PDA

View Full Version : PHP - தமிழில்...!!!

tamilambu
12-08-2008, 02:41 AM
இயங்கு பக்கங்களைக்(Dynamic Pages) கொண்ட இணையத்தளங்களை (Web Site) உருவாக்குவதில் PHP எனும் இணைய மொழி பெரும்பங்கு வகிக்கிறது.

இந்த PHP தொடர்பான போதியளவு விளக்கமோ அல்லது புத்தகங்களோ தமிழில் இல்லை. (நான் தேடிய அளவில் கிடைக்கவில்லை) அந்த குறையை தீர்ப்பதற்காக "PHP - தமிழில் ஒரு தொடர்" என்ற புதிய திரியை ஆரம்பித்துள்ளேன்.

இந்தத் தொடர் எந்த வகையில் அமையவேண்டும் என நீங்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையிலேயே இங்கே ஆக்கங்கள் அமையப்போகின்றன. அதாவது ஆரம்பத்தில் இருந்து செல்லவேண்டுமா அல்லது ஏதாவது ஒரு தளத்தை வடிவமைக்கும் வகையில் மாத்திரம் செல்லவேண்டுமா அல்லது சந்தேகங்களுக்கு பதில் என்ற மாதிரி செல்லவேண்டுமா என்று நீங்கள் கூறும் அருத்துக்கு அமையவே இந்த திரி அமையப்போகிறது.

மேலும் PHPயில் அறிவுள்ள மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் இந்தத் திரியை பயன்படுத்தலாம்.
அறிவுள்ளவர்கள் உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
ஆர்வமுள்ளவர்கள் தெரிந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் மேலான கருத்துக்களுக்காக காத்திருக்கும்
>>--தமிழ்அம்பு-->>

தீபன்
12-08-2008, 03:55 AM
அதே... நாங்களும் கத்துக்குவமில்ல....
வந்த உடனயே நல்ல காரியம் பண்ணத் தொடங்கிட்டியள். தொடர் வெற்றியுற வாழ்த்துக்கள்.

தீபா
12-08-2008, 05:05 AM
ஆஹ்ஹ்ஹ்ஹஹ!!!! நான் ஆதரவு தருகிறேன்... ஆரம்பியுங்கள்!!!

இளசு
12-08-2008, 06:58 AM
நல்ல பணி. பாராட்டுகள் தமிழ் அம்பு அவர்களே!

நிறைவாய் முடிக்க வாழ்த்துகள்!

பூமகள்
12-08-2008, 08:55 AM
மிக நல்ல முயற்சி..!!
தொடர்ந்து கொடுங்கள்.. எங்களின் ஆதரவும் ஆலோசனையும் அவசியம் கொடுக்கிறோம்..

php முற்றிலும் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு கற்பித்தால் என்னென்ன சொல்லித் தருவீர்களோ அவ்வகையில் எல்லா அவசியமான பாடங்களையும் எளிய முறையில் கற்பியுங்கள் அன்பரே...!

தீபன்
12-08-2008, 09:38 AM
php முற்றிலும் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு கற்பித்தால் என்னென்ன சொல்லித் தருவீர்களோ அவ்வகையில் எல்லா அவசியமான பாடங்களையும் எளிய முறையில் கற்பியுங்கள் அன்பரே...!

இந்த இடத்தில் அன்பரேன்னு சொல்லக்கூடாது... ஆசிரியரேன்னு சொல்லணும். சரியா...!:lachen001:

poornima
12-08-2008, 09:41 AM
தொடங்குங்கள்.. கற்றுக் கொள்ள ஆர்வம் உண்டு. அதுவும் எளிய தமிழில் என்றால் மாட்டோம் என்றா சொல்வோம்..?

Muthuvijayan
12-08-2008, 03:43 PM
தெய்வமே புண்ணியமா போகும், ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிங்கண்ணே....

சூரியன்
12-08-2008, 03:55 PM
நல்ல பயனுள்ள திரி .

தொடருங்கள் நண்பரே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மதுரகன்
12-08-2008, 07:19 PM
நானும் PHP பற்றி அறிய ஆவலாயுள்ளேன்..

rajatemp
13-08-2008, 03:03 AM
நானும் வரவேற்கிறேன்

தங்கவேல்
13-08-2008, 03:18 AM
சீக்கிரமா ஆரம்பிங்க வாத்தியாரே....

SathyaThirunavukkarasu
13-08-2008, 04:28 AM
தொடங்குங்கள்.... அரிய ஆவலாக உள்ளோம்

தீபா
13-08-2008, 04:29 AM
Join Date: 03 Nov 2007
Posts: 34
iCash Credits: -224.7

வாத்தியாரே! எங்கே போனீங்க!!! வாங்க....

உங்களுக்க்கு என்னோட இந்த வாரக் கட்டணம்

ஐகேஸ் 250.00

( இப்படி யாராவது கட்டணம் தருவதா இருந்தா நானும் ஒரு பாடம் நடத்துவேன் )

தீபன்
13-08-2008, 04:40 AM

என்ன பாடம்னு சொல்லுங்க...... எனக்கு தேவைப்படும் பாடம்னா ரெண்டுமடங்கா கட்டணம்தர நான் சம்மதம். (உங்க குருபக்திக்கு என் வழ்த்துக்கள்...)

அம்பு வாத்தி... (வளமையா கம்பு வாத்தின்னுதன் சொல்வாங்க...) எங்கே போயிட்டீர்.... வாத்தின்னு சொன்னதும் லேட்டாத்தான் வரணும்னு நெனச்சிங்களா... சீக்கிரம் வாருமோய்... பசங்க காத்திட்டிருக்காங்கல்ல....

தீபா
13-08-2008, 05:07 AM

எனக்கு விளம்பர வடிவமைப்பு தெரியும். (Ads Designing) கூடவே Pencil Sketching, எளிதாக ஒருவரை வரைவது எப்படி, மிக எளிதாக பின்புலம் (Backgrounds) அமைப்பது எப்படி? விளம்பர பாணி (A Style of Ads), Pencil Sketch to Vector Drawing, Halftone Imaging, Text Effects, 3D Effects, (All in Vector Mode), How to draw a Cartoons and cartoon faces

(ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்)

இதில் உங்களுக்கு என்ன பாடம் வேண்டுமோ கேளுங்கள். முடிந்தவரை தமிழில் தருகிறேன்,

mayuran.maha
13-08-2008, 05:46 AM
நல்ல விஷயம் இது தொடர்ந்து தாருங்கள்.

தீபா
13-08-2008, 05:57 AM
நல்ல விஷயம் இது தொடர்ந்து தாருங்கள்.

மயூரன்.மஹா அவர்களே! உங்கள் அறிமுகத்தை எமக்குத் தாருங்களே!!

http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

தீபன்
13-08-2008, 06:41 AM
எனக்கு விளம்பர வடிவமைப்பு தெரியும். (Ads Designing) கூடவே Pencil Sketching, எளிதாக ஒருவரை வரைவது எப்படி, மிக எளிதாக பின்புலம் (Backgrounds) அமைப்பது எப்படி? விளம்பர பாணி (A Style of Ads), Pencil Sketch to Vector Drawing, Halftone Imaging, Text Effects, 3D Effects, (All in Vector Mode), How to draw a Cartoons and cartoon faces

(ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்)

இதில் உங்களுக்கு என்ன பாடம் வேண்டுமோ கேளுங்கள். முடிந்தவரை தமிழில் தருகிறேன்,

வரைதல் என்றாலே எனக்கு ஆகாதுங்க... அந்தளவுக்கு பொறுமையெல்லாம் கிடையாதுங்க. ஆனா, இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிங்களே, இதில பிரியோசனமானதென நீங்கள் கருதும் ஒன்றை ஆரம்பியுங்கள்.
அட்வான்சாக பிடியுங்க 500 ஈ பணம். அட்வான்ஸ் கொடுத்திட்டன், ஏமாத்தக்கூடாது ரீச்சர்...!

தீபா
13-08-2008, 07:08 AM

ஆஹ!!! எனக்கு இன்னிக்கு பண மழைதான்... நன்றி தீபன்!!!

ஒரே ஒரு மாணவனை வைத்து ஆரம்பித்தால் நட்டம் தானே!!! இன்னும் பலர் வேண்டுமல்லவா!!! இதை இத்தோடு நிறுத்தி வேறு திரியில் பேசுவோமே!!!!!!!!

PHP நாயகரே!! வாங்க சீக்கிரரம்...

shibly591
13-08-2008, 11:59 AM
வாத்தியாரே...........

நான் எப்பவும் கடசி பெஞ்ச்...

புரியுதுல்ல...

தொடங்குங்கேல.....

selvamurali
13-08-2008, 12:15 PM
பண மழை வாங்கினவரைக்கும் போதும் . சீக்கிரம் பாடம் சொல்லித்தாங்க வாத்தி

tamilambu
13-08-2008, 03:29 PM
வணக்கம் மாணவர்களே!

"PHP - தமிழில்..." என்றபுதிய தொடர் விரைவில் ஆரப்பிக்கிறேன்.

இவ்வளவு ஆர்வமாக மாணவர்கள் இருக்கும்போது ஆரம்பிக்காமல் விட்டால் எப்படி.....
அதுமட்டுமல்லாமல் கட்டணம் வேறு வாங்கியாகிவிட்டது.
விரைவில்..... உங்களுக்காக...

தீபன்
14-08-2008, 12:55 AM
யப்பா... குசேலன் படம் மாதிரியே போயிடும் போல இருக்கே....

(தென்றலுக்கு வேற 500 காசு குடுத்து ஏமாந்து நொந்து போயிருகன்.... வேறு திரியில பேசுவம்னு சொல்லிட்டு எந்த திரின்னுகூட சொல்லாம போயிட்டா ரீச்சர்...)

tamilambu
14-08-2008, 01:40 AM
யப்பா... குசேலன் படம் மாதிரியே போயிடும் போல இருக்கே....

(தென்றலுக்கு வேற 500 காசு குடுத்து ஏமாந்து நொந்து போயிருகன்.... வேறு திரியில பேசுவம்னு சொல்லிட்டு எந்த திரின்னுகூட சொல்லாம போயிட்டா ரீச்சர்...)

ஏங்க ரொம்பவே பயப்பிடுறிங்க.....
குடுத்த காசுக்கு குறைவில்லாம PHP சொல்லிக்குடுக்கலாம். பயப்பிடாதிங்க.

தீபன்
14-08-2008, 01:44 AM
ட்ரெயிலர போட்டே ஒரு பக்கத்த தாண்டிட்டிங்க... படத்த போட மாட்டன்றிங்களே... கேட்டா, பயப்படாதிங்கன்னு ஒருவார்த்தைல ஆறுதல்வேற...

தீபா
14-08-2008, 04:26 AM
யப்பா... குசேலன் படம் மாதிரியே போயிடும் போல இருக்கே....

(தென்றலுக்கு வேற 500 காசு குடுத்து ஏமாந்து நொந்து போயிருகன்.... வேறு திரியில பேசுவம்னு சொல்லிட்டு எந்த திரின்னுகூட சொல்லாம போயிட்டா ரீச்சர்...)

அய்யகோ@ தென்றல் ஏமாற்ற மாட்டாள்.

விரைவில் திரி ஆரம்பிக்கிறறன்.

தமிழ் அம்பு வாத்தீயாரே! எப்போங்க பாடம்... (மூணு தடடவ கேட்டாச்சு!!)

tamilambu
18-08-2008, 12:38 AM
"செய்வன திருந்தச் செய்"
அதற்காகத்தான் இந்த சுணக்கம்.
பொறுத்தருள்க..... மாணவர்க்ளே...

miindum
18-08-2008, 07:21 AM
இதுக்காகத்தான் காத்திருந்தோம். ஆரம்பிங்க.

tamilambu
19-08-2008, 12:45 AM
ஏம்பா கிஸோரு.....
ஒருவாட்டி சொன்னா புரியாதா.... ஏன் சும்மா டபாய்க்கிறா....
அதுதான் நாங்க சொல்லிக்குடுக்கிறமுண்ணு சொல்லுறமில்ல.... அப்புறமென்ன...???
இன்னா பண்ணுவ நீயி.... நாங்க யாரு.... முடிஞ்சா வீட்டாண்ட வந்து ஏதாச்சும் பண்ணுய்யா.....
(ஹீ... ஹீ.... ஹி.... எங்களுக்குத்தான் வீடு வாசலே கிடையாதே... அப்புறம் எப்பிடி???)

rajatemp
26-08-2008, 03:23 PM
அவ்வளவுதான் உங்கள் php பாடமா

தொடர்வது போல் இல்லையே

rajatemp
26-08-2008, 03:24 PM
யாரையும் ஏமாற்றக் கூடாது

பல நாட்களாக உங்களை இந்த பகுதியில் காணவில்லையே

tamilambu
26-08-2008, 03:34 PM
யாரையும் ஏமாற்றக் கூடாது

பல நாட்களாக உங்களை இந்த பகுதியில் காணவில்லையே

அப்படி சொல்லாதீர்கள் நண்பரே!
கண்டிப்பாக இந்தத் திரியை தொடர்வேன். சில நாட்கள் பிறநாடு சென்றிருந்தேன்.
சிறு பதிப்புக்கள், பின்னூட்டங்கள் ஒருசில நிமிட வேலை. ஆனால் PHP எழுதுவது கொஞ்சம் நிதானமாக - கவனமாக அதேநேரம் சரியாகவும் செய்யவேண்டிய வேலை அல்லவா?
அதுதான் சற்றுத் தாமதமாகிறது.

உங்கள் போன்ற நல்ல உள்ளங்களை ஏமாற்றி நான் என்னத்தை சம்பாதிக்கப் போகிறேன்.
உங்களது பதிவில் இவ்வளவு கோபம் தேவையில்லாதது என்று நினைக்கிறேன்.

rajatemp
27-08-2008, 02:24 PM
வணக்கம் நண்பரே

பதில் தந்தமைக்கு நன்றி

எனக்கு உங்கள் மீது எந்த கோபமும் இல்லை

முதலில் PHP வேலை செய்ய என்னென்ன கணிணியில்
நிறுவ வேண்டும் என்றாவது கூறலாமே

இப்படி படிபடியாக செல்லலாமே

அதை விடுத்து எதுவும் கூறாமல் இருந்தால் எப்படி நண்பரே

ஏதாவது உதவி வேண்டுமாயின் கேளுங்கள் உதவ தயாராக இருக்கிறேன்

சுட்டிபையன்
28-08-2008, 01:21 PM
ஜோவ் வாத்தியாரே என்னைய்யா ஓவரா பில்டாப் கொடுக்கிறீர் பாருங்க நம்ம பசங்கலெள்ளாம் எப்படி துடிக்கிறாங்கணு படிக்கிறதுனி நீரா ஆரம்பிச்சிட்டா நல்லதி இல்லை அப்புறம் நாங்களா ஆரம்பிக்க வேண்டிவரும்

சுட்டிபையன்
28-08-2008, 01:25 PM
வணக்கம் நண்பரே

பதில் தந்தமைக்கு நன்றி

எனக்கு உங்கள் மீது எந்த கோபமும் இல்லை

முதலில் PHP வேலை செய்ய என்னென்ன கணிணியில்
நிறுவ வேண்டும் என்றாவது கூறலாமே

இப்படி படிபடியாக செல்லலாமே

அதை விடுத்து எதுவும் கூறாமல் இருந்தால் எப்படி நண்பரே

ஏதாவது உதவி வேண்டுமாயின் கேளுங்கள் உதவ தயாராக இருக்கிறேன்

எதுவுமே தேவை இல்லை:icon_b:

poornima
28-08-2008, 01:54 PM
புலி எப்ப வரும்? :-)

தீபன்
29-08-2008, 12:24 AM
புலின்னா சும்மாவா... (கடைசியில கைப்புள்ளதான் வாறாரோ தெரியல...!)

asok_03
01-09-2008, 12:48 PM
நானும் PHP கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன் தயவுசெய்து விரவாக ஆரம்பிக்கவும் வாத்தியாரே...........

தீபா
19-09-2008, 10:38 AM
பாடங்கள் ஆரம்பித்தாச்சா? தாமசமாக வந்திட்டேனோ??

தீபன்
19-09-2008, 04:30 PM
ஏம்மா தென்றல்... நீங்ககூட அட்வான்ஸ் வாங்கினதா ஞாபகம்...!?

poornima
20-09-2008, 08:05 AM
இன்னும் ஆரம்பிக்கலையா.. அட போ(ர்)ங்கப்பா. :-)

தீபா
20-09-2008, 10:57 AM
ஏம்மா தென்றல்... நீங்ககூட அட்வான்ஸ் வாங்கினதா ஞாபகம்...!?

:auto003: வந்துட்டே இருக்கேன்..... :medium-smiley-089:

Narathar
20-09-2008, 11:03 AM
சரி நானும் இந்த கிளாஸில் சேர்ந்துக்கிறேன்......

படிக்காட்டாலும் பல கேள்விகளாவது கேட்கலாமல்லவா?

நாராயணா!!!

தீபா
20-09-2008, 11:12 AM
சரி நானும் இந்த கிளாஸில் சேர்ந்துக்கிறேன்......

படிக்காட்டாலும் பல கேள்விகளாவது கேட்கலாமல்லவா?

நாராயணா!!!

வாத்தியார் இல்லாத கிளாஸிலா? :eek:

அட அப்படியும் படிக்கமாட்டீங்களா? :D

நாராயணாஅ!!!:D

ஆர்.ஈஸ்வரன்
20-09-2008, 11:42 AM
ஆரம்பத்திலிருந்தே தொடருங்கள்.

தீபன்
20-09-2008, 03:44 PM
சரி நானும் இந்த கிளாஸில் சேர்ந்துக்கிறேன்......

வாத்தியார் இல்லாத கிளாஸிலா? :eek:

வாத்தியார் இல்லைன்னதாலதானே நாரதர் சேரவே வந்தார்...:aetsch013:

தீபன்
20-09-2008, 03:49 PM
:auto003: வந்துட்டே இருக்கேன்..... :medium-smiley-089:
யாரு... தமிழ் அம்புவப்போலவா.... சரி சரி, என் பேரன அனுப்பி வைக்கிறன்...:sauer028:

ஆரம்பத்திலிருந்தே தொடருங்கள்.

ஏங்க, உங்களுக்கே நியாயமா இருக்கா இது... php திரியின்னு சொல்லி இங்க ஒரு அரட்டை திரி ஓட்டிட்டிருக்கோம்... 50 பதிவு ஆனப்புறம் இப்ப வந்து ஆரம்பத்திலிருந்து தொடருங்கன்றியளே...
சரி, தமிழ் அம்புவ கூப்பிடுங்க... மீண்டும் php தமிழில்னு ஒரு பில்டப் குடுக்க சொல்லுங்க... மிச்சத்த நாங்க பாத்துப்பம்...:sauer028::sauer028::sauer028:

தீபா
22-09-2008, 07:32 AM
யாரு... தமிழ் அம்புவப்போலவா.... சரி சரி, என் பேரன அனுப்பி வைக்கிறன்...:sauer028:

ஓடி வாங்க! ஓடி வாங்க !!! :sprachlos020:

தீபன் தாத்தா, தன்னோட பேரனை அனுப்பி வைக்கிறாராம்..... :aetsch013: :D

தீபன்
22-09-2008, 09:55 AM
சந்தோசத்த பாரு... 99 வயசிலயும் என்னா துள்ளல்...
நா சொன்னது, நீங்க ஆரம்பிக்கிறதுக்குள்ள எனக்கு பேரனும் வந்து படிக்க ரெடியாயிடுவான்னு. ம்ம்ம். அடுத்த பக்கமும் ஆரம்பிச்சாச்சு... பேசாம இத அப்பிடியே அரட்டை பகுதிக்கு மாத்த சொல்வோமா..?

prady
24-09-2008, 10:35 PM
பரபரப்பாக ஒரு திரியை தொடங்கவேண்டியது. பின்னர் போர்வையை இறுக்கப் போர்த்திக்கொண்டு உறங்கவேண்டியது.

வாத்தியாருங்கோ மருவாதியா பாடத்தை ஆரம்பிக்கலேன்னா... நாம்ப க்ளாஸ ஸ்டார்ட் பண்ணி 'டாப்' கியர்ல போய்க்கவேண்டியதுதான். இன்னாம்மே சொல்றே?

தீபன்
25-09-2008, 01:37 AM
அட, இங்க பார்ரா... இன்னொருத்தரு சவுண்டு குடுக்குறாரு... நீங்களும் அம்புபோல போய்டுவியளா... அல்லது நீங்க சொல்றமாதிரி பாடமெடுப்பியளா.... (நீங்க ஓமெண்டா மாணவர்கள சேத்து கட்டணம் வசூலிக்க நான் தயார்.....!!!!)

தீபா
25-09-2008, 06:08 AM

வசூலிக்க்கன்ன்னா, நானும் தயார்தான்... :D

poornima
25-09-2008, 07:12 AM
பாடம் ஆரம்பிச்சதோ இல்லையோ செம்மை மொக்கையா போய்க்கிட்டிருக்கு இந்த திரி..நடத்துங்க நடத்துங்க :-)

தீபன்
25-09-2008, 04:10 PM
வகுப்புன்னாலே அப்பிடித்தானே... வாத்தியார் வராட்டா எங்க பாடுதானே...

தங்கவேல்
29-09-2008, 03:33 AM
வாத்தியாரே வாங்க விரைவில் வாருங்க... படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.

rajatemp
30-09-2008, 05:50 PM
வாத்தியார் வருவாரா?
வந்தாலும் php எடுப்பாரா?

இங்கு பதிவு செய்ததில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே php தெரியாது.ஏனெனில் பலருக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்
உண்மைதானே
:icon_b::lachen001::lachen001::lachen001:

தீபன்
01-10-2008, 02:43 AM

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்களுக்கு PHP தெரியுமென தெரிகிறது. அந்த வாத்தியார் வராட்டா என்ன, உங்களால் முடியுமானால் நீங்க வகுப்பெடுக்கலாமே....
யார் சொல்லித்தந்தாலும் கற்றுக்கொள்ள தயாராயிருக்கும் பணிவான மாணவர்கள் நாம்.
முடிஞ்சா, இதே திரியை தொடருங்கள்...!

rajatemp
01-10-2008, 06:56 PM
எனக்கு ஓரளவுதான் தெரியும்
தீபன் அவர்களே

ஆசிரியர் வரும்வரை காத்திருப்போம்
வேறு வழி

selvamurali
02-10-2008, 06:22 AM
எனக்கு பிஎச்பி பத்தி தெரியும் ஆனா தெரியாது.......
பிஎச்பி எல்லா வெப்சைட்லயும் யூஸ் பண்றாங்கன்னு தெரியும். ஆனா எப்படி ப்ராக்ராம் பண்றதுன்னு தெரியாது.
ஆனாலும் இங்க ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற முறையில் நான் இணையத்தில் திரட்டிய தகவல்களை தருகிறேன்..................
பின்னர் நீங்கள் தாருங்கள்.

இயங்கு தள மென்பொருட்களின் ஜாம்பாவான் மைக்ரோசாப்ட் இணையத்தில் சர்வர்/கிளையன்ட் முறையில் இயங்க ASP.Net என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவை முற்றிலும் மைக்ரோசாப்ட் தளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு நாம் பணம் கட்டி வாங்குவதற்குள் நமது சொத்தையே விற்க வேண்டும். ஆனால் இதற்கு மாற்றாக வந்ததுதான் php முதலில் personel home page என்று வந்த php பின் காலப்போக்கில் Hypertext Preprocessor என்று அழைக்கப்பட்டு வருகிறதாக தெரிகிறது.

இன்று இணையத்தில் பரவிக்கிடக்கும் இணையத்தளங்களில் பாதிக்குபாதி phpயில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தீபன்
02-10-2008, 09:01 AM
இப்பவாச்சும் இந்த திரிக்கு விடிவு வந்திச்சே.... வணக்கம் செல்வமுரளி. உங்களுக்கு தெரிஞ்சத சொல்லித்தாங்க... தப்பாருந்தாலும் பரவால்ல... அப்பவாச்சும் தப்ப சுட்டிக்காட்ட நல்லா தெரிஞ்சவங்க வருவாங்க...

நல்ல தகவல்களுடன் ஆரம்பிச்சிருக்கிங்க. தொடருங்க. வாழ்த்துக்கள்.
குருதட்சணையா 100 ஈ- காசுகள். (தென்றல் மாதிரி நீங்கலும் பணத்தோட போயிடாட்டா சரி...!!!!)

selvamurali
02-10-2008, 10:31 AM
ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி!

தீபன்
02-10-2008, 11:29 AM
எல்லாத்தையும் முடிச்சு வைச்சு நன்றி சொல்றதுபோலவே சொல்றிங்களேயப்பு....:sprachlos020::sprachlos020::sprachlos020:
இஞ்சயும் போட்ட முதலுக்கு ஆப்புத்தானா....:traurig001::traurig001::traurig001:

selvamurali
02-10-2008, 12:13 PM
எல்லாத்தையும் முடிச்சு வைச்சு நன்றி சொல்றதுபோலவே சொல்றிங்களேயப்பு....:sprachlos020::sprachlos020::sprachlos020:
இஞ்சயும் போட்ட முதலுக்கு ஆப்புத்தானா....:traurig001::traurig001::traurig001:

அப்படியெல்லாம் இல்லை தீபன். நிச்சயம் எனக்கு தெரிந்தவரை நான் இங்கே பதிவிடுவேன்...
உங்க குரு தட்சணைக்கு மிக்க நன்றி :)

rajatemp
02-10-2008, 05:39 PM
வணக்கம்,
அன்பு நண்பர்களே, ஊர் கூடி தேர் இழுக்க தொடங்கிவிட்டதால் நானும் என்னால் முடிந்த வரை அந்த தேரை இழுக்கிறேன்.
திரியை தொடங்கியவர் விட்டாலும் நாமாவது முடிப்போமே என்ற நம்பிக்கையுடன்

php முழுக்க முழுக்க open source Language யாரும் யாரையும் கேட்க முடியாது ஏனெனில் இதற்கு licence தேவையில்லை

php கற்றுகொள்ள முதலில் php உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்

நண்பர் கிஷோர் சொல்வதை செய்து கொள்ளவும்

முதலில் ஒரு வேரியபிள் உருவாக்கி பிரிண்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்

Hello.php

<html>
<head>
<title>Hello World</title>
</head>
<body>
<h1>Hello World</h1>
<h3>Demonstrates using a variable</h3>
<?php
$userName = "TamilMantram";
print "Hi, $userName";
?>
</body>
</html>

php யை பொறுத்தவரை <? .... ?> இந்த Tag ல் எழுதபடுவது
phpல் ஒரு வேரியபிளை உருவாக்க $ பயன்படுத்த வேண்டும்
$ பக்கத்தில் எந்த பெயரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் PHP - case-sensitive language (ஜாவா போல) அதை மறக்ககூடாது
ஒவ்வொரு வரிக்கு பின்பும் ; semicolon அவசியமானது java போல

தொடரும்

selvamurali
03-10-2008, 07:22 AM
இதோ பிஎச்பி, மற்றும் மைஎஸ்கியூஎல், அப்பாச்சி, மெயில் சர்வர் சாப்ட்வேர்கள் இணைந்த XAMPP மென்பொருள் இதை உங்களது கணினியில் நிறுவிக்கொண்டாலே போதுமானது. பிஎச்பி, மைஎஸ்கியூஎல், அப்பாச்சி எல்லாமே தானாகவே நிஇறுவப்பட்டுவிடும்.
பின் இந்த மென்பொருளை எங்கே நிறுவியுள்ளீர்களோ அந்த போல்டரில் உள்ள htdocs என்ற போல்டரின் உள்ளே நாம் உருவாக்கும் பிஎச்பி பைலினை இட்டுவிட்டு பின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரோ அல்லத பயர்பாக்சோ ஓபன் செய்து http://localhost/index.php நாம் உருவாக்கிய பிஎச்பி பைல் பெயரை இங்கே தந்தால் ஸ்கிரிட்டானது ரன் செய்யப்படும்.
http://www.apachefriends.org/en/xampp-windows.html
நன்றி நண்பர்களே!

தீபன்
03-10-2008, 09:10 AM
அடடா... வேகமா போகுது பிஎச்பி தேரு... தொடருங்க.. தொடருங்க... முடிவில் எல்லா வாத்தியார்களுக்கும் தட்சிணை நான் வைக்கிறேன்...!

selvamurali
23-10-2008, 07:38 PM
என்னாச்சு இந்த திரி .. தூங்கிட்டிருக்கு....

என் பங்குக்கு தட்டி எழுப்பிவிட்டுட்டேன் :)

miindum
24-10-2008, 07:06 AM
மிக பயனுள்ளவையாகவே இருக்கிறது.

தங்கவேல்
28-10-2008, 02:17 AM
வாத்தியார் பெருமக்களே, ஒரு சைட்டை முதலில் வடிவமைத்து விட்டு, அந்த சைட்டை எப்படி உருவாக்க வேண்டுமென்று படிப்படியாக கற்றுக் கொடுத்தால் எளிதில் புரிந்து கொள்ள இயலும். அவ்வாறு செய்யுங்களேன்.

Maruthu
04-11-2008, 11:52 AM
தமிழ் அம்பு சாரின் பி எச் பி பிச்சு உதறுது.

நல்லவேளையா ராஜா சாரும், செல்வமுரளி சாரும் தொடங்கிபுட்டாங்க. நல்ல தொடக்கம் கத்துக்க ஆர்வமா இருக்குது.

தொடருங்கள் வாத்தியாரைய்யா.........

அன்புடன்...
மருது.

தீபா
07-11-2008, 02:19 PM
இப்பவாச்சும் இந்த திரிக்கு விடிவு வந்திச்சே.... வணக்கம் செல்வமுரளி. உங்களுக்கு தெரிஞ்சத சொல்லித்தாங்க... தப்பாருந்தாலும் பரவால்ல... அப்பவாச்சும் தப்ப சுட்டிக்காட்ட நல்லா தெரிஞ்சவங்க வருவாங்க...

நல்ல தகவல்களுடன் ஆரம்பிச்சிருக்கிங்க. தொடருங்க. வாழ்த்துக்கள்.
குருதட்சணையா 100 ஈ- காசுகள். (தென்றல் மாதிரி நீங்கலும் பணத்தோட போயிடாட்டா சரி...!!!!)

நீங்க மட்டும்தான் கொடுத்திருக்கீங்க... ஒருத்தரை மட்டும் வெச்சு எப்படி க்ளாஸ் ஆரம்பிக்கிறதாம்??? கம்பெனி நட்டததில ஓடாதா பின்ன?

selvamurali
07-11-2008, 04:47 PM
நீங்க மட்டும்தான் கொடுத்திருக்கீங்க... ஒருத்தரை மட்டும் வெச்சு எப்படி க்ளாஸ் ஆரம்பிக்கிறதாம்??? கம்பெனி நட்டததில ஓடாதா பின்ன?

நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையே!
யாரும் கேள்வியே கேக்கமாட்ங்கறாங்களே!

தீபா
08-11-2008, 03:31 AM
நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையே!
யாரும் கேள்வியே கேக்கமாட்ங்கறாங்களே!

என்னசார் வம்பா போச்சு, தெரிஞ்சாத்தானே கேட்கறதுக்கு.... :D

சரி சரி... நீங்களும் ஒரு ஐநூறு வெட்டுங்க. பாடத்தை ஆரம்பிச்சிடலாம்..

(இன்னொரு ஆளை சேர்த்தி விட்டா உங்களுக்கு பீஸு கம்மி.... எப்படியிருக்கு பிளான்?)