PDA

View Full Version : வான் தோரணைஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 09:35 AM
நன்றாய் வளர்ந்த
ஒரு உண்டு கொழுத்த மனிதன்
முட்டிக்கால் அளவே உள்ளவனிடம்
போருக்கான அறைகூவல் விடுத்து
நேருக்கு நேராய் நிற்கிறான்

அதுவரை
தனியாயாளாயிருந்த குட்டையனிடம்
விதவிதமான வடிவமுடைய
விதவித ஆயதங்களேந்திய
படையினர்கள் நாற்புறத்திலிருந்து
வந்து ஒட்டிக்கொள்கிறார்கள்

படையை பார்த்த பயத்தில்
பஞ்சு பஞ்சாய் பறக்கிறது
நெட்டையனின் உடல்

பார்த்தவர்கள் பிரமிக்கும்
ஏதோ ஒரு ஜந்துவாய்
மாறிப்போகிறான் நெட்டையன்

மெதுவாய் நகர்ந்து
பின் மெல்ல குனிந்து
குட்டையனின் காதில்
இரகசியம் ஓதுகிறான்

சண்டைவேண்டாமென்று
சமாதானம் பேசுகின்றான்
என்றேன் நான்
அப்படியெல்லாம் இல்லை
என்கிட்ட வச்சுக்காத
காணாம போயிடுவன்னு சொல்றான்
என்றான் நண்பன்
வேணும்னா பாருவே
சண்டை நடக்காது
நான் கூறிக்கொண்டிருக்கும்போதே
வானம் இருட்டத்தொடங்கியது.
குட்டையனுடம் நெட்டையனும்
கலையத் தொடங்குகையில்
காலையில பாரு
கண்டிப்பா சண்டையிருக்கு
என்ற நண்பனை
தோற்கடிப்பதற்காய்
அடுத்தநாள்
பள்ளி செல்லும் வழியில்
அந்த வெயிலிலும்
குட்டையனையும் நெட்டையனையும்
தேடிக்கொண்டு செல்வேன்
அண்ணார்ந்து பார்த்தபடி.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

shibly591
13-08-2008, 11:30 AM
வித்தியாசமான தளம்...
யதார்த்தமான ஏக்கம்...
பிரமிக்க வைக்கிறது நண்பரே...
தொடருங்கள்

அமரன்
13-08-2008, 12:23 PM
வானமகள்/ன் அழுகை.. மேகத்தின் வியர்வை. இப்படி எத்தனையோ உவமைகளை பொழியும் மழை இப்போது முகில்களின் மோதலில் சிந்தப்படும் குருதியாக.. அறிவியலுடனும் ஒத்துப்போகிறது.. அழகியலுடனும் ஒத்துப்போகிறது. மானுட காலநிலை எதிர்வு கூறல்களை தூறிச்செல்லும் கவிதை.

வராது என்ற நம்பிக்கையில் நீங்கள் பள்ளிக்கு.. வரும் என்ற நம்பிக்கையில் நண்பன் பள்ளியில்.. ஜெயித்தது நீங்கள்தான்..

இரண்டாம் பத்தியில் நாற்புறம் இருதரம் வருகிறது..

முகில்களின் கோலத்தை வைத்து
அதில் மனக்கணினி வித்தையை நுழைத்து
நன்றாகக் காட்டினீர்கள் காட்சிதனை..
பாராட்டினேன் உங்களை..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 12:31 PM
மிக்க நன்றி அமரா. திருத்தி விட்டேன்.முகில்களின் கோலத்தை வைத்து
அதில் மனக்கணினி வித்தையை நுழைத்து
நன்றாகக் காட்டினீர்கள் காட்சிதனை..
..
பாராட்டுக்களுக்கு நன்றி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 05:41 PM
பின்னூட்டத்திற்கு நன்றி ஸிப்லீ.

இளசு
13-08-2008, 06:30 PM
அருமை அருமை ஜூனைத்!

தலைப்பில் குறிப்பில்லாவிட்டால், ஜார்ஜியா -ரஷ்யா பற்றிய கவிதை என எண்ணியிருப்பேன்!:)

காரை, சுண்ணாம்பு பெயர்ந்த சுவரின் சுவடுகள்
பார்க்கும் மனநிலைக்கேற்ப உருவம் மாறும்..

மேகங்களும் அப்படித்தான்..

கவியரசர் வரி உண்டு -
மேகங்களில் காணும் படம்
மாறும் ..தினம் மாறும்!

உங்கள் இளவயதுப்பார்வைகளை, எண்ணவோட்டங்களை
எழில் குறையாமல் இங்கே தந்த வளமைக்குப் பாராட்டுகள்!

தீபா
14-08-2008, 04:37 AM
ரொம்ப அழகா பராக்கு பாக்கறீங்கன்னு தெரியுது.... :D :D

கவிதை ஜூப்பருங்கோ!!!

ராஜா
14-08-2008, 05:14 AM
நடப்பு அரசியலுக்கும் அழகாய்ப் பொருந்திப் போகிற "யுனிவர்சல் ட்ரூத்" கவிதை..!

பாராட்டுகள் சுனைத்..!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-08-2008, 07:16 AM
தென்றலுக்கும் ராஜா அண்ணாவுக்கும் மிக்க நன்றி.