PDA

View Full Version : இதுவும் ஒரு கா(மெடி)தல் கதை பாகம் 1



tamilkumar
13-08-2008, 09:42 AM
இதுவும் ஒரு கா(மெடி)தல் கதை பாகம் 1

நம்ம ஹீரோ குமாரு(சத்தியமா நான் இல்லீங்ண்ணா):traurig001: ரொம்ப அமைதியான பையன்.(நிசமாத்தாங்க).:D முதல்தடவை அவனை பார்க்கும்போது அவனைபத்தி எல்லோரும் இப்படித்தான் நினைப்பாங்க. ஆனால் ஊருபக்கம் ஊமை குசும்பன்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க தெரியுங்களா? அது நம்மாளுக்கு நல்லாவே பொருந்தும். அவனோட நெருங்கிய நண்பர்களுக்கு அவனோட குசும்புபத்தி ரொம்பநல்லா தெரியும்.

12ம் கிளாஸ் படிக்கிறவரைக்கும் உள்ளூரு ஸ்கூலிலேயே குப்பை கொட்டினான் குமாரு. அவனோட அப்பாவும் பல வருஷமா அதே ஸ்கூலில் வாத்தியார். அதனால் அவனுக்கு தனி மரியாதை. அதுவுமில்லாமல் அப்போ இருந்த ஸ்டேட் சிலபஸ் பாடம்லாம் மனப்பாடம் பண்ணி வாந்தி எடுத்தாவே கைநிறைய மார்க் அப்படிங்கிறதுனாலே அவனுக்கு பிரச்சினையே இருந்ததில்லை. 6ம் கிளாஸிலேருந்து 12ம் கிளாஸ் வரைக்கும் அசராம ஸ்கூலிலேயே முதல் ஆளாவந்தான் நம்மாளு. நம்மாளோட வீக் பாய்ண்ட் பொண்ணுங்க:icon_ush:. அதுக்குள்ளே தப்பா நினைச்சுட்டீங்களா?. பொண்ணுங்ககிட்டே பேச ரொம்ப கூச்சப்படுவான் அப்படின்னு சொல்லவந்தேன்.:aetsch013: பள்ளிநாட்களில் தானாகவந்து அவனிடம் பேசிய பெண்களிடமும் அப்படித்தான் இருந்திருக்கிறான். சரி.. இந்த அறிமுகமே இவனுக்கு ரொம்ப அதிகம். இத்தோட நிறுத்திக்குவோம்.

12ம் கிளாசுக்கு அப்புறம் குமாரு எஞ்சினியரிங் காலேஜிலே சேர்ந்தான். இங்க சேர்ந்த முதநாளில் இருந்தே அவனுக்கு எல்லாமே புதுசா இருந்தது. புதுபுது நண்பர்கள். விதவிதமாக கலகலப்பாக பேசற பொண்ணுங்க எல்லாத்தையும் ஆச்சரியமா பார்த்தான். கொஞ்சநாளிலேயே ஒருவழியா இங்கேயும் அருமையான நண்பர்வட்டம் ஒண்ணு கிடைச்சுது. அந்த கூட்டத்துக்கு இவனோட குசும்பு ரொம்ப பிடிச்சுபோச்சு. ஆச்சரியம் என்னன்னா அந்த நண்பர் கூட்டத்திலே இப்ப குமாருக்கு சில பெண் நண்பர்களும் இருந்தாங்க. ஆமாங்க.. அவனும் இப்ப பழையமாதிரி இல்லை. ரொம்பவே மாறியிருந்தான். இல்லையில்லை. காலேஜ் வாழ்க்கை அவனை மாத்திடுச்சு. ஸ்கூலிலே இருந்தமாதிரி கூச்சமில்லாமல் இப்போ பெண்கள்கிட்டேயும் சகஜமாக பேச ஆரம்பிச்சான் நம்ம குமாரு. :icon_b:

காலேஜிலே அவனுக்கு ஆச்சரியமான விஷயம். பசங்க பொண்ணுங்ககிட்டே 3 நாள் கடலை போட்டுட்டு 4ம் நாள் லவ் லெட்டரை நீட்டறது. அப்புறம் லவ்வர்சுனு ரெண்டுபேரும் சேர்ந்து சுத்தறது. அவனும் பொண்ணுங்ககிட்டே நல்லா கருகி வாசனை வரும் அளவுக்கு கடலை வறுத்தாலும் அவனுக்கு மட்டும் லவ்வுங்கற அந்த ஃபீலிங் மட்டும் வரவே இல்லை.:traurig001:

இப்படியே குமாரு ரொம்ப நல்ல பையனாவே காலேஜில் 2 வருஷத்தை ஓட்டி, இப்போ 3ம் வருஷம் படிச்சுக்கிட்டிருந்தான். அன்றைக்கு அவன் டிபார்ட்மெண்ட்லே ஜூனியர்ஸ்க்கு வெல்கம் பார்ட்டி வைச்சிருந்தாங்க. இஞ்சினியரிங்கை பொறுத்தவரைக்கும் ஒரு விஷயம் என்னன்னா புதுசா சேரும் மாணவர்கள் முதல்வருஷம் எல்லா டிபார்ட்மெண்டும் கலந்து ஒண்ணாத்தான் படிப்பாங்க. 2ம் வருஷம்தான் அவங்கவங்க டிபார்ட்மெண்டுக்கு வருவாங்க. அப்படித்தான் நம்ம குமாரோட ஜூனியர்ஸீம் முதல் தடவையா டிபார்ட்மெண்டுக்குள்ளே நுழைஞ்சதாலே அவங்களுக்கு வெல்கம் பார்ட்டி. மதியம் 2 மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்கிற நேரம். அவன் கிளாசுக்கு அடுத்த கிளாசுலதான் ஜூனியர்ஸ் இருந்தாங்க. பங்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குமாரோட நண்பர்கள் எல்லாம் ஆர்வமாக அந்த ஜூனியர் பொண்ணுங்களை சைட்டடிச்சுக்கிட்டு இருந்தாங்க. குமாரும் மத்தியானம் ஃபுல் கட்டு கட்டிட்டு நண்பர்கள் கூட்டத்தில் கலக்காமல் கொஞ்சம் ஓரமாகவே நின்னு ஜூனியர் பொண்ணுங்களை பார்த்துக்கிட்டு இருந்தான்.

ஜூனியர் டிபார்ட்மெண்டுக்கு வந்து ஒருவாரம் ஆகியிருந்ததாலே அழகான ஒருசில ஜூனியர் பொண்ணுங்க கொஞ்சம் ஃபேமஸ் ஆகியிருந்தாங்க. அவங்களை தேடித்தேடி சைட்டடிச்சுக்கிட்டிருந்தாங்க அவனோட நண்பர்கள். குமாரோ ஒருவாரம் லீவுக்கு அப்புறம் அன்னைக்குதான் காலேஜ் வந்ததாலே ஜூனியர் பொண்ணுங்களை பத்தி அவனுக்கு எதுவும் ஐடியா இல்லை. நடக்கும் எல்லாவற்றையும் கொஞ்சம் அசுவாரசியமாகவே பார்த்துக்கிட்டு இருந்தான் குமாரு.

அப்போ.............................:fragend005:

(தொடரும்)

தீபா
13-08-2008, 10:20 AM
சுவாரசியமா இருக்கு.. குமார் தொடருங்க.. எனக்கு இந்தமாதிரி கதை ரொம்ப பிடிக்கும்..

ஆண்கள் மட்டுமா ஜொள்ளர்கள்... பெண்களும் தான். (ஜொள்ளிகள்???) (ஏய் தென்றல்... இதென்ன சேம் சைட் கோல்?)

பழைய ஞாபகம் வருதே வருதே!!!

tamilkumar
13-08-2008, 10:31 AM
சுவாரசியமா இருக்கு.. குமார் தொடருங்க.. எனக்கு இந்தமாதிரி கதை ரொம்ப பிடிக்கும்..

ஆண்கள் மட்டுமா ஜொள்ளர்கள்... பெண்களும் தான். (ஜொள்ளிகள்???) (ஏய் தென்றல்... இதென்ன சேம் சைட் கோல்?)

பழைய ஞாபகம் வருதே வருதே!!!

ரொம்ப நன்றி அக்கா.

ஒருவேளை யாருக்கும் பிடிக்கலையோன்னு நினைச்சேன்...

சீக்கிரமே அடுத்த பாகம் வரும்

சிவா.ஜி
13-08-2008, 10:39 AM
நல்லாருக்கு...நல்லா எழுதறீங்க...கலாட்டா தொடரட்டும் தமிழ்குமார். பாராட்டுக்கள்.

செல்வா
13-08-2008, 10:51 AM
ஒருவேளை யாருக்கும் பிடிக்கலையோன்னு நினைச்சேன்...
சீக்கிரமே அடுத்த பாகம் வரும்
அப்படி எல்லாம் தப்பு தப்பா நெனைக்காதீங்க.....
தொடர்ந்து எழுதுங்க... தொடர தொடர நாங்களும் தொடர்ந்து வரோம்...
முதல்அத்தியாயத்திலேயே விமர்சனம் செய்ய முடியுமா? கடினமில்லையா...
அதான் காத்திருக்கிறோம்.
நீங்க எங்களுக்காக காத்திருக்கக் கூடாது. எழுதுங்க....

சிவா.ஜி
13-08-2008, 11:02 AM
முதல்அத்தியாயத்திலேயே விமர்சனம் செய்ய முடியுமா? கடினமில்லையா...
அதான் காத்திருக்கிறோம்.
நீங்க எங்களுக்காக காத்திருக்கக் கூடாது. எழுதுங்க....
ரொம்பச் சரியாச் சொன்னீங்க செல்வா...தமிழ்குமார் அடுத்த பாகத்தை விரைவா கொடுத்திடுவார்.

shibly591
13-08-2008, 11:43 AM
அட்டகாசமான ஆரம்பம்..
தொடருங்கள்

tamilkumar
13-08-2008, 12:45 PM
நல்லாருக்கு...நல்லா எழுதறீங்க...கலாட்டா தொடரட்டும் தமிழ்குமார். பாராட்டுக்கள்.

நன்றி சிவா.ஜி அவர்களே...


அப்படி எல்லாம் தப்பு தப்பா நெனைக்காதீங்க.....
தொடர்ந்து எழுதுங்க... தொடர தொடர நாங்களும் தொடர்ந்து வரோம்...
முதல்அத்தியாயத்திலேயே விமர்சனம் செய்ய முடியுமா? கடினமில்லையா...
அதான் காத்திருக்கிறோம்.நீங்க எங்களுக்காக காத்திருக்கக் கூடாது. எழுதுங்க....

நீங்க சொல்றது சரிதாங்க. காத்திருக்கேன்.


அட்டகாசமான ஆரம்பம்..தொடருங்கள்

ரொம்ப நன்றிங்க ஷிப்ளி...

tamilkumar
13-08-2008, 03:21 PM
ரொம்பச் சரியாச் சொன்னீங்க செல்வா...தமிழ்குமார் அடுத்த பாகத்தை விரைவா கொடுத்திடுவார்.

அண்ணன் வாக்கு கொடுத்துட்டதாலே நாளைக்கே அடுத்த பாகத்தை கொடுக்க முயற்சி பண்றேன்.

tamilkumar
11-07-2009, 02:47 PM
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இரண்டாம் பாகம் ரெடியாகுது.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

த.ஜார்ஜ்
13-07-2009, 10:42 AM
நல்ல போகுது மக்கா. கண்டிநியூ பண்ணு.

Nivas.T
13-08-2010, 03:21 PM
தமிழ்குமார் நல்லாத்தான் இருக்கு

தொடருங்கள்

சேட்டைகள் தொடரட்டும்

tamilkumar
13-08-2010, 03:38 PM
தமிழ்குமார் நல்லாத்தான் இருக்கு

தொடருங்கள்

சேட்டைகள் தொடரட்டும்

இன்னும் இதை ஞாபகம் வைச்சு இருக்கீங்களா.

சீக்கிரமே தொடரும் நண்பரே....:lachen001:

mojahun
16-08-2010, 12:07 AM
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! தொடருங்கள்!