PDA

View Full Version : பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்குந்தான்...!!!!தீபன்
10-08-2008, 05:11 PM
(மின்னஞ்சலில் வந்த வன்னி நிலவரம் பற்றிய ஒரு துணுக்கு. உரையாடலில் வரும் பல சொற்கள் வன்னி களமுனைகளில் போராளிகள் பயன்படுத்தும் அவர்களது சொந்த தயாரிப்பான குண்டுகளிற்கான பெயர்கள்.)

முகம் மலர்ந்து தன் குழந்தையுடன்
வாசலில் கதலி வாழை...
வந்தோரை வரவேற்கும் கும்பம்...
சந்தனம் குங்குமம் கற்கண்டு...
மங்களகரமாய் ஒலிக்கும்
மேளமும் நாதஸ்வரமும்...
புன்னகையுடன் உற்றார் உறவினர்...
சுபமுகூர்த்தத்தில் தாலி மணமளின் கழுத்தில் ஏறியது!

தென்றலின் வருடல் மார்கழி இரவின்
குளிரை நினைவு படுத்த,
தோழிகளின் கிண்டல்களுடன்
முதலிரவு அறைக்குள்ளே
நுழைந்தாள் மண்மகள்!
பல எதிர்பார்ப்புகளுடன் மாப்பிள்ளை!

பால் செம்பை வைத்து விட்டு
மணமகனின் கால்களில் பணிந்தாள்.
ஆசீர்வதித்து தூக்கி விடுவதற்காக
குனிந்தான் மணமகன்..!

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹலொ "கிலோ ஸீரா பேஸ் சாளி ஓவர்"
அருகில் இருந்த தொலைதொடர்புகருவி அலறியது...!
ஓடி சென்று எடுத்தாள்,
"சாளி ஓவர் சொலுங்கோ ஓவர்."
"அக்கா ஆமி மூவ் எடுக்க போறான் போல
உடன ரீமை அனுபுங்கோ ஓவர்."
"அங்கே என்ன நடக்குது எண்டு லீமாக்கு
தெரியபடுத்துங்கோ ஓவர்."
"அக்கா இங்கே இப்ப உடனே 15 பெட்டி சமாதானமும்
5 ஆமையும் வேணும் ஓவர்."
"நீங்க அவன் வாற ரூட்டில பொன்னம்மானையும்
ராகவனையும் zig zag model இல வையுங்க ஓவர்"
"பின்னுக்கு போய் உங்கட கட் அவுட் ஜி பி ஸ் குடுங்கோ ஓவர்."
நீண்டுகொண்டே போனது உரையாடல்...
முதலிரவு அறை கட்டளைபீடமானது...
மணமகன் ................:eek:!

இப்போ வன்னியில் காத்திருப்பு
பெண்ணுக்கில்லை ஆண்களுக்கும்தான் !!!!!!!!!!!!!!!

tamilambu
11-08-2008, 05:58 AM
தற்போதைய வன்னி நிலவரத்தினை அப்பட்டமாக காட்டும் ஆக்கம் இது.

காலம் காலமாக ஆண்கள் போர்க்களத்திற்கு செல்வதும் பெண்கள் காத்திருப்பதுமே வரலாறு.

அவற்றினை தாண்டி, பெண் போராளிகள் சமராடுவது ஈழத்து களமுனைகளில் சதாரணமானது.

மனதை நெருடும் ஆக்கம், எமக்கு தந்த தீபனுக்கு நன்றி.

தீபன்
11-08-2008, 11:15 AM
பார்ப்பாரில்லாவிடினும்.... கேட்பாரில்லாவிடினும் என் இனத்துக்கான என் முயற்சிகளில் இதுவும் ஒன்று.... பலனை எதிர்பார்த்தல்ல... எம் பங்களிப்பை எதிர்பார்த்து....
அவ்வளவுதான்...!

விகடன்
11-08-2008, 12:14 PM
ஓவராயே போய்விட்ட முதலிரவு.....

பகிர்விற்கு நன்றி தீபன்

Narathar
11-08-2008, 12:19 PM
தீபன் அனுபவித்து எழுதியுள்ளீர்கள்....................
வாழ்த்துக்கள்

இளசு
11-08-2008, 01:09 PM
இப்படி ஒரு நிலை நம் இனத்துக்கு அமைந்ததை எண்ணி குமைந்த நிலை..இவையே எம் நிலை..

மௌனங்கள் எல்லாமே உதாசீனங்கள் அல்ல..

கையறு நிலையின் வெளிப்பாடுகளாகவும் இருக்கலாம்...

தீபன்
11-08-2008, 01:26 PM
புரிகிறது இளசு அண்ணலே. அதனால்தான் நானும் அப்படி சொன்னேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

அமரன்
11-08-2008, 02:13 PM
இப்படி ஒரு நிலை நம் இனத்துக்கு அமைந்ததை எண்ணி குமைந்த நிலை..இவையே எம் நிலை..
மௌனங்கள் எல்லாமே உதாசீனங்கள் அல்ல..
கையறு நிலையின் வெளிப்பாடுகளாகவும் இருக்கலாம்...
அதே அதே...

கவிதையின் தலைப்பு பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்குந்தான் என்று இருந்தால் கனம் கூடுமே..

தீபன்
11-08-2008, 03:13 PM
நன்றி அமரன்... அப்படியா.... அப்படியே மாற்றிவிடுகிறேன்.

ஓவியன்
15-08-2008, 06:56 AM
பதில்களை விட கனத்த மெளனம் வலிமையானதே..!!

களத்திலும் புலத்திலும் ஆழ்ந்திருக்கும் மெளனம் விரைவில் உடையும்...

அன்று, களத்தின் வேர்களும் புலத்தின் விழுதுகளும் ஒன்றாகப் பிணையும்....

அந்த திரு நாளுக்காகவே காத்திருப்போம்..!!

மதுரகன்
17-08-2008, 06:43 PM
ஏதொவொரு ஆதங்கம்.
இந்த ஆதங்கம் ஒரு சிலருள் மாத்திரம் வந்து பயனில்லை சகோதரா..
அனைவருள்ளும் பிணைக்கப்படவேண்டும்..
உங்களை நான் புரிந்துகொண்டேன்..