PDA

View Full Version : சின்ன சின்ன கவிதைகள் 4



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-08-2008, 07:02 AM
தாழ்ந்து நிற்கும்

தராசுத் தட்டுக்களே

மதிப்பில்

கூடி நிற்கின்றன.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

அமரன்
11-08-2008, 07:32 AM
இதே பொருள் படப் பழைய பாடல் ஒன்று உள்ளதாக நினைவு.

ஒரே தாழ்வில் இருக்கும்
பொருட்களின் மதிப்பிலும்
ஏற்றத்தாழ்வு.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-08-2008, 11:29 AM
மிக்க நன்றி அமரன் உங்கள் தகவலுக்கு.

இளசு
11-08-2008, 12:11 PM
நல்லதொரு முரண்காட்சிப்பா..

இருவரியில் குறுகிய குறளில்
பொதி அளவில் பொருள்...

அதைப்போல வீரிய கருத்துகள் வீசும்
சின்ன சின்னக் கத்திப் பாடல்கள்..

வாழ்த்துகள் ஜூனத்!

பூமகள்
11-08-2008, 01:22 PM
அடக்கம் காத்தால்
இடுக்கண் இல்லை..!

அமைதி காப்பதால்
அடிமை இல்லை..!

பணிந்து போவதால்
பாதகம் இல்லை..!

குனிந்த நெற்பயிர் தான்
நிறைந்த நெல் தரும்..!

நாணும் கரைப்புல் தான்..
குளிர்ந்த நீர் தொடும்...!

அன்பில் பணிந்தால்
பண்பில் நிமிரலாம்..!!

நறுக் என்று நெஞ்சைச் சுட்டது கவிதை..!!
மனமார்ந்த பாராட்டுகள் ஜுனைத் அவர்களே..!!

இதயம்
11-08-2008, 01:28 PM
தன்னை தாழ்த்துவதால் தரம் குறைவதில்லை என்ற உயர்ந்த நீதியை தராசை கொண்டு தந்து, எங்கள் மனதில் உயர்ந்துவிட்டீர்கள். இதை கொண்டே மனிதரை எடை போடும் யுக்தியை கற்க முடிந்தது. நன்றி ஜுனைத்..!!

சிவா.ஜி
11-08-2008, 02:29 PM
ஈஸ்வரனின் துளிப்பாக்கள்
"தாழும்போது
கூடுகிறது மதிப்பு
தராசுத் தட்டில்"

ஒத்த சிந்தனை. வாழ்த்துகள்.

அறிஞர்
11-08-2008, 02:34 PM
தன்னை தாழ்த்திக்கொள்வதால்...
நிலை/மதிப்பு உயர்கிறது.......

அருமை... சுனைத்

நாகரா
11-08-2008, 02:55 PM
தாழ்ந்து நிற்கும்

தராசுத் தட்டுக்களே

மதிப்பில்

கூடி நிற்கின்றன.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

கடவுள் தாழ்ந்து
தானே மனிதமாகி
மதிப்பில் கூடி நிற்பதால்
சாதி மத இன நிற பேதம் விட்டு
மனித நேய ஒருமையை
உயிரெனப் போற்றுதல்
உன் கடன்

குறுங்கவி அருமை, வாழ்த்துக்கள் ஹஸனீ.

தீபா
11-08-2008, 05:49 PM
தாழ்ந்து நிற்கும்

தராசுத் தட்டுக்களே

மதிப்பில்

கூடி நிற்கின்றன.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

நல்ல கவிதை ஜுனைத்.

எப்போதும் இப்படித்தான்... ஆனால் இப்படியே எப்போதும் இருக்கமுடியாது.

தாழ்வு வேண்டுமென்பதற்காக, தொட்டதுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை இருந்தால்????

தராசுத் தட்டுக்களில் பொருள் இல்லையென்றால் அதற்கு மதிப்பே இல்லை. அவை மதிப்பில் கூட பொருட்களும் வேண்டுமல்லவா?

அன்புடன்
தென்றல்

சிவா.ஜி
11-08-2008, 07:30 PM
இதேக் கருத்தை எத்தனையோ நாட்களுக்கு முன் அளித்த ஈஸ்வரனின் கவிதைக்கு இதைப்போன்ற பின்னூட்டங்களே இல்லையே.....?

அமரன்
11-08-2008, 09:32 PM
இதேக் கருத்தை எத்தனையோ நாட்களுக்கு முன் அளித்த ஈஸ்வரனின் கவிதைக்கு இதைப்போன்ற பின்னூட்டங்களே இல்லையே.....?
பதிவுக்கடலில் பல முத்துகளில் புதைந்து விட பல முத்துகள் பதிவலையில் சிக்கி பார்வைக்கு தெரிகின்றன. கடலின் ஆழத்துக்குச் செல்ல எல்லாருக்கும் நேரம் கிடைப்பதில்லையே.. கிடைத்தால் நமது மக்கள் முத்துக்குளிக்காதிருப்பார்களா..