்றும் பிரவீண் ஆகியோருக்கு மிக்க நன்றி.

பாரதி
11-12-2008, 03:44 PM
பயனுள்ள தகவல்கள் தந்த செல்வமுரளிக்கும் பிரவீணுக்கும் நன்றி! நன்றி!!

ஆர்.ஈஸ்வரன்
17-12-2008, 10:32 AM
அருமையான தகவல்

மன்மதன்
06-01-2009, 10:04 AM
நன்றாக வேலை செய்துவந்த பென் ட்ரைவ் இப்பொழுது detect ஆக மாட்டேங்குது. நிறைய கணிணியில் முயற்சித்தும் பலனில்லை.. எப்படி அதற்கு உயிர் கொடுப்பது?

praveen
06-01-2009, 01:53 PM
நன்றாக வேலை செய்துவந்த பென் ட்ரைவ் இப்பொழுது detect ஆக மாட்டேங்குது. நிறைய கணிணியில் முயற்சித்தும் பலனில்லை.. எப்படி அதற்கு உயிர் கொடுப்பது?

சமயத்தில் பெண் டிரைவ்-ஐ சரியாக எஜக்ட் கொடுக்காமல் PCயில் இருந்து விடுவித்தால், அல்லது சரியானபடி பொறுத்தாமல் விட்டால் அதன் சர்க்யூட் பாதிப்பாக நேரிடலாம்.

இதற்கு ஒரே வழி, அந்த பெண்டிரைவ் வாங்கிய நிறுவனத்தில் பில்-உடன் கொடுத்தால் அதிகபட்சம் 1 வாரத்தில் புத்தம் புதிது தருவார்கள்.

மன்மதன்
08-01-2009, 01:06 PM
சமயத்தில் பெண் டிரைவ்-ஐ சரியாக எஜக்ட் கொடுக்காமல் PCயில் இருந்து விடுவித்தால், அல்லது சரியானபடி பொறுத்தாமல் விட்டால் அதன் சர்க்யூட் பாதிப்பாக நேரிடலாம்.

இதற்கு ஒரே வழி, அந்த பெண்டிரைவ் வாங்கிய நிறுவனத்தில் பில்-உடன் கொடுத்தால் அதிகபட்சம் 1 வாரத்தில் புத்தம் புதிது தருவார்கள்.

அப்படியே செய்கிறேன்.. நன்றி பிரவீன்.

baseer
25-01-2009, 06:13 AM
நல்ல பயனுள்ள தகவலை தந்த நண்பர் முரளி அவர்களுக்கும், கூடுதல் விபரங்கள் அளித்த நண்பர் பிரவீன் அவர்களுக்கும் நன்றி.

M.Rishan Shareef
25-01-2009, 12:14 PM
மிகப் பயனுள்ள பதிவு செல்வமுரளி. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

arul5318
03-02-2009, 07:23 PM
மிக நல்ல பயனுள்ள தகவலைத்தந்த நண்பார்களுக்கு நன்றிகள்

stargroup29
09-02-2009, 12:39 PM
எனது பென் டிரைவ் மற்றும் என்றில்லாமல் ‘C’ஐத் தவிர மற்ற அனைத்து டிரைவும் பாதிக்கப்பட்டுள்ளது! என்ன செய்வது என தெரியவில்லை! டபுள் கிளிக் செய்தால் ஓபன் ஆவது கிடையாது! வைரஸ் தாக்கிவிட்டதென நினைக்கிறேன். ரைட் கிளிக் செய்து எக்ஸ்புளோர் கொடுத்து தான் பைல்களை பார்க்க வேண்டியுள்ளது!

தெரிந்தவர்கள் உதவுங்கள்.

praveen
09-02-2009, 12:52 PM
கீழே கண்ட சுட்டி சென்று unhook.inf என்ற பைலை பதிவிறக்கி உங்கள் கம்ப்யூட்டரில் அந்த பைல் மீது மவுசை வைத்து ரைட் கிளிக் செய்து இன்ஸ்டால் என்பதை அழுத்தி ரீஸ்டார்ட் செய்தால் சரி ஆகி விடும். அதற்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் இந்த கட்டூரையை முழுதும் படித்து autorun.inf என்ற போல்டரை உருவாக்கி கொள்ளுங்கள்

http://securityresponse.symantec.com/avcenter/UnHookExec.inf

மேலே கண்ட லிங்கை ரைட் கிளிக் செய்து சேவ் அஸ் என கொடுத்து பைலாகவே பதிவிறக்கி கொள்ளுங்கள்.

sssraj
10-02-2009, 03:08 AM
என்னை போன்றவர்களுக்கு பயனுள்ள தகவல்.. முயற்சித்து பார்க்கிறேன்..

anna
11-02-2009, 03:01 PM
நல்ல பயனுள்ள தகவல் தந்த பிரவீணுக்கு நன்றி

zha
18-02-2009, 03:39 PM
ய்ப்பா.......இந்த திரியை நான் முன்னமே பார்த்திருந்தும் அதன் படி நடக்காததால் மிகவும் தொந்தரவு அடைந்து விட்டேன். பென் டிரைவ் மூலமாக என் கனனியில் உள்ளே வந்த வைரஸை நீக்க ஒரு நாள் பூராவும் மிகவும் கஸ்டப்பட்டேன். அப்பிடியும் ஒரு ஷரெ மார்கெட் ஆன் லைன் பைல் திறக்கவில்லை.....சேஃப் மோடிலும் ஆண்டி வைரஸை ஓடவிட்டும் புன்னியமில்லை....ஆட் அவேரை ஃபுல் ஸ்கேனிஙில் ஓட விட்டால் கிட்டத்தட்ட 2 மனி நேரம் ஓடுகிறது. பயன் கம்மி.....என்ன செய்ய....?

அன்புரசிகன்
18-02-2009, 03:47 PM
உங்களுடைய கணினி எந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது??? உங்களால் command prompt ஐ திறக்க இயலுகிறதா??? அது திறக்கும் போது தானாக restart ஆகினால் உங்கள் கணினி bar311.exe என்ற பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதான் அனேகமாக flash drive ஆல் பரவுவது... இதை macafee நீக்குகிறது. நீங்கள் எந்த பூச்சி பிடிப்பானை பாவிக்கிறீர்கள்??? :D

zha
18-02-2009, 04:33 PM
ymantech anti virus software.
தற்பொழுது புதிதாக அக்டோபரில் வந்து பாதிப்பை ஏர்படுத்திக்கொண்டிருக்கும் டவுன் ஆட் அப் என்ற வைரஸ் வரமலிருக்க கே7 என்ற ஆண்டி வைரஸ் சாஃப்ட்வேரை தினமலர் கம்ப்யூட்டர் மலரை பார்த்து பதிவிறக்கி வைத்திருக்கிறேன்.....அவ்வளவுதான் நன்பரே......பென் டிரைவை சொருவிய பிறகு வைரஸ் இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுகிரது.... ஃபிலாஸ் மாதிரி....

பா.ராஜேஷ்
20-02-2009, 07:41 AM
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நண்பர்களே!

raj144
04-03-2009, 02:35 PM
உங்களின் தகவல் பயனுள்ளதக இருக்கிறது .செல்வ முரளி அவர்களுக்கு மிக்க நன்றி இதனை பற்றி நல்ல விளக்கம் தந்த பிரவின் அவர்களுக்கும் மிக்க நன்றி.

ஜோய்ஸ்
25-03-2009, 06:24 PM
மிகவும் நல்ல பயனுள்ள திரி.நன்றி.

தமிழநம்பி
28-08-2009, 04:39 PM
பயன் மிகுந்த செய்திகள். நன்றி.

த.ஜார்ஜ்
04-09-2009, 02:41 PM
செல்வ முரளி .. யப்பா ஒரு நல்ல வழி காமிச்சிட்டப்பா. தாங்ஸ்
பிரவீனின் பல தகவல்கள் எனக்கானவை போலவே இருந்தது. பார்டிசன்களை திறக்க முடியாத சிரமம் எனக்கும் இருந்தது. நன்றி தோழா.

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 04:47 PM
நன்றி செல்வ முரளி மற்றும் பிரவீண்.

போன வாரம்தான் இதே பிரச்சினையில் சிக்கி மீண்டேன்.

மிக மிக பயனுள்ள தகவல்.

அரசன்
30-12-2009, 10:02 AM
அசத்தலான தகவல் நண்பரே! நன்றி

Avis2009
19-05-2010, 04:15 PM
அனைவருக்கும் மிக பயனுள்ள தகவல்..நன்றிகள்.

எந்திரன்
12-07-2010, 10:19 AM
எனக்கு முன்பே தெரிந்த யுக்தி என்றாலும் இந்த விஷயம் தெரியாத எத்தனையோ நண்பர்களுக்கு பயன்படும் முக்கிய தகவல்.

கோ.முத்து
20-07-2010, 08:58 AM
உபயோகமுள்ள தகவல். மிக்க நன்றி.ஆனால் ரீட் ஒன்லி மற்றும் ஹிட்டன் செட்டிங்க்ஸ் இரண்டும் உருவாக்க முடியாமல் போகிறது. என்ன செய்யலாம்.

பாரதி
16-10-2010, 12:50 PM
அன்பு நண்பர்களே,

இணையத்தில் இத்தகவலைக் கண்டேன். எம்.எக்ஸ்.ஒன் நச்சு நிரல் நீக்கி - இதன் கொள்ளளவு 1.3 எம்.பி மட்டுமே. இந்த நச்சுநிரல் நீக்கி முழுக்க இலவசமானது. பென் டிரைவிலும், கணினியிலும் நிறுவலாம். தேவையான நண்பர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தட்டச்ச வேண்டிய முகவரி:
http://www.mxone.net/en/
அல்லது
http://mx-one-antivirus.en.softonic.com/

சிவா.ஜி
16-10-2010, 01:40 PM
மிக்க நன்றி பாரதி. மிகப்பயனுள்ளதாயுள்ளது.

ஆன்டனி ஜானி
23-10-2010, 03:15 PM
அருமையான தகவல் நானும் முயர்சி பன்ரென்:lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 06:07 AM
மிகவும் நல்ல தகவல் பிரவீன் அவர்களே
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 06:23 AM
பதிவுகள் பலவாயினும் உதவும் பதிவுகள் சிலவே
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

rajesh2008
30-11-2010, 02:47 PM
பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க autrorun.inf என்ற பெயரில் ஒரு போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.


நானும் அந்த பைலை உருவாக்கி வைத்து விட்டேன். நன்றி

செல்வ முரளி சார், உங்கள் முதல் பதிப்பில் பைல் நேம் autorun.inf என்பதற்குப் பதிலாக autrorun.inf என்று தவறுதலாக உள்ளது கொஞ்சம் மாற்றிவிடுங்களேன்.

கேசுவர்
02-12-2010, 11:36 AM
பயனுள்ள தகவல், நன்றி நண்பரே

nambi
02-12-2010, 12:58 PM
பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!