PDA

View Full Version : முறிந்த பனை (Tamil Translation of "THE BROKEN PALMYRA")



மதுரகன்
12-08-2008, 06:38 PM
முறிந்த பனை

நீண்ட நாளாக இந்தப்புத்தகத்தை மன்றத்தில் தரவேண்டுமென்ற ஆவல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தட்டச்சு செய்து தருகிறேன்...

ஒவ்வொரு இலங்கைத்தமிழனும் படித்திருக்க வேண்டிய புத்தகம்..

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் ஆவல் கொண்ட ஒவ்வொரு மனிதனும் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்...

"இலங்கை அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட இனவாதத்தின் கொடுமைகள்...
முறைதவறிப்போன போராட்டங்களால் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள்..
அமைதிகாப்பு என்ற பெயரில் இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள்...
என வரலாறு சொல்லும் சபிக்கப்பட்ட ஒரு இனம் அனுபவித்த கற்பனைக்கும் அடங்காத கொடுமைகள்..
போராட்டத்தின் ஆரம்பம் பயணம் பாதை... இது சரியா..?"

இப்படி நூலாசிரியரின் பார்வையில் எத்தனையோ உண்மைகள்..

வாசித்துப்பாருங்கள்..

வாசிக்க முன்பு ஒருவிடயம் ஆங்கிலத்தில் முதலில் வெளியான இந்த புத்தகத்தின் இரண்டாம் ஆங்கிலப்பதிப்பு இதை எழுதியவர்களில் ஒருவரின் இரத்தத்தில் அச்சிடப்பட்டது ஆம் அவர் படுகொலை செய்யப்பட்டார்..

இனி நூலுக்குள் நுழைவோம்...

மதுரகன்
12-08-2008, 06:50 PM
முறிந்த பனை

இலங்கையில் தமிழர் பிரச்சனை - உள்ளிருந்து ஒரு நோக்கு

ராஜனி திராணகம
பேராசிரியர் - உடற்கூற்றியல் துறை,
மருத்துவ பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்

ராஜன் ஹுல்
விரிவுரையாளர் - கணிதவியல் துறை
யாழ் பல்கலைக்கழகம்

தயா சோமசுந்தரம்
விரிவுரையாளர் - உளநோய்க்கூற்றுத்துறை
மருத்துவபீடம்
யாழ் பல்கலைக்கழகம்

கே.சிறீதரன்
விரிவுரையாளர் - கணிதவியல் துறை
யாழ்பல்கலைக்கழகம்


"கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க
அவற்றை நல்ல மனிதர்கள் என்பூர்
அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய்
சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத்
தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.
-மாட்டின் லூதர் கிங்-


பதிப்புரிமையும் வெளியீடும் -
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்
(யாழ்ப்பாணம்)

முதல்பதிப்பு (ஆங்கிலம்) - 1988
முதல்பதிப்பு (தமிழில்) - 1996

மதுரகன்
12-08-2008, 06:58 PM
மறைந்த ராஜனி திராணகமவின்
இலட்சியத்தை மனதிற்கொண்டு,
எமது இந்த முடிவுறாத
போராட்டத்தில்
எவ்வித அர்த்தமுமின்றி வாழ்வைப்
பறிகொடுத்த
இளைஞர்கள், யுவதிகள்,
மெளனிகளாக்கப்பட்ட சாதாரண
மக்கள்
அனைவருக்கும்
இந்நூல்


சமர்ப்பணம்.

மதுரகன்
12-08-2008, 07:08 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/2/2c/Rajanit.jpg

கலாநிதி. ராஜனி திராணகம
M.B.B.S. (Colombo), Ph.D. (Liverpool)
23.02.1954 - 21.09.1989

"என்றாவது ஒருநாள் ஒரு துப்பாக்கி என்னை
அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால்
ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை
பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின்
கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும்
துப்பாக்கியாகவே அது இருக்கும்."

1989-09-15ம் திகதி ராஜனி தன் நண்பர் ஒருவருக்கு
இறுதியாக எழுதிய கடிதத்தில் இருந்து...

அறிஞர்
12-08-2008, 07:11 PM
இங்கு பரிமாறிக் கொள்வதற்கு நன்றி மதுரகன்...

புத்தகத்தை இங்கு கொடுங்கள்.. படித்து பலரும் பயன்பெறட்டும்.

மதுரகன்
12-08-2008, 07:12 PM
மீதி நாளை காத்திருங்கள்..
வாசியுங்கள்..
பதிலளியுங்கள்..
இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை..

தீபன்
13-08-2008, 03:50 AM
வாருங்கள் மதுரகன். நல்ல முயற்சி. தடையில்லாமல் தொடருங்கள்.

அகத்தியன்
13-08-2008, 04:05 AM
நல்ல முயற்சி என்னிடம் அப்புத்தகத்தின், ஒளிப்பிரதி (Scan) உள்ளது. நான் அதனை பதிவேற்றலாமா நண்பர்களே????

தீபன்
13-08-2008, 04:11 AM
ஒளிப்பிரதியென்றால் ஈ புத்தகமா...? அப்படியானால், மன்றத்தில் அதற்கென உள்ள இடத்தில் பதிவேற்றுங்களேன். நண்பருக்கு தட்டசு செய்யும் வேலையும் மிச்சமாகும்.

அகத்தியன்
13-08-2008, 04:37 AM
இப்போது அதனை மன்றத்தில் பதிவேற்றிவிட்டேன்.

ஆனால் அதன் தொடுபு ஒன்றினையும் காணவில்லை.

வேறு ஏதாவது விதிமுறைகள் உள்ளனவோ தெரியாது. தெஇர்ந்தவர்கள் உதவுங்கள்.

மதுரகன்
13-08-2008, 05:10 PM
உங்கள் ஆதரவுக்கு நன்றி அகத்தியரே..
உங்கள் குறையை விரைவில் பொறுப்பாளர்கள் தீர்ப்பார்கள் என எண்ணுகிறேன் அல்லது யாரையாவது தொடர்பு கொண்டு கேளுங்கள்...
ஆனால் நான் தொடர்ந்து இங்கேயும் பதிக்கவே விரும்புகிறேன்..
ஏனெனில் இங்கு பதிப்பது அதிகமான நபர்களை சென்றடையும் இந்த ஒப்பற்ற நூல் உண்மையில் பலபேரை சென்று அடையவேண்டுமென்பது எனது ஆவல்..
இங்கு யாவரும் படிக்கமுடியும்(பண்பட்டவர் அல்லாதவர்கள் கூட).
ஆனால் உங்கள் பிரதி அவசியம் தேவை அதிலுள்ள படங்களை எப்படி இணைப்பது என்று சிந்தித்தேன் அதற்கும் உதவியாக இருக்கும் அத்துடன் இணைப்பில் படிக்க வசதியற்றவர்கள் பின்னர் படித்துக்கொள்ளவும் உதவும்...

Narathar
13-08-2008, 05:24 PM
தங்களின் முயற்ச்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

மதுரகன்
13-08-2008, 05:37 PM
தமிழ்ப்பதிப்பிற்கான முன்னுரை 1996

கடந்த ஒன்றரை தசாப்தமாக குரூரமான இவ்யுத்தம் தொடர்ச்சியாகப் பல அழிவுகளை எம்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இடைக்கிடையே பேச்சுவார்த்தை, யுத்தத்தவிர்ப்பு என்பன துளிர்விட்டபோதும் அவை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிட்டன. மக்கள்! ஆம் இவர்களின் பெயரால்தான் இவை அனைத்தும் நடக்கின்றன. ஆனால் மக்களோ பலமிழந்து செய்வதறியாது தவிக்கின்றனர்.

1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தமும் இந்திய அமைதிப்படையினரின் வருகையும் ஒரு சில மாதங்களுக்கு பலவித நம்பிக்கைகளை சாதாரண மக்களுக்கு கொடுத்திருந்தன. அந்நம்பிக்கைகள் சுக்குநூறாகி திரும்பவும் இந்தியப்படையினால் ஆயுதங்களைக் களையும் நடவடிக்கை என்ற பெயரில் முழு அளவிலான யுத்தம் ஆரம்பித்தது. மக்களையோ அவர்களின் நலன்களையோ முன்னெடுக்க எம் சமுதாயத்தில் எந்தவித ஸ்தாபனங்களும் இல்லாத நிலையில் மக்கள் சின்னாபின்னப்பட்டு அகதிமுகாம்களில் பரிதவித்தனர்.

அவ்வாறான சூழலில் எமது சமுதாயம் மீளப்புத்துயிர்ப்பு பெறுவதெனில் எமது யதார்த்தத்தை இனங்கண்டு கொள்வது அவசியம் என எம்மில் சிலர் கருதினோம். இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்கப் புறப்பட்ட எமது சமுதாயம். அந்நிகழ்வுப்போக்கில் முழுச்சமுதாயத்தின் ஆத்மசக்தியையும் வலுவிழக்கச்செய்யும் உள்ளார்ந்த பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு திணறியது. துப்பாக்கிகளின் முன்பு மெளனிகளாக்கப்பட்ட மக்கள்கூட்டம் விடுதலை, போராட்டம், தியாகி துரோகி எனும் வெற்றுச்சொற்களின் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தது. மத ஸ்தாபனங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் சேர்ந்தவர்களில் பலர் பொய்மையில் வாழ்வதை தமது இருப்பிற்கான நடைமுறைகளாக்கினர். தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, உண்மைகளை எடுத்துக்கூறவோ முடியாவிட்டாலும் ஆரோக்கியமற்ற அரசியல், சமூக நிலைமைகளை ஆதிக்கம் பெறுவதற்கு மறைமுகமாக உதவிபுரியாமலாவது விட்டிருக்கலாம். இவ்வகையில் எமது சமூகத்தின் மனசாட்சிக்கான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நலிவடைந்து மரணித்துக்கொண்டிருந்தன. இக்காலகட்டத்தில்தான், மக்கள் மனந்திறந்து உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மைகளைத்தேடும் உந்தலுக்கான இடைவெளியினை உருவாக்கும் சிறிய முயற்சியாகவே முறிந்தபனை எனும் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

அதன்பின் நடந்தவை யாவரும் அறிந்த வரலாறு. இந்நூலை தமிழில் கொண்டுவரும் முயற்சியானது பலதடங்கல்களையும், இடர்களையும் எதிர்நோக்கியது. இந்நூல் தென்னிலங்கையில் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று பதிப்புகளாக ஆயிரக்கணக்கான பிரதிகள் தென்னிலங்கையில் விநியோகிக்கப்பட்டன. ஆனாலும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் தற்போதுதான் கிட்டியுள்ளது.

ஆனாலும் இன்றும் எமது சமுதாயம் தொடர்ந்தும் அழிவுப்பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றது. அதற்கான புறக்காரணிகளை இனங்கண்டுகொள்ளும் அதேவேளை அகக்காரணிகளின் வளர்ச்சி பற்றி வெளிப்படையாக ஆராய்வது எம்மில் பலராலும் தவிர்க்கப்படுகின்றது. எதுவித தார்மீகக்கோட்பாடுகளுமற்ற அரசியல் பிதற்றல்களும், வியாக்கியானங்களும் விடுதலைப்போராட்டம் என்ற போர்வையில் எமது மக்களை இருளில் வைத்திருக்க தொடர்ந்து பணியாற்றுகின்றன. சாதாரண சிறுவர் சிறுமியரின் எதிர்காலம் பற்றிக் கிஞ்சித்தும் சிந்தியாத அதேவேளை, அச்சிறார்கள் சிக்குண்டுள்ள நச்சுச்சூழல்களிலிருந்து பலர் தங்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டனர். அவர்களில் பலர் எமது சமுகத்தை ஆதிக்கம் செய்யும் தற்கொலை அரசியலை கேள்விக்குட்படுத்தாது, அதன் விளைவால் நடைபெறும் வேள்வித்தீயில் குளிர்காய்கிறார்கள்.

சுயநிர்ணயத்திற்கான போராட்டம், சுயநிர்மூலத்திற்கான போராட்டமாக மாறியதன் சாராம்சத்தை புரிந்துகொள்ளுதல் எமது எதிர்கால மீட்சிக்கு மிகவும் அவசியமானது.

முறிந்தபனை எனும் இந்நூல் மிகவும் நெருக்குதலான ஒரு காலகட்டத்தில்
மேற்கூறிய அபத்தமான போக்குகளை கேள்விக்குட்படுத்தும் ஒரு நடவடிக்கையின் வெளிப்பாடாகும். எனவேதான், அதனை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியாக அதன் முக்கிய பங்காளரான கலாநிதி. ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டார்.

இம்மொழிபெயர்ப்பில் பலகுறைபாடுகள் உண்டு. இது தனியே அரசியல் ஆய்வு நூலுமல்ல. இதில் கூறப்படுபவை விவாதத்திற்கு உரியவையாகக்கூட இருக்கலாம். எனினும், நாம் சிக்குண்டிருக்கும் சகதியிலிருந்து மீள ஒருவகையில் இது உதவுமாயின் அதனையே எமது முயற்சிக்குக்கிடைத்த பலனாகக் கருதுவோம்.

இறுதியாக, இதனை மொழிபெயர்த்துதவிய மற்றும் முடியுமானவரையில் தவறுகளைத்திருத்த, மொழிநடையில் மெருகூட்ட உதவிய சகலருக்கும் எமது நன்றிகள்.

செல்வா
13-08-2008, 07:51 PM
நல்ல முயற்சி தொடருங்கள் நண்பரே.... காத்திருக்கிறோம்...

மதுரகன்
14-08-2008, 05:13 PM
முன்னுரை முழுமையாக பதிவேற்றப்பட்டது.

மதுரகன்
14-08-2008, 05:14 PM
இந்தத்திரியை சகலரும் வாசித்து கருத்துக்களை பரிமாறி உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டுங்கள்..

தீபன்
16-08-2008, 02:25 AM
முறிந்த பனை முறிந்து போகாது தொடருங்கள் நண்பரே.

அறிஞர்
16-08-2008, 01:23 PM
அன்பு மதுரகன்...

தங்கள் முயற்சிக்கு மீண்டும் நன்றி...

இந்த புத்தகம் பிடிஎப் பைலாக உள்ளது. விரும்புபவர்கள் அன்புரசிகனை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புத்தகத்தில் பல உண்மையான தகவல்கள் இருந்தாலும், சில சமூகத்தினரை தாக்குவது போல் சில வரிகள் வரும்.

அதனால் மன்றத்தில் யாரும் பிரச்சனை கிளப்பிவிடக்கூடாது என அஞ்சுகிறேன். அவ்விதம் வாதம் எழும்பாமல் பக்குவமாக பதில் சொல்லுங்கள்...

புத்தகத்தை புத்தகமாக பார்ப்போம்.

மதுரகன் மீதோ, புத்தகம் மீதோ எங்களுக்கு குறையில்லை...

மன்றத்தில் தேவையற்ற வாதம் வரக்கூடாது என்றே பார்க்கிறேன். புரிந்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.. மதுரகன்.

அமரன்
16-08-2008, 01:49 PM
அறிஞர் அவர்களின் கருத்துத்தோடு நானும் முற்றிலும் ஒத்துப் போகிறேன்.
பதிவில்,பதிலில் கவனம் வேனும் என்பதே என் கருத்தும் மதுரகன்.
உங்கள் கருத்தில் நானும் ஒத்துப் போகின்றேன் கிஷோர்..
பதில் பதிவுகளை அனைவரும் கவனமாக தர வேண்டும்..
தருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இன்றளவும் உண்டு.

மதுரகன்
16-08-2008, 05:10 PM
நிச்சயமக புத்தகத்தில் எந்த இடைச்சொருகல்களுமின்றி அப்படிளே தருவேன் என உறுதியளிக்கிறேன். அத்துடன் இந்தப்புத்தகத்தைப்பற்றி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளூர் அறிஞர்கள் சிலருடன் விவாதித்துள்ளேன் ஆகவே உங்கள் கேள்விகளுக்கு சர்ச்சையின்றி ஓரளவுக்காவது பதில் தரமுடியும் என்று எண்ணுகின்றேன்..
எல்லாவற்றுக்கும் முன் என் மனக்கண்முன் நிற்பது புத்தகம் எழுதப்பட்ட புனிதமான அந்தநோக்கமே..

மதுரகன்
17-08-2008, 06:16 PM
முன்னுரை

பேராசிரியர் பிறையன் செனெவிரத்ன
மருத்துவ ஆலோசகர்
இராணிமேரி மருத்துவமனை, அவுஸ்திரேலியா.

முறிந்தபனை என்னும் இந்நூல் வட இலங்கையில் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பன பற்றிய வேதனை மிக்க வெளிப்பாடாகும். இலங்கை அரசும் இந்திய அமைதிப்பாதுகாப்பாளர்களும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும், பல்வேறு போராளிக்குழுக்களின் நாயகர்கள்(போராட்டக் குழுக்களைச் சாராத அரசழயல்வாதிகளும்) உண்மையில் எத்தகையவர்கள் என்பதையும் இந்நூல் விரிவான தகவல்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது. அவர்கள் எத்தகையவர்களாகப் பாசாங்கு செய்கிறார்கள் என்பதைவிட உண்மையில் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துகின்றது. மேலும் எமது விருப்புவெறுப்புகளும் நம்பிக்கைகளும் , கற்பனைகளும் அவர்களை எப்படிப்பட்டவர்களாகக் காட்டுகின்றன என்பதைவிட உண்மையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.


தொடரும்
தாமதத்திற்கு மன்னிக்கவும்

அகத்தியன்
18-08-2008, 05:48 AM
இன்னும் வரட்டும் நண்பரே, "முறிந்த பனை" ஈழ விடுதலை போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்ட முனைகின்றது.
இந்நூலுக்கு ப்ல் வேறு வகையான விமர்சனங்கள் உள்ளன. அதையெல்லாம் தாண்டி உங்கள் முயற்சி செல்ல எனது பிரார்த்தனைகள்......

தொடருங்கள்.

tamilambu
19-08-2008, 04:44 AM
தொடரும்
தாமதத்திற்கு மன்னிக்கவும்

நீங்கள் பல வேலைப்பளுவிற்கு மத்தியில் இந்த வேலையை செய்கிறீர்கள். எனவே உங்கள் தாமதம் புரிந்து கொள்ளக்கூடியதே...
எனவே மன்னிப்பு என்ற பதமே தேவையில்லாதது.
தொடருங்கள் நண்பரே

விகடன்
19-08-2008, 10:53 AM
532 பக்கங்களையுமா தமிழில் தட்டச்சிடப் போகிறீர்கள்? முன்னுரைகளுடன் சேர்த்துப்பார்த்தால் இன்னும் அதிகமாகுமே...