PDA

View Full Version : தமிழ் நேற்று இன்று நாளைஷீ-நிசி
12-08-2008, 02:34 AM
நண்பர்களே!

கடந்த 10-08-2008 அன்று V.G.P -ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்ற ஆர்கூட் கம்யூனிட்டி நடத்தின முதல் ஆண்டு விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரு. சீமான், மற்றும் கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்களின் முன்னிலையில் நடந்த கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தில்,

"தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் 7 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். அடியேனும் அதில் கலந்துகொண்டு கவிதை படைத்தேன். திரு. சீமான் அவர்களின் கையால் நினைவு பரிசும் பெற்றேன். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ் "நேற்று இன்று நாளை"

நேற்று பெய்த மழையில்,
மலர்ந்த சின்னஞ்சிறு செடியுமல்ல....
படர்ந்து செல்ல வழியில்லாமல்,
உலர்ந்து போன கொடியுமல்ல....

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பூத்த அன்னைத் தமிழ்!
இந்த சங்கத்தமிழ்! அது தங்கத்தமிழ்!
எங்கள் செந்தமிழ்!!!

அன்று 6-ஆம் நூற்றாண்டின்...
கல்வெட்டிலே வலம் வந்தவள்,
இன்று 21-ஆம் நூற்றாண்டின்..
இண்டர்நெட்டிலும் வலம் வரவும் தெரிந்தவள்!

அன்று ஓலைச்சுவடிகளிலே
வலம் வந்தவள்,
இன்று மேலை நாட்டினர் கண்டெடுத்த
அலைபேசிகளிலும் வலம் வரத் தெரிந்தவள்!

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர் போன்றது!

கிடைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப
தன்னை பொருத்திக்கொள்ளும்
திறமையுள்ளதால்,

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர்போன்றதுதான்....

தண்ணீருக்கு சிறப்பு
நிறமில்லாமலிருப்பது!

எம் தமிழுக்கு சிறப்பு
சிரமமில்லாமலிருப்பது!

அழிக்க நினைப்பவர்களே,
தமிழ் அழியுமென நினைப்பவர்களே...

வளைத்தவுடன் ஒடிந்துவிட -நீங்கள்
நினைத்தவுடன் அழித்துவிட -தமிழ்
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில்
பூத்த பூச்செடியல்ல....

அது பூமியின் அடுக்குகளிலெல்லாம்,
வேர்விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம்...
மிகவும் ஆழமான மரம்!!

காக்க நினைப்பவர்களே!
தமிழை காத்திட துடிப்பவர்களே....

வேற்று மொழிக்கு கரிப்பூசி,
தேற்றிக்கொள்ளும் நிலையில்,
தமிழ் இல்லை!

வானம் போல படர்ந்திருக்கும் தமிழை
ஊனம் போல சித்தரிக்காதீர்கள்.....

உங்கள் சந்ததியையும் பார்த்தது...
உங்கள் மூதாதையரின் சந்ததியையும் பார்த்தது....

நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்...

மேலிருந்து ஒரு குழந்தையின்
மெல்லிய குரல் ஒலிக்கும்....

"அம்மா" என்று

எங்கள் தமிழுக்கு என்றும் அழிவில்லை...
அதற்கு நேற்று இன்று நாளை என்று
காலங்களுமில்லை...

வாழ்க தமிழ்!

http://i128.photobucket.com/albums/p163/shenisi/WithSeeman.jpg

பாலகன்
12-08-2008, 03:44 AM
வாழ்க உமது தமிழ் தொண்டு, வாழ்த்துக்கள் நண்பரே

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்............ என்ற பாடலில்

கற்றவர் சபையில் உனக்காக
ஓர் இடமும் பெறவேன்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழவேன்டும்............

இந்த பாடல் தான் எனக்க நினைவிற்கு வந்தது, நீங்கள் பரிசு வாங்குவதை பார்த்தால்..........

தொடரட்டும் உமது வெற்றி பயனம்

நாகரா
12-08-2008, 03:56 AM
காலங்கடந்து வாழும் தமிழின் பெருமை சொல்லும்
உம் கருத்தரங்கக் கவிதை அருமை.

வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

ஆதி
12-08-2008, 04:28 AM
முதலில் வாழ்த்துக்கள் ஷீ.. அலைகடலோரம் அன்னைத்தமிழ் பற்றி நீங்கள் முழங்கிய கவிதைக்கும் உங்களுக்கும்.. இன்னும் மேன்மேலும் மேல்நோக்கி செல்ல சிறப்பு வாழ்த்துக்கள்..

அழகிய கவிதை ஷீ.. கவிதையை சில இடங்களில் இன்னும் செதுக்கி இருக்கலாம்.. கவியரங்கங்களில் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் வாங்குவது என்பது இயலாது ஆனால் அரங்கத்தவர்களை நம் வசமிழுக்க சில யுத்திகள் தேவை.. அந்த வகையில் கவிதையில் நவரசங்களை கொஞ்சம் புகுத்தி இருக்கலாம்..

நேற்று இன்று நாளை..

நேற்றைய தமிழ் பற்றி சொல்ல சங்கத்தில் எவ்வளவோ உள்ளது அதையும் கவிதையில் கோர்த்திருக்கலாம்..

இணையத்தில் உலா வரும் அன்னையைப் பற்றி சொன்னது மிக அழகு..

//வளைத்தவுடன் ஒடிந்துவிட -நீங்கள்
நினைத்தவுடன் அழித்துவிட -தமிழ்
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில்
பூத்த பூச்செடியல்ல....

அது பூமியின் அடுக்குகளிலெல்லாம்,
வேர்விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம்...
மிகவும் ஆழமான மரம்!!

காக்க நினைப்பவர்களே!
தமிழை காத்திட துடிப்பவர்களே....

வேற்று மொழிக்கு கரிப்பூசி,
தேற்றிக்கொள்ளும் நிலையில்,
தமிழ் இல்லை! //

இந்த வரிகளுக்கு தேவையில்லை என்பது என் கருத்து மன்ற உறவுகள் வந்து சொல்லட்டும் அவரவர் கருத்தையும்..

தங்கிலத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாய் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது..

//நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்... //

இந்த வரி அற்புதம் ஷீ.. இருந்தாலும் சந்திரனில் உயிர்கள் வாழ இயலாதென்று சொல்லிவிட்டது விஞ்ஞானம்.. அதுமட்டுமல்ல நிலா பூமி காதலனைவிட்ட மெல்ல சென்று கொண்டிருக்கிறாள்.. இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் நிலா பூமியோடு இருக்கமாட்டாள் என்று படித்தேன்.. அதான் சொன்னேன்.. செவ்வாய் என்று சொல்லியிருக்கலாம் ஷீ.. ஏன்னென்றால் சமீபத்திய செய்தி மூலம் செவ்வாயில் நீர் இருப்பதாக கண்டுபிடிக்க பட்டிருப்பதை அறிந்தேன்.. ஒரு கவிஞனின் கணிப்பு குறைந்தபட்ச தீர்கதரிசனமாகவும் இருத்தல் அவசியம் ஷீ..

இந்த பாரதியின் வரிகளைப்பாருங்களேன்..

//காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் //

இப்படி பாரதி எழுதிய நொடிகளில் நம் மக்களுக்கு தொலைக்காட்சி என்றால் என்னென்றே தெரியாது, ஆனால் அவன் கனவு இன்று மெய்ப்பட்டுவிட்டது.. இப்படி ஒரு கனவைத்தான் எதிர்ப்பார்க்கிறேன் ஷீ..

நாளையைப்பற்றி அதிகம் சொல்லியிருக்கலாம் ஷீ..

கவிதையின் முடிவையும் சற்று மாற்றியிருக்கலாம்..

இதயம்
12-08-2008, 04:35 AM
நம் ஷீ-நிசி பற்றிய நம் கற்பனை தோற்றத்திற்கு இன்று உருவம் கிடைத்திருக்கிறது இங்கே..! ஷீ-நிசியின் கருத்துக்களுக்கு அன்று சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது அங்கே..!! இவை இரண்டையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு ஷீ-க்கு நன்றிகள்..!! மன்ற உறவின் உயர்வு எங்களுக்கும் பெரும் பெருமை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அவர் "அற்புதம்..!"

ஓவியன்
12-08-2008, 04:45 AM
அன்பு ஷீ...!!

தமிழ் அழிகிறது, தமிழ் அழிகிறதென்று ஓயாமல் கூவிக் கொண்டிருப்பவர்களில்
உண்மையாகவே தமிழ் மேற் பாசம் கொண்டவர் சிலர்,
தன்னைத் தமிழபிமானியாக காட்டி கவனமீர்க்க முயல்பவர்கள் பலர்,
அந்தப் பலருக்கு நல்ல சாட்டை அடி, உங்கள் வரிகள்..!!

ரொம்ப நன்றாக பொருந்தியிருக்கின்றன வரிகள் ஷீ..!!

__________________________________________________________________________________________________

திறமைக்கு எங்கு தகுந்த மரியாதை கிடைத்தாலும் ஆனந்தம் அலை புரண்டோடுமே...
அதுவும் நம் எல்லோராலும் விருப்பத்துக்குரிய ஒருவரது திறமைக்கு மதிப்புக் கிடைத்ததால்,
ரொம்ப, ரொம்ப சந்தோசமாக இருக்கு ஷீ...!!

மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ...!!

aren
12-08-2008, 05:20 AM
பாராட்டுக்கள் ஷீநிசி. இது ஆரம்பம்தான். இன்னும் பல பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் இன்னும் முன்னேறவேண்டும், அதற்கு என் வாழ்த்துக்கள்.

பூமகள்
12-08-2008, 05:40 AM
வாவ்....!!
முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஷீ..!!

மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்களான சுப.வீரபாண்டியன் ஐயா மற்றும் திரு.சீமான் அவர்களின் முன்னிலையில்..

கவியரங்கத்தில் பங்கெடுத்து நேர்த்தியான கவிதையைத் தமிழன்னைக்கு படைத்து அசத்திவிட்டீர்கள்..

ஏதும் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புவார்களெனில் உடன் சொல்லுங்கள்..

இன்னும் பல்வேறு அரங்கேற்றங்களில் நீங்கள் பங்கெடுத்து தமிழை உயர்த்திப் பிடிப்பீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை..!!

யவனிகா
12-08-2008, 05:51 AM
அன்பு ஷீநிசி...வாழ்த்துக்கள் முதலில்...

கவிதை நன்றாகவே இருக்கிறது.கவியரங்கம் நேரில் காணக்கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கவிதையில் உங்கள் டச் குறைகிறதே ஷீநிசி...இன்னும் எதிர் பார்த்தேன்...அடக்கி வாசித்திருக்கிறீர்களா புரியவில்லை...இன்னும் சிறப்பாக கொடுத்திருக்க கண்டிப்பாக உங்களால் முடியும்...

இளசு
12-08-2008, 06:53 AM
மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ!

அழகிய தமிழ்க் கவி இவன் - எனப் பாடச் சொல்லும் படம்!

அன்பின் ஆரெனும் நண்பர்களும் சொல்வதுபோல் - இந்த
அங்கீகாரங்கள் எல்லாம் ஆரம்பமே!

நீண்ட வெற்றிப்பாதை தெரிகிறது...
என்றும் மன்ற உறவை விடாத மனதும் தெரிகிறது...

------------------------------

பிரபஞ்சம் தழுவி மனிதம் தழைக்கும்...
அங்கும் மழலை அம்மா என அழைக்கும்!

சிலிர்க்க வைத்த வரி!
பலிக்கப்போகும் வரி!

---------------------------------------------

அன்னைக்கு எத்தனை அணிவித்தாலும் போதாது.. போதவே போதாது..
இது அவள் பிள்ளைகள் அனைவருக்கும் உள்ள பேராசை..
அதை ஆதி, யவனி பதிவுகளில் காணலாம்..

இந்த நல்ல பேராசைப் பிள்ளைகளால்தான்
நம் கன்னித்தாய் இன்னும் இளமையாய்ப் பொலிகிறாள்..

செல்வா
12-08-2008, 10:53 AM
வாழ்த்துக்கள் ஷீ. கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

நம்பிகோபாலன்
12-08-2008, 10:57 AM
மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ.யவனிகா சொன்னது போல உங்களின் டச் இல்லையே...

யவனிகா
12-08-2008, 11:12 AM
அன்னைக்கு எத்தனை அணிவித்தாலும் போதாது.. போதவே போதாது..
இது அவள் பிள்ளைகள் அனைவருக்கும் உள்ள பேராசை..
அதை ஆதி, யவனி பதிவுகளில் காணலாம்..

இந்த நல்ல பேராசைப் பிள்ளைகளால்தான்
நம் கன்னித்தாய் இன்னும் இளமையாய்ப் பொலிகிறாள்..

மன்ற சகோதரர்,அதுவும் ஷிநிசி...சந்தேகமே இல்லாமல் தரமான கவிதைகளைத் தருபவர்...அவரிடம் அதிகம் அதிகம் எதிர்பார்க்கிறோம்...தவறாக எதுவும் சொல்லி இருப்பின் மன்னிக்கவும் ஷிநிசி...அண்ணா சொல்லி இருப்பது போல கொஞ்சம் பேராசைக்கார பிள்ளைகள் தான்...

எனக்கு ரொம்ப பிடித்தமான டைரக்டர் சீமான் கையால் வேறு பரிசு...அதை சொல்லாமல் விட்டு விட்டேன். அதற்காக இன்னொரு முறை வாழ்த்துக்கள் சகோதரா.

மதுரை மைந்தன்
12-08-2008, 11:43 AM
வாழத்துக்ள் ஷீ. உங்கள் கவிதை அறபுதம்.

உங்களது கவிதையைப் படித்தபின் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனம் நினைவுக்கு வருகிறது.

புன்னகை புரியும் தமிழ் மண்ணே
தருக்கர்கள் சிலரால் நீ
தாழ்வுற்றிருப்பினும்
எதிர் காலத்திலே
ஆயிரம் ஆயிரம் இளம் காளையர்கள்
உன்னை உயிராக பேணுபவர் வருவர்
உன் உயர்வை உயற்றுவர்

வாழ்க தமிழ்!

தீபன்
12-08-2008, 11:45 AM
வாழ்த்துக்கள் நண்பரே.
தமிழை புகழும் கவிதையில் அழகான இணையமெனும் தமிழ் வார்த்தை இருக்க இன்டர்னெட் என்னும் பதத்தை பயன்படுத்தியிருப்பது முரணாக இருக்கிறது.

மன்மதன்
12-08-2008, 01:26 PM
வாழ்த்துகள் நண்பா..

இது ஆரம்பம்தான்.. இனி உன் வாழ்வில்
பல வெற்றிகளை குவிப்பாய்.

உன் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்..

ஷீ-நிசி
12-08-2008, 01:50 PM
வாழ்க உமது தமிழ் தொண்டு, வாழ்த்துக்கள் நண்பரே

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்............ என்ற பாடலில்

கற்றவர் சபையில் உனக்காக
ஓர் இடமும் பெறவேன்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழவேன்டும்............

இந்த பாடல் தான் எனக்க நினைவிற்கு வந்தது, நீங்கள் பரிசு வாங்குவதை பார்த்தால்..........

தொடரட்டும் உமது வெற்றி பயனம்

நிஜமாகவே என் உடன் பிறந்த சகோதரன் என்னை பாரட்டியதைப்போல் உணர்கிறேன் நண்பரே!
உங்களின் அன்பிற்கு என் நன்றி!

ஷீ-நிசி
12-08-2008, 01:51 PM
காலங்கடந்து வாழும் தமிழின் பெருமை சொல்லும்
உம் கருத்தரங்கக் கவிதை அருமை.

வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

நன்றி நாகரா!

ஷீ-நிசி
12-08-2008, 02:00 PM
மிக சிறப்பாக உங்கள் கருத்துக்களை கூறியுள்ளீர்கள் ஆதி!
அழகிய கவிதை ஷீ.. கவிதையை சில இடங்களில் இன்னும் செதுக்கி இருக்கலாம்.. கவியரங்கங்களில் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் வாங்குவது என்பது இயலாது ஆனால் அரங்கத்தவர்களை நம் வசமிழுக்க சில யுத்திகள் தேவை.. அந்த வகையில் கவிதையில் நவரசங்களை கொஞ்சம் புகுத்தி இருக்கலாம்..

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... இது எனக்கு முதல் மேடை வாசிப்பு அனுபவம். மேடைக்கு என்று எழுதப்படும் கவிதைகளுக்கு சில நெளிவு சுளிவுகள் வேண்டும் என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது..

நேற்று இன்று நாளை..

நேற்றைய தமிழ் பற்றி சொல்ல சங்கத்தில் எவ்வளவோ உள்ளது அதையும் கவிதையில் கோர்த்திருக்கலாம்..

நிஜமா சொல்லனும்னா, அப்படி சொல்வதற்கு நான் இன்னும் தமிழ் அதிகம் படிக்கவேண்டும்.

இணையத்தில் உலா வரும் அன்னையைப் பற்றி சொன்னது மிக அழகு..

//வளைத்தவுடன் ஒடிந்துவிட -நீங்கள்
நினைத்தவுடன் அழித்துவிட -தமிழ்
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில்
பூத்த பூச்செடியல்ல....

அது பூமியின் அடுக்குகளிலெல்லாம்,
வேர்விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம்...
மிகவும் ஆழமான மரம்!!

காக்க நினைப்பவர்களே!
தமிழை காத்திட துடிப்பவர்களே....

வேற்று மொழிக்கு கரிப்பூசி,
தேற்றிக்கொள்ளும் நிலையில்,
தமிழ் இல்லை! //

இந்த வரிகளுக்கு தேவையில்லை என்பது என் கருத்து மன்ற உறவுகள் வந்து சொல்லட்டும் அவரவர் கருத்தையும்..

எது தேவையில்லை என்று எனக்கு புரியவில்லை நண்பரே!

தங்கிலத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாய் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது..

நகைச்சுவை கண்டிப்பாக தேவைதான். அன்று திரு.நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதைகளில் இந்த நகைச்சுவை இழையோடியதை நானும் கண்டேன்.

//நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்... //

இந்த வரி அற்புதம் ஷீ.. இருந்தாலும் சந்திரனில் உயிர்கள் வாழ இயலாதென்று சொல்லிவிட்டது விஞ்ஞானம்.. அதுமட்டுமல்ல நிலா பூமி காதலனைவிட்ட மெல்ல சென்று கொண்டிருக்கிறாள்.. இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் நிலா பூமியோடு இருக்கமாட்டாள் என்று படித்தேன்.. அதான் சொன்னேன்.. செவ்வாய் என்று சொல்லியிருக்கலாம் ஷீ.. ஏன்னென்றால் சமீபத்திய செய்தி மூலம் செவ்வாயில் நீர் இருப்பதாக கண்டுபிடிக்க பட்டிருப்பதை அறிந்தேன்.. ஒரு கவிஞனின் கணிப்பு குறைந்தபட்ச தீர்கதரிசனமாகவும் இருத்தல் அவசியம் ஷீ..

நீங்கள் சொல்வதும் சரிதான்.. ஆனால் சந்ததி என்ற வார்த்தைக்காகவே சந்திரன் என்பதை பயன்படுத்தினேன்...

நீங்களே பாருங்கள்... நாளை செவ்வாயிலும் ஒரு சந்ததி வாழும்.. என்பதைவிடவும், நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும் என்பதே கவிதை இடர்ப்படாமல் சொல்ல உகந்ததாய் கருதினேன்.. இருப்பினும் நீங்கள் சொன்னது சிந்திக்ககூடியதே!

இந்த பாரதியின் வரிகளைப்பாருங்களேன்..

//காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் //

இப்படி பாரதி எழுதிய நொடிகளில் நம் மக்களுக்கு தொலைக்காட்சி என்றால் என்னென்றே தெரியாது, ஆனால் அவன் கனவு இன்று மெய்ப்பட்டுவிட்டது.. இப்படி ஒரு கனவைத்தான் எதிர்ப்பார்க்கிறேன் ஷீ..

நாளையைப்பற்றி அதிகம் சொல்லியிருக்கலாம் ஷீ..

கவிதையின் முடிவையும் சற்று மாற்றியிருக்கலாம்..

கவிதையின் முடிவைத்தான் நான் மிகவும் நேசிக்கிறேன்.. நான் இந்த கடைசி வரிகளை சொன்னபோதுதான், கைதட்டலால் அரங்கம் நிறைந்தது.

தங்களின் அழகிய கருத்துக்களுக்கு நன்றி ஆதி!

ஷீ-நிசி
12-08-2008, 02:02 PM
நம் ஷீ-நிசி பற்றிய நம் கற்பனை தோற்றத்திற்கு இன்று உருவம் கிடைத்திருக்கிறது இங்கே..! ஷீ-நிசியின் கருத்துக்களுக்கு அன்று சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது அங்கே..!! இவை இரண்டையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு ஷீ-க்கு நன்றிகள்..!! மன்ற உறவின் உயர்வு எங்களுக்கும் பெரும் பெருமை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அவர் "அற்புதம்..!"

நன்றி இதயம்.... பயணிக்கவேண்டிய தூரம் நிறையவே உள்ளது.

poornima
12-08-2008, 02:03 PM
வாழ்த்துகள்.. பாராட்டுகள்.. ஷீ-நிஷி
தமிழ் பாடி தமிழ் நேசிக்கும் - தமிழுக்கே தம் படைப்புகளில் அதிக
முக்கியத்துவம் தரும் சீமான் கையில் பரிசும் - பாராட்டுகளும்..
பாலோடு சேர்ந்த தேன் பொலே - இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பீர்கள்.
வெள்ளமென பெருகட்டும் - தமிழும் உங்கள் கவிதைகளும்..

ஷீ-நிசி
12-08-2008, 02:04 PM
அன்பு ஷீ...!!

தமிழ் அழிகிறது, தமிழ் அழிகிறதென்று ஓயாமல் கூவிக் கொண்டிருப்பவர்களில்
உண்மையாகவே தமிழ் மேற் பாசம் கொண்டவர் சிலர்,
தன்னைத் தமிழபிமானியாக காட்டி கவனமீர்க்க முயல்பவர்கள் பலர்,
அந்தப் பலருக்கு நல்ல சாட்டை அடி, உங்கள் வரிகள்..!!

ரொம்ப நன்றாக பொருந்தியிருக்கின்றன வரிகள் ஷீ..!!

மிகச் சரியாக புரிந்துகொண்டாய் ஓவியன்.
__________________________________________________________________________________________________

திறமைக்கு எங்கு தகுந்த மரியாதை கிடைத்தாலும் ஆனந்தம் அலை புரண்டோடுமே...
அதுவும் நம் எல்லோராலும் விருப்பத்துக்குரிய ஒருவரது திறமைக்கு மதிப்புக் கிடைத்ததால்,
ரொம்ப, ரொம்ப சந்தோசமாக இருக்கு ஷீ...!!

மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ...!!

நன்றிகள் பல ஓவியன்!

ஷீ-நிசி
12-08-2008, 02:07 PM
பாராட்டுக்கள் ஷீநிசி. இது ஆரம்பம்தான். இன்னும் பல பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் இன்னும் முன்னேறவேண்டும், அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஆரென்....... எப்ப கொண்டு வரப்போறீங்க பரிசுகளை?! :)

ஷீ-நிசி
12-08-2008, 02:13 PM
வாவ்....!!
முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஷீ..!!

மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்களான சுப.வீரபாண்டியன் ஐயா மற்றும் திரு.சீமான் அவர்களின் முன்னிலையில்..

கவியரங்கத்தில் பங்கெடுத்து நேர்த்தியான கவிதையைத் தமிழன்னைக்கு படைத்து அசத்திவிட்டீர்கள்..

ஏதும் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புவார்களெனில் உடன் சொல்லுங்கள்..

இன்னும் பல்வேறு அரங்கேற்றங்களில் நீங்கள் பங்கெடுத்து தமிழை உயர்த்திப் பிடிப்பீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை..!!

நன்றிகள் பூமகள்... ஒளிபரப்பினால் ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஆனால் எப்போது என்று தெரியவில்லை. வலைதளத்தில் வீடியோ தொகுப்பு ஏற்றினால் அதன் லிங்க் கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன் பூ!

ஷீ-நிசி
12-08-2008, 02:17 PM
அன்பு ஷீநிசி...வாழ்த்துக்கள் முதலில்...

கவிதை நன்றாகவே இருக்கிறது.கவியரங்கம் நேரில் காணக்கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கவிதையில் உங்கள் டச் குறைகிறதே ஷீநிசி...இன்னும் எதிர் பார்த்தேன்...அடக்கி வாசித்திருக்கிறீர்களா புரியவில்லை...இன்னும் சிறப்பாக கொடுத்திருக்க கண்டிப்பாக உங்களால் முடியும்...

நன்றிகள் யவனி!

என் 'டச்'....
ஆராய்கிறேன் யவனி! எங்கே என்ன விடுபட்டிருக்கிறது என்பதை...

காரணம் நான் இந்த கவிதையை மிகவும் கவனமாகவே வரிகளை ஆராய்ந்து எனக்கே ஓரளவு திருப்தி கிடைத்த பின்னரே கவிதையை பகிர்ந்துகொண்டேன்! எனினும் தங்களின் கருத்துக்களுக்கும், அன்பிற்கும் என் நன்றிகள்!

பாலகன்
12-08-2008, 02:28 PM
நிஜமாகவே என் உடன் பிறந்த சகோதரன் என்னை பாரட்டியதைப்போல் உணர்கிறேன் நண்பரே!

உங்களின் அன்பிற்கு என் நன்றி!

கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
மாதிரி
அன்பிற்கு அன்பு தானே சரியாகும் (தமாசு)
அன்பிற்கு நன்றி (புதுசா இருக்கு)
உங்கள் நன்றிக்கு நன்றி (நான் எவ்வளவு சரியா சொன்னேன் பாருங்க)

சகோதரனை போல அப்படின்னு சொல்லிட்டதால கொஞ்சூன்டு குசியாயிட்டேன்

அன்புடன்

ஷீ-நிசி
12-08-2008, 02:46 PM
மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ!

அழகிய தமிழ்க் கவி இவன் - எனப் பாடச் சொல்லும் படம்!

அன்பின் ஆரெனும் நண்பர்களும் சொல்வதுபோல் - இந்த
அங்கீகாரங்கள் எல்லாம் ஆரம்பமே!

நீண்ட வெற்றிப்பாதை தெரிகிறது...
என்றும் மன்ற உறவை விடாத மனதும் தெரிகிறது...

------------------------------

பிரபஞ்சம் தழுவி மனிதம் தழைக்கும்...
அங்கும் மழலை அம்மா என அழைக்கும்!

சிலிர்க்க வைத்த வரி!
பலிக்கப்போகும் வரி!

நன்றிகள் இளசு ஜி!
---------------------------------------------

அன்னைக்கு எத்தனை அணிவித்தாலும் போதாது.. போதவே போதாது..
இது அவள் பிள்ளைகள் அனைவருக்கும் உள்ள பேராசை..
அதை ஆதி, யவனி பதிவுகளில் காணலாம்..

இந்த நல்ல பேராசைப் பிள்ளைகளால்தான்
நம் கன்னித்தாய் இன்னும் இளமையாய்ப் பொலிகிறாள்..

பேராசைகளை நிறைவேற்றவே பேராசைப்படுகிறேன்... :)

ஷீ-நிசி
12-08-2008, 02:51 PM
வாழ்த்துக்கள் ஷீ. கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

நன்றி செல்வா!

ஷீ-நிசி
12-08-2008, 02:52 PM
மனமார்ந்த வாழ்த்துகள் ஷீ.யவனிகா சொன்னது போல உங்களின் டச் இல்லையே...

நன்றி நம்பி! முயற்சிக்கிறேன்!

ஷீ-நிசி
12-08-2008, 02:54 PM
மன்ற சகோதரர்,அதுவும் ஷிநிசி...சந்தேகமே இல்லாமல் தரமான கவிதைகளைத் தருபவர்...அவரிடம் அதிகம் அதிகம் எதிர்பார்க்கிறோம்...தவறாக எதுவும் சொல்லி இருப்பின் மன்னிக்கவும் ஷிநிசி...அண்ணா சொல்லி இருப்பது போல கொஞ்சம் பேராசைக்கார பிள்ளைகள் தான்...

எனக்கு ரொம்ப பிடித்தமான டைரக்டர் சீமான் கையால் வேறு பரிசு...அதை சொல்லாமல் விட்டு விட்டேன். அதற்காக இன்னொரு முறை வாழ்த்துக்கள் சகோதரா.

:) மீண்டும் மீண்டும் என் நன்றிகள் யவனி அவர்களே!

ஷீ-நிசி
12-08-2008, 02:56 PM
வாழத்துக்ள் ஷீ. உங்கள் கவிதை அறபுதம்.

உங்களது கவிதையைப் படித்தபின் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனம் நினைவுக்கு வருகிறது.

புன்னகை புரியும் தமிழ் மண்ணே
தருக்கர்கள் சிலரால் நீ
தாழ்வுற்றிருப்பினும்
எதிர் காலத்திலே
ஆயிரம் ஆயிரம் இளம் காளையர்கள்
உன்னை உயிராக பேணுபவர் வருவர்
உன் உயர்வை உயற்றுவர்

வாழ்க தமிழ்!

நன்றி மதுரை வீரரே!

ஷீ-நிசி
12-08-2008, 03:00 PM
வாழ்த்துக்கள் நண்பரே.
தமிழை புகழும் கவிதையில் அழகான இணையமெனும் தமிழ் வார்த்தை இருக்க இன்டர்னெட் என்னும் பதத்தை பயன்படுத்தியிருப்பது முரணாக இருக்கிறது.

நன்றிகள் தீபன்....

6-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டிலே
வலம் வந்தவள்....
21-ஆம் இண்டர்நெட்டிலும்......

கல்வெட்டு, இண்டர்நெட், கவிதை பதத்திற்காகவே! அவ்வாறு அமைத்துள்ளேன்....

எனினும் இனி வரும் காலங்களில் கலப்பின கவிதை படைக்காமல் அளித்திட முயற்சிக்கிறேன்... நன்றிகள் பல!

ஷீ-நிசி
12-08-2008, 03:02 PM
வாழ்த்துகள் நண்பா..

இது ஆரம்பம்தான்.. இனி உன் வாழ்வில்
பல வெற்றிகளை குவிப்பாய்.

உன் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்..

உன் பங்கெடுப்பு இல்லாமலா மன்மதா?! :icon_b:
நன்றிகள் மன்மதரே!

ஷீ-நிசி
12-08-2008, 03:08 PM
வாழ்த்துகள்.. பாராட்டுகள்.. ஷீ-நிஷி
தமிழ் பாடி தமிழ் நேசிக்கும் - தமிழுக்கே தம் படைப்புகளில் அதிக
முக்கியத்துவம் தரும் சீமான் கையில் பரிசும் - பாராட்டுகளும்..
பாலோடு சேர்ந்த தேன் பொலே - இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பீர்கள்.
வெள்ளமென பெருகட்டும் - தமிழும் உங்கள் கவிதைகளும்..

நன்றிகள் பூர்ணிமா! அவர்களே!

அறிஞர்
12-08-2008, 03:27 PM
வாழ்த்துக்கள் ஷீ-நிசி....

கவிஞரின் உயர்வு... பெருமையை தருகிறது...
இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.

ஆதி
12-08-2008, 05:44 PM
// எது தேவையில்லை என்று எனக்கு புரியவில்லை நண்பரே! //

அன்பு ஷீ.. கவிதை ஒரு சின்ன எல்லையை நோக்கியே பயணிப்பதாய் அந்த வரிகள் பாவனை காட்டுகிறது.. கடல் கோ(ழி)ள்களால் தின்றிட இயலாத அன்னையை அழிக்க இந்த மனிதர்களால் இயலுமா? நிச்சயமியலாது.. இந்த வரிகளைப்பாருங்கள்..

//சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். //

- பாரதி

என் (இந்த) பாட்டுதலை(வி)வன் என்ன சொல்கிறா(ளோ)னோ.. அதை நம் மன்றத்திலேயே நீங்கள் காணவில்லையா..

கடைசி வரியும் இக்கருத்தை ஒத்திருப்பதால்தான் சற்று மாற்றியிருக்கலாம் என்றேன்..

நீங்கள் இருக்குறீர்கள் படைத்து குவிக்க
நாங்கள் இருக்கிறோம் படித்து சுவைக்க
அன்னை இருக்கிறாள் வளர்ந்து செழிக்க..

பின்னெதற்கு கவலை ஷீ..

//நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்...

மேலிருந்து ஒரு குழந்தையின்
மெல்லிய குரல் ஒலிக்கும்....

"அம்மா" என்று//

இந்த வரிகள் வெகுவாய் என்னைக்கவர்ந்தன ஷீ.. வார்த்தைகள் வசமானப் பிறகு எந்த கருத்தையும் இடரலின்றி சொல்வதென்பது சிரமமற்றது தானே.. :)

ஓவியா
12-08-2008, 08:00 PM
அனிபின் இனிய ஷீ, உங்களின் கவிதையை வாசித்து மெய்சிலிர்த்து விட்டேன்.

மிகவும் எளிமையான வார்த்தைகள், வீரமான, நேர்மையான பார்வை, எல்லா வரிகளும் தேன் போல் தித்திக்கின்றது.

(என் மொழி வானையும் விட உயர்ந்தது, பெரியது. அதற்க்கு எப்பொழுதும் அழிவில்லையென்று கேப்பீல், தமிழ் மெல்ல அழிகிறது என்று பாட்டு பாடும் என் மூக்கையும் உடைத்தீர்கள். :icon_b::icon_b: )

சின்ன வயதிலே சீமான் கையால் நினைவு கோப்பையை வாங்க எழுத்துலகில் ரொம்பவே சாதனை செய்திருக்க வேண்டும். பாராட்டுக்கள்.

இதுதான் உங்கள் ஏனிப்படிகளின் தொடக்கம், மெல்ல மெல்ல தொடர்ந்து ஒரு நாள் புகழின் உச்சிக்கு வர எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.

எம் மன்றத்தில் உங்களுடன் சமமாக கவிதை போட்டியில் கலந்து, பரிசு பெற்றதை இன்று பெருமையாக நினைக்கிறேன்.

:icon_b:சபாஷ் ஷீ.

mukilan
12-08-2008, 09:17 PM
தமிழுக்கு நீங்கள் சூட்டிய பாமாலை அருமை! அடுத்தவர் முகத்தில் கரி பூசித் தன்னை தேற்றிக் கொள்ளும் நிலையில் தமிழ் இல்லை என்ற அந்த வரிகள் கன்னடத்திற்குச் செம்மொழி தகுதி கூடாதென வழக்குத்தொடர்ந்தவரின் விதண்டாவாததிற்கு தக்க சாட்டையடி!

அன்னைத்தமிழுக்கு அழகுற நீங்கள் படைத்த கவிதைக்கும், விருது பெற்றமைக்கும் என் வாழ்த்துகள்.

தீபா
13-08-2008, 04:40 AM
தமிழுக்காகவே திரைப்படம் எடுத்த சீமான் போன்ற தமிழ் ஆர்வலர் கையால் விருது வாங்கிய உங்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

கவிதையின் முடிவு... முற்றிலும் வித்தியாசம்.. ஒரே பாதையில் வளைந்து செல்பவர்களை ஓரங்கட்டி, மறுபாதை காண்பித்திருக்கிறீர்கள்.. எல்லா வரிகளையும் ரசித்தேன்.

அதிகப்பிரசங்கிகளுக்குத் தடியடி நடத்தியிருக்கிறீர்கள். உங்கள் வெற்றி என்றென்றும் தொடரட்டும்.

அன்புடன்
தென்றல்

வசீகரன்
13-08-2008, 05:04 AM
உங்கள் தமிழ்பற்றும், படைப்பு திறனும் மன்றத்தினருக்கு
தெரியும்..! கருத்தரங்கில் கலந்து பரிசில் பெற்றிருப்பது, உங்கள் மொழிபற்றுக்கு திறமைக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறேன், புகைப்படம் மூலம் உங்களை காணும் வாய்ப்பும் கிடைத்தது, வாழ்த்துக்கள், மேன்மேலும் தங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள்,,

அமரன்
13-08-2008, 08:05 AM
பிந்தி வந்துவிட்டேன் வாழ்த்து சொல்ல.
தந்துவிட்டேன் என் வாழ்த்துச் செண்டை..

அருங்கவி... (கவிதையும் நீங்களும் அருங்கவிதானே)

தமிழைத் தேன்மொழி என்பதுக்குக் காரணம் வெறும் இனிப்பு மட்டுமல்ல. தேனின் பழுதடையாத்தன்மையும் காரணம்.. ஆனால் தேன் தேனாக இருக்கவேண்டும்..

வழக்கொழிந்த மொழிகளில் விரைவில் தமிழும் இடம்பிடிக்கும் என்ற எதிர்வு கூறல்களில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழ் அழியும்.. ஆனால் அழியாது.. பிற மொழிக்கலப்புடனான தமிழ் என்றும் இருக்கும்.. காலத்துக்கேற்ற மாற்றம் நிச்சயம் தேவைதானே..

அமிழ்து மட்டுமன்றி அமிழ்துண்டவனும் சாகாவரம் பெறுவது அமிழ்தின் வரம். அதுபோன்றுதான் தமிழும் தமிழினை அருந்தியவனும்... நீங்கள் சொன்ன நிலாக்காலத்தில் உங்களுக்கும் ஓர் இடம் நிச்சயம் உண்டு..

கவியரங்கத்தில் கவிக்கோ படித்த ஆரம்ப புதுக் கவிதைகளின் வீச்சை இக்கவிதையில் கண்டேன்....

ஆதி
13-08-2008, 08:24 AM
கவியரங்கத்தில் கவிக்கோ படித்த ஆரம்ப புதுக் கவிதைகளின் வீச்சை இக்கவிதையில் கண்டேன்....

உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை..

shibly591
13-08-2008, 11:31 AM
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..
தண்ணீருடன் தமிழை ஒப்பிட்ட பாணி அருமை

தொடருங்கள்..

ஷீ-நிசி
14-08-2008, 02:02 PM
வாழ்த்துக்கள் ஷீ-நிசி....

கவிஞரின் உயர்வு... பெருமையை தருகிறது...
இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.

நன்றி அறிஞரே! :)

ஷீ-நிசி
14-08-2008, 02:07 PM
//
கடைசி வரியும் இக்கருத்தை ஒத்திருப்பதால்தான் சற்று மாற்றியிருக்கலாம் என்றேன்..

நீங்கள் இருக்குறீர்கள் படைத்து குவிக்க
நாங்கள் இருக்கிறோம் படித்து சுவைக்க
அன்னை இருக்கிறாள் வளர்ந்து செழிக்க..

பின்னெதற்கு கவலை ஷீ..

[B]//நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்...

மேலிருந்து ஒரு குழந்தையின்
மெல்லிய குரல் ஒலிக்கும்....

"அம்மா" என்று//

இந்த வரிகள் வெகுவாய் என்னைக்கவர்ந்தன ஷீ.. வார்த்தைகள் வசமானப் பிறகு எந்த கருத்தையும் இடரலின்றி சொல்வதென்பது சிரமமற்றது தானே.. :)

மீண்டும் நன்றிகள் ஆதி!

ஷீ-நிசி
14-08-2008, 02:10 PM
அனிபின் இனிய ஷீ, உங்களின் கவிதையை வாசித்து மெய்சிலிர்த்து விட்டேன்.

மிகவும் எளிமையான வார்த்தைகள், வீரமான, நேர்மையான பார்வை, எல்லா வரிகளும் தேன் போல் தித்திக்கின்றது.

(என் மொழி வானையும் விட உயர்ந்தது, பெரியது. அதற்க்கு எப்பொழுதும் அழிவில்லையென்று கேப்பீல், தமிழ் மெல்ல அழிகிறது என்று பாட்டு பாடும் என் மூக்கையும் உடைத்தீர்கள். :icon_b::icon_b: )

சின்ன வயதிலே சீமான் கையால் நினைவு கோப்பையை வாங்க எழுத்துலகில் ரொம்பவே சாதனை செய்திருக்க வேண்டும். பாராட்டுக்கள்.

இதுதான் உங்கள் ஏனிப்படிகளின் தொடக்கம், மெல்ல மெல்ல தொடர்ந்து ஒரு நாள் புகழின் உச்சிக்கு வர எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.

எம் மன்றத்தில் உங்களுடன் சமமாக கவிதை போட்டியில் கலந்து, பரிசு பெற்றதை இன்று பெருமையாக நினைக்கிறேன்.

:icon_b:சபாஷ் ஷீ.

அன்பின் ஓவியா! உங்களின் மனம் திறந்த பாராட்டுக்கள் என்னை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன... மனம் உங்களை வாழ்த்துகின்றன!
நன்றிகள் பல!

ஷீ-நிசி
14-08-2008, 02:12 PM
தமிழுக்கு நீங்கள் சூட்டிய பாமாலை அருமை! அடுத்தவர் முகத்தில் கரி பூசித் தன்னை தேற்றிக் கொள்ளும் நிலையில் தமிழ் இல்லை என்ற அந்த வரிகள் கன்னடத்திற்குச் செம்மொழி தகுதி கூடாதென வழக்குத்தொடர்ந்தவரின் விதண்டாவாததிற்கு தக்க சாட்டையடி!

அன்னைத்தமிழுக்கு அழகுற நீங்கள் படைத்த கவிதைக்கும், விருது பெற்றமைக்கும் என் வாழ்த்துகள்.

நன்றி முகிலன்!

தமிழ் எந்த மொழியையும் அழிக்காது! எந்த மொழியாலும் அழியாது!

ஷீ-நிசி
14-08-2008, 02:14 PM
தமிழுக்காகவே திரைப்படம் எடுத்த சீமான் போன்ற தமிழ் ஆர்வலர் கையால் விருது வாங்கிய உங்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

கவிதையின் முடிவு... முற்றிலும் வித்தியாசம்.. ஒரே பாதையில் வளைந்து செல்பவர்களை ஓரங்கட்டி, மறுபாதை காண்பித்திருக்கிறீர்கள்.. எல்லா வரிகளையும் ரசித்தேன்.

அதிகப்பிரசங்கிகளுக்குத் தடியடி நடத்தியிருக்கிறீர்கள். உங்கள் வெற்றி என்றென்றும் தொடரட்டும்.

அன்புடன்
தென்றல்

நன்றி தென்றலே!

ஷீ-நிசி
14-08-2008, 02:16 PM
உங்கள் தமிழ்பற்றும், படைப்பு திறனும் மன்றத்தினருக்கு
தெரியும்..! கருத்தரங்கில் கலந்து பரிசில் பெற்றிருப்பது, உங்கள் மொழிபற்றுக்கு திறமைக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறேன், புகைப்படம் மூலம் உங்களை காணும் வாய்ப்பும் கிடைத்தது, வாழ்த்துக்கள், மேன்மேலும் தங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள்,,

நன்றி வசீகரன்!

ஷீ-நிசி
14-08-2008, 02:20 PM
பிந்தி வந்துவிட்டேன் வாழ்த்து சொல்ல.
தந்துவிட்டேன் என் வாழ்த்துச் செண்டை..

அருங்கவி... (கவிதையும் நீங்களும் அருங்கவிதானே)

தமிழைத் தேன்மொழி என்பதுக்குக் காரணம் வெறும் இனிப்பு மட்டுமல்ல. தேனின் பழுதடையாத்தன்மையும் காரணம்.. ஆனால் தேன் தேனாக இருக்கவேண்டும்..

வழக்கொழிந்த மொழிகளில் விரைவில் தமிழும் இடம்பிடிக்கும் என்ற எதிர்வு கூறல்களில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழ் அழியும்.. ஆனால் அழியாது.. பிற மொழிக்கலப்புடனான தமிழ் என்றும் இருக்கும்.. காலத்துக்கேற்ற மாற்றம் நிச்சயம் தேவைதானே..

அமிழ்து மட்டுமன்றி அமிழ்துண்டவனும் சாகாவரம் பெறுவது அமிழ்தின் வரம். அதுபோன்றுதான் தமிழும் தமிழினை அருந்தியவனும்... நீங்கள் சொன்ன நிலாக்காலத்தில் உங்களுக்கும் ஓர் இடம் நிச்சயம் உண்டு..

கவியரங்கத்தில் கவிக்கோ படித்த ஆரம்ப புதுக் கவிதைகளின் வீச்சை இக்கவிதையில் கண்டேன்....

நன்றிகள் பல அமரா!

ஷீ-நிசி
14-08-2008, 02:22 PM
உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை..

நன்றிகள் ஆதி!

ஷீ-நிசி
14-08-2008, 02:28 PM
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..
தண்ணீருடன் தமிழை ஒப்பிட்ட பாணி அருமை

தொடருங்கள்..

நன்றி சிப்லி!

பாரதி
15-08-2008, 12:59 AM
மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் நண்பரே!
இன்னும் இன்னும் இன்னும் உயர, இனிய தமிழால் சிறக்க வாழ்த்து.

ஷீ-நிசி
15-08-2008, 01:12 PM
மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் நண்பரே!
இன்னும் இன்னும் இன்னும் உயர, இனிய தமிழால் சிறக்க வாழ்த்து.

நன்றி பாரதி அவர்களே!

kavitha
21-11-2008, 08:09 AM
"தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் 7 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். அடியேனும் அதில் கலந்துகொண்டு கவிதை படைத்தேன். திரு. சீமான் அவர்களின் கையால் நினைவு பரிசும் பெற்றேன். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். பாராட்டுக்கள் ஷீ-நிசி :)

ஷீ-நிசி
11-02-2009, 01:25 AM
நன்றி கவிதா!