PDA

View Full Version : தனி நபர் சாதனை



அறிஞர்
11-08-2008, 06:36 PM
அமெரிக்காவின் பெல்ப்ஸ் மைக்கேல் (http://results.beijing2008.cn/WRM/ENG/BIO/Athlete/5/221565.shtml) தனி நபர் சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 6 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

2 வெள்ளி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் 2 தங்கம் பெற்றுவிட்டார்.

8 தங்கப் பதக்கங்களை பெறுவாரா... என ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

http://results.beijing2008.cn/WRM/images/athlete_photo/normal/5/221565.jpg
அவருடைய சாதனைகள் பல


http://i13.photobucket.com/albums/a282/aringar/Phelps.gif

தீபா
11-08-2008, 06:48 PM
எட்ட்டா?

நமக்கு எட்டுமா?

arun
11-08-2008, 07:02 PM
எட்டு என்பது எட்டா கனியா அல்லது எட்டும் கனியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

அறிஞர்
11-08-2008, 07:05 PM
ஒரே ஆளு எட்டு தங்கம் எடுக்க காத்திருக்கிறார்...
ஒரு நாடானா.. இந்தியா ஒரு தங்கம் எடுக்க 28 வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

arun
11-08-2008, 07:25 PM
ஒரு தங்கமாவது வந்ததே என்பதில் சிறிது மகிழ்ச்சியாக உள்ளது

shibly591
12-08-2008, 06:10 AM
திறமைக்கு என்றும் வெற்றியே........

பூமகள்
12-08-2008, 06:20 AM
இங்கு ஒருவர் தங்க மெடலை இந்தியர் பார்த்துவிட்டு சும்மா திரும்புவார்களெனச் சொன்னார்..

இல்லை நிச்சயம் வெல்வார்களெனச் சொன்னேன்..

நிஜமாகவே தங்கத்தையே வாங்கிக் காட்டியிருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி..!!

வெங்கலம் வாங்குவார்களா என ஏங்கிய நமக்கு.. தங்கம் வாங்கிக் காட்டியது தங்க மைந்தர் திறமையால்..

குதியாட்டம் போடுகிறது மனம்..

இன்னும் நிறைய வீரர்களுக்கு ஊக்கமளித்து திறமை மிக்கவர்களைக் கண்டெடுக்க வேண்டும் அரசு.

அறிஞர்
12-08-2008, 03:40 PM
அவருக்காக தினமும் போட்டிகளை காண்கிறேன்.

அவருடைய பேட்டி சிறப்பாக இருந்தது.. கடந்த 4 வருடங்களாக... தினமும் சாப்பிடுவது, தூங்குவது, 5-6 மணி நேரம் நீச்சல் பயிற்சி... இது தான்.. அவர் வேலை...

நேற்று அவருடைய வேகத்தை கண்டு வியந்தேன்.

3 போட்டிகளில் 3 புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்றைய வீடியோ உங்களுக்காக..

http://www.youtube.com/watch?v=MKlv6HHw4GY

அறிஞர்
13-08-2008, 01:49 PM
இன்றைய போட்டிகளில் எதிர்பார்த்த 2 தங்கங்களை வென்றார்.

ஒரு தனிநபர் தங்கப்பதக்கம் வென்றார்.

ஃபெல்ப்ஸ் பங்கேற்ற 4 200 தொடர் நீச்சலில் அமெரிக்காவுக்கு மேலும் ஒரு தங்கம். 7 நிமிடங்களுக்குள் 800 மீட்டர் கடந்து புதிய உலக சாதனை.

மதி
13-08-2008, 02:08 PM
இதுவரை 11 தங்கம் வாங்கி சாதனை படைத்துள்ளதாக படித்தேன்...
வாழ்த்துகள் அவருக்கு...

அறிஞர்
13-08-2008, 03:47 PM
இதுவரை 11 தங்கம் வாங்கி சாதனை படைத்துள்ளதாக படித்தேன்...
வாழ்த்துகள் அவருக்கு...
இன்னும் 3 தங்கப் பதக்கங்கள் பாக்கியிருக்கிறது...

அறிஞர்
13-08-2008, 03:51 PM
தினகரன் செய்தி
-----------------
தங்க வேட்டைக்காரன்

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நேற்று தனது 3வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெறும் 9வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர்கள் பட்டியலில் மார்க் ஸ்பிட்ஸ், கார்ல் லூயிஸ், பாவோ நூர்மி, லாரிசா லாடினியா ஆகியோருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் பெல்ப்ஸ்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் (1972, மூனிச்) 7 தங்கம் வென்றுள்ள அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்சின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள பெல்ப்ஸ், பெய்ஜிங்கில் இதுவரை 3 தங்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த 3 போட்டியிலுமே அவர் உலக சாதனைகளை தகர்த்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த 200 மீ. பிரீ ஸ்டைல் நீச்சலில் அவர் 1 நிமிடம் 42.96 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தனது முந்தய உலக சாதனையை (1:43.86) முறியடித்தார். இந்த போட்டியில் தென் கொரியாவின் பார்க் டே ஹ்வான் வெள்ளியும் (1:44.85), அமெரிக்க வீரர் பீட்டர் வாண்டர்கே (1:45.14) வெண்கலமும் வென்றனர்
-------------

2 போட்டிகளில் இன்று பெல்ப்ஸ் தங்கப் பதக்கம்


ஒலிம்பிக்கில் 11 தங்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் புதிய சாதனை படைத்தார். இன்று அவர் 2 தங்கம் வென்றார். ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பெல்ப்ஸ் 1.52.03 நிமிடத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்னதாக அவர் கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் 1.52.09 நிமிடத்தில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அவரே முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் ஹங்கேரி வீரர் லாஸ்லோஸ் ஸ்டெக் (1.52.70) 2-வது இடத்தையும், ஜப்பான் வீரர் மக்சுடா டேக்ஷி (1.52.97) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்த தங்கம்: ஆண்களுக்கான 800 மீட்டர் ப்ரீஸ்டைல் தொடர் நீச்சல் போட்டியில் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க குழு தங்கம் வென்றது. பெல்ப்ஸ், ரேயன், விக்கி, பீட்டர் ஆகியோர் புதிய சாதனை படைத்தனர். 6.58.56 நிமிடத்தில் அவர்கள் கடந்தனர். ரஷ்ய குழு (7.03.70) 2-வது இடமும், ஆஸ்திரேலிய குழு (7.04.98) 3-வது இடமும் பிடித்தன.

கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் அமெரிக்க குழு 7.03.24 நிமிடத்தில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அமெரிக்க குழுவே தற்போது முறியடித்துள்ளது.

தனிநபர், குழு என இன்று நடந்த 2 போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை பெல்ப்ஸ் வென்றுள்ளார். இதன்மூலம் இந்த ஒலிம்பிக்கில் மட்டும் பெல்ப்ஸ் 5 தங்கம் வென்றுள்ளார். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் வென்றதையும் சேர்த்து மொத்தம் 11 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அன்புரசிகன்
13-08-2008, 04:12 PM
என்னவென்று சொல்ல... இதுக்கென்றே பிறந்து வளர்ந்தவர்கள்....

http://img34.picoodle.com/img/img34/3/8/13/f_Capturem_d9dec41.jpg

சுட்டி (http://results.beijing2008.cn/WRM/ENG/INF/GL/99/GL0000000.shtml)

அறிஞர்
13-08-2008, 04:14 PM
ஆஸ்திரேலியாவின் ஸ்டெபானி ரைஸ்... சிறப்பாக நீந்தினார்.. இரு உலக சாதனை படைத்தார்.. வெகுவாய் ரசித்தேன்.

http://tm.dinakaran.co.in/1382008/TM_13-08-08-E1-06-08%20CNI.jpg

Keelai Naadaan
13-08-2008, 05:06 PM
உண்மையிலேயே திறமையாளர்கள்.
பாராட்டுவோம்.

arun
13-08-2008, 06:29 PM
இன்னும் 3 தங்கப் பதக்கங்கள் பாக்கியிருக்கிறது...

தாங்கள் சொன்ன மாதிரி இன்னும் 3 பாக்கி இருக்கிறது

பெல்ப்சுக்கு பாராட்டுக்கள்

அன்புரசிகன்
14-08-2008, 10:03 AM
அக்காச்சி (RICE Stephanie (http://results.beijing2008.cn/WRM/ENG/BIO/Athlete/2/210592.shtml))இன்றும் ஒரு தங்கம் (3வது) வாங்கியிருக்கார்...

அறிஞர்
15-08-2008, 02:12 PM
பெல்ப்ஸின் 6வது தங்கம் நேற்று 200 மீட்டர் போட்டியில் கிடைத்தது. அதிலும் புதிய உலக சாதனை படைத்தார்.

http://www.youtube.com/watch?v=t46RL21q3Sw

இன்று அடுத்த தங்கப் பதக்கத்திற்காக போராடுகிறார்.

அன்புரசிகன்
15-08-2008, 02:13 PM
றைஸ் ஆறாவது தங்கமும் வாங்கியாச்சு....

http://img32.picoodle.com/img/img32/3/8/15/f_Capturem_f1aafa6.jpg

சூரியன்
15-08-2008, 02:28 PM
அங்க ஒருத்தர் எட்டு பதக்கம்.
இங்க ஒரு நாடே சேந்து ஒரு பதக்கம் தான்.

என்ன கொடுமை சார் இது.

shibly591
15-08-2008, 06:36 PM
ஆஸ்திரேலியாவின் ஸ்டெபானி ரைஸ்... சிறப்பாக நீந்தினார்.. இரு உலக சாதனை படைத்தார்.. வெகுவாய் ரசித்தேன்.
http://tm.dinakaran.co.in/1382008/TM_13-08-08-E1-06-08%20CNI.jpg

நாங'களுமு; அவர் அழகை வெகுவாய் ரசித்தோம்...

அறிஞர்
15-08-2008, 07:48 PM
றைஸ் ஆறாவது தங்கமும் வாங்கியாச்சு....


என்ன அன்பு... ரைஸ் ஆறாவது தங்கமா...

ரைஸை பார்த்துக்கொண்டே பதிந்தால் அப்படி தான்.....

ஆறு தங்கம் வாங்கினது மைக்கேல் பெல்ஸ்

அறிஞர்
15-08-2008, 07:48 PM
நாங'களுமு; அவர் அழகை வெகுவாய் ரசித்தோம்...
ரசிங்க ரசிங்க...

இந்த ஒலிம்பிக்ஸில் தினமும் பெல்ஸும், ரைஸும் தொலைக்காட்சி முன் உட்கார வைக்கிறார்கள்...

இருவருக்கும் தற்காலிக ரசிகன்.

அறிஞர்
15-08-2008, 07:49 PM
அங்க ஒருத்தர் எட்டு பதக்கம்.
இங்க ஒரு நாடே சேந்து ஒரு பதக்கம் தான்.

என்ன கொடுமை சார் இது.
அது தான் இந்தியா...

பதக்கமே பெறாத நாட்டை பார்த்து தேற்றிக்கொள்ளவேண்டியது தான்.

அன்புரசிகன்
16-08-2008, 01:44 PM
என்ன அன்பு... ரைஸ் ஆறாவது தங்கமா...

ரைஸை பார்த்துக்கொண்டே பதிந்தால் அப்படி தான்.....

ஆறு தங்கம் வாங்கினது மைக்கேல் பெல்ஸ்
:D:D:D

சற்றே slip ஆகிவிட்டேன்............. :icon_wink1: :icon_03:

அன்புரசிகன்
16-08-2008, 01:46 PM
மைக்கேல் பெல்ஸ் ஏழாவதும் வாங்கியாச்சு.... (சரியா அண்ணோய்)

http://img27.picoodle.com/data/img27/3/8/16/f_Capturem_6034d0e.jpg

அறிஞர்
16-08-2008, 03:12 PM
:D:D:D

சற்றே slip ஆகிவிட்டேன்............. :icon_wink1: :icon_03:
சற்று தானா....:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

அமரன்
16-08-2008, 03:16 PM
சற்று தானா....:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_ush:
நேற்றும் இன்றும் ரசிகனின் பதிவுகளில் இருந்த எழுத்துப் பிழைகளில் ஒன்று அண்ணா அது. ஒரு சுற்று என்று வந்திருக்க வேண்டும்.

அறிஞர்
16-08-2008, 03:20 PM
மைக்கேல் பெல்ஸ் ஏழாவதும் வாங்கியாச்சு.... (சரியா அண்ணோய்)


அந்த போட்டியை நேரடியாக கண்டிருந்தால் பிபி எகிறி இருக்கும்...

50 மீட்டரில் 7வது இடத்தில் இருந்தார்....

100வது மீட்டரில் கடைசிவரை அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவே...

ஆனால் அதிர்ஷடவசமாக கை முன்னே தொட்டதில் 1/100 வினாடியில் வெற்றி பெற்றார்.

http://www.youtube.com/watch?v=G-yCpKnjD88

எப்படி தொட்டார் என கீழே உள்ளதில் தெளிவாக தெரியும்

http://www.youtube.com/watch?v=pV1ColRycZ0

இது ஓவர் லக்கு......

அன்புரசிகன்
16-08-2008, 03:50 PM
ஒரு மனுசன் இப்படியுமா வெல்லுவான்....

எட்டாவதுக்கும் போட்டி.... பார்ப்போம்...

ஷீ-நிசி
16-08-2008, 04:24 PM
தங்கமகன்!

rajatemp
16-08-2008, 06:32 PM
இந்திய வீரர் பிந்த்ரா தங்கம் வாங்கியதற்காக பெருமை பட ஒன்றும் இல்லை.

என்னுடைய கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இந்த வார குமுதத்தில் ஞானி அவர்கள் எழுதிய கட்டுரை படித்துவிட்டு கருத்து சொல்லவும்.

வசீகரன்
17-08-2008, 07:20 AM
இந்தியாவுக்கு அடுத்து ஏதாவது ஒரு வெண்கலமாவது கிடைக்குமா என நாம் நப்பாசை பட்டுகொண்டிருக்கும் போது தினசரி இந்த ஆள் தங்கம் வாங்குற செய்தியாவே வந்துகிட்டுஇருக்கு..
பெல்ப்ஸ் அவர்களே நீங்க இங்க வந்து பொறந்து இருக்க கூடாதா... அடுத்து தங்கம் வாங்கி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள்..!

அன்புரசிகன்
17-08-2008, 01:41 PM
http://results.beijing2008.cn/WRM/images/athlete_photo/normal/5/221565.jpg

சிங்கம் எட்டாவதையும் எடுத்தாச்சு....
ஹூம்... பெருமூச்சுத்தான் விட முடியுது...

அறிஞர் அண்ணா... ஆள் அந்தப்பக்கம் வரும் போது வாழ்த்து சொல்லிடுங்க... அட... உங்க கிட்ட அவரோட அலைபேசி இலக்கம் இருக்கா,,???? :D ஒரு SMS போடலாமே என்று தான்....
http://img28.picoodle.com/data/img28/3/8/17/f_Capturem_df3cdfa.jpg

arun
17-08-2008, 05:44 PM
பெல்ப்சுக்கு வாழ்த்துக்கள் இந்த சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என்று சொன்னார்கள் சொன்னது உண்மை தான் என்று தோன்றுகிறது

அறிஞர்
18-08-2008, 12:25 AM
மைக்கேல் பெல்ப்ஸ் பெரும் சாதனை படைத்துள்ளார்..... இது எளிதான விசயமல்ல

இவருடைய ஆக்கிரமிப்பு... இன்னும் 5 வருடம் தொடரும்...

இவருக்கு பெரிய நடிகர்கள்... விளையாட்டுவீரர்கள்.. அரசியல்வாதிகள் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

அவருக்கு வந்த லட்சக்கணக்கான பதிவுகளை படிக்க இயலவில்லையாம்... அவருடைய பேஸ்புக் நிரம்பி வழிகிறதாம். நீங்களும் பாருங்கள்.. கருத்து பதியுங்கள்

http://www.facebook.com/michaelphelps

அக்னி
19-08-2008, 04:43 AM
அரிய சாதனைகளை நிலைநாட்டிய மைக்கல் பெல்ப்ஸ் அவர்களுக்கு,
வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...

அடுத்த ஒலிம்பிக்ஸிலும் போட்டியிட்டுத் தங்கங்களைக் குவித்து நீங்கா இடம்பெறட்டும்.

தீபா
19-08-2008, 05:32 AM
இவனன்றோ வீரன்....

அறிஞர்
19-08-2008, 02:21 PM
ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது..

அதிலும் மற்ற நாட்டை சேர்ந்த சில வீராங்கனைகள் சிறப்பாக பங்கு பெற்றனர்.

அமெரிக்காவிலிருந்து சென்ற பள்ளி சிறுமி சான் ஜான்சன் மற்றும் நாஸ்தியாவும் எனக்கு பிடித்தமானவர்கள்.

நாஸ்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை இந்த முறை பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவருக்கும் சீன மங்கைக்கும் ஒரே புள்ளி கிடைத்தது.. ஆனால் விதிமுறைகளின் படி நாஸ்தியா... தங்கப் பதக்கத்தத பறிகொடுத்தார். வெள்ளி மட்டுமே அவருக்கு கிடைத்தது.

நாஸ்தியா தங்கப்பதக்க பெற்றபொழுது எடுத்த படம்

http://dkn.dinakaran.co.in/1682008/E1-13-1.jpg