PDA

View Full Version : நான் ரசித்த ஜோக்ககுகள் (தொடர்ச்சி)



மதுரை மைந்தன்
13-08-2008, 11:59 AM
ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.
---------------------------------------------------------------

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
-----------------------------------------------------------------

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!
----------------------------------------------------------------

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை)

lolluvathiyar
13-08-2008, 12:47 PM
வெப்பிலிருந்து சுட்டிருந்தாலும் அனைத்தும் படித்து பார்க்க சூப்பரா இருக்கு. திப்பு சுல்தான் சேர் ஜோக் படு சூப்பர். இன்னும் இருந்தா போடுங்க மதுரை வீரனே.

arun
13-08-2008, 08:06 PM
சர்தார் ஜோக்குகள் என்றும் சலிக்காத ஜோக்குகள் தான் சூப்பரா இருக்குது பகிர்வுக்கு பாராட்டுக்கள்

மதுரை மைந்தன்
13-08-2008, 08:40 PM
வடி கட்டின கஞ்ச சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.
_________________________________________________________________________

டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
________________________________________________________________________

நாட்ட்ட்ட்டாமை.....
பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!
________________________________________________________________________

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.
________________________________________________________________________

இம்சை அரசன் 24ம் புலிகேசி
அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.
__________________________________________________________________________

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை)

தீபா
14-08-2008, 05:16 AM
அருமை அருமை.... எல்லாம் கலக்கல்... நன்றி திரு.மதுரை வீரன்

தீபன்
14-08-2008, 07:49 AM
மிஸ் கோல் குடுத்த சர்தார்.... என்ன விவரமான ஆளுப்பா...

கலக்கலான தொகொப்பு. தொடருங்கள் வீரரே.

mythili
14-08-2008, 09:52 AM
னல்ல ஜோக்குகள். அதிலும் கரப்பான் பூச்சி ஜோக் அருமை.
தொடருங்கள்.

அன்புடன்,
மைத்து

மதுரை மைந்தன்
14-08-2008, 02:01 PM
" நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போனாயே அங்கு என்ன சாப்பிட்ட?"

" 49 இட்லி"

" அடப்பாவி. கூட ஒரு இட்லி சாப்பிட்டு 50 ஆக ஆக்கியிருக்கக் கூடாதா?"

"கூட ஒரு இட்லி கேக்க கூச்சமாயிருந்தது":lachen001:
________________________________________________________________

" நண்பர் வீட்டு விருந்துக்குப் போய் நல்லா வெட்டு வெட்டிட்டு வந்திருக்க. அப்படியும் ஏன் சோகமா இருக்கே?"

" அடுத்த சாப்பாட்டுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கே":lachen001:
_______________________________________________________________

மனிதர்களை சாப்பிடும் கனிபால்கள் வீட்டில் இரவு போஜனம்.

" அப்பா எனக்கு என் மாமியாரை பிடிக்கலை"

" அவளை ஒதுக்கிட்டு மத்தவங்களை சாப்பிடு".:lachen001:

அறிஞர்
18-08-2008, 04:33 AM
பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை) பாவம்பா.. சர்தார்ஜி... எது வாங்கினாலும் தானே... (சில்லறைக்கு இல்லை என குறிப்பிடவில்லையே)

arun
18-08-2008, 07:08 PM
நாட்ட்ட்ட்டாமை.....
பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

இது தான் கண்ணு சூப்பர் :D

tamilambu
19-08-2008, 12:58 AM
டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)


ஆமாங்க.....
சிலதை தமிழில நேரடியா மொழிபெயர்த்தால் இப்படித்தான் ஆகும்

மதுரை மைந்தன்
20-08-2008, 12:45 AM
ஆமாங்க.....
சிலதை தமிழில நேரடியா மொழிபெயர்த்தால் இப்படித்தான் ஆகும்

உங்கள் பின்னோட்டம் எனக்கு சில பழைய தமிழாக்கங்களை நினைவுக்குக கொண்டு வருகிறது.

ஹரிஹரக் கருப்பனும் வேங்கைப்புலியும் (Harry the Black and the Tiger)

இருண்ட காட்டில் நிர்வாண வேட்டை (African Safari).:lachen001:

பென்ஸ்
20-08-2008, 01:24 AM
ஹ்ஹ்ஹா....

படித்ததை பகிர்வது அத்தனை அருமை...
அதிலும் நீங்கள் படித்து மகிழ்ந்ததை கொடுக்கும் போது இன்னும் சிறப்பாய்....

(இதை படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றுகிறேன்)

செல்வா
20-08-2008, 03:39 AM
ஹா....ஹா... ரொம்ப நல்லாருக்கு வீரரே... அதிலும் நாட்டாமை.... கள்ள இரயில் அருமை அருமை....

பகிர்தலுக்கு நன்றி வீரரே... தொடர்ந்து எங்களைச் சிரிக்க வையுங்கள்.

aren
20-08-2008, 03:41 AM
நல்லாவேயிருக்கு நண்பரே. கொஞ்சம் சிரிச்சு இளைப்பார நல்ல பதிவு. தொடருங்கள்.