PDA

View Full Version : யுத்தம்



shibly591
13-08-2008, 11:20 AM
தப்பானவர்களை
தப்பிக்கவிட்டு
அப்பாவிகளை
அப்பளமாக்கும்
ஒப்பற்ற
குப்பை....

ஓவியன்
19-08-2008, 04:20 AM
யுத்தத்தில் ஈடுபடும் எந்த தரப்பும் இலகுவில் தம் தப்புக்களை ஒப்புக் கொள்வதில்லையே ஷிப்லி..!!
அப்படி தவறுகளை ஒப்புக் கொள்ளும் பாங்கு இரு தரப்பினருக்கும் வந்து விட்டால்...
யுத்தம் என்ற குப்பை எங்குமே விதைக்கப்படாதே..!!

நாகரா
19-08-2008, 05:20 AM
தப்பானவர்களை
தப்பிக்கவிட்டு
அப்பாவிகளை
அப்பளமாக்கும்
ஒப்பற்ற
குப்பை....

சமாதானம்

தப்பானவர்கள்
திருந்தி
அப்பாவிகளாகும்
அதிசயம்
ஒப்பற்ற
மேன்மை....

குறுங்கவி அருமை, ஷிப்லி

shibly591
23-08-2008, 05:43 AM
நன்றி ஓவியன் மற்றும் நாகரா....

பின்னூட்டங்கள் படு நேர்த்தி

ஷீ-நிசி
23-08-2008, 02:28 PM
தப்பானவர்களை
தப்பிக்கவிட்டு
அப்பாவிகளை
அப்பளமாக்கும்
ஒப்பற்ற
குப்பை....



ஒப்பற்ற குப்பைக்களம்
உங்களின் யுத்தக்களம்

நிதர்சனம்!

அமரன்
23-08-2008, 02:30 PM
கோப்பையைப் பெற்று
வாழ்க்கையில்
தோற்று விடுகின்றார்கள்
யுத்த விரும்பிகள்!

எது எப்படியோ
நோக்கம் நிறைவேறுகிறது!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2008, 05:15 PM
கத்தரிக்கோலை போன்று என்று சொல்லுங்கள். அதிகம் மோதிக் கொண்டாலும் தங்களை எப்பொழுதுமே வெட்டிக் கொள்வதில்லை. இடையில் சிக்கியவைகளைத்தான் துவம்சம் செய்கின்றன.

அமரன்
23-08-2008, 05:37 PM
கத்தரிக்கோலை போன்று என்று சொல்லுங்கள். அதிகம் மோதிக் கொண்டாலும் தங்களை எப்பொழுதுமே வெட்டிக் கொள்வதில்லை. இடையில் சிக்கியவைகளைத்தான் துவம்சம் செய்கின்றன.
மிகப்பொருத்தமான உவமை:icon_b:.. கத்தரிக்கோலின் பிறப்பு நோக்கமே அதுதானே...:icon_ush: