PDA

View Full Version : ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்...poo
04-04-2003, 05:08 PM
கணிணிப் பித்தனே...
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..

முறையாய் ஒட்டப்பட்ட
உன் ஒற்றைவரி மடல் வராதாவென
வழியில் விழி கொண்டு
தபால்காரருக்கு ஏங்கிய சுகம்
இண்டர்நெட்டின் இ-மெயிலில் இல்லை...

கம்ப்யூட்டர்தானே நவீனமாய்..
காதலுமா??!!..

புறாக்கள் விடும் தூதை இரசித்தேன்..
யாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை..

இயற்கை வயல்வெளியில்
மாராப்பு மடிப்பில் மறைத்து
மறுபடியும் மறுபடியும் படித்து
இனித்த சுகம்...

இயந்திர இ-மெயிலில் இல்லை..

கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது..
காதலையுமா?!!!

தென்னை ஓலையில்
பொக்கே செய்து..
செட்டி தோட்டத்து ரோஜாப்பூவை
ஒட்டி வைத்து தந்ததை
ஆற்று சத்தத்தில்
பார்த்து ரசித்த சுகம்....

இ-கார்டு என இம்சையாய்
சத்தமெழுப்புகையில் இல்லை...

என் இதயக் காதலனே..
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்..
இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா...

இளசு
04-04-2003, 05:19 PM
அருகி அரிதாகி
கருகி காணாமலே போகக்கூடும்
கள்ளமற்ற கிராமக்காதல்
(Endangered Species)
காப்பாற்ற நாதியென்ன?
சிட்டுவின் கேள்விக்கு பதில் என்ன..????

rambal
05-04-2003, 10:40 AM
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
என்ன இன்னும் எசப்பாட்டு யாரும் பாடலியா?

மன்மதன்
23-11-2004, 02:59 PM
ஆகா... கவிஞர் பூ இப்போ எங்கேப்பா???
அன்புடன்
மன்மதன்

அமரன்
05-10-2007, 06:20 PM
நவீனம், இயந்திரமயம், கணினி நயம் காதலை விடுத்து தெள்ளிய ஓடை, தென்னங்கீற்று தென்றலின் கீதம், தலைகவிழ்த்த நெல்லுவயலோரம் தலை கவிழ்த்து நடக்கும் காதலியை தீண்டிச் சீண்டும் வரப்பு, குலசாமி கோயில் மரங்களின் உதவியுடன் ஆடும் கண்ணாமூச்சி, வெண்ணிற காகிதத்தில் நவரத்தினங்கள் பொதித்து வர களவாடும் தோரணையுடன் உட்கொள்ளும் பாங்கு என வளரும் காதலை நினைந்து உருகும் மனது, பூ அண்ணாவையும் தேடி.....

இனியவள்
05-10-2007, 06:26 PM
அழகான கவிதை
கிராம வாசம் வீசி
எங்களையும் அந்த
வாசத்தில் திளைக்க
வைத்தது

வாழ்த்துக்கள் பூ அண்ணா


இ-மெயிலில் ஒரு விஷேசம் உண்டு

பெற்றோர்களால் படிக்க முடியாது
அதனாலை அடிவாங்கிறது மிச்சம் :icon_rollout:

யாழ்_அகத்தியன்
06-10-2007, 08:48 AM
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
06-10-2007, 08:55 AM
ரம்மியமான அந்த கள்ளமற்ற காதலை நினைத்து மனது ஏங்குகிறது. என்னதான் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,கடுதாசிக்கு இணையாகுமா..?
அதை எப்படியெல்லாம் படித்து மகிழ்கிறாள் அந்த காதலி....அந்த சந்தோஷம் இ-மெயிலில் வருமா..? தென்னங்கீற்றின் பூங்கொத்து தரும் சுகத்தை இ-கார்டு கொடுத்திடுமா....உள்ளத்தை வருடும் அற்புதக் கவிதை..அனைவரோடு சேர்ந்து நானும் 'பூ'அவர்களைத் தேடுகிறேன்...எப்போது மீண்டும் மலருமென்று.

தென்னவன்
06-10-2007, 10:13 AM
இயற்கை வயல்வெளியில்
மாராப்பு மடிப்பில் மறைத்து
மறுபடியும் மறுபடியும் படித்து
இனித்த சுகம்...

இயந்திர இ-மெயிலில் இல்லை..

அருமையான வரிகள் பூ..
கிராமத்து காதலை கண் முன்னே நிறுத்தியது உங்கள் வரிகள்!!!
அருமை!!!!::lachen001::lachen001: