PDA

View Full Version : ஓலிம்பிக் : இந்தியாவிற்கு முதல் தங்கம்!!!!



தாமரை
11-08-2008, 07:03 AM
இந்தியாவைச் சேர்ந்த அபினவ் பிந்தரா 10மீ பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வாங்கி, ஒலிம்பிக் போட்டியில் தனி நபராய் முதல் தங்கம் வாங்கிச் சாதனைப் புரிந்துள்ளார்.

வாழ்த்துங்க.

http://www.rediff.com/sports/2008/aug/11bindra.htm

ராஜா
11-08-2008, 07:12 AM
வாழ்த்துகள் அபினவ் பிந்த்ரா..!

2002 ல் கேல் ரத்னா விருது பெற்ற பிந்த்ரா மிகவும் கடினமான போட்டியில் இந்திய* வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் தங்கம் வென்றிருக்கிறார்.

மற்ற இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தியிருக்கிறார்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-08-2008, 07:20 AM
அபினவால் இந்தியா தலை நிமிர்ந்திருக்கிறது.

ராஜா
11-08-2008, 07:21 AM
ஒலிம்பிக்கில் இந்தியாவை தலைநிமிர வைத்த, தங்கமகன் அபினவ் பிந்த்ரா..!
http://www.wowmails.com/wow.gif
http://cache.viewimages.com/xc/57111377.jpg?v=1&c=ViewImages&k=2&d=17A4AD9FDB9CF193CC300C081D9F47000605AD9FEF7BFB91A8D727435BE1B46CA55A1E4F32AD3138


இவரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த ஃபின்லாந்து வீரர் ஹொக்கினென் 10 மீ சுடுதலில் உலகச்சாதனையை கைவசம் வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

அமரன்
11-08-2008, 07:22 AM
வாழ்த்துகள் சாதனை நாயகருக்கு. வெற்றித் தொடர் நீளட்டும்

ஆதி
11-08-2008, 07:23 AM
வாழ்த்து திரி தொடங்கலாம் னு வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க.. 1980 அப்பறம் கிடைத்திருக்கும் தங்கம்.. வாழ்த்துக்கள் வென்று தந்த அபினவ் பிந்த்ராக்கு..

விடுதலை திருநாள் நெருங்கம் சமயத்தில் இந்தியாவுக்கு கிடைத்த விருது இது..

(rajatemp அவர்களே ஓடியாங்க உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கு) :D

தீபா
11-08-2008, 07:27 AM
ஆஹா!!! இன்ப அதிர்ச்சி.... ஆரம்பத்திலேயே!!!!! இன்னும் வருமா? விழி வைத்துக் காத்திருக்கிறேன்..

சுகந்தப்ரீதன்
11-08-2008, 08:08 AM
நீண்ட பெருமூச்சு விட்டுக்கொள்ளனும் போல இருக்கு அபினவ் பிந்த்ராவோட வெற்றியைக்கண்டு..!! ரொம்ப நாளாச்சில்ல ஒலிம்பிக்ல தங்கத்தை வாங்கி.. அதாங்க வேறொன்னுமில்லை..!!

தனியாளாய் தங்கம் வாங்கி தாயகத்திற்க்கு பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள்..!! இது தொடக்கம்.. இனியும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடரட்டும்..!!

ராஜா
11-08-2008, 08:11 AM
அபினவ் பிந்த்ரா, 2006 உலக வாகையர் பட்டம் வென்றவர்.

கடந்த (ஏதென்ஸ்) ஒலிம்பிக்ஸில் ஏழாவது இடத்தையே பெறமுடிந்த அபினவின் தற்போதைய வெற்றி மயிர்க்கூச்செரியும் விதத்தில் அமைந்திருக்கிறது.

தகுதிச் சுற்றில் அபினவ் நான்காவது இடத்தையே பெற்றிருந்தார்..இறுதி அடிக்கு முன்புவரை ஹாக்கினென் கையே ஓங்கியிருந்தது. தனது இறுதி அடியில், ஹாக்கினென் மிகச் சாதாரணமான சுடுதல் மூலம் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

அடுத்து அடிக்க வந்த நம் அபினவ், ஒரு முழுமையான சுடுதல் மூலம் 9.7 புள்ளிகள் பெற்றார். தற்போது, இரண்டாம் இடம் பிடித்திருக்கும் சீன வீரர், ஜூ, 10.9 புள்ளிகள் பெற்றால் முன்னிலை பெற்றுவிடலாம் என்ற
நிலையில் சுட வந்தார். 2004 ஒலிம்பிக் முதலே இப்பிரிவில் தங்கம் வெல்லவேண்டும் என்ற முயற்சியில், கடும் பயிற்சி எடுத்திருந்த ஜூ, தேவைப்படும் புள்ளிகளை குவிக்கமுடியாமல் போக...

மிகுதிக் கதை தற்போது உலகம் அறிந்ததே..!

செய்தியாளர் கூட்டத்தில் பதக்கர்கள் பகர்ந்தது...


அபினவ் : நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விவரிக்க இயலவில்லை.

ஜூ : ( பெரும் கதறல்களுக்கு இடையே..) என் தாயகத்தில் தங்கம் வெல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிட்டது. நான் இறுதியாக சுட வந்தபோது பெரும் அழுத்தத்தில் இருந்தேன்.

ஹாக்கினென் : முதலில் இருந்து கடைசிவரை முன்னணியில் இருந்தால்தான் தங்கம் கிடைக்கும். இன்று எனக்கான நாள் அல்ல.

இதயம்
11-08-2008, 08:15 AM
இனிப்பான செய்தி..!! பல வருடங்களுக்கு பிறகு தனி நபராக பிந்த்ரா தங்கம் வாங்கி நம் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். இந்த வெற்றி இன்னும் தொடர வேண்டும் என்பதே நம் விருப்பம்.!!

ஓவியன்
11-08-2008, 08:17 AM
தங்கத்தைச் சுட்டு வீழ்த்திய அபினவ்விற்கு என் வாழ்த்துக்களும்..!! :)

மதி
11-08-2008, 08:33 AM
வாழ்த்துகள் அபினவ்....
நீண்ட நாள் கழித்து பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்..

அகத்தியன்
11-08-2008, 08:43 AM
http://img04.beijing2008.cn/20080811/Img214528417.jpg

http://img09.beijing2008.cn/20080811/Img214528391.jpg

வாழ்த்துகள் அபினவ்

mania
11-08-2008, 08:53 AM
பாராட்டுகளும் வாழ்த்துகளும்......என்ன ஒரு சாதனை....
அன்புடன்
மணியா

Mano.G.
11-08-2008, 08:58 AM
வாழ்த்துக்கள், 10மிட்டர் குறி சுடும் போட்டியில் 700.5 புள்ளிகளை
எடுத்து வாகை சுடிய அபினவ் பிந்த்ராவுக்கு
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

செல்வா
11-08-2008, 09:17 AM
ஆஹா... அருமை.... முதல் தங்கம். வாழ்த்துக்கள் அபினவ்.

அமரன்
11-08-2008, 09:24 AM
ஆஹா... அருமை.... முதல் தங்கம். வாழ்த்துக்கள் அபினவ்.

நீ பார்த்திட்டியா தங்கத்தை.. படம் பிடித்து எனக்கும் அனுப்பி வைடா..

நண்பன்,


ஆஹா!!! இன்ப அதிர்ச்சி.... ஆரம்பத்திலேயே!!!!! இன்னும் வருமா? விழி வைத்துக் காத்திருக்கிறேன்..

கண்வைத்த தென்றலுக்கு என் கண்டனங்கள்..:)

சிவா.ஜி
11-08-2008, 10:24 AM
ஓ.....இதுதான் தங்கப் பதக்கமா....? என்று இந்திய மக்களை 28 வருடங்களுக்குப் பிறகு ஓடிவந்து பார்க்க வைத்த சாதனையாளர் அபிநவ்வுக்கு வாழ்த்துகள்.

மறத்தமிழன்
11-08-2008, 10:32 AM
வாழ்த்துக்கள். முதல் தங்க பதக்கத்தின் வரலாற்றையும் இந்திய நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் நானும் தெரிந்து கொள்வேனே...!

Narathar
11-08-2008, 11:36 AM
கிரிக்கட்டில் இலங்கை வெல்லப்போகின்றது என்று தெரிந்தும் அதைப்பார்க்காமல் டி டியில் அபினவின் விளையாட்டைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.......

அவர் தங்கம் வென்ற போது எங்கள் நாடே தங்கம் வென்றதைப்போல் சந்தோஷப்பட்டேன்........

இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்

shibly591
11-08-2008, 11:43 AM
ஒலிம்பிக்கில் இந்தியாவை தலைநிமிர வைத்த, தங்கமகன் அபினவ் பிந்த்ரா..!
http://www.wowmails.com/wow.gif
http://cache.viewimages.com/xc/57111377.jpg?v=1&c=ViewImages&k=2&d=17A4AD9FDB9CF193CC300C081D9F47000605AD9FEF7BFB91A8D727435BE1B46CA55A1E4F32AD3138


இவரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த ஃபின்லாந்து வீரர் ஹொக்கினென் 10 மீ சுடுதலில் உலகச்சாதனையை கைவசம் வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

வாழ்த்துக்கள்

இளசு
11-08-2008, 12:03 PM
இன்ப அதிர்ச்சி.. பேச்சே வரவில்லை!

வாழ்த்துகள் அபிநவ் பிந்த்ராவுக்கு..

வெற்றியைப்போல் வெற்றியைத் தொடர்வது வேறில்லை..

இன்னும் இன்னும் வெற்றிகள் குவியட்டும்..

சுட்டிபையன்
11-08-2008, 12:16 PM
110 கோடி மக்களுக்கு புகழ் சேர்த்த வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள்

mukilan
11-08-2008, 12:18 PM
அபினவ்-வின் வெற்றியால் நானும் பெருமை கொள்கிறேன்.

இளசு
11-08-2008, 12:19 PM
வாராது வந்த சுட்டிபையனுக்கு வரவேற்புகள்..

சுட்டிபையன்
11-08-2008, 12:25 PM
நன்றி அண்ணா, நானும் ஒலிம்பிக்கில ஒரு தங்கம் வாங்கலம்னு பாக்குறேன்.....

பூமகள்
11-08-2008, 01:42 PM
மனம் குதியாட்டம் போடுகிறது..!!
அபினவ் பிந்த்ரா
இந்தியாவின் பொக்கிசம்..!!

அறிஞர்
11-08-2008, 01:45 PM
இந்தியாவிற்கு.. தனி நபர் சாதனை.. வியக்க வைக்கிறது...

வாழ்த்துக்கள்.. அபினவ்.. பிந்தரா...

அறிஞர்
11-08-2008, 02:20 PM
http://www.youtube.com/watch?v=8GT42jMdgZo

உதயசூரியன்
11-08-2008, 02:26 PM
கிரிக்கட்டில் இலங்கை வெல்லப்போகின்றது என்று தெரிந்தும் அதைப்பார்க்காமல் டி டியில் அபினவின் விளையாட்டைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.......

அவர் தங்கம் வென்ற போது எங்கள் நாடே தங்கம் வென்றதைப்போல் சந்தோஷப்பட்டேன்........

இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்

இதென்ன குசும்பு..
இலங்கை வெற்றி பெறும் போது.. இந்தியர்கள் அதை பார்க்காமல் ..??
எங்கோ கொஞ்சம் இடிக்கிறதே...


நூறு கோடி பேர் உள்ள நாட்டினில்.. ஒரு தங்கம் கூடவா இல்லை என்று கேள்வி கேட்டவருக்கிடையில்.. பதில் சொல்ல வைத்த அபினவ்விற்க்கு வாழ்த்துக்கள்..
அபினவ்வால் இந்தியாவிற்கு பெருமை..

ஒரே ஒரு ஆட்டத்திற்கு மட்டுமே.. பணம் செலவு செய்யும் இந்தியாவிற்கும்.. இன்னும் பல விளையாட்டு பண முதலைகளுக்கும்.. புரியட்டும்..

கிரிக்கெட் என்னும் மாயை மட்டுமே உலகம் என்பதில் இருந்து வெளி வருவோம்..(என்னையும் சேர்த்து தான்)

விளையாட்டினில் அனைத்து பிரிவினிலும் சாதனை படையுங்கள் இளைஞர்களே..

ஆனாலும்.. ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது எப்போதும்.. துப்பாக்கி சுடுவதில் தான் நடக்கிறது...

இனியாவது.. அனைத்து தடகள விளையாட்டிலும் பரவட்டும்..


ஒலிம்பிக்கில்.. தங்கம்..
கிரிக்கட்டில்.. சாபம்..
மக்களும்.. ஒரு துறைக்கு மட்டும் ஆதரவளிப்பதை நிறுத்தினால் தான்..
கிரிக்கெட் வீரர்கள் ஒழுங்காக ஆடுவார்கள்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மன்மதன்
11-08-2008, 03:06 PM
மனம் மகிழ்ச்சி அடைந்தது..
இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் எட்டாகனியாக இருந்தது..
பாராட்டுகள் அபினவ்..
அனைவருக்கும் வாழ்த்துகள்...!!

சூரியன்
11-08-2008, 03:22 PM
உலகஅரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்த வெற்றி நாயகருக்கு வாழ்த்துக்கள்.

rajatemp
11-08-2008, 04:41 PM
வாழ்த்துக்கள் அபினவ்

சுடும் போட்டியில் தங்கத்தை சுட்டுவிட்டார்
இம்முறையாவது சரியாக சுட்டதிற்கு வாழ்த்துக்கள்

ஃபின்லாந்து வீரர் ஹொக்கினென் இந்தியர்தானே என்று சாதாரணமாய் சுட்டுவிட்டார் போலும்

எனினும் வாழ்த்துக்கள் அபினவ் வாழ்த்துக்கள்

ஓவியா
11-08-2008, 05:00 PM
ஃபின்லாந்து வீரர் ஹொக்கினென் இந்தியர்தானே என்று சாதாரணமாய் சுட்டுவிட்டார் போலும்




இல்லை இல்லை

நான் நினைக்கிறேன் ஃபின்லாந்து வீர ஹொக்கினென், அய்ய்க்கோ இந்தியா/இந்தியருடன் போட்டியா என்று பயந்து நடுங்கி சரியாக சுடாமல் பதக்கத்தை இழந்துவிட்டார் போலும்.

சாதனை வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு என் பாராட்டுக்கள்.

சுஜா
11-08-2008, 05:33 PM
அபினவ்.. பிந்தரா... ராவிற்கு எனது வாழ்த்துகள்

arun
11-08-2008, 06:18 PM
தனி பிரிவில் தங்கம் வாங்கி தந்து இந்தியாவை தலை நிமிர வைத்த அபினவுக்கு பாராட்டுக்கள்

சாலைஜெயராமன்
11-08-2008, 06:26 PM
அன்னை தேசத்தின் பெருமையை மீண்டும் உலகிற்கு அறிவித்த இந்தியனு(ரு)க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

காலத்தே நினைவுக்கு கொணர்ந்த திரு தாமரைக்கும் பாராட்டுக்கள்

மதுரகன்
12-08-2008, 06:23 PM
மிகவும் பெருமைக்குரிய விடயம் வாழ்த்துக்கள்..
அபினவ்..

அறிஞர்
13-08-2008, 03:45 PM
ஒலிம்பிக்கால் ஓயாமல் கோடி மழை! ‘தங்க மகன்’ அபிநவ் பிந்த்ரா விளம்பர மார்க்கெட் எகிறுது

புதுடெல்லி, ஆக. 13: ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து, அவரது விளம்பர மார்க்கெட் எகிறியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளன.

அபிநவ் பிந்த்ரா ஏற்கெனவே பண மழையில் நனைந்து கொண¢டு இருக்கிறார். மாநில அரசுகள் தரும் பரிசுத் தொகை மட்டுமே ரூ.1.4 கோடியை தாண்டிவிட்டது. கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் தருகிறது. ரயிலில் ஆயுள் முழுக்க பயணம் செய்யலாம் என அமைச்சர் லாலு அறிவித்து உள்ளார். இப்படி ஒரே நாளில் நாடறிந்த நாயகனாகி விட்டார் அபிநவ்.

இதையடுத்து அவரை தங்கள் விளம்பரத்தில் நடிக்க வைக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. கோக கோலா, ஹீரோ ஹோண்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள் அபிநவ் பிந்த்ராவை வளைக்க திட்டமிட்டு உள்ளன. பெப்சியும் இதில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சாம்சங், சகாரா நிறுவனத்துடன் அபிநவ் பிந்த்ராவுக¢கு விளம்பர ஒப்பந்தம் உள்ளது. இப்போதைய நிலவரப்படி, ஒரு விளம்பரத்துக்கு ரூ.2 கோடி வரை அபிநவ் பிந்த்ராவுக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் ஒரு நிபுணர்.

ஆனால் இத்தனை வாய்ப்புகளையும் அபிநவ் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொருத்தே எதிர்காலம் இருக்கிறது. அபிநவ் ஏற்கெனவே கோடீஸ்வரர். இவரது தந்தை அபிஜித் சிங் பிந்த்ரா ரூ.300 கோடியில் ஹைடெக் குழுமத்தை நடத்தி வருகிறார்.

அபிநவ் பெயரில் சண்டிகரில் ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதில் ஒலிம்பியன் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிட்டு உள்ளனர். ரூ.200 கோடியில் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து அந்த ஓட்டல் கட்டப்பட உள்ளது.
-நன்றி-தினகரன்

அக்னி
15-08-2008, 07:23 PM
தனிநபராக இந்திய தேசத்திற்குத் தக்கம் வென்று தந்த
அபிநவ் பிந்த்ரா அவர்களுக்கு,
வாழ்த்துகள்... வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
எமக்குள்ளிருந்து ஒருவர் தந்த வெற்றியாக, மகிழ்கிறது உணர்வு...

அறிஞர்
15-08-2008, 07:50 PM
ஜனாதிபதி, பிரதமர்.. மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்...

rajatemp
18-08-2008, 05:24 PM
இது இந்தியாவின் வெற்றியல்ல

ஒரு பணக்கார இளைஞனின் தனி வெற்றி

அபினவின் மற்றொரு சாதனை அவர் 7 வயதிலேயே வேலைக்காரியின் தலையில் பாட்டிலை வைத்து துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்துள்ளார்.

- ஞானி (குமுதத்திலிருந்து)

வேலைக்காரியின் உயிர் அந்த பாட்டிலை விட மலிவு போலும்

ஆதி
20-08-2008, 10:42 AM
மல் யுத்தத்தில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிட்டியுள்ளது.. வெங்கலப் பதக்கம் வென்ற சுசீல் குமாருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

சுகந்தப்ரீதன்
20-08-2008, 11:42 AM
ஒன்று இரண்டானதில் ஒருவித சந்தோசம் எமக்கு..!! எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடினால் நன்றாயிருக்கும் நமக்கு..!! சுசீல் குமாருக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துக்கள்..!! தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஆதி..!!

மதி
20-08-2008, 11:51 AM
சுசீல் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தீபா
20-08-2008, 12:46 PM
அடடே!!! இம்முறை இரண்டா??? இன்னும் இருக்கா???

வாழ்த்துக்கள்:..

ஆதி
20-08-2008, 04:29 PM
மற்றொருப் பதக்கமும் உறுதியாகிவிட்டது இந்தியாவுக்கு குத்து சண்டை மூலம்.. நாளை அது என்னப் பதக்கம் என்று தெரிந்து விடும்.. ( காந்தி தேசத்திற்கு ஆயுதத்தாலும் அடிதடியாலும் தான் பதக்கம் கிடைக்கிறது... ;) )

arun
20-08-2008, 05:41 PM
மல்யுத்ததில் வெண்கலம் வென்றுள்ள நமது வீரருக்கு எனது வாழ்த்துக்கள்

குத்து சண்டையிலும் பதக்கம் உறுதி ஆகி உள்ளது

இந்த முறை நாம் ஏதோ ஓரளவுக்கு சாதித்து காட்டி இருக்கிறோம்

ஜெய்கிந்த்

arun
20-08-2008, 05:41 PM
மற்றொருப் பதக்கமும் உறுதியாகிவிட்டது இந்தியாவுக்கு குத்து சண்டை மூலம்.. நாளை அது என்னப் பதக்கம் என்று தெரிந்து விடும்.. ( காந்தி தேசத்திற்கு ஆயுதத்தாலும் அடிதடியாலும் தான் பதக்கம் கிடைக்கிறது... ;) )

ஏதோ பதக்கம் ஒன்று கிடைத்தால் சரி :D