PDA

View Full Version : இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடர்-2008



shibly591
11-08-2008, 11:51 AM
ஒருநாள் போட்டி

ஆக. 15: ஒரு நாள் பயிற்சி ஆட்டம், கொழும்பு

ஆக. 18: முதல் ஒரு நாள் ஆட்டம், தம்புள்ள

ஆக. 20: 2ஆவது ஒரு நாள் ஆட்டம், தம்புள்ள

ஆக. 24: 3ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு

ஆக. 26: 4ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு

ஆக. 29: 5ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு

மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்காக தோனி தலைமை தாங்கவுள்ளார.....

http://thatstamil.oneindia.in என்ற இணையத்தளம் வெளியிட்டிருக்கும் அணி தொடர்பான செய்தி...இதோ

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் எம்.எஸ்.டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ராகுல் டிராவிட், கங்குலி ஆகியோருக்கு இதிலும் இடம் தரப்படவில்லை.

இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 18ம்தேதி தொடங்கும் ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்காத டோணி, ஒரு நாள் தொடருக்கு திரும்பி வருகிறார். டோணி தலைமையிலான இந்திய அணியை இந்திய அணியின் தேர்வாளர்கள் இன்று மும்பையில் அறிவித்தனர்.

இதில் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் சச்சின் டெண்டுல்கர், ஜாகிர்கான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த இரு ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கவில்லை.

டிராவிட் - கங்குலிக்கு ஸாரி!

வழக்கம் போல இந்த ஒரு நாள் தொடருக்கான அணியிலும் டிராவிட், கங்குலி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பே இல்லை என்பதை இது மேலும் நிரூபிப்பதாக உள்ளது.

பார்த்திவ் படேலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை.

அணியில் முக்கிய சேர்க்கை 19 வயதான விராத் கோலி. இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆவார். ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தார்.

இலங்கை தொடருக்கான அணி தவிர பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடருக்கான இந்திய அணி:

டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விராத் கோலி, ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி:

டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விராத் கோலி, ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.

shibly591
12-08-2008, 06:13 AM
எனக்கு யுவராஜ் சிங்க்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது....

அடுத் ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சொன்னேன்...

அதற்கு அவர் சொன்னது இலங்கையை 5-0 என்ற ரீதியில் வெள்ளையடிப்பு செய்து டெஸட் தோல்வியை ஈடு செய்யப்போகிறோம் என்பதே.

பார்க்கலாம் .

ராஜா
12-08-2008, 06:25 AM
5க்கு 0 என்பதெல்லாம் ஆகாத காரியம்..!

3க்கு 2 என்ற அளவில் முடிவுகள் இருக்கக்கூடும்.

தோனி வந்துவிட்டதால் இந்திய அணி "பழைய" திறனுக்கு வந்துவிட்டது என்று ரசிகர்கள் நம்பும் வகையில் முடிவுகள் இருக்கக்கூடும்.

சச்சின் பங்கேற்கவில்லை : தமிழகத்தின் பத்ரிநாத் களமிறக்கப்படலாம் என்று கேள்விப்பட்டேன்.

ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி பெங்களூர் அணியில் இருந்ததாக நினைவு.

எப்படியோ.. டெஸ்ட் தோல்விகளை மறந்துவிட்டு, புதிய எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் தயார்..!

அமரன்
13-08-2008, 06:59 PM
இலங்கை அணியும் போட்டிக்கு தயாராகி விட்டது..
http://content-uk.cricinfo.com/slvind/content/squad/364238.html

அறிஞர்
13-08-2008, 07:08 PM
3-2 என எதிர்பார்க்கலாம்.. ஆனால் எந்த அணி என்பது.... கூறுவது சற்றுக் கடினமே..

ஓவியன்
17-08-2008, 08:32 AM
15ம் திகதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் யுவராஜ் 121 பந்து வீச்சுக்களில் 13 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 172 ஓட்டங்களைக் குவித்திருந்தார்....

இந்த ஆட்டத்தை நாம் இங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாமா...???

மறத்தமிழன்
18-08-2008, 06:51 AM
வணக்கம்.

நீங்கள் நிறைய எதிர்பார்க்கிறீர்கள். ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அங்கு இந்திய வீரர்களோ தலைகீழாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போ நிலைமை.

இந்தியா 88/7 30 ஒவர்கள் நிறைவில்

காம்பீர் - 00
கோஹ்லி --12
ரைனா -- 17
யுவராஜ் -- 23
ரோகித் சர்மா -- 19
தோனி -- 06
பதான்-- 07

வாஸ்ஸ் - 01
குலசேகரா - 02
துஷாரா -- 02
மெண்டிஸ் - 02
முரளி -01

மதி
18-08-2008, 06:54 AM
சபாஷ்... இந்திய அணியினருக்கு இந்த அளவு தாக்கு பிடித்திருக்கிறார்களே..!

aren
18-08-2008, 06:54 AM
இந்தியாவின் சொதப்பல் ஒரு நாள் போட்டியிலும் தொடர்கிறது.

இவர்களுக்கு எவ்வளவு கோடி பணம் கிடைக்கிறது. இவர்களை டீமை விட்டு வெளியே தள்ளவேண்டும்.

டெல்லியிலிருந்து வந்ததால் விக்ரம் கோலிக்கு இடம் கிடைத்துவிட்டது. பத்ரிநாத் நான்கு வருடங்களாக போராட்டுகிறார், கேட்க நாதியில்லை. ஒரு ஆட்டத்தில் இடம் கொடுப்பார்கள், சரியாக ஆடவில்லை என்று வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் இந்திய கிரிக்கெட்.

ஷீ-நிசி
18-08-2008, 06:56 AM
இன்னும் 3 விக்கெட் இருக்குங்க.... கவலை வேண்டாம்... :)

தீபன்
18-08-2008, 06:58 AM
சச்சின் ஓய்வெடுத்து இளயவர்களுக்கு வளிவிடணும், கங்குலி, ராவிட்ட தூக்கணும்னு சொல்லியெல்லாம் என்ன பிரயோஜனம்... இளைய அணியைவிட அது எவ்வளவோ மேல்....!

தீபன்
18-08-2008, 06:58 AM
இன்னும் 3 விக்கெட் இருக்குங்க.... கவலை வேண்டாம்... :)
எதுக்கு.. அவுட்டாகத்தானே....:sprachlos020:

ராஜா
18-08-2008, 07:02 AM
சபாஷ்... இந்திய அணியினருக்கு இந்த அளவு தாக்கு பிடித்திருக்கிறார்களே..!

அய்யா மதி..!

ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நக்கலும் நையாண்டியும் இருக்கக்கூடாதய்யா..!

ராஜா
18-08-2008, 07:06 AM
அன்பிற்கினிய ஷிப்லி..!

ஒரு வேண்டுகோள்..

இலங்கை - இந்தியா ஒருநாள் போட்டித் தொடர் (2008) என்று தலைப்பை மாற்ற இயலுமானால் நல்லது.

ஐந்து போட்டிகள் குறித்தும் நாம் இங்கேயே விவாதிக்கலாம். எதிர்காலத்தில் ஆவணம் தேடுவோருக்கும் சேகரிக்க எளிதாக இருக்கும்.

மற்றபடி.. உங்கள் விருப்பப்படி.. நன்றி.

அகத்தியன்
18-08-2008, 07:23 AM
இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கட்டுகள் இழந்து 115 ஓட்டங்கள்..:traurig001: :traurig001:

தீபன்
18-08-2008, 07:33 AM
இந்தியா 121/9 42.3 ஓவர்களில்.

தீபன்
18-08-2008, 07:48 AM
இந்தியா 146 ஓட்டங்கள் அனைத்து இலக்குகளையும் 46 பந்துப் பரிமாற்றங்களில் இழந்து...... இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி....!

மதி
18-08-2008, 08:01 AM
அய்யா மதி..!

ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நக்கலும் நையாண்டியும் இருக்கக்கூடாதய்யா..!
நக்கல் நையாண்டி எல்லாம் இல்லீங்க. உண்மைய தானே சொன்னேன்.

அமரன்
18-08-2008, 08:46 AM
இன்னும் 3 விக்கெட் இருக்குங்க.... கவலை வேண்டாம்... :)
உங்கள் வாக்குப் பொன்வாக்கு.. 146 ஐ எட்டி விட்டார்களே..

திரியின் தலைப்பில் 2008 ஐ சேர்த்துள்ளேன்.

தீபன்
18-08-2008, 09:47 AM
இந்தியாவுக்கு எந்தவகையிலும் சளைத்தவனில்லையென்ற போக்கில் இலங்கை...
57/2 16 ஓவர் முடிவில்.

அகத்தியன்
18-08-2008, 10:57 AM
இலங்கை 34.5 ஓவர்களில் வெற்றி 8 விக்கட்டுக்களால்.

வாழ்த்துக்கள் இலங்கைக்கு.

அய்யா
18-08-2008, 11:03 AM
இலங்கைக்கு வாழ்த்துக்கள்.

ராஜா
18-08-2008, 11:06 AM
அடுத்த போட்டி என்னிக்குப்பா..?

அறிஞர்
18-08-2008, 12:55 PM
இந்திய அணி என்னப்பா.. காமெடி அணி போல் ஆகிவிட்டது...

சிவா.ஜி
18-08-2008, 02:27 PM
இன்னும் நான்கு ஆட்டங்கள் உள்ள நிலையில் என்ன ஆகிறது பார்ப்போம். இந்திய அணியினர் முயன்றால் முயலாகலாம், முயலாமை...ஆமையாக்கிவிடும். முதல் வெற்றிக்கு இலங்கை அணியினருக்கு வாழ்த்துகள்.

அமரன்
18-08-2008, 02:50 PM
இந்திய அணியின் இந்த சினேகபூர்வ இலங்கைச் சுற்றுலாவின் நாயகன் மென்டிஸ்தான். வேகப்பந்து வீச்சுக்கு பெரும்பான்மை சாதகமான மைதானத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆட்சி ஆச்சரியம்.

மறத்தமிழன்
18-08-2008, 05:10 PM
வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு. சேவாக் இனிவரும் 4 போட்டிகளிலும் விளையாட மாட்டார். அவருடைய காலில் ஏற்பட்ட காயமே காரணம். சேவாக் இல்லாதது தமக்கு இழப்பு என்கிறார் தோனி. இவரை மட்டும் நம்பியா அணி? மற்றவர்களும் விளையாட வேண்டும். சும்மா அல்ல பொறுப்புடன். அடுத்த போட்டி இதே திடலில் 20ம் திகதி நடைபெறும். அதுவும் பகல் போட்டிதான். பொறுத்திருப்போம். இந்தியா சாதிக்குமா? சறுக்குமா?

arun
18-08-2008, 07:30 PM
விளம்பர காரணங்களுக்காக கூட போட்டி 100 ஓவர்கள் ஆடாதது வருத்தமே

வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் :icon_b:

ஸ்பின்னை சுழட்டி சுழட்டி அடித்தவர்கள் இன்று ஸ்பின்னில் தடவுகிறார்கள் என்ன கொடுமை சார்?:eek:

மறத்தமிழன்
20-08-2008, 05:33 AM
ஆஹா இன்று இலங்கை தடுமாறுகிறதே!

இப்போது நிலைவரம் 14 ஒவர்கள் நிறைவில் 33/5.

இது என்ன தம்புள்ள ஆடுகளம் இப்படி தடுமாறப்பண்ணுகிறதே.

சகீர்கான் 4-11
பிரவீன் குமார் 1-16

சுட்டிபையன்
20-08-2008, 05:41 AM
ஆஹா சகீர்கான் கலக்கிறாரே

மறத்தமிழன்
20-08-2008, 06:02 AM
இப்போது இலங்கை 52-6

இன்று தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தன்னுடைய கன்னி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். வாழ்த்துக்கள்.

மனுசன் வந்த உடனேயே ஒரு அற்புதமான பிடி ஒன்றை எடுத்து டில்ஷானை ஆட்டமிழக்கச்செய்தார். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

மறத்தமிழன்
20-08-2008, 07:36 AM
இதோ இலங்கை 142/10

கதை முடிஞ்சு. இனி இந்திய அணி ஆரம்ப வீரர்கள் களத்திலே. பொறுத்திருப்போம்.

தீபன்
20-08-2008, 11:29 AM
3 இலக்குகளால் இந்திய அணி வெற்றி. தொடர் 1:1 என தற்போது சமநிலையில்.

arun
20-08-2008, 05:48 PM
கடின இலக்கான 142 ரன்னை எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

arun
20-08-2008, 05:54 PM
அதிகபட்சமாக தோனி 39 ரன்கள் எடுத்து உள்ளார் பத்ரி நாத் பரவாயில்லை இறுதி வரை களத்தில் இருக்கிறார்

ஸ்கோர் கார்ட்

IK Pathan c Sangakkara b Kulasekara 5
V Kohli c Kapugedera b Thushara 37
SK Raina lbw b Kulasekara 1
Yuvraj Singh lbw b Mendis 20
MS Dhoni b Fernando 39
RG Sharma lbw b Thushara 0
S Badrinath not out 27
Harbhajan Singh lbw b Mendis 1
Z Khan not out 2

ராஜா
21-08-2008, 03:57 AM
கடின இலக்கான 142 ரன்னை எடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

:icon_b::icon_b::icon_b::icon_b:

தீபன்
24-08-2008, 12:50 AM
இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள்....?

ஓவியன்
24-08-2008, 01:41 AM
இன்றைய போட்டி நடைபெற இருப்பது பிரேமதாச ஸ்டேடியத்தில், இலங்கை அணியினருக்கு மிகச் சாதகமான களம்...

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இலங்கைக்குப் பலமென்றால், ஷேவக் இல்லாத இந்திய அணியின் முன் வரிசை கொஞ்சம் பலமிழந்தே காணப்படுகிறது...

மீள அணிக்குத் திரும்பும் கம்பீரின் தலைமையில் இந்திய அணியின் ஆரம்பம் அமையவேண்டும்...

ஆனால், பிரேமதாச ஸ்டேடியத்தில் ஜெயசூர்யா இதுவரை இந்தியாவுக்கெதிராக அடித்துள்ள ஓட்டங்களைப் பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது...

சங்ககாரவுடன் இணைந்து ஜெயசூர்யா இன்றைய போட்டியில் இந்துயாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவே இருப்பார்....

அதனால் இந்தியாவுக்குத் தேவை இலங்கையின் விரைவான விக்கெட்டுக்கள்...

இந்திய அணியின் பலம் மத்தியவரிசை....

ஆனால், தொடர்ந்தும் அஜந்தவிடம் விக்கெட்டைப் பறிகொடுக்கும் யுவராஜ் இந்த போட்டியில் சாதிப்பாரா...???


பொறுத்திருந்து பார்ப்போம்...!! :)

ஓவியன்
24-08-2008, 08:58 AM
இந்தத் தொடரில் மூன்றாவது முறையாகவும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ‘டோனி', முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்...


இந்திய அணியில் கம்பீர் அணிக்குத் திரும்ப, பதான் வெளியேறியுள்ளார்..
இலங்கை அணியில் வாஸ் மீண்டும் அணிக்குத் திரும்ப டில்கார வெளியேறியுள்ளார்...

rajatemp
24-08-2008, 09:28 AM
கோலி 15 ஓட்டம்
கம்பீர் 5 ஓட்டம்

அமரன்
24-08-2008, 09:44 AM
நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பகலிரவு போட்டி... தற்போதைய கொழும்பு இரவின் காலநிலை.... சரியான முடிவு... சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி ரன்னவுட்டானார்...

rajatemp
24-08-2008, 09:48 AM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்

அமரன்
24-08-2008, 09:49 AM
குலசேகராவின் பந்துவீச்சில் விக்கட் முன் கால் முறையில் கம்பீர் வெளியேறினார்

rajatemp
24-08-2008, 10:10 AM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்
யுவராஜ் 12 குலசேகரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
ரெய்னா 9 அவுட் இல்லை
பத்ரி 0 அவுட் இல்லை முன்னேற்றம் வரிசையில்

மொத்தம் 62/3 ஓவர் 15

rajatemp
24-08-2008, 10:53 AM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்
யுவராஜ் 12 ஓட்டம் குலசேகரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
ரெய்னா 28 ஓட்டம் அவுட் இல்லை
பத்ரி 6 ஓட்டம் மென்டிஸ் பந்தில் வாஸ் கேட்ச் பிடித்துவிட்டார்
தோனி 0 ஓட்டம் அவுட் இல்லை


மொத்தம் 91/4 ஓவர் 23

rajatemp
24-08-2008, 11:21 AM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்
யுவராஜ் 12 ஓட்டம் குலசேகரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
ரெய்னா 41 ஓட்டம் அவுட் இல்லை
பத்ரி 6 ஓட்டம் மென்டிஸ் பந்தில் வாஸ் கேட்ச் பிடித்துவிட்டார்
தோனி 19 ஓட்டம் அவுட் இல்லை


மொத்தம் 125/4 ஓவர் 30

rajatemp
24-08-2008, 11:59 AM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்
யுவராஜ் 12 ஓட்டம் குலசேகரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
ரெய்னா 53 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
பத்ரி 6 ஓட்டம் மென்டிஸ் பந்தில் வாஸ் கேட்ச் பிடித்துவிட்டார்
தோனி 46 ஓட்டம் அவுட் இல்லை
சர்மா 16 ஓட்டம் அவுட் இல்லை


மொத்தம் 180/5 ஓவர் 42

மோசமான ஒரு நாள் போட்டி வரிசையில் இதுவும் ஒன்று

rajatemp
24-08-2008, 12:41 PM
கோலி 25 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
கம்பீர் 8 ஓட்டம் lbw ஆட்டமிழந்தார்
யுவராஜ் 12 ஓட்டம் குலசேகரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
ரெய்னா 53 ஓட்டம் ரன் அவுட் ஆட்டமிழந்தார்
பத்ரி 6 ஓட்டம் மென்டிஸ் பந்தில் வாஸ் கேட்ச் பிடித்துவிட்டார்
தோனி 76 ஓட்டம் மென்டிஸ் பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்
சர்மா 32 ஓட்டம் துஸ்ரா பந்தில் கபுகேத்ரா கேட்ச் பிடித்துவிட்டார்
ஹர்பஜன் 2 ஓட்டம் மென்டிஸ் பந்தில் சங்ககரா கேட்ச் பிடித்துவிட்டார்
பிரவீன் 2 ஓட்டம்
ஜாகீர் 1 ஓட்டம் துஸ்ரா பந்தில் ஜெயவர்த்தனா கேட்ச் பிடித்துவிட்டார்


மொத்தம் 237/9 ஓவர் 50

ஆட்டம் முடிந்து விட்டது
:icon_p::icon_p::icon_p::icon_p:

மோசமான ஒரு நாள் போட்டி வரிசையில் இதுவும் ஒன்று

அறிஞர்
24-08-2008, 12:47 PM
ரைனா, தோனி ஆட்டம் சிறப்பு.....

மற்றவர்கள் பொறுப்பற்ற ஆட்டம்....

ஆட்டத்தை பார்க்க விரும்புகிறவர்கள்.. கீழுள்ள தளத்தில் பார்க்கலாம்.
http://bollymovietime.blogspot.com/2008/05/flash-player.html

அமரன்
24-08-2008, 12:48 PM
ஐரோப்பா+மத்தியகிழக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்ரீடிவியிலும் பார்க்கலாம்.
இந்திய அணி நிர்ணயித்த இலக்குப் பரவாயில்லை.

rajatemp
24-08-2008, 12:57 PM
தோல்வி அடைய 25 ஓவருக்கு மேலாகும்
நல்லதுதான்

ராஜா
24-08-2008, 01:01 PM
தோல்வி அடைய 25 ஓவருக்கு மேலாகும்
நல்லதுதான்

யாருக்குத் தோல்வி ராசேந்திரரே..?

ராஜா
24-08-2008, 01:22 PM
இலங்கைக்கு சாதகமான நிலையில் இலக்கு அமைந்துள்ளது..

இலங்கையர்கள் மட்டையையும், மண்டை(மூளை)யையும் பயன்படுத்தி ஆடினால் அவர்களுக்கே வெற்றி..!

ராஜா
24-08-2008, 01:38 PM
ஜெயசூர்யா ஆட்டமிழந்தார்..

4 முன்வரிசை வீச்சாளர்களை மட்டுமே இந்தியா பெற்றிருக்கிறது.. தேவைப்படும் ஓட்ட விகிதமும் அதிகமில்லை.. இலங்கை அணி விரக்தி அடையத் தேவையுமில்லை.

22/1.

ராஜா
24-08-2008, 01:40 PM
அடுத்த இழப்பு இலங்கைக்கு ...

சங்கக்கார ஆட்டமிழந்தார்..

விமுகா ஜாகீர் கான் 9.

26/2. ஆறாவது ஓவர்.

ராஜா
24-08-2008, 01:55 PM
சமர கப்புகேதர ஆட்டமிழந்தார்..

விமுகா ப்ரவீண் குமார்.

37/3.

9 வது ஓவர்.

ராஜா
24-08-2008, 02:01 PM
அடுத்து ஆட்டமிழப்பவர்.. சமர சில்வா..!

விமுகா ஜாகீர் கான்.

40/4.

10வது ஓவர்.

ஏன் இலங்கை அணி இவ்வளவு பதற்றப்படுகிறார்கள் என்று புரியவில்லை.

ராஜா
24-08-2008, 02:06 PM
இப்போதும் காரியம் மிஞ்சிவிடவில்லை..

ப்ரவீண், ஜாகீர் ஆகியோரின் முதல் பகுதி வீச்சு முற்றுப்பெற இருக்கிறது. மஹேலவும், தில்ஷானும் பொறுப்பாக, கவனமாக ஆடினால் இலங்கைக்கு வெற்றிமகள் மாலையிடுவாள்..!

ராஜா
24-08-2008, 02:34 PM
முனாஃப் படேலுக்கு விக்கெட்..!

தில்ஷான் 16. பி தோனி.

58/5.

17 வது ஓவர்.

இலங்கை நிலவரம் கொஞ்சம் கலவரம்..!

ராஜா
24-08-2008, 02:39 PM
ஹர்பஜன் தன் பங்குக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்..

சமிந்தா வாஸ் 0 வீ ஹர்பஜன்.

59/6.

இலங்கை அணிச்செம்மலுக்கு துணை நிற்க யாருமில்லை..!

ராஜா
24-08-2008, 03:15 PM
27 ஓவர் முடிவில்..

இலங்கை 94/7.


இன்னொரு விமுகா..!

நுவான் குலசேகர 11. விமுகா யுவராஜ்.

ராஜா
24-08-2008, 04:26 PM
178/8.

திலன் துஷார 30 வீ ஜாகீர் கான்.

சிவா.ஜி
24-08-2008, 04:28 PM
அப்பா.........!!! என்னா ஒரு வேகம்...இப்பதான் திரையிலப் பாத்தேன் அதுக்குள்ள மன்றத்துல. சூப்பர் சோனிக் ராஜா சார்.

rajatemp
24-08-2008, 04:32 PM
இலங்கை 183-8 (44.2)

ஜெயவர்த்தனா 85

rajatemp
24-08-2008, 04:33 PM
ராஜா அவர்களே நான் கூறியது
இந்தியாவை பற்றிதான்

rajatemp
24-08-2008, 04:35 PM
இலங்கையின் தேவை 50 ஓட்டம் 28 பந்துக்கு

rajatemp
24-08-2008, 04:36 PM
இலங்கை 192/9

ஜெயவர்த்தனா 94 அவுட்

இலங்கையின் தேவை 46 ஓட்டம் 26 பந்துக்கு

ராஜா
24-08-2008, 04:38 PM
மஹேலவின் தீரமிகு ஆட்டம் முடிவுக்கு வந்தது..!

94 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்..!

192/9

rajatemp
24-08-2008, 04:39 PM
இந்தியாவின் வெற்றி உறுதிபோல் உள்ளது

இலங்கையின் தேவை 44 ஓட்டம் 24 பந்துக்கு

rajatemp
24-08-2008, 04:44 PM
இந்தியா வெற்றி பெற்றுவிட்டது

நம்ப முடியவில்லை

Total: 204 for 10 in 49 overs

rajatemp
24-08-2008, 04:47 PM
இலங்கை வீரர்கள் விளையாடவே தெரியாதது போல் விளையாடியது ஆச்சரியமளிக்கிறது

எவ்வளவு பணம் பெற்றிருப்பார்கள்

ஏனெனில் யுவராஜின் பந்துக்கெல்லாம் ஆட்டம் இழந்தார்களே

ராஜா
24-08-2008, 04:53 PM
33 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்..!

இறுதிவரை போராடிய இலங்கை அணிக்கு பாராட்டுகள்..!

"பொத்தனூர்"பிரபு
24-08-2008, 05:35 PM
..........................
இலங்கை வீரர்கள் விளையாடவே தெரியாதது போல் விளையாடியது ஆச்சரியமளிக்கிறது

எவ்வளவு பணம் பெற்றிருப்பார்கள்

ஏனெனில் யுவராஜின் பந்துக்கெல்லாம் ஆட்டம் இழந்தார்களே....................


இதெல்லாம் ஓவர்

"பொத்தனூர்"பிரபு
24-08-2008, 05:35 PM
இப்ப என்ன செய்வீங்கஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அறிஞர்
25-08-2008, 02:03 PM
இந்தியாவின் ஆரம்ப பந்துவீச்சு அருமை.... எதிர்பாராமல் கலக்கிவிட்டனர்.

அடுத்த போட்டியில் மெத்தனமாக விளையாடினால்.. அடிதான் கிடைக்கும்.

அமரன்
26-08-2008, 09:51 AM
கொழும்பில மழையாம்ல.... இன்றைய போட்டி நடக்காட்டால் 2-2ஆ 3-1 ஆ,,

அறிஞர்
26-08-2008, 03:29 PM
திரும்ப நாளை போட்டி நடக்கிறது...

3-2, 4-1, 2-3...

ஓவியன்
27-08-2008, 10:02 AM
யுவராஜ்சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதுடன் ஒரு நாள் போட்டியில் தனது 400 வது விக்கெட்டைப் பெற்றுள்ளார் சமிந்தவாஸ்..!!

400 விக்கெட்டை வீழ்த்திய வாஷூக்கு என் வாழ்த்துக்களும்...!!

அமரன்
27-08-2008, 11:11 AM
போற போக்கைப் பார்த்தால் இலங்கைக்கு சவாலான இலக்கு விதிக்கப்படும் போல இருக்கே. எது எப்படியோ.. ஆட்டம் மட்டுமல்லாது தொடரே சுவாரசியமாக இருந்தால் சரி..

அறிஞர்
27-08-2008, 01:30 PM
259 என்பது எளிதான இலக்கு தான்..

பொறுமையாக விளையாண்டால் இலங்கை வெற்றி பெறும்.

ஷீ-நிசி
27-08-2008, 02:09 PM
38/2 11OV

ராஜா
27-08-2008, 02:33 PM
16 overs..

Sri lanka 61-2

அபார(ய) ஆட்டக்காரர் சனத் அடித்து நொறுக்குகிறார்..! 49* (46 பந்துகளில்..)

எதிர் முனையில் மகேலவின் பொறுப்பாட்டம்.. 3* (18)

tamilambu
27-08-2008, 02:34 PM
இலங்கை அணி 16 பந்துப்பரிமாற்றங்களுக்கு 61 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
ஜெயசூரிய 53
ஜெயவர்த்தனே - 3

ராஜா
27-08-2008, 02:36 PM
சனத் ஜெயசூர்யவின் 66வது அரைச்சதம்..!

முனாஃப் படேலின் பந்தை பின் காலில் சென்று மிட் விக்கெட்டில் விரட்டுகிறார்..

தொடர்ந்து ஒரு சிக்சர்..!

சனத் 59*

ராஜா
27-08-2008, 02:39 PM
இந்திய அணித் தலைவர் தோனி, ஹர்பஜனை அழைத்திருக்கிறார்..!

சனத்தின் சனரஞ்சக வேகத்தை பஞ்சாப் சிங்(கம்) அடக்குமா..?

ராஜா
27-08-2008, 02:41 PM
சனத் வீழ்ந்தார்..!

தோனியின் கணக்கு கச்சிதமாகப் பலித்தது..!

சனத் ஜெயசூர்ய பி ரெய்னா வீ ஹர்பஜன் 60.

இலங்கை 74/3

18 வது ஓவர்.

ஷீ-நிசி
27-08-2008, 02:43 PM
லைவ் கமென்ட்ரில கலக்கறீங்க! :)

ராஜா
27-08-2008, 02:52 PM
ஹர்பஜனின் பந்து வீச்சுச் சுழலில் இலங்கை மூழ்குமா..?

இந்தியர் தோனியின் வியூகத்தைத் தாண்டி இலங்கைத் தோணி கரை சேருமா..?

பரபரப்பான கட்டத்தில் போட்டி இருக்கிறது.

87/3.

20 ஓவர்கள்.


30 ஓவர்களில் 172 ஓட்டங்கள் தேவை.

tamilambu
27-08-2008, 03:01 PM
இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது.
103/3 - 23 பந்துப்பரிமாற்றங்கள்

ராஜா
27-08-2008, 03:01 PM
22.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியிருக்கிறது இலங்கை.

(முதல் 50 வந்தது 86 பந்துகளில்.. 2வது ஐம்பது அதே அளவு (50) பந்துகளில்..!)

ராஜா
27-08-2008, 03:03 PM
மகேல வீழ்ந்தார்..!

ரன் அவுட்..

106/4

ராஜா
27-08-2008, 03:04 PM
திலகரத்னே தில்ஷான் அடுத்த மட்டையாளர்..!

tamilambu
27-08-2008, 03:05 PM
இலங்கை 4ஆவது விக்கெட்டையும் இழந்தது.
ஜெயவர்த்தனே 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 106 ஓட்டங்கள் 24 பந்துப்பரிமாற்றங்கள் 4 விக்கெட்டுக்கள்.

அறிஞர்
27-08-2008, 03:09 PM
மகிலே பொறுப்புடன் ஆடுவார் என எதிர்பார்த்தேன்.. இப்படி கவுத்திட்டாரே..

ராஜா
27-08-2008, 03:10 PM
முன் காலில் இந்தியா முனைப்போடு..!

பின் காலில் இலங்கை திகைப்போடு..!!

tamilambu
27-08-2008, 03:12 PM
இலங்கை அணி 121 ஓட்டங்கள் 26 பந்துப்பரிமாற்றங்கள் 4 விக்கெட்டுக்கள்.
கபுகெதர - 24
டில்ஷான் - 3
இலங்கை ஓட்ட சராசரி- 4.65
எடுக்கவேண்டிய ஓட்ட சராசரி- 5.75

ராஜா
27-08-2008, 03:13 PM
மகிலே பொறுப்புடன் ஆடுவார் என எதிர்பார்த்தேன்.. இப்படி கவுத்திட்டாரே..

சென்ற போட்டியில் 94 எடுத்தாரே..!

அறிஞரே.. எனக்கொரு சந்தேகம்..

முதல் போட்டியில் அடிக்கறவங்க ( பெரும்பாலும்) அடுத்த போட்டியில் கவுத்துடறாங்களே.. ஏன் அப்படி..?

அறிஞர்
27-08-2008, 03:16 PM
சென்ற போட்டியில் 94 எடுத்தாரே..!

அறிஞரே.. எனக்கொரு சந்தேகம்..

முதல் போட்டியில் அடிக்கறவங்க ( பெரும்பாலும்) அடுத்த போட்டியில் கவுத்துடறாங்களே.. ஏன் அப்படி..?
இந்தியர்களிடம் (குறிப்பாக சேவாக்கிடம்) இருந்து கற்றுக்கொண்டார்களோ என்னவோ..

10க்கு 2 போட்டி விளையாண்டால் டீமில் நிலைக்கலாம் என கனவு ஏதும் காணலாம்...

ராஜா
27-08-2008, 03:25 PM
துடிப்பும் மிடுக்கும் கொண்ட துடுப்பாட்டக்காரர் கபுகேதரவுடன் மூத்த ஆட்டக்காரர் வாஸ் இணைகிறார்..

அணியின் கடைசி நம்பக மட்டையாளர் இணை இதுவே..!

ராஜா
27-08-2008, 03:33 PM
ஐடியா கப்பை வெல்லும் ஐடியா இலங்கைக்கு இல்லை போலத் தெரிகிறது..!

140 / 6.

சமர கபுகேதர 30 ஓட்டங்களுக்கு யுவராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
.

அறிஞர்
27-08-2008, 03:53 PM
7 விக்கெட்டும் காலி....

எப்படியோ இந்தியா வெற்றி பெற்றால் சரி தான்..

டெஸ்ட் தொடர் - இலங்கை
ஒருநாள் தொடர் - இந்தியா..

ராஜா
27-08-2008, 05:09 PM
ஐடியா கப் : இந்தியா வெற்றி..!

வென்றோருக்கு வாழ்த்துகள்..

வெற்றி வாய்ப்பை இழந்தோருக்கும் பாராட்டுகள்..!

ஆட்ட நாயகன் : சுரேஷ் ரெய்னா.

tamilambu
27-08-2008, 05:12 PM
எமது மன்ற வாக்கெடுப்பு முடிவுகளையும் மீறி இந்தியா வென்றுவிட்டது.
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
27-08-2008, 05:25 PM
முதன்முறையாக இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை...

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு..

சிவா.ஜி
28-08-2008, 04:32 AM
ஆமை முயலாகிவிட்டது. இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

rajatemp
28-08-2008, 04:39 AM
சிவா.ஜி அவர்களே உங்கள் குதிரையின் வேகத்தை

இந்திய அணியினருக்கு வழங்கிவிட்டீர்களோ

ஏனெனில் ஜெயித்து விட்டார்களே

ராஜா
28-08-2008, 05:03 AM
முதன்முறையாக இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை...

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு..

திறமை வாய்ந்த இந்திய அணி இலங்கை மண்ணில் வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுதானா..? அப்போ இத்தனை ஆண்டுகளாக 'எதிர்பாராத' தோல்விகள் தானா..?

அடப்பாவமே..!

அடுத்தடுத்து, இரண்டாவது தொடரை இலங்கை கோட்டைவிட்டிருக்கிறது.. 10 மாதங்களுக்கு முன், பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணியிடம், 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றிவாய்ப்பை இலங்கை இழந்தது.

அறிஞர்
29-08-2008, 02:08 PM
இன்று முதலில் ஆடிய இலங்கை 227/6 எடுத்தது..

இந்தியா 54/2 (12 ஓவர்)... ரைனா, யுவராஜ், தோனி பொறுப்புடன் விளையாண்டால் வெற்றி பெறலாம்.

அமரன்
29-08-2008, 04:23 PM
நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பகலிரவு போட்டி... தற்போதைய கொழும்பு இரவின் காலநிலை.... சரியான முடிவு... சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி ரன்னவுட்டானார்...

போட்டி தொடர்பாக எனது பழைய பதிவு. பிரேமதாச ஆடுகளத்தில் பகலிரவுப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பாடும் அணிக்கு வெற்றி வாய்ப்புக் குறைவு. அதுவும் சமபலத்துடனான அணிகள் மோதுகின்றபோதும், ஆண்டின் பிற்பகுதிக் காலநிலையிலும் ஓட்ட இலக்கை அடைவது சவாலானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆட்டம் அமைந்துள்ளது.

21 ஓவர்களில் 88/6

அறிஞர்
29-08-2008, 04:54 PM
இந்தியர் ஏதோ ஜாலியாக வந்து மட்டை அங்கும் இங்கும் சுழற்றி சென்றனர்...

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி..

உதயசூரியன்
29-08-2008, 06:03 PM
இந்தியர் ஏதோ ஜாலியாக வந்து மட்டை அங்கும் இங்கும் சுழற்றி சென்றனர்...

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி..

ஆறுதல் வெற்றிக்கே.. இந்தியாவை துணி துவைப்பது போல் துவைத்து விட்டார்களே..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஓவியன்
30-08-2008, 02:05 AM
இந்தத் தொடரில் இலங்கையின் 'திலான் துசாரா' தன்னை ஒரு நல்ல சகல துறை ஆட்டக் காரராக வெளிப்படுத்தியிருந்தார்...

மொத்தமாக நான்கு போட்டிகளில் பின்வரிசையில் துடுப்பெடுத்தாடி, இந்த தொடருக்காக அவர் சேசரித்த மொத்த ஓட்டங்கள் 168 ஐந்து போட்டிகளிலும் அவர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 10...

சுட்டிபையன்
30-08-2008, 04:43 AM
தொடரை வென்ற இந்திய அணியினருக்கும் காரை வென்ற தோணிக்கும் வாழ்த்துக்கள்

இந்தத் தொடரில் இலங்கையின் 'திலான் துசாரா' தன்ன்னை ஒரு நல்ல சகல துறை ஆட்டக் காரராக வெளிப்படுத்தியிருந்தார்...

மொத்தமாக நான்கு போட்டிகளில் பின்வரிசையில் துடுப்பெடுத்தாடி, இந்த தொடருக்காக அவர் சேசரித்த மொத்த ஓட்டங்கள் 168 ஐந்து போட்டிகளிலும் அவர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 10...

துசாரவை என்னுமொரு ஜெயசூரியாவாக இலங்கை ஊடகங்கள் எல்லாம் பேசுகின்றன, ஆரம்பத்தில் இருந்த ஜெயசூரியா போன்றே பந்து வீச்சாளராக வந்து துடுப்பாட்டத்தில் கலக்குகிறார், ஆனால் அவரது பாணந்துறை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. ஜெயசூரியாவின் இடத்தை நிரப்புவாரா? பொறுத்திருந்த்துதான் பார்க்கணும்.

இந்த மெண்டிஸ் பந்து போடுறான இல்லை விக்கட்டை எடுக்குற காந்ததை போடுறானனுதனைய்யா எனக்கு புரியல:D:D:D

சுட்டிபையன்
30-08-2008, 04:52 AM
ஆறுதல் வெற்றிக்கே.. இந்தியாவை துணி துவைப்பது போல் துவைத்து விட்டார்களே..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

இதெல்லாம் அசட்டைத்தனமான விளையாட்டு இலங்கை அணியினர் டெஸ்ட் மற்றும் முதலாவது போட்டி வென்ற தலைக்கணத்தில் விளையாடி தொடரை இந்தியாவிடம் இழந்தார்கள், இந்திய அணியினர் தொடரை வென்று விட்டோம் தானே என்று அசட்டைதனத்தினால் நேற்றைய போட்டியை கோட்டை விட்டனர். Home Tigers என்று அழைக்கபடும் இலங்கைக்கு தனது மண்ணில் 2007லிருந்து தொடராக கோட்டை விட்ட 3வது தொடர் இதுவாகும். 2007 ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் 2-1 என்றிலும் கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்திடம் 3-2 என்றூம் அந்த 2 தொடரிலும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து பலமில்லாத நிலையில் இருந்தமை என்பதை நினைவு படுத்த வேண்டும். இப்போது பலமான இந்திய இளையவர்களிடம். இந்திய அணி 2011 ஆண்டு உலக கிண்ணத்தை நோக்கி இளையவர்களுடன் கலக்கபோவதற்க்கான ஆரம்பம்தான் கடந்த அவுஸ்ரேலிய, பாகிஸ்தானிய மற்றும் இலங்கை தொடர்கள் காட்டுகின்றன, இளையவர்கள் முன்னைய பெரியவர்கள் விட்ட தவறை மீண்டும் விடாமல் முன்னேற வாழ்த்துக்கள். யுவராஜ் மற்றும் ரோகித் சர்மா ம்ற்றும் பத்ரிநாத் ஆகியோர இந்த தொடரை கோட்டை விட்டு விட்டார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கோலி சிறப்பாக ஆடினர். ரெய்னாவின் துடுப்பாட்டம் என்னும் மெருகேறுகிறது பந்து வீச்சில் சகீர்கான் கலக்கினார். மொத்தத்தில் இந்திய அணி ஜெயித்து விட்டது:icon_b:

ராஜா
31-08-2008, 01:11 PM
5க்கு 0 என்பதெல்லாம் ஆகாத காரியம்..!

3க்கு 2 என்ற அளவில் முடிவுகள் இருக்கக்கூடும்.

தோனி வந்துவிட்டதால் இந்திய அணி "பழைய" திறனுக்கு வந்துவிட்டது என்று ரசிகர்கள் நம்பும் வகையில் முடிவுகள் இருக்கக்கூடும்.



:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

(இப்படி நாமாக பாராட்டிக்கொண்டால்தான் உண்டு..! :) )

உதயசூரியன்
31-08-2008, 07:38 PM
நான் பாராட்டுகிறேன் ராஜா அண்ணே..
என்னே ஒரு கணிப்பு கை வசம் ஒரு தொழில் இருக்குன்னு சொல்லுங்க..
கிளிகள் பத்திரமா இருக்குயில்ல...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்