PDA

View Full Version : நெஞ்செரிச்சலை(அசிடிட்டி) போக்க என்னவழி??சுகந்தப்ரீதன்
11-08-2008, 10:22 AM
உணவு உண்ட பிறகு மீண்டும் அது மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சலை(அசிடிட்டி) ஏற்படுத்த காரணங்கள் என்னென்ன..? எதனால் இது ஏற்படுகிறது..? எப்படியெல்லாம் அதை தவிர்க்கலாம் அல்லது போக்கலாம்..? அசிடிட்டியை தொடர்ந்து அலட்சியபடுத்தி வந்தால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன..?? கொஞ்சம் அதிகமாகத்தான் கேட்டிருக்கிறேன்.. கொஞ்சம் கோவப்படாம பதில் சொல்லுங்க தெரிஞ்சவங்க.. எனக்கும் கொஞ்சம் நெஞ்செரிச்சல் இருக்குதுங்க..:smilie_abcfra:

சிவா.ஜி
11-08-2008, 10:27 AM
வயித்தெரிச்சல் இல்லாம இருந்தா சரி....!!! (சும்மா...விளையாட்டுக்கு) அதிகமா அமிலம் சுரப்பதுதான் காரணம். மசாலா அயிட்டங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது. உடனடி நிவாரணத்துக்கு ENO மிக நல்லது.

சுகந்தப்ரீதன்
11-08-2008, 10:29 AM
ENO -ன்னா என்னா அண்ணா..?? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ..!!

சிவா.ஜி
11-08-2008, 10:41 AM
ENO என்பது ஒரு பவுடர். தண்ணீரில் இட்டதும், அன்னையின் ஆணை கேட்ட மனோகரன் போல குபு குபுவென்று பொங்கும். பொங்கும்போதே குடித்துவிடவேண்டும். நெஞ்செரிச்சல் பேயேபோச். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சுவைகளில் கிடைக்கும் ANTACID.

இதயம்
11-08-2008, 10:45 AM
நெஞ்செரிச்சல் பேயே
நெஞ்செரிச்சல் அவ்வளவு கொடுமையானதா..?!!!!!!!!!! :)

சிவா.ஜி
11-08-2008, 11:19 AM
நெஞ்செரிச்சல் அவ்வளவு கொடுமையானதா..?!!!!!!!!!! :)
அது போயேபோச்....இருந்தாலும் பேயேன்னுகூட சொல்லலாம். அம்புட்டு அவஸ்தை.(பட்டிருக்கோமில்ல...!!!)

mukilan
11-08-2008, 12:27 PM
இதை பற்றிய முழுமையான விவரம் இளசு அண்ணா அளிக்கலாம்.
அதிக காரமான, பொறித்த, மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணும் பொழுது செறித்தலுக்கான சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அதிகமாகச் சுரக்க நேரிடும். அத்தகைய ஹைட்ரோகுளோரிக் அல்லது மற்றொரு அமிலத்தின் அளவு அதிகப்படும்போது நம் உணவுப்பாதை மற்றும் செறிப்பு மண்டலத்தில் அமிலத்தன்மை கூடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. அதை கவனிக்காமல் விட்டால் அல்சர்(குடல்புண்ணா?) வரக்கூடும்.

சரி எப்படி சமாளிப்பது? அமிலத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டுவர என்ன செய்யலாமோ அதை செய்யலாம்.
மருந்துக்கடைகளில் விற்கப்படும் கால்சியம்(Calcium) மாத்திரைகளை உட்கொள்ளலாம்.கால்சியம் ஒரு காரம்(base). காரம் அமிலத்துடன் வினை புரிந்தால் சமநிலை(neutral pH) எய்தும் அல்லவா? அதனால்தான் மாத்திரை கைவசம் இல்லாத போது கால்சியம் மிக்க பாலை அருந்தச் சொல்வார்கள்.

மன்மதன்
11-08-2008, 01:57 PM
சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்காவது எந்த வேலையும் செய்யக்கூடாது. படுக்க கூடாது. அப்படி பண்ணினால் அசிடிடி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
12-08-2008, 04:16 AM
தகவல் தந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

அன்புரசிகன்
12-08-2008, 08:26 AM
இளசு அண்ணா தான் சரியான மருந்து... (தருவார்)

ஓவியன்
12-08-2008, 08:54 AM
ஹூம் சுபி, எனக்கும் இந்தப் பிரச்சினை இடைக்கிடை வருவதுண்டு...!! :frown:

சில வேளை தூங்கவிடாமல் தொல்லை பண்ணும்..

மருந்துகளை பாவிக்கவுமில்லை, உணவு நேரங்கள் தவறியிருந்தால் சரி பண்ணுவேன்..
உறைப்பு, எண்ணை உணவுகளைக் குறைப்பேன்...
பால் அதிகமாக குடிப்பேன், அப்படிச் செய்து வந்தால் சில நாட்களில் நெஞ்செரிச்சல் குறைந்து விடும்...

விகடன்
12-08-2008, 10:30 AM
மன்றத்து மருத்துவர் இளசு அண்ணா வரும்வரை பொருத்திருக்க வேண்டும் சுகந்தப்ரீதன்.

எனக்கும் பிரியோசனமான திரியப்பா இது :)

தீபன்
12-08-2008, 11:00 AM
பலரும் எரிச்சலோடதான் இருக்கிங்கபோல....

வெற்றி
12-08-2008, 01:52 PM
உங்களை விட அதிகம் சம்பாதிக்கும் நபர்களை சந்திப்பதை தவிர்க்கவும்

நீங்களும் உங்கள் நன்பரும் ஓட்டலில் சாப்பிட்டபின் உங்கள் நன்பர் பில்லுக்கு பணம் கொடுப்பார் என எதிர்பார்க்காமல் நீங்களே கொடுக்கவும்

வீட்டில் புக் பார்த்து செய்த புதிய ரெசிபிக்களை நீங்கள் சோதனை முயற்சியாக சாப்பிடுவதை தவிற்க்கவும்

இதெல்லாம் பின்பற்றியும் எரிந்தால்
இனி சீரியஸ் பதில்கள் (என் மருத்துவ நன்பர் சொன்னவை )
அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்........(குளிர்ந்த நீர்)
அதிக மசாலா ஆபத்து
அதுவும் அஜீனமோட்டே....இஞ்ஜி..எழுமிச்சை போன்ற பொருட்கள் (சிட்ரிக் அமிலம் உள்ளவை ) போன்றவைகளை தவிற்க்கவும்

உடனடி நிவாரணத்துக்கு ENO மிக நல்லது.
சிவா.ஜி அண்ணா சொன்னது போல் உடனடி நிவாரண்த்திற்க்கு மட்டும் இதை நாடவும் (கோலி சோடா மற்றும் ஈனோ போன்றவைகளில் கார்பானிக் அமிலம் அல்லது வாயு இருக்கும் இவை நல்லதும் அல்ல)
அலோபதில் பொதுவாக
MPS எனப்படும் டைஜின்....ஜெலுசில் போன்றவை உத்தமம் (பக்க விளைவு இல்லாதது)
அடுத்து ராண்டிடைன் எனப்படும் வகையாராக்கள் (ஜீண்டாக் 150 அல்லது 300) இதுவும் நல்லதே
என் வைத்தியம் சோற்றுக்கற்றாலை மிக மிக நல்லது .......
(இ.பணம் பீஸ்ஸாக ஏற்றுக்கொள்ளப்படும்)

வெற்றி
12-08-2008, 02:00 PM
சரி எப்படி சமாளிப்பது? அமிலத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டுவர என்ன செய்யலாமோ அதை செய்யலாம்.
மருந்துக்கடைகளில் விற்கப்படும் கால்சியம்(Calcium) மாத்திரைகளை உட்கொள்ளலாம்.கால்சியம் ஒரு காரம்(base). காரம் அமிலத்துடன் வினை புரிந்தால் சமநிலை(neutral pH) எய்தும் அல்லவா? அதனால்தான் மாத்திரை கைவசம் இல்லாத போது கால்சியம் மிக்க பாலை அருந்தச் சொல்வார்கள்.
இவை பொதுவாக கனையத்தின் வேளை ....சமன் செய்தல் என்பதை நாம் செய்யக்கூடாது ..கூடவே கூடாது
பக்க விளைவுகள் மிக மிக அதிகம் .....
சத்து மாத்திரை என நினைத்து நாம் விழுங்கும் பல மாத்திரைகளின் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்
நீங்கள் சொன்ன பாலை விட தயிர் மிக நல்லது (அதில் இருக்கும் லாக்டிக் அமிலம் நீங்கள் சொன்ன சமன் செய்வதை செய்யும் .அதை சமன் என்பதை விட எதிர் வினை என சொல்லலாம் )

சுகந்தப்ரீதன்
13-08-2008, 04:09 AM
நம்ப அண்ணனுங்க கிட்டருந்துதான் இதெல்லாம் எனக்கும் தொத்திக்கிடுச்சி போலிருக்கு..??:confused::fragend005:

இளசு அண்ணா ஒன்னுமே சொல்லாம போயிட்டாரே ஏன்..?? ஒருவேளை அண்ணலுக்கும் இந்த அவஸ்தையோ..??:aetsch013:

மொக்கைச்சாமியார் வழக்கம்போல மொக்கையை போட்டுட்டு அருமையா அட்வைஸ் பண்ணியிருக்காரு.. நாட்டுவைத்தியர் மொக்கைசாமியாருக்கு எனது நன்றிகள்..!!:icon_b:

இளசு
13-08-2008, 06:00 AM
இளசு அண்ணா ஒன்னுமே சொல்லாம போயிட்டாரே ஏன்..?? ஒருவேளை அண்ணலுக்கும் இந்த அவஸ்தையோ..??:aetsch013:ஹ்ஹ்ஹ்ஹா!

கொஞ்சம் விபரமாக, நிதானமாக சிகிச்சை அளிக்கலாம்னு நினைத்தால் -
அதுக்குள் எரிச்சல் அதிகமாகிடுச்சு போல..:)

1) நூற்றுக்கு 15 பேருக்கு இது வாரம் ஒரு முறையாவது வந்து தொல்லை கொடுக்கும். ஆங்கிலத்தில் Heartburn. கூட்டணி: எதுக்களித்தல் - Regurgitation. திடீரென வாயில் உமிழ்நீர் ஊற்று - waterbrash, நெஞ்சுவலி, மேல்வயிற்றில் அசௌகரியம்.

இதன் பெயர் : இரைப்பை to உணவுக்குழாய் எதிர்பாய்ச்சல் ( Gastro - Oesophageal Reflux)

2) காரணிகள் ( எனவே தவிர்க்க வேண்டியவை)

அ) என்ன சாப்பிட்டால் இது நேர்கிறதோ அதைக் குறைத்தல்/ தவிர்த்தல்
- ஆனந்தபவன் வெங்காய பக்கோடா, பொன்னுசாமி பிரியாணி போல

ஆ) காபி, தேநீர், நுரைக்கும் பானங்கள் ( கோக்,பீர்), மதுவகைகள், புகைத்தல் -
முதல் இரண்டை குறைக்கவும். மற்றவை தவிர்க்கலாம்.

இ) உடல் எடை கூடுதல், வயிற்றை இறுக்கும் உடைகள், மூக்கு முட்ட உண்ணுதல், முழு வயிற்றோடு படுத்தல்- குனிதல்..

ஈ) சில சுவாசநோய்/இதயநோய் மருந்துகள், வலி நிவாரணிகள் - குறிப்பாய் ஆஸ்ப்ரின், ப்ரூஃபென் குடும்ப வகையறா - இவற்றால் நெஞ்சு எரிச்சல் அதிகரித்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.


இறுதியான முக்கியக் காரணம் -
இரைப்பைக்கும், உணவுக்குழலுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு
ஒரு தடுப்பு வால்வாக இல்லாமல், பலமிழந்து விடுவது.

உணவு, நீரை உள்வழி அனுப்பி, ஏப்பக் காற்றை மட்டும் வெளிவழி அனுப்பும் நல்ல காவல்காரன் அந்த எல்லைக்கோடு.

அது நலிந்தால், இரைப்பை எதையும் மேலே அனுப்பும்.
மேலே சொன்ன காரணிகள் அந்த அனுப்புதலை அதிகரிக்கும்.

தீர்வுகள்:

1) காரணிகளைத் தவிர்த்தும் எப்போதாவது வந்தால் - ஆண்டாசிட் மாத்திரைகள் அல்லது திரவம் - தேவைப்படும்போது மட்டும்.
- ஜெலுசில்,டைஜீன், கேவிஸ்கான்
2) அடிக்கடி வந்தால் - ஆரம்பத்தில் மொக்கையின் நண்பர் ( நல்ல மருத்துவர்) சொன்னபடி ரானிட்டிடின் 150 மிகிராம் - இரு வேளைக்கு
- Zantac
அதற்கும் கட்டுப்படாததை, மருத்துவர் ஆலோசனைப்படி - PPI - Proton Pump Inhibitors - குடும்ப மருந்துகள் கொண்டு அடக்கலாம்.
Omeprazole, Pantoprazole,Rabeprazole , Esomeprazole என பல வீரியர்கள் உண்டு - அமிலச்சுரப்பை ஏறக்குறைய முழுமையாய் அடக்க

3) இதற்கும் அடங்காத/ மாத்திரை தொடர விரும்பாத நேரங்களில்
சில சோதனைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையால் இரைப்பை- குழல் எல்லையை சீரமைக்கலாம். ( Anti -reflux repair)

5) 55 வயதுக்கு மேல், பசியின்மை, எடை குறைதல், வாந்தி, இரத்தச் சோகை , உணவு குழலில் சிக்குதல் போன்ற சூழல்களுடன் நெஞ்செரிச்சல் வந்தால் உடன் மருத்துவரை அணுகவும். உள்நோக்கும் ( Endo - Scopy) சோதனை அவசியம்.

பூமகள்
13-08-2008, 06:21 AM
பயனுள்ள மருத்துவக் குறிப்பு பெரியண்ணா...!!

சிலப்பல சந்தேகங்கள் தெளிவாகியது..

மிக்க நன்றிகள்..!! :)

சிவா.ஜி
13-08-2008, 06:27 AM
ஆஹா...அற்புதமான, விலாவரியான காரணங்களும், தீர்வுகளும்....மிக்க நன்றி இளசு.

ஓவியன்
13-08-2008, 06:37 AM
ஆஹா மிக்க நன்றி இளசு அண்ணா..!!

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம், இந்த நெஞ்சரிச்சலுக்கும் குடல் புண் நோய்க்கும் நேரடி சம்மந்தம் உள்ளதா..???

அதாவது ஒன்று வந்தால் மற்றையது வருவது போல...

அடுத்து, நெஞ்செரிச்சலைக் கவனியாது விட்டால் அது எந்த வகையாப விளைவுகளைக் கொடுக்கும்...??

இளசு
13-08-2008, 06:46 AM
மிக்க நன்றி பாமகள் தங்கைக்கும், சிவாஜிக்கும்..

ஓவியின் கேள்விகள் மிக முக்கியமானவை

1) அதிக அமிலம் - நெஞ்செரிச்சலுக்கும், அல்சருக்கும் பொதுவான அடிப்படை.

ஆனால் இரண்டும் தனித்தனி நோய்கள்.

அல்சருக்கு 80 சத காரணம் - ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா. அதை ஒரு வார கூட்டுமருந்து சிகிச்சையால் வெல்லலாம்.
(அல்சர் பற்றி தனித் திரி திஸ்கியில் உண்டு - தம்பி பூ கேட்டதால் வந்த திரி)

மீதி அல்சர்கள் - மாத்திரைகள் ( ஆஸ்ப்ரின் குடும்பம்), மரபு நோய்களால் வரும்


2) அமில எதிர்ப்பாய்ச்சல் ஆண்டுக்கணக்கில் நடந்தால், குழலின் உட்தோல் இயல்பு மாறிவிடும் -
எதிரியான அமிலம் எப்போதும் தாக்கினால், தற்காப்புக்கு தன்னையே மரத்தவனாக மாற்றிக்கொள்ளும்.

இயலான Squamous தோல் மாறி, columnar வகையாக மாறும்.
இதற்கு Columnar Lined Oesophagus (CLO) ;
Barrett's oesophagus எனப் பெயர்.

இது நிகழ்ந்து, பல ஆண்டுகள் சிகிச்சையின்றி ( அப்போது நெஞ்சும் அதிகம் எரியாது.. அதான் மரத்துப்போச்சே)... விட்டுவிட்டால்.............................

மிகமிக அபூர்வமாக - ஆயிரத்தில் ஒருவன் -
அது குழல் புற்றாக மாறும் அபாயம் உள்ளது..

இது மிக மிக மிக அரிதானது. அஞ்சுதல் தேவையில்லை.

CLO வந்துவிட்டதா என அறிய எண்டோஸ்கோபி தேவை.
இருந்தால் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை
எண்டோஸ்கோபி தொடர் கண்காணிப்பு - பரிந்துரை..

பூமகள்
13-08-2008, 07:00 AM
கொஞ்சமேனும் மர மண்டையில் ஏறும் எனக்கு..
முழுதும் விளங்கியது.. பாராட்டுகளும் நன்றிகளும் பெரியண்ணா. :)

எங்கள் வீட்டில் முக்கியமாக ஒருவருக்கு இப்பிரச்சனை இருந்தது.. மருத்துவரை அணுகியதில்.. வாழ்க்கை முழுக்க... Moza 5 என்ற மாத்திரையை காலையும் இரவும் சாப்பிட வேண்டுமென்று கூறிவிட்டார்..

மேலும்.. "உடலோடு வந்த நோய்... இறக்கும் வரை போகாது" என்றும் மருத்துவர் சொன்னார்.. இதைக் கேட்டதிலிருந்தே மனம் உடைந்து விட்டார்..

Moza 5 மாத்திரை இதற்கு சிறந்த மருந்தா அண்ணா?? தற்சமயம் உட்கொள்வதில்லை... எந்த காரமும் எண்ணெய் ஐட்டமும் வீட்டில் செய்த குழம்பாயினும் சாப்பிட முடிவதில்லை..

எண்டோ ஸ்கோப்பி எடுத்ததில்.. அல்சர் இல்லையென வந்தது.. அதிக அமிரச் சுரப்பு காரணமாக நெஞ்சில் வலி ஏற்படுகிறது.. தலை சுற்றல் வருகிறது.. என்ன செய்யலாம்??

பூவுக்கு எழுந்த குட்டி சந்தேகம்..

மாலையில் நொறுக்கு தீனிகளை நொறுக்குவதால் இரவில் பசியின்மை ஏற்படின் சாப்பிடாமல் உறங்கினால் அல்சர் வருமா அண்ணா??

பசித்து உண்ணுதல் தானே உடலுக்கு ஏற்றது??

பசியின்றி உண்டு உறங்கினால் எதுக்களிக்கிறதே அண்ணலே...!!

விளக்கம் ப்ளீஸ்... இங்கு பல பேசண்ட்ஸ் இருக்கிறோம்.. உங்களைத் தொல்லை கொடுக்க.. மன்னியுங்கள் பெரியண்ணா.

mania
13-08-2008, 07:11 AM
கொஞ்சமேனும் மர மண்டையில் ஏறும் எனக்கு..
முழுதும் விளங்கியது.. பாராட்டுகளும் நன்றிகளும் பெரியண்ணா. :)

எங்கள் வீட்டில் முக்கியமாக ஒருவருக்கு இப்பிரச்சனை இருந்தது.. தெளிவாக அறிந்து தொடர்பு கொள்கிறேன் அண்ணலே...!!

ஒரு சந்தேகம்..

மாலை நேர நொறுக்கு தீனிகளை நொறுக்குவதால் இரவில் பசியின்மை ஏற்படின் சாப்பிடாமல் உறங்கினால் அல்சர் வருமா அண்ணா??

பசித்து உண்ணுதல் தானே உடலுக்கு ஏற்றது??

பசியின்றி உண்டு உறங்கினால் எதுக்களிக்கிறதே அண்ணலே...!!

விளக்கம் ப்ளீஸ்... இங்கு பல பேசண்ட்ஸ் இருக்கிறோம்.. உங்களைத் தொல்லை கொடுக்க.. மன்னியுங்கள் பெரியண்ணா.


கொஞ்சம் பேஷண்ட்டா இருங்க சொல்லுவாரு.....!!!!:rolleyes::D:D
கம்பவுண்டர் மணியா:D:D

ஓவியன்
13-08-2008, 07:11 AM
குடல் புண்ணால்தான் நெஞ்செரிச்சல் வருகிறதென இத்தனை நாளும் நினைத்திருந்தேன்..!

தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா..

இத்தனை நாளும் கண்டும் கவனிக்காமலுமிருந்த நெஞ்செரிச்சலை இனிக் கவனிக்க வேண்டும்..!!

மீண்டும் நன்றி அண்ணா..!!

பூமகள்
13-08-2008, 07:14 AM
கொஞ்சம் பேஷண்ட்டா இருங்க சொல்லுவாரு.....!!!!:rolleyes::D:D
கம்பவுண்டர் மணியா:D:D
கம்பவுண்டர் சார்..
கொஞ்சம் முதல் டோக்கனை எனக்கு கொடுத்துட்டு டாக்டர் கோட்ட கழட்டுங்க முதலில்...!! :aetsch013: :p:cool: :D:D

பெரிய டாக்டர் வந்தால்... உங்களுக்கு ஊசி போட்டுடுவாரே..??!! :rolleyes: :wuerg019: :lachen001::lachen001:

praveen
13-08-2008, 08:18 AM
நல்ல திரி, எனது பல சந்தேகம் தீர்ந்தது. நான் பல நாட்கள் இதனால் சிரமப்பட்டிருக்கிறென். டாக்டரிடம் ஆலோசனை கேட்க பயம். எனவே இரவு நேரங்களில் கோதுமை தோசை + பால் இரண்டு மட்டுமே பல நாள்களுக்கு உணவு. மறந்து எப்போதவது சாப்பிட்டால் பிறகு இரவு வர தூக்கம் 2 மனிவரை ஆகி விடும்.. என்னை விட என் துனைவியார் தான் அதிகம் வருத்தப்படுவார்.

அந்த மாதிரி சமயத்தில் குளிர்ந்த நீர் அல்லது பால்(வீட்டிலே தயாரித்தது, பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு இருக்கும் பால் பாணம் அல்ல) சிறிது குடிப்பேன். பிறகு வீட்டிற்குள்ளே நடப்பேன். அந்த சமயத்தில் ஏப்பம் வராமல்(நெஞ்சுக்கிடையில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் ஒரு நொடி சுருக்கென்று வலி கொடுத்து மறையும்)வந்தும் பாடாய் படுத்தும்.

ஈனோ சாப்பிடுவதில் மாறுபட்ட கருத்து உண்டு, ஏப்பம் வராமல் நெஞ்சுக்குள்ளே இருக்கையில் அதை குடித்தால் எங்கே மூச்சு முட்டிவிடுமோ என்ற பயம் தான். மேலும் அந்த கரைசல் நீரில் கரைந்த பின்னும் அந்த கரைசலில் உள்ள சில நிறமிகள்(சாயப்பவுடர்)கரையாமல் பயமுறுத்தும்.

மொக்கைக்கு நன்றி, இளசுவின் தகவலுக்கு மிக்க நன்றி. திரி ஆரம்பித்த சுகந்தப்ரிதனுக்கு 100 இபணம்.

சுகந்தப்ரீதன்
13-08-2008, 10:08 AM
ஹ்ஹ்ஹ்ஹா!

கொஞ்சம் விபரமாக, நிதானமாக சிகிச்சை அளிக்கலாம்னு நினைத்தால் -
அதுக்குள் எரிச்சல் அதிகமாகிடுச்சு போல..:).ஹி..ஹி.. உண்மைதான் அண்ணா.. நல்லசோறு சாப்பிட்டு நாளாகி போனதால இந்த ஊருக்கு வந்தபிறகு எரிச்சல் கொஞ்சம் அதிகமாயிடுச்சி அண்ணா..!! ஆரம்பத்துல சாதாரணமா நினைச்சி விட்டுட்டேன்...ஆனா அதன்பிறகு அது அடிக்கடி என் ராத்தூக்கத்தையே களவாட ஆரம்பிச்சிட்டுது..!! மருத்துவர்கிட்ட போகலாம்ன்னா அதுக்கு நேரம் காலம் ஒத்து வரமாட்டேங்குது.. (இதுல அவுங்க வாங்குற பீசை பாத்தாலே நமக்கு பாதிபீஸ் போயிடும் போல இருக்கு...)

சரி.. இதுக்கு என்னதான் வழின்னு யோசிச்சா மன்றத்துல இருக்குற மருத்துவர்கள்தான்.. எனக்கு ஞாபகம் வந்தாங்க.. நான் திரிக்கும் போது எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனைன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப இது நிறைய பேருக்கு பயனுள்ளதா அமைஞ்சிருக்கு..!! அதுக்கு அண்ணலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இப்ப கொஞ்ச காலமா இரவுல பாலை வாங்கி குடிக்கறதால பிரச்சனை பிரச்சனியில்லாம அமைதியா இருக்குது..!! மேலதிக தகவல்களை இனிதான் நடைமுறை படுத்தோணும்ண்ணா..!!

அப்புறம் ஒரு உபகேள்வி... இந்த நெஞ்செரிச்சல் எனக்கு இடதுபக்கத்தில் மட்டும் இருந்திருக்கிறது.. வலது பக்கம் ஒருபோதும் சிறுவலியையும் நான் உணர்ந்ததில்லை.. அதற்கான காரணம் என்ன?? ஏனிந்த முரண்பாடு அண்ணா..??

வெற்றி
13-08-2008, 10:54 AM
நன்றி...இளசு அண்ணா...மிக்க நன்றி தெளிவாக விளக்கமான அனைவருக்கும் புரியும் படியான விளக்கம்...

அந்த மாதிரி சமயத்தில் குளிர்ந்த நீர் அல்லது பால்(வீட்டிலே தயாரித்தது, பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு இருக்கும் பால் பாணம் அல்ல) சிறிது குடிப்பேன். பிறகு வீட்டிற்குள்ளே நடப்பேன். அந்த சமயத்தில் ஏப்பம் வராமல்(நெஞ்சுக்கிடையில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் ஒரு நொடி சுருக்கென்று வலி கொடுத்து மறையும்)வந்தும் பாடாய் படுத்தும்.
.


ஆரம்பத்துல சாதாரணமா நினைச்சி விட்டுட்டேன்...ஆனா அதன்பிறகு அது அடிக்கடி என் ராத்தூக்கத்தையே களவாட ஆரம்பிச்சிட்டுது..!! மருத்துவர்கிட்ட போகலாம்ன்னா அதுக்கு நேரம் காலம் ஒத்து வரமாட்டேங்குது..
சரி.. இதுக்கு என்னதான் வழின்னு யோசிச்சா மன்றத்துல

இப்ப கொஞ்ச காலமா இரவுல பாலை வாங்கி குடிக்கறதால பிரச்சனை பிரச்சனியில்லாம அமைதியா இருக்குது..!!
அப்புறம் ஒரு உபகேள்வி... இந்த நெஞ்செரிச்சல் எனக்கு இடதுபக்கத்தில் மட்டும் இருந்திருக்கிறது.. வலது பக்கம் ஒருபோதும் சிறுவலியையும் நான் உணர்ந்ததில்லை.. அதற்கான காரணம் என்ன?? ஏனிந்த முரண்பாடு அண்ணா..??

ஆம் இந்த வகை பிரச்சனை இடது பக்கம் அதுவும் நெஞ்சுக்கு கீழ் தான் வரும்...
உங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான யோசனை
நீங்கள் சாப்பிடும் நேரத்தை கூட்டுங்கள்..அதாவது மெதுவாக பற்களால் அரைத்து சாப்பிடுங்கள் (பொதுவாக வேகமாக சாப்பிடுதல்..அப்படியே விழுங்குதல் தான் முதல் காரணி )
பால் சேரவில்லை எனில் தவிற்க்கப்பாருங்கள்...
கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள பொருட்கள் விரைவில் ஜீரணம் ஆகாமல் தொல்லை கொடுக்கும் (கிழங்கு வகைகள்..சில மாமிசங்கள் ) அவைகள் எது என கண்டுபிடித்து இரவில் தவிற்க்கப்பாருங்கள்...
முடிந்தால் இரவில் இட்லி சேர்த்துக்கொள்ளுங்கள் (வெந்தியம் கலந்த மாவு)...

Mano.G.
14-08-2008, 03:32 AM
இளவல் இளசுக்கு நன்றி
மருத்துவரின் மருத்துவம் செலவில்லாமல் கிடைத்தது,

ஏதோ எனக்கு தெரிந்தது,

நிலக்கரியினால் செய்யப்பட மாத்திரைகளும் உள்ளன,
இந்த மாத்திரைகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன வயிற்றில் உள்ள் அமிலதன்மையை மாற்றகூடியது.
சாப்பிட சிறிது நேரத்தில் வயிற்றில் உள்ள காற்று
இந்த மாத்திரையால் இழுக்கப்பட்டு வயிறு சுகப்படும்.

மனோ.ஜி

சுகந்தப்ரீதன்
14-08-2008, 04:54 AM
உங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான யோசனை
நீங்கள் சாப்பிடும் நேரத்தை கூட்டுங்கள்..அதாவது மெதுவாக பற்களால் அரைத்து சாப்பிடுங்கள் (பொதுவாக வேகமாக சாப்பிடுதல்..அப்படியே விழுங்குதல் தான் முதல் காரணி )...
அஞ்சு நிமிசத்துக்குள் சாப்பாட்டை முழுங்கற எனக்கு இப்பதான் புரியுது எரிச்சலுக்கான முழுக்காரணம்.. மிக்க நன்றி மொக்கைசாமியாரே..!!

மேலதிக தகவல் தந்த மனோஜ் அண்ணாவுக்கும் நன்றி..!!

இளசு
14-08-2008, 06:58 AM
Moza 5 என்ற மாத்திரையை காலையும் இரவும் சாப்பிட வேண்டுமென்று கூறிவிட்டார்..

மேலும்.. "உடலோடு வந்த நோய்... இறக்கும் வரை போகாது" என்றும் மருத்துவர் சொன்னார்.. இதைக் கேட்டதிலிருந்தே மனம் உடைந்து விட்டார்..

Moza 5 மாத்திரை இதற்கு சிறந்த மருந்தா அண்ணா??
பூவுக்கு எழுந்த குட்டி சந்தேகம்..

மாலையில் நொறுக்கு தீனிகளை நொறுக்குவதால் இரவில் பசியின்மை ஏற்படின் சாப்பிடாமல் உறங்கினால் அல்சர் வருமா அண்ணா??

பசித்து உண்ணுதல் தானே உடலுக்கு ஏற்றது??

பசியின்றி உண்டு உறங்கினால் எதுக்களிக்கிறதே அண்ணலே...!!
1) எதிர்பாயும் அமிலத்தை அடக்கி, நியூட்ரலாக மாற்றுவது - ரானிட்டிடின், PPI வகைகள். ( Acid suppressants)

உணவுக்குழாய்க்குள் பாய்ந்ததை வயிற்றுக்குள் மீண்டும் அனுப்ப உதவுவது
Cisapride, Mosapride, Domperidone (Pro-kinetics)

முதல் வகைகள் முதலில் பயன்படுத்தலாம்.
கூடுதல் நிவாரணம் தேவைப்பட்டால் இரண்டாவது வகையைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

இந்த உபாதை வந்து வந்து போகும். சிலருக்கு அடிக்கடி.. மிகச்சிலருக்கு தினமும்..

நூற்றுக்கு 15 பேருக்கு இருப்பதால் இது நோய் என்பதைவிட - ஒரு உபாதை என எண்ணி, நிவாரணம் கண்டு, கொஞ்சம் அலட்சியமாய் விடுவதே மேல்..

கவலை கொள்ளத்தக்க ஆபத்தான வியாதியன்று..

2) மாலையில் நொறுக்ஸ்.. இரவுணவுக்கு ஆப்ஸ்!
ஒன்றிருக்க ஒன்று வந்தால் இரைப்பையில் அமைதியில்லை!

ஏதாவது ஒன்றைத் தவிர்ப்பதே சரி..


கொஞ்சம் பேஷண்ட்டா இருங்க சொல்லுவாரு.....!!!!:rolleyes::D:D
கம்பவுண்டர் மணியா:D:D

அர்ச்சுனனுக்கு கண்ணபிரான் தேரோட்டி போல..ஹ்ஹ்ஹ்ஹா!:)
நன்றி மணியாபிரானே!


அந்த மாதிரி சமயத்தில் குளிர்ந்த நீர் அல்லது பால்(வீட்டிலே தயாரித்தது, பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு இருக்கும் பால் பாணம் அல்ல) சிறிது குடிப்பேன்.
ஈனோ சாப்பிடுவதில் மாறுபட்ட கருத்து உண்டு, .

நீர் அமிலத்தை நீர்க்கும்.. வலி குறைக்கும்..
ஈனோ பற்றி எனக்கும் அந்த மாற்றுக்கருத்து உண்டு.
எப்போதாவது என்றால் பரவாயில்லை!
விரைவில் முழுநிவாரணம் எட்ட வாழ்த்துகள் பிரவீண்!ஆம் இந்த வகை பிரச்சனை இடது பக்கம் அதுவும் நெஞ்சுக்கு கீழ் தான் வரும்...

உணவுக்குழல் சற்றே இடது பக்கமாய் இறங்கித்தான் இரைப்பையுடன் இணைகிறது...எனவே இடப்பக்கமாய் அறிகுறிகள் உணரப்படுகின்றன..

சிலருக்கு ஒருபக்கம் ஒருக்களித்துப் படுத்தால் மட்டுமே தொல்லை வரும்..நிலக்கரியினால் செய்யப்பட மாத்திரைகளும் உள்ளன,
இந்த மாத்திரைகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன வயிற்றில் உள்ள் அமிலதன்மையை மாற்றகூடியது.
சாப்பிட சிறிது நேரத்தில் வயிற்றில் உள்ள காற்று
இந்த மாத்திரையால் இழுக்கப்பட்டு வயிறு சுகப்படும்.


Charcoal tablets - are good adsorbents.
அதிக பக்க விளைவு இல்லாத நிவாரணி.
கூடுதல் தகவல் தந்த என் முன்னோடிக்கு நன்றி..

செல்வா
14-08-2008, 08:29 AM
மன்றம் ஒரு கலைக் களஞ்சியம் என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தும் திரி. துவங்கிய சுகந்தனுக்கும் நல்ல பல தகவல்கள் பகிர்ந்த இளசு அண்ணா மொக்கச்சாமி அண்ணா பிரவீன் அண்ணா மற்றும் மனோ அண்ணாவுக்கு நன்றிகள்.

அறிஞர்
18-08-2008, 04:18 PM
நன்றி இளசு.. பலருக்கு உபயோகமான தகவல்கள்.. வயதான சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருப்பதாக கேள்விபட்டேன்.

ஓவியன்
19-08-2008, 06:33 AM
வயதான சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருப்பதாக கேள்விபட்டேன்.

:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

Mano.G.
19-08-2008, 08:02 AM
நன்றி இளசு.. பலருக்கு உபயோகமான தகவல்கள்.. வயதான சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருப்பதாக கேள்விபட்டேன்.

என்னையும் சேர்த்துதான்,
எனக்கும் இந்த ப்ரச்சனை உள்ளது.

மனோ.ஜி

vseenu
26-09-2011, 09:12 AM
பயனுள்ள தகவல்கள் பல கிடைத்தன.மிக்க நன்றி.

jaffer
04-10-2011, 10:02 AM
அடேங்கப்பா...விரிவான அலசல்......ஏகப்பட்ட தகவல், பிரிண்ட் எடுத்துடோம்லே....அனைவருக்கும் நன்றி

sujeendran
04-10-2011, 04:48 PM
அருமை பகிர்வுக்கு நன்றி