PDA

View Full Version : ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)"பொத்தனூர்"பிரபு
10-08-2008, 07:17 AM
ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்) (http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_09.html)

(நன்றி-குமுதம் 13/08/08)

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-08-13/pg12.php?type=Kumudam (http://www.kumudam.com/magazine/Kumudam/2008-08-13/pg12.php?type=Kumudam)

அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.
அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.
முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.
அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.
உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?
`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.
பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?'
இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.
ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.
இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.
உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !
குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.
(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.
இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.
எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.
அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.
சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.
அதில் ஆச்சரியம் இல்லை.
மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை....
மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.
போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும். அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.
உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.
அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.
சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..

அன்புடன்ஞாநி

இந்த வாரப் பூச்செண்டு
ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.

இந்த வாரக் குட்டு
ரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.

இந்த வாரத் அதிர்ச்சி
தி.மு.க, கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் எதுவும் இல்லாதது.
</STRONG>

sakthim
10-08-2008, 07:31 AM
அருமையான நெற்றி அடி கேள்விகள், தமிழ் நாட்டு மக்கள் சார்பாக திரு ஞாநி அவர்கள் பேசி உள்ளது மிகவும் பாராட்ட தக்கது.

rajatemp
10-08-2008, 07:32 AM
சரியான குட்டு ரஜினிக்கு
இதை இங்கு அளித்த பிரபு அவர்களுக்கு நன்றி

அன்புரசிகன்
10-08-2008, 04:13 PM
இத்தனை விமர்சனம். முடிந்தளவு திட்டித்தீர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ரோபோ திரைப்படத்தை எத்தனை இந்தியர்கள் புறக்கணிக்கவுள்ளார்கள் என்பதையும் பார்ப்போமே....

ராஜா
10-08-2008, 04:32 PM
ஒரு படத்தின் தோல்வி, ரஜினிக்கு யார் யாரோ அறிவுரை சொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டதே..!

இப்படி செயல்படு.. அப்படி நடி.. என்று தேவையில்லாத அறிவுரைகள் கூறி நாணி வரம்பு மீறியிருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

அன்புரசிகன்
10-08-2008, 04:42 PM

அதே அதே... அவனவன் படும் பாடு விமர்சிப்பவர்களுக்கு தெரியாது... சொல்பவரை 10 பேருக்கு பிட்டு அவித்து சாம்பாறும் வைத்து பரிமாறி பார்க்கச்சொல்லவேண்டும்... அப்போது ஒருவன் கறிக்கு உப்பில்லை என்று சொல்லும் போது எப்படியிருக்கும் என்பது அப்போது புரியும்............

விமர்சிப்பவர் முடிந்தால் மைக்ரோ சுப்பர் ஸ்டாராக ஆவது வரமுடியுமா என பார்க்கவேண்டும்.

mukilan
10-08-2008, 05:45 PM
இப்படி செயல்படு.. அப்படி நடி.. என்று தேவையில்லாத அறிவுரைகள் கூறி நாணி வரம்பு மீறியிருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

நிஜம்மாவே உள்குத்து போலத் தெரியுதே! ஞானிக்கு நாணம் இல்லைனு சொல்றீங்களோ!:D

arun
10-08-2008, 07:29 PM
ஒரு சில விஷயங்களை சரியாக சொல்லி இருந்தாலும் கொஞ்சம் ஓவராக தான் சொல்லி இருப்பதை போல தோன்றுகிறது

பென்ஸ்
10-08-2008, 07:34 PM
ஒருவர் மீது குறை சொல்லும் போது,
அது காயபடுத்தும் என்று தெரிந்தே, நியாயமின்றி பேசும் ஒரு "சாதாரண" எழுத்தாளனாகவே தெரிகிறார்....

எப்படியோ...!!!!

மனித உறுப்புகளை பச்சையாக பேசி புகழ் தேடும் வலைபதிவாளர்கள் மத்தியில் , இவர் தேவலாம் போல...

ஆதி
10-08-2008, 07:49 PM
ஞானி பாராட்டினாலும் திட்டினாலும் கொஞ்சம் அதிகமாதான் இருக்கும்... அதனால் இந்த கடிதம் ஒரு பெரிய ஆட்சயர்யமில்லை.. என்ன கலைஞர் ஞானியின் குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த வாரம் தப்பிச்சுட்டார்.. :)

"பொத்தனூர்"பிரபு
10-08-2008, 08:02 PM
///////////////////
ஞானி பாராட்டினாலும் திட்டினாலும் கொஞ்சம் அதிகமாதான் இருக்கும்... அதனால் இந்த கடிதம் ஒரு பெரிய ஆட்சயர்யமில்லை.. ///////////////////
சரியாக சொன்னீங்க

aren
11-08-2008, 02:29 AM
கோடி கோடியாக செலவு செய்து ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை விநியோகஸ்தர்களும் கோடி கோடியாக பணம் கொடுத்து வாங்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லையென்றால் என்ன செய்வது. மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் பணம் போட்டவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ரஜினி பெங்களூரிலிருந்து வந்தார் என்ற காரணத்தால் காவிரி பிரச்சனையில் அவரை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசச்சொல்லிவிட்டு பின்னர் கர்நாடகா பிரச்சனையை கிளப்பும்பொழுது ரஜினியை தனியாக விட்டுவிடுகிறார்கள். அவர் என்னதான் செய்யமுடியும்.

ஒரு நடிகரை நடிகராகவே விட்டுவிடுங்கள். இந்த பிரச்சனையே யாருக்கும் வராது.

விஜயை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.

அன்புரசிகன்
11-08-2008, 03:21 AM
நீங்க சும்மா போங்கண்ணா... நீங்கள் இப்படிச்சொன்னால் ஞானிக்கு என்ன மரியாதை.... எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கார்... :D

tamilambu
11-08-2008, 05:48 AM
கோடி கோடியாக செலவு செய்து ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை விநியோகஸ்தர்களும் கோடி கோடியாக பணம் கொடுத்து வாங்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லையென்றால் என்ன செய்வது. மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் பணம் போட்டவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ரஜினி பெங்களூரிலிருந்து வந்தார் என்ற காரணத்தால் காவிரி பிரச்சனையில் அவரை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசச்சொல்லிவிட்டு பின்னர் கர்நாடகா பிரச்சனையை கிளப்பும்பொழுது ரஜினியை தனியாக விட்டுவிடுகிறார்கள். அவர் என்னதான் செய்யமுடியும்.

ஒரு நடிகரை நடிகராகவே விட்டுவிடுங்கள். இந்த பிரச்சனையே யாருக்கும் வராது.

விஜயை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.

அவர் நடிகராக மட்டும் இருந்திருக்கலாமே...

இதயம்
11-08-2008, 05:54 AM
ஞானியின் அதிகப்பிரசங்கித்தனம் ஊரறிந்த விஷயம். அவர் வாராவாரம் ஓ பக்கங்களில் "யார் செய்வது சரி, தவறு.? யார் என்ன செய்ய வேண்டும்..? என்று வியாக்கியானம் சொல்வது ரொம்பவே ஓ(வர்)..!! அதுக்காக அவர் கொடுக்கும் பூச்செண்டை வைத்தே அவருக்கு "பூஜை" நடத்தலாம். ரஜினி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன பத்திரிக்கையில் சொல்ல இவர் யார்..? விரைவில் பிரபலம் ஆவதற்கு பிரபலமானவர்களை விமர்சிப்பது சிறந்த யுக்தி..!!

ராஜா
11-08-2008, 06:34 AM
ரஜினி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன பத்திரிக்கையில் சொல்ல இவர் யார்..? விரைவில் பிரபலம் ஆவதற்கு பிரபலமானவர்களை விமர்சிப்பது சிறந்த யுக்தி..!!

சபாஷ் இதயம்..!

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்..!

பிரபலமானவர்களை சர்ச்சைக்கு இழுத்து தானும் பிரபலமாகும் ஆசை நாணிக்கு நிறையவே உண்டு..!

மறத்தமிழன்
11-08-2008, 11:43 AM
ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.

"பொத்தனூர்"பிரபு
12-08-2008, 01:15 AM
//////////////////////
ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
//////////////////////////////////////////////

சரியா சொன்னீங்க
தவறுகளை சுட்டிகாட்டினால் கோபம் கொள்வாது வீண்

பென்ஸ்
12-08-2008, 02:53 AM
இதில் ஏதாவது உள்குத்து எம் மன்றுக்கும் இருக்குதோ?:D:D

என்ன கிஷோர்...

கும்மாங் குத்து வாங்கி கொடுத்திடு"வீங்க" போல....

அன்புரசிகன்
12-08-2008, 03:09 AM
ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.

ஒரு நடிகன் என்ற தகுதியை விடுத்து அவர் செய்த தவறுகளை சற்றே கூறுங்களேன்... யாரும் நியாயப்படுத்தவில்லை... தேவையற்ற ஒருசதத்துக்கும் பிரயோசனமில்லாத பக்கச்சார்பான விமர்சனங்களால் இன்னொருவருக்கு தவறான விடையம் சென்றடையக்கூடாது...

இங்கே பிரச்சனை இதுதான்... திரைப்படங்களில் கூறும் வசனங்களை வைத்துக்கொண்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க நீங்கள் யார்??? குறை சொல்வது யார்????

வாதம் என்று வந்தாலே பொதுவாகத்தான் இருக்கவேண்டும். எல்லோரும் ஒரே விடையத்தை ஆமோதித்து விவாதித்தால் அதற்கு பெயர் விவாதமா???

தீபன்
12-08-2008, 04:41 AM

ஆனால் அந்த வசனங்கள் திரைப்படங்களையும் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும்போது பேசாது இருந்துவிட்டு தற்போது சில பிரச்சினைகள் வரும்போதுமட்டும் அவை சாதாரண சினிமா வசன்ங்களே என்று இவ்வளவு காலம் களித்து கூறுவதன் நோக்கம்தானென்ன?
பொதுவாழ்க்கை சம்பந்தமாக அவர் குரல் கொடுக்கும்போது அவர் சம்பந்தமாக பொதுமகனாய் எவரும் விமர்சிக்கலாம்தானே...! மறத்தமிழன் சொன்னதுபோல, ஞானி சொன்ன குற்றசாட்டுகளிற்கு சரியான விளக்கத்தை முன்வைத்துவிட்டு பின் ஞானிஜின் தகுதிகள்பற்றி விவாதிக்கலாம்.
எல்லோருக்கும் ஒத்த கருத்துள்ள விடயங்களில் எல்லோரும் ஒத்த கருத்தைத்தனே முன்வைப்பார்கள். விவாதிக்க வேண்டுமெபதற்காகா விதண்டாவதம் பண்ண முடியுமா...?

அன்புரசிகன்
12-08-2008, 09:11 AM

முதலாவது சிகப்புக்கு வருகிறேன். திரைப்படங்களையும் தாண்டி செல்வாக்கு செலுத்தியதற்கு யார் காரணம்? ரஜினியின் நடிப்பு என்ற காரணமா?? அல்லது வேறு ஏதாவதா???

அந்த வசனங்களால் மக்கள் தீமையை அந்தக்காலத்தில் அடைந்திருந்தால் அந்தவசனங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்குமா??? உங்களுக்கு நன்மை கிடைக்கிறது என்பதற்காக தலைக்குமேல் தூக்கி வைத்துவிட்டு அனுகூலம் கிடைக்கவில்லை என்றவுடன் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று எத்தணிப்பது உங்களின் சுயநலம் என்று நான் சொல்லலாம் தானே....

ரஜினி என்பவராக இல்லாது சிவாஜிராவ் ஆக எவ்வாறு ஒரு சமூகத்தினை அவர் ஆக்கிரமித்துள்ளார். அரசியல் கூட்டங்கள் உண்ணாவிரதங்கள் என நடந்தபோது அவர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த வசனங்களை வைத்து ஞர்னி கூறியிருந்தால் நிச்சயம் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். திரைப்படங்களில் வந்த வரிகளை வைத்து திரைப்படக்கண்ணோட்டத்தில் விமர்சிக்க வேண்டும். அரசியல் பொதுக்கண்ணோட்டத்தில் அல்ல... மாம்பழத்தை சுவைத்துவிட்டு வாழைப்பழம் சரியில்லை என்று சொல்வது தான் உங்களின் விமர்சனம் என்றால் அதற்கு விமர்சனம் என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது தமிழ் ஆர்வலர்கள் நிர்ணயிக்க வேண்டும்....

இரண்டாவதாக.... இங்கு யாரும் விதண்டாவாதம் செய்வதாக நான் உணரவில்லை. மாறாக உங்களுக்கு நான் செய்வது விதண்டாவாதமாக பட்டால் நேரடியாக கூறலாம்.....

1 + 1 = 3 என்று அனைவரும் கூறினால் எதற்காக வாதிட வேண்டும். அவசியம் தான் என்ன...?

ஞானியின் தகுதியை யாரும் குறைகூறவில்லை. ஞானி முன்வைத்த காரணிகள் விமர்சனத்திற்கு தகுதியான தரவுகள் அல்ல....

ராஜா
12-08-2008, 09:28 AM
நாணியின் செயல்பாடுகளுக்கு விளக்கம் தேவை எனில் வலைப்பூக்கள் பக்கமாக போய்ப்பாருங்கள். அல்லது கூகிளாண்டவர் துணையை நாடுங்கள்.

அவருடைய வரலாறும், அடிக்கடி தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போக்கும் உங்களுக்கு தெரிய வரலாம்.

இதயம்
12-08-2008, 09:35 AM
அன்பு,
ஞானியின் விமர்சனம் தவறு என்பதால் ரஜினி செய்வதெல்லாம் சரி என்றோ, அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ ஆகிவிடாது. ஞானிக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதியில்லை என்பது தான் இத்திரியை பொறுத்தவரை என் நிலைப்பாடு. ரஜினி பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களில் நான் நிறைய முரண்படுகிறேன். அதற்கு பதிலளிக்கலாம் என்றால் என் ப்ராக்ஸி பிரச்சினை ஒத்துழைக்க மறுக்கிறது.

ஆதி
12-08-2008, 09:38 AM
நாணியின் செயல்பாடுகளுக்கு விளக்கம் தேவை எனில் வலைப்பூக்கள் பக்கமாக போய்ப்பாருங்கள். அல்லது கூகிளாண்டவர் துணையை நாடுங்கள்.

அவருடைய வரலாறும், அடிக்கடி தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போக்கும் உங்களுக்கு தெரிய வரலாம்.ஞானி ஒரு தெளிந்த சிந்தனைவாதி.. ஆனால் அவரின் தெளிந்த சிந்தனைத் தெப்பம் வயதாக வயதாக வற்றுவதை காணமுடிகிறது.. பெரும்பாலும் கலைஞரையே குறிவைத்து எழுதப்படும் அவரின் ஓ பக்கங்கள் ஞானிமீதான என் மதிப்பை குறைத்துக் கொண்டுவருகிறது..
ஒரு காலத்தில் அவரின் ஓ பக்கங்கள் இல்லாத ஆனந்த விகடன் குப்பை என்றெண்ணிய மனது தற்போது அவர் ஓ பக்கங்களே குப்பை என்று முடிவுகட்டிவிட்டது..

இதயம்
12-08-2008, 09:42 AM
ஒரு மனிதனின் அறிவு முதிர்ச்சியின்மை என்பது அவன் குறை அல்லது குற்றம் என்றால் அந்த பலவீனத்தை தன் நலனுக்காக பயன்படுத்திக்கொள்வது சரியா..? ரஜினி அதைத்தானே செய்கிறார்? நடித்ததும் அதற்கான சம்பளமும் தொழில் தொடர்புடையது. அது வேண்டாம் நமக்கு. பலவீன இரசிகனை ஏமாற்றும் "வாழ வைக்கும் தெய்வம், என் பின்னாடி பெருங்கூட்டம், என் வழி தனி வழி, எப்ப வருவேன், எப்படி வருவேன்" போன்ற பில்டப்புகள் ஏன்?

ராஜா
12-08-2008, 09:47 AM
பிரபலமானவர்களைச் சாடுவது, அதிலும் சில விதிவிலக்குகளைக் கடைப்பிடிப்பது என்ற அவரது போக்கைத் தவிர நாணியின் மற்ற படைப்புகள் எனக்கும் பிடிக்கும்.

ஸ்ரீதர்
12-08-2008, 09:52 AM
முதலில் ஹொகெனக்கல் பிரச்சனைக்கு வருவோம்.

ரஜினி , தன்னை நம்பி முதலீடு செய்தவர்கள் நட்டம் அடையக்கூடாது என்பதற்காக தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தது தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் என்றே வைத்துக்கொள்வோம்.

அனைத்து நடிகர் நடிகை களையும் அழைத்து பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்து , அதை தன்னுடைய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி , அதிலும் காசு பார்த்துவிட்டு , சத்யராஜ் போன்ற ஜாலராக்களை விட்டு வீர வசனங்களை பேச விட்டு , தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு , எல்லாம் முடிந்த பிறகு , கர்நாடக தேர்தல் முடியட்டும் என்று ஒரு சூப்பர் பல்டி அடித்த மாண்புமிகு தமிழக முதலமைசசர் அடித்த பல்டிக்கு பெயர் என்ன??

அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் உள்ள ஞானி , சத்யராஜ் போன்றவர்களின் நிலமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

இதிலிருந்து தெரிவது இதுதான் :-

1) ”ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்றொரு பழமொழி உண்டு. இங்கே ரஜினிக்கு அந்த நிலமைதான். ரஜினிதானே எவ்வளவு திட்டினாலும் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அதே சமயத்தில் புகழும் கிடைக்கும். அதே சமயத்தில் அவருடைய புகழையும் , செல்வத்தையும் பார்த்து அடையும் வயிற்றெரிச்சலுக்கு மருந்தாக இருக்கும்.

2) மக்களின் அரசாங்க பணத்தை போட்டு செய்யும் திட்டங்களில் தன் சொந்த காசை போட்டு செய்தது போல விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் நல்லவர்கள். தன் சொந்த பணத்தில் சிலருக்கு உதவி செய்து அடக்கமாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் கெட்டவர்கள்/இளிச்சவாயர்கள்.

என்ன உலகமடா சாமி இது??

இதயம்
12-08-2008, 09:53 AM
அவர் என்ன நினைத்து எழுதுகிறாரோ அது தான் இப்ப நடக்குது..! இப்படி எழுதியதால் தான் நம் மன்றத்தில் அவரை தெரியாதவர்களுக்கு கூட இப்ப தெரிந்தவர் ஆயிட்டார் ஞாநி..! ஞாநி உண்மையிலேயே ஞானி தான்..! (கலைஞருக்கே அரசியல் சொல்லிக்கொடுப்பவர் ஆயிற்றே..!!)

ஆதி
12-08-2008, 10:01 AM
அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் உள்ள ஞானி , சத்யராஜ் போன்றவர்களின் நிலமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.அடடா ஸ்ரீதர், என்ன வார்த்த சொல்லிப்புட்டீங்க.. ஞானி கலைஞரை விட்டுவைத்தாரா.. கலைஞர் நேற்றைய இன்றைய நாளைய என்று எதையும் மிச்சம் வைக்காமல் விமர்சித்ததையெல்லாம் நீங்க படித்ததில்லையா.. ?

ஹோக்கைனாக்கல் விடயத்தில் கலைஞர் செய்தது சரிதாங்க.. என் நண்பன் ஒருவனே இந்த விவகாரத்தில் தாக்கப்பட்டான்.. தமிழ் பேசுனான் என்கிற காரணத்திற்காக மட்டும்.. நீங்க இங்க நேராவாங்க அவர் செய்தது சரியா தப்பா என்று பிறகு புரியும்.. ஹோக்கனாக்கல் பற்றி வேறொரு திரி மன்றத்தில் இருக்கு இனி அதைப்பற்றி அங்கு விவாதிக்கலாம்..

ராஜா
12-08-2008, 10:02 AM
அவர் என்ன நினைத்து எழுதுகிறாரோ அது தான் இப்ப நடக்குது..! இப்படி எழுதியதால் தான் நம் மன்றத்தில் அவரை தெரியாதவர்களுக்கு கூட இப்ப தெரிந்தவர் ஆயிட்டார் ஞாநி..! ஞாநி உண்மையிலேயே ஞானி தான்..! (கலைஞருக்கே அரசியல் சொல்லிக்கொடுப்பவர் ஆயிற்றே..!!)

நாணியின் நோக்கத்தை சரியாக கணித்துவிட்டீர்கள் தம்பி..!:icon_b::icon_rollout::icon_b::icon_rollout::icon_b:

ராஜா
12-08-2008, 10:04 AM
கலைஞரை அவரது குடும்பத்தினரே கொடுமைப்படுத்தறாங்கன்னு எல்லாம் கண்டுபுடிச்சு சொல்லியிருக்காருங்கோ..!

இதயம்
12-08-2008, 10:06 AM
ஞாநியை பற்றி தெரியாமல் ஸ்ரீதர் பேசுவது போல் தெரிகிறது. ஞாநிக்கு ரொம்ப காலமா கலைஞரை கண்டபடி விமர்சித்து, அவர் இனி என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாதுன்னு அறிவுரையை அள்ளி வழங்குவது தான் அவருக்கு பொழுது போக்கு. அதை அவரே உணர்ந்து சொன்னது தான் இந்த பதிவில் ஓ..பக்கத்தில் சொன்ன இந்த வார அதிர்ச்சி..! அதை படிங்க முதலில்..!!

ஆதி
12-08-2008, 10:08 AM
கலைஞரை அவரது குடும்பத்தினரே கொடுமைப்படுத்தறாங்கன்னு எல்லாம் கண்டுபுடிச்சு சொல்லியிருக்காருங்கோ..!

அப்படி ஒரு ஓ பக்கங்களில் தான் இப்படி எழுதினார் அண்ணா, மதிப்புக்குரிய கலைஞர் அவர்களே உங்களின் நிலையை காணும் போது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது, ஆனால் இந்த நிலைக்கு உள்ளாதனதற்கு நீங்கள் தான் முழுக்காரணம்.. அவர் முதல் முதலில் முதவரா ஆனதில் இருந்து வருடத்தை கூட விடாம எல்லாத்தை எழுதி கடுமையாகவும் விமர்ச்சித்தார் அண்ணா..

ராஜா
12-08-2008, 10:13 AM
ஆமாம் ஆதி..!

நானும் படித்தேன்..!

எல்லாத்தையும் சொல்லிட்டு "உங்கள் பழைய சகா"ன்னு சொல்லியிருப்பாரே.. அதுதானே..?

ஆதி
12-08-2008, 10:40 AM
ஆமாம் ஆதி..!

நானும் படித்தேன்..!

எல்லாத்தையும் சொல்லிட்டு "உங்கள் பழைய சகா"ன்னு சொல்லியிருப்பாரே.. அதுதானே..?

அதேதான் அண்ணன்.. :D

விகடன்
12-08-2008, 11:47 AM
திரைப்படத்திற்கு மட்டுமன்றி ரஜினிக்கும் சேர்த்து விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
படிக்கையில்த்தான் எனக்கு ஞாபகம் வருகிறது,
படத்தில் ஜப்பானில் இருந்து வருவோரை எப்படி உபசரிப்பது என்று ரென்சனாக இருப்பாராம். அவ்வேளையில் வெளியே இரவு பகல், குளிர் சூடு, வியர்வை எதையும் பாராது தலைவா தலைவா என்று கூவிய வண்ணமிருக்கும் ரசிகர் பட்டாளத்தை தெரியாதாம். இவருடைய இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என்ன வெளிநாட்டவர்களா?

இதை, படத்தில்த்தானே என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில், குசேலனின் "நான் நானாகவே வருகிறேன்" என்று திரைப்பட வெளியீட்டிட்டு முன்னதாகவே அறிக்கை வேறு விட்டிருக்கிறார்.

பூமகள்
12-08-2008, 11:47 AM
ரஜினி பக்க நியாயம்.. தயாரிப்பாளர்கள் நட்டமடையாமல் பாதுகாக்க வேண்டும்.

தனது துறையில் நட்டம் வரக் கூடாதென்ற குறிக்கோளுக்கு முன்.. சமுதாய நோக்கம்.. பற்று எல்லாம் காணாமல் போகலாம்.. தவறில்லை என்பது போல் இங்கு சில பதில்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு திரைக்கலைஞர் என்று வந்த பின்னே... அவர் பொது வாழ்க்கைக்கும் விமர்சனங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

அவ்வகையில்.. ஞாநி மட்டுமல்ல.. சமுதாயத்தின் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் எந்த ஒரு கடைக்கோடி இந்தியருக்கும் ஒருவரின் செயலைப் பற்றி விமர்சிக்கவோ கருத்து சொல்லவோ உரிமை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்காக ஞாநியை நான் ஆதரிப்பதாக அர்த்தமில்லை.. பொதுவாக ஒரு விமர்சகர் என்ற முறையில் மட்டுமே அவரைப் பார்க்கிறேன்.

ரஜினி அவருக்கு சரியெனப் பட்டதைச் செய்திருக்கிறார்.. அப்போதும் இப்போதும்..

ஒக்கேனக்கல் பிரச்சனையில் அவர் அன்று அப்படி பேசியிரா விட்டால் இப்போது இந்த மன்னிப்புக்கு அவசியமிருந்திருக்காது..

அந்த உண்ணாவிரதத்துக்கான காரணம்.. அங்கு தமிழ் திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டது தான்.. அதனை எதிர்க்க.. தமிழ் திரைத்துறையினர் வந்து பங்குபெற்றனர்.. ரஜினியும் பங்களித்தார்.. எல்லாரையும் போல் பேசவும் செய்தார்..

ஞாநி சொல்லிய எந்தக் கருத்தும் வரம்பு மீறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரே பிரச்சனைக்கு.. மாற்றி மாற்றி பேசுவது ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும்.. கடைக்கோடி மனிதராக இருந்தாலும் தவறு தவறு தான். அதைப் பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. விமர்சனத்தை எதிர்க்கவும் தான். :)

ராஜா
12-08-2008, 01:10 PM
////////////ஞாநி சொல்லிய எந்தக் கருத்தும் வரம்பு மீறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.//////////

அவரவர் கருத்து அவரவருக்கு சரி..!

இருந்தாலும் என் சகோதரி என்ற உரிமையோடு கேட்கிறேன்..

//////////////// சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.
அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை.////

இந்தக் கருத்தில் விமர்சகன் என்ற எல்லையை நாணி தாண்டியிருப்பதாக உனக்குத் தோன்றவேயில்லையா..?

மனதார நீ இல்லை என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அன்புரசிகன்
12-08-2008, 02:25 PM
ஒரு மனிதனின் அறிவு முதிர்ச்சியின்மை என்பது அவன் குறை அல்லது குற்றம் என்றால் அந்த பலவீனத்தை தன் நலனுக்காக பயன்படுத்திக்கொள்வது சரியா..? ரஜினி அதைத்தானே செய்கிறார்? நடித்ததும் அதற்கான சம்பளமும் தொழில் தொடர்புடையது. அது வேண்டாம் நமக்கு. பலவீன இரசிகனை ஏமாற்றும் "வாழ வைக்கும் தெய்வம், என் பின்னாடி பெருங்கூட்டம், என் வழி தனி வழி, எப்ப வருவேன், எப்படி வருவேன்" போன்ற பில்டப்புகள் ஏன்?

பலவீனம் என்பதை முழுமையாக ஏற்க முடியாது...

உங்கள் ரசனையில் உயிர்ப்புத்தன்மை இருக்கலாம். வெறியாக இருந்ததில் கலைஞனின் பங்கேது???

வருவேன் கூட்டம் என்பதெல்லாம் திரைப்படத்தில் வந்த வரிகள் என்று கூறியாச்சு... அதனால் மக்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கிளம்பியதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த எதிர்பார்ப்புக்கு எந்தவிதத்திலும் சிவாஜிராவ் காரணமல்ல... ரஜினி என்பவர் திரையில் காரணம் என்று தான் நான் சொல்கிறேன்.

தவிர பில்டப் என்று நீங்கள் சொன்னபின்பு அதனைப்பற்றி ஏன் சொன்னாய் என்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது. அது திரைப்படத்தின் பில்டப்புக்காக அவர் சொல்லியிருக்கலாம் அல்லவா???

வெற்றி
12-08-2008, 02:26 PM
நாணியின் செயல்பாடுகளுக்கு விளக்கம் தேவை எனில் வலைப்பூக்கள் பக்கமாக போய்ப்பாருங்கள். அல்லது கூகிளாண்டவர் துணையை நாடுங்கள்.
அவருடைய வரலாறும், அடிக்கடி தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போக்கும் உங்களுக்கு தெரிய வரலாம்.

உண்மை அண்ணா உண்மை.....
இது வரை எத்தனை பத்திரிக்கை அலுகத்தில் இருந்து வெளியேறி(யேற்றப்பட்டு) இருக்கிறார் என கணக்கிட்டால் கை விரல் தீர்ந்து கால் விரலும் தீர்ந்து விடும்...
அவரின் அடவாத கருத்துக்களைப்பார்த்தால் எரிச்சலாக வரும்
ஆனால் இந்த கட்டுரையில் 90 % யோசிக்கும் படித்தான் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...
ஆனால் அவர் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த் என ஆரம்பித்தது தான் எனக்கு பிடிக்க வில்லை (உள் குத்து)
நேரடியாக அவர் ரஜினிகாந்த்துக்கே எழுதி இருக்கலாம்

அன்புரசிகன்
12-08-2008, 02:29 PM
திரைப்படத்திற்கு மட்டுமன்றி ரஜினிக்கும் சேர்த்து விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
படிக்கையில்த்தான் எனக்கு ஞாபகம் வருகிறது,
படத்தில் ஜப்பானில் இருந்து வருவோரை எப்படி உபசரிப்பது என்று ரென்சனாக இருப்பாராம். அவ்வேளையில் வெளியே இரவு பகல், குளிர் சூடு, வியர்வை எதையும் பாராது தலைவா தலைவா என்று கூவிய வண்ணமிருக்கும் ரசிகர் பட்டாளத்தை தெரியாதாம். இவருடைய இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என்ன வெளிநாட்டவர்களா?

இதை, படத்தில்த்தானே என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில், குசேலனின் "நான் நானாகவே வருகிறேன்" என்று திரைப்பட வெளியீட்டிட்டு முன்னதாகவே அறிக்கை வேறு விட்டிருக்கிறார்.

படம் பார்த்தீர்கள் தானே... அதில் சின்னிஜெயந்த் கூட்டத்தினரையும் உள்ளே அழைத்து பேசினாரே... அதை ஏன் மறக்கிறீர்கள். முழுப்பேரையும் டோக்கின் கொடுத்து அழைத்து பேசவில்லை என்பது தான் வருத்தமா??? அது படமாக இருக்காது. மெகா சீரியலாக இருக்கும். தவிர ஒரு நபர் தன் தொழிலாக செய்வதை விடுத்து உங்களுக்கு பிடித்ததை செய்ய சொல்வது என்ன நியாயம்... அவரது படம் சரியில்லை என்று சொல்லுங்கள்... அதில் நியாயம் உள்ளது. காசு கொடுத்து படம் பார்க்கப்போய் அது சப் என்று இருந்தால் அப்சட் தான்....

இங்கே படம் சரியில்லை என்ற காரணத்திலும் ரஜினி சரியில்லை என்ற காரணம் தான் மேலோங்குகிறது....

ராஜா
12-08-2008, 02:36 PM
போதும் நண்பர்களே..!

நாணியை இத்துடன் விட்டுவிடுவோம்.

வேறு திரிகளிலும் கவனத்தைச் செலுத்துவோம்.

Muthuvijayan
12-08-2008, 04:22 PM
(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.
இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.
எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.

உண்மைதான், அரசியலை தனது படத்துக்கு ஒரு கட்டத்திலிருந்து உபயோகப்படுத்தியதுதான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்.

ரஜினி இனி மாஸ் கதைகளை விடுத்து சிறந்த கதை அம்சம் உள்ள திரைகதைகளில் அரசியல் நெடி தவிர்த்து நடித்தால் ரசிகர்கள் 1000 நாள் கூட ஒட வைப்பர்.

ஏன் மொழி படத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா.?...

சரியான நேரத்தில் சரியான விமர்சனம் கூட சரியான பாதையில் செல்ல தூண்டும் .

இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.

பூமகள்
12-08-2008, 06:47 PM
இந்தக் கருத்தில் விமர்சகன் என்ற எல்லையை நாணி தாண்டியிருப்பதாக உனக்குத் தோன்றவேயில்லையா..?

மனதார நீ இல்லை என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எந்த விமர்சனத்தையும் நேர்மறையாக எடுத்தால் பிரச்சனையே இல்லை.. இங்கே அவர் கூறியதை யாரும் மறுக்க முடியாது..

கூறிய விதம் தவறென்றாலும்... தவறை விடுத்து சொல்ல வந்ததன் உட்பொருள் மட்டும் பார்த்தால் புரியுமென நினைக்கிறேன்.

பாலை மட்டும் அருந்தும் அன்னம் போல..
வார்த்தைகளில் கருத்தை மட்டும் எடுத்து மற்றதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தாலே நலம்.

ரோல் மாடலாக அமிதாப்பை வைக்கச் சொன்னதில் எந்தத் தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை..

என் கருத்தை மனதாரத் தான் சொல்கிறேன் ராஜா அண்ணா.. மற்றபடி என் சிந்தைக்கு எட்டிய வரையில் எனக்கு அவர் சுட்டியது சரியாகத் தான் தோன்றுகிறது.

விவாதம் வேண்டாமென்று சொல்லியிருந்தாலும்.. பதில் கேட்டிருப்பதால் உரைக்கிறேன்.

rithik
12-08-2008, 08:09 PM
இது எப்படி இருக்கு தெரியுமா....?!?

"குதிரை குழிக்குள் விழுந்தால் எலிக்கு கூட எக்காளமாம்."

இது போல் சந்தர்ப்பவாதிகள் தங்களது பெயர்களை தம்பட்டம் அடித்துக்கொள்ள தான் இப்படி செய்கிறார்கள்.

இதன் முலம் எவருக்கும் கெடுதல் கிடையாது, இது அவரின் மன நிலையை காட்டுகிறது.

கதம் கதம். !
நன்றி
ரித்திக்

"பொத்தனூர்"பிரபு
12-08-2008, 11:39 PM
அரசியலுக்கு வருவீர்களா என்றால் "ஆம்" "இல்லை" என பதில் சொல்வதை விடுத்து மேலே கை காட்டுவதை எந்த அற்த்ததில் சேர்ப்பது?????

சரி ரசினியை வைத்து பத்திரிக்கையும் , பத்திரிக்கை ஏத்திவிடும் செல்வாகை வைத்து ரசினியும் காசு பண்ணியதுதான் மிச்ச்ம்
சாதாரணா சினிமாகாரனை மகானைபோல எண்ணிகொண்டு திரிந்த ரசிகனுக்கு இப்போதாவெது புத்திவந்தால் ஸ்ரீ
சில ரசினி பக்தகோடிகள் இன்னும் பேசுவதை கேட்டல் சிரிப்பதை தவிற வேறு வழியில்லை.

தீபா
13-08-2008, 06:39 AM
இது எப்படி இருக்கு தெரியுமா....?!?

"குதிரை குழிக்குள் விழுந்தால் எலிக்கு கூட எக்காளமாம்."

இது போல் சந்தர்ப்பவாதிகள் தங்களது பெயர்களை தம்பட்டம் அடித்துக்கொள்ள தான் இப்படி செய்கிறார்கள்.

இதன் முலம் எவருக்கும் கெடுதல் கிடையாது, இது அவரின் மன நிலையை காட்டுகிறது.

கதம் கதம். !
நன்றி
ரித்திக்

அட நல்ல பழமொழியா இருக்கே!

ஆனா ஒண்ணு மறந்துட்டீங்க,. திரு. ரஜினி மாத்திப் பேசினாரு. திரு.ஞாநி ஓவரா பேசிட்டாரு.

அவ்ளோதான்.

அதை வெச்சு இவ்ளோதூரம் ஓட்டியிருக்கோமே! திரு.இதயம் சொன்னது மாதிரி ஞாநியுடைய நோக்கம் நன்னா நிறைவேறிடுச்சு..

திரு.ஞாநி எவ்ளொ பெரிய ஞானியா இருந்தாலும் தவறு செய்யவே செய்யாதவர்னு ஒத்துக்க முடியாது. இதே கதிதான் நடிகர் திரு.ரஜினிகாந்துக்கும்

ஏழைவீட்டு கொலை கூட கண்ணுக்குத் தெரியாது. ஆனா பணக்காரன் வீட்டு கோபம் ஊரையே சுத்தும்.. இது ரஜினி விவகாரத்தில நடந்திருக்கு...

நல்லாருங்க.

அமரன்
13-08-2008, 09:40 AM
ஏழைவீட்டு கொலை கூட கண்ணுக்குத் தெரியாது. ஆனா பணக்காரன் வீட்டு கோபம் ஊரையே சுத்தும்

ஊரைச் சுத்தும் தென்றல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். :)

உதயசூரியன்
13-08-2008, 12:36 PM
முதலில் ஹொகெனக்கல் பிரச்சனைக்கு வருவோம்.

ரஜினி , தன்னை நம்பி முதலீடு செய்தவர்கள் நட்டம் அடையக்கூடாது என்பதற்காக தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தது தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் என்றே வைத்துக்கொள்வோம்.

அனைத்து நடிகர் நடிகை களையும் அழைத்து பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்து , அதை தன்னுடைய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி , அதிலும் காசு பார்த்துவிட்டு , சத்யராஜ் போன்ற ஜாலராக்களை விட்டு வீர வசனங்களை பேச விட்டு , தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு , எல்லாம் முடிந்த பிறகு , கர்நாடக தேர்தல் முடியட்டும் என்று ஒரு சூப்பர் பல்டி அடித்த மாண்புமிகு தமிழக முதலமைசசர் அடித்த பல்டிக்கு பெயர் என்ன??

அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் உள்ள ஞானி , சத்யராஜ் போன்றவர்களின் நிலமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

இதிலிருந்து தெரிவது இதுதான் :-

1) ”ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்றொரு பழமொழி உண்டு. இங்கே ரஜினிக்கு அந்த நிலமைதான். ரஜினிதானே எவ்வளவு திட்டினாலும் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அதே சமயத்தில் புகழும் கிடைக்கும். அதே சமயத்தில் அவருடைய புகழையும் , செல்வத்தையும் பார்த்து அடையும் வயிற்றெரிச்சலுக்கு மருந்தாக இருக்கும்.

2) மக்களின் அரசாங்க பணத்தை போட்டு செய்யும் திட்டங்களில் தன் சொந்த காசை போட்டு செய்தது போல விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் நல்லவர்கள். தன் சொந்த பணத்தில் சிலருக்கு உதவி செய்து அடக்கமாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் கெட்டவர்கள்/இளிச்சவாயர்கள்.

என்ன உலகமடா சாமி இது??

சிரிதர் அவர்களே. ரஜினி ரசிகராக இருந்தாலும்.. பக்குவம் படும் நேரம் இது..
அந்த பக்குவம் உங்களுக்கு வர வேண்டும்...
வரலாறுகளை தெரிந்து கொண்டு பேச வேண்டும்..
தமிழ் மற்றும் தமிழர்கள்..ஜால்ராக்கள்..!! என்று எங்கிருந்தோ வந்த ஒரு கூத்தாடிகள் சொல்ல கூடாது..
ஞானி விமர்சனத்தை.. 100 சதத்தை எதிர் கொண்டவர் கலைஞர் என்பது தெரியுமா...??
மற்றவர்கள் அதற்கு அடுத்த படி தான்.. இது தான் உண்மையும்..
ஆனாலும்.. விமர்சித்தவரும்.. விமர்சிக்க பட்டவர்கருமான கலைஞரும் அதி தீவிர எதிரியும் கிடையாது...

துரோகம்!!!! இன்று மட்டும் ரஜினி செய்ததில்லை..
என்றைக்கு அவர்.. தமிழக மக்கல்ளின் பணத்தை.. ஒரு சிரு உழைப்பும் இல்லாமல் சொத்துக்கள் வாங்கினாரோ.. அதிலிருந்து.. ஆரம்பம்...
அதை பட்டியலிட்டும் நிறைய திரிகள் வந்துள்ளது..

திரையில் காட்டும் நடிகனை.. நிஜத்தில்.. நம்பாதீர்கள் என்று உங்கள் ரஜினியே சொல்லியிருக்கின்றார்..
மேலும் நான் என்ன சொல்ல..
நீங்கள்..ரஜினிக்காக ஒகேனக்கல் என்ன தமிழ் நாட்டையும் எடுத்து கொடுக்க தயாராக இருக்கலாம்.. ஆனால் எம்மால் முடியாது..

கலைஞரை விமர்சிக்கும் தகுதி.. வெறும் ரஜினி ரசிகனுக்கெல்லாம் அருகதை கிடையாது..

நடிகர்கள் பட்டியலுக்கே வருவோம்...
இது வரை ரஜினி என்ன செய்து இருக்கிறார்....
ரசிகர்கள் அவர்கள் காசில் பாலாபிஷேகம் நடத்தவும் கெட்டு சீரழியவுமே உதவியிருக்கிறார்..

போதைக்கும் மற்ற பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தார்..
தான் தமிழர்கள் மூலம் சம்பாதித்த.. பனத்தை.. கர்னாடகத்தில் முதலீடு செய்தார்..
எந்த ஒரு நியாயமான மக்கள் போராட்டத்துக்கும்.. போராடியது இல்லை..

இதில் எங்கேயிருந்து.. அவர் சொந்த பனத்திலிருந்து செய்தார்..
ஏன் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து பல மாவட்டங்களை.. முன்னேற்றியிருக்கலாமே..??
சிவாஜி படத்தில் உள்ளது போல..
அப்புறம் அதையும் சொல்லி விடுவார்.. அது ஷங்கர் வசனம்.. அதை நீங்கள் நம்பினால் நானா பொறுப்பு..என்று...!!

சினிமாவில் காட்டியதையே.. சொந்தமாக செய்தாக கூறும்.. நடிகர்கள் மத்தியில்.. தன்னுடைய ஆட்ச்சியில் நடந்தவற்றை.. தான் செய்த்தது என்று சொல்வதில் என்ன தவறு..

இன்னும் ஒன்று தெரியுமா..??
எப்பொழுதும் கலைஞர்.. ஆட்சி காலத்து சாதனகளை பட்டியலிடும் போதும்..பெரும்பாலும்.. தான் தனது என்று சொல்லவும் மாட்டார்..
பெரும்பான்மையான நேரங்களில்.. தி.மு.க. ஆட்சியில் என்று தான் குறிப்பிடுவார்....

சிரிதர் அவர்களே.. உண்மையான தமிழர்கள் என்றால்.. கோவை தமிழ் ரஜினி ரசிகர்கள் போல் இருக்க வேன்டும்..
தவெறென்றால் தட்டி கேட்க வேண்டும்.. இல்லையென்றால்.. கம்முனு இருக்க வேண்டும்..
பத்தாம்பசலி தனமாக ஒன்றும் தெரியாமல்.. ஞானி அவரை கேட்க வில்லை என்று பேச கூடாது

இன்றும் தமிழகம் காணும் அசாதாரன வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும்..கலைஞரின் உழைப்பும் தான் பேசும்..

எல்லோருக்கும் ரஜினி பற்றியும் தெரியும்..
ஞானி பற்றியும் தெரியும்..
கலைஞர் பற்றியும் தெரியும்..
என்ன ரஜினி வேஷம் இனி எடு படாது என்பது மட்டுமே உண்மை..

இன்னும் ஒன்று சொல்லி கொள்கிறேன்..

கர்னாடக மக்கள் பார்த்து தான் இவர்(ரஜினி) சூப்பர் ஸ்டார் ஆனாரா???
ராஜ்குமாருக்காக பொங்கியெழுந்தாரே..??
சொத்துக்கள் கர்னாடகத்தில் குவித்தாரே..??
தமிழர்களின் எதிரிகள்.. கர்னாடக வெறியர்கள்.. இவர் நண்பர்கள். என்று சொல்லியிருக்கின்றாரே..
பேசி பல மாதங்களுக்கு பிறகு கர்னாடக மக்கள் என்ன பாடம் சொல்லி தந்தனர்..
அங்கே ஓடி தான் வசூல் எடுக்க முடியும்னு ரஜினிக்கு உண்டா...

எல்லாம்.. அவரின் கர்னாடக வெறி அவ்வளவே..
இங்கே பொழைப்பை ஓட்டும் ரஜினிக்கே.. அவ்வளவு பாசம் கர்னாடகத்து மேல இருக்கும் போது..
தமிழர்கள்.. என்ன பே...களா..??

குசேலன் படத்தில் வரும் பாடலில்.. எம்.ஜி.ஆரு, சிவாஜியுடன்.. ராஜ்குமாரை சேர்க்க சொன்னது யாருன்னு ஊருக்கே தெரியும்..
எத்தனை தமிழர்கள் ராஜ்குமாரை தெரியும்..
எத்தனை ராஜ்குமார் படம் தமிழகத்தில் வெளி வந்து வெற்றி பெற்றது...??

கடைசியாக ஒன்று..
ரஜினி கட்டிய ராகவேந்திரா மண்டபத்தின் வாடகை என்ன தெரியுமா..??
அது ஏழைகளுக்கா..??
எத்தனை ரசிகர்களின் கல்யாணம் நடந்தது..??
தனது மகள் கல்யாணத்திற்கு வாய் மொழி அழைப்பு கூட இல்லாமல்.. வந்திருந்த காக்கை கூட்ட ரசிகர்களை.. பெரியவர்கள் வரும் இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை என்று அடித்து விரட்டிய கொடுமை(போலிசை விட்டு) தெரியுமல்லவா..??
அடுத்த நாள் பேட்டி கொடுத்து ரசிகர்களை.. சமாதன படுத்தியதும் தெரியுமல்லவா..??

இது வரை.. பார்த்திபன் செய்த உதவி கூட ரஜினியால் செய்ததில்லை..
மன்றத்தின் மூலம் பணம் கொடுக்கிறார் என்ற தகவலும் இல்லை..
பாவம் ரசிகர்கள்.. அது அவர்களின் பணம்..
அப்படி ரஜினி கொடுப்பாரேயானால்.. அதுவும்.. வியாபாரம் தான்.. அதை அனைத்து நடிகர்களும் செய்கின்றனர்...?? அதற்கு எதற்கு ரஜினிக்கு மட்டும் நல்லவன் வேஷம்..??

ஒரு லாரன்சு செய்யும் நல்ல காரியம்..
சிவகுமார்.. சூரியா செய்யும் நல்ல காரியம் கூட ரஜினி செய்த்ததில்லை..
அவர்களின் காலுக்கடியில் தான்..ரஜினி..

இன்னும் சொல்லலாம்.. சொல்லி கொண்டே போகலாம்..

அதனால்.. ரசிகர் என்றால்.. திரையில் விசிலடிப்பதை மட்டும் செய்து விட்டு போங்கள்..
தமிழர்களின் உரிமையில்.. அரசியல் செய்து ஒரு வரலாறும் தெரியாமல் பொத்தாம் பொதுவாய் பேசுவதை தவிருங்கள்..
தவறிருந்தால் தலவனின்.. பேச்சை திருத்துங்கள்..
ஒரு தலைவன் தான் என்ன பேசுகிறோம் என்பதை ஆராய்ந்து பேச வேன்டும்.. அது ரஜினியிடம் இல்லை என்பது நிதர்சன உண்மை..?

சிரிதர்..அவர்களே.. ரஜினி திரையில் சாகசம் காட்டியதோடு சரி.. நிஜத்தில் அவர் கையாகாலா தனம் அவர் குடும்பத்திற்குள்ளேயும் உள்ளது..

கலைஞர் பார்க்காத விமர்சனம் கிடையாது..

சிறு வயது முதல்.. போராட்டம் பல கண்டு.. இன்று தமிழர்களை ஏச்சிய கூட்டத்திற்கு சமமாக உட்கார வைத்த பெருமை..அவருக்கு உள்ளது.. ரஜினி திரையில் தான் செய்ய போகிறேன்.. என்று சொல்லி கொண்டே பணத்தை சுருட்டினார்..
கலைஞர்.. நடைமுறையில் சாதனைகளையும் சோதனைகளையும் தமிழுக்காகவும்.. தமிழர்களுக்காகவும்.. சந்தித்தவர்..

கலைஞர் பற்றி ஞானியின் விமர்சனங்களை படித்து பாரும்.. அது போல் எல்லாம் விமர்சனம் வைத்தால்.. ரஜினி தாங்குவாரா.. அதற்கு முன் சில ரசிகர்கள் என்று சொல்லி கொள்பவர்கள்(தமிழர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்)... முதலில் தாங்கமல் தூக்கு போட்டு கொள்ளுவார்கள் போலிருக்கு..

ஞானி ரஜினியை கேட்டது..0.001 சதம் தான்..
ரஜினி மற்றும் ஞானி விஷயத்தில்.. ஒன்றும் தெரியாமல் கலைஞரை இழிவு செய்யும் பதிவுக்கான பதில் தான் இது.....
மன்னிக்கவும்

அன்பு ரசிகன் அவர்களே..
நீங்கள் புத்தி சாலி தனமாக பேசி.. ரஜினியின் நடவடிக்கைக்கு நியாய படுத்த முயற்சி எடுக்கிறீர்கள்.. ஏன் எதற்கு.. யாருக்காக..

ஒரு நல்லவர் என்று ரஜினி ரசிகர்கள் சும்மனாச்சும் ஒரு வேலி போட்டிருந்தது எப்போதோ உடைந்து போனது..
அதில் இப்பொழுது அதிகமாக உடைத்து விட்டது..
அது மட்டுமா.. குசேலன் படத்தில் வரும் வசனங்கள்.. தன்னை பற்றி பெருமை பேசியும்.. இன்னும் தான் ஒரு... என்று நிருபித்து கொண்டார்.. ரஜினி..

அன்பு ரசிகனே.. ரசிகனாக படத்தை ரசியுங்கள்.. ரஜினியை அல்ல..
உங்களின் புத்தி சாதுரியமான பேச்சு ரஜினியிடம் இருந்திருந்தால்.. உங்கள் ரஜினிக்கு இப்படி ஒரு அவபெயர் வராமலாவது தடுத்திருக்கலாம்...

வாழ்க தமிழ்

ஸ்ரீதர்
13-08-2008, 02:08 PM
தமிழ் மற்றும் தமிழர்கள்..ஜால்ராக்கள்..!! என்று எங்கிருந்தோ வந்த ஒரு கூத்தாடிகள் சொல்ல கூடாது

---- ரஜினியோ , அவர் ரசிகர்களோ , தமிழையோ தமிழ்ர்களையோ ஜால்ராக்கள் என்று சொல்லவில்லை. நான் எழுதியிருந்தது இதுதான். - =========அனைத்து நடிகர் நடிகை களையும் அழைத்து பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்து , அதை தன்னுடைய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி , அதிலும் காசு பார்த்துவிட்டு , சத்யராஜ் போன்ற ஜாலராக்களை விட்டு வீர வசனங்களை பேச விட்டு , தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு , எல்லாம் முடிந்த பிறகு , கர்நாடக தேர்தல் முடியட்டும் என்று ஒரு சூப்பர் பல்டி அடித்த மாண்புமிகு தமிழக முதலமைசசர் அடித்த பல்டிக்கு பெயர் என்ன??

துரோகம்!!!! இன்று மட்டும் ரஜினி செய்ததில்லை..
என்றைக்கு அவர்.. தமிழக மக்கல்ளின் பணத்தை.. ஒரு சிரு உழைப்பும் இல்லாமல் சொத்துக்கள் வாங்கினாரோ.. அதிலிருந்து.. ஆரம்பம்...

---- திரு ரஜினி அவர்கள் தமிழக மக்களின் பணத்திலிருந்து அல்ல தன் சொந்த பணத்தில் இருந்துதான் வாங்கியுள்ளார். மேலும் அதை தன் சொந்த உழைப்பினால்தான் வாங்கியுள்ளார். தன் சொந்த சம்பாத்தியத்தில் இருந்து சொத்துக்கள் வாங்குவது அரசியல்வாதிகளின் அகராதியில் துரோகம்தான் என நினைக்கிறேன்

கலைஞரை விமர்சிக்கும் தகுதி.. வெறும் ரஜினி ரசிகனுக்கெல்லாம் அருகதை கிடையாது..

------ நான் ரஜினி ரசிகன் மட்டும் அல்ல. இதே உஙகள் கலைஞருக்கு ஓட்டு போட்டவன். இந்த நாட்டின் குடிமகன். ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யவோ கேள்வி கேட்கவோ உரிமை / அருகதை உண்டு. அதுதான் உண்மையான ஜனநாயகம். நீஙகள் இதை மறுத்தால் நடப்பது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம்.

இது வரை ரஜினி என்ன செய்து இருக்கிறார்....
ரசிகர்கள் அவர்கள் காசில் பாலாபிஷேகம் நடத்தவும் கெட்டு சீரழியவுமே உதவியிருக்கிறார்

-------- மற்றவர்கள் விளம்பரத்தோடு செய்வதை ரஜினி விளம்பரம் இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறார். என் நண்பர்கள் வட்டாரத்திலேயே பலருக்கு படிப்புக்காக , திருமணத்திற்காக , தொழிலுக்காக என பல உதவிகள் செய்திருக்கிறார். இதை ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும். இந்த உதவிக்காக அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான்,- அதை விளம்பரபடுத்தக்கூடாது என்பதுதான் அது.

சினிமாவில் காட்டியதையே.. சொந்தமாக செய்தாக கூறும்.. நடிகர்கள் மத்தியில்.. தன்னுடைய ஆட்ச்சியில் நடந்தவற்றை.. தான் செய்த்தது என்று சொல்வதில் என்ன தவறு..
---- ஆக ஆட்சியில்தான் செய்கிறார்கள் , அரசியல்வாதிகள் அல்ல என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். இது தவறா அல்லது சரியா என்பதை மன்ற நணபர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்.

சொத்துக்கள் கர்னாடகத்தில் குவித்தாரே..??

- சொத்துக்கள் கர்நாடகத்தில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் வைத்திருக்கட்டும். வைத்தும் இருக்கிறார். அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதானே. இதில் என்ன தவறை / துரோகத்தை கண்டீர்கள்?? இது அவரைப்பார்த்து அடையும் வயிற்றெரிச்சல் என்று எனக்கு படுகிறது.

சிரிதர்..அவர்களே.. ரஜினி திரையில் சாகசம் காட்டியதோடு சரி.. நிஜத்தில் அவர் கையாகாலா தனம் அவர் குடும்பத்திற்குள்ளேயும் உள்ளது..
---- அவருடையது மட்டுமல்ல எவருடைய குடும்ப விஷயத்தையும் விமர்சிக்க உஙகளுக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமை கிடையாது.

ஞானி ரஜினியை கேட்டது..0.001 சதம் தான்..
ரஜினி மற்றும் ஞானி விஷயத்தில்.. ஒன்றும் தெரியாமல் கலைஞரை இழிவு செய்யும் பதிவுக்கான பதில் தான் இது.....
மன்னிக்கவும்

----- இதை படிக்கும் போது இரு விஷயங்களை எனக்கு சொல்ல தோன்றுகிறது.
1) கலைஞரை நான் இழிவாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. உண்மையத்தான் சுட்டிக்காட்டியுளேன். உண்மை சுடத்தான் செய்யும். இவ்வளவு விளக்கமாக பதில் அளித்துள்ள நீங்கள் அவர் அடித்த பல்டியை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமுடியவில்லையே?? உஙகள் பாஷையில் சொல்வது என்றால் இதுதான் அரசியல் சாதுர்யம்.

) மக்களின் அரசாங்க பணத்தை போட்டு செய்யும் திட்டங்களில் தன் சொந்த காசை போட்டு செய்தது போல விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் நல்லவர்கள். தன் சொந்த பணத்தில் சிலருக்கு உதவி செய்து அடக்கமாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் கெட்டவர்கள்/இளிச்சவாயர்கள்
------- 2) நான் பொதுவாக அரசியல்வாதிகளை பற்றித்தானே விமர்சித்து இருந்தேன். கலைஞரை அல்லவே?? உஙளுக்கு ஏன் சுர்ரென கோபம் வருகிறது?? குற்றமுள்ள நெஞசம் குறுகுறுக்கத்தான் செய்யும்.

இன்னும் பல விஷயங்களை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். ஆனால் அதை சொல்லி நீங்கள் செய்ததுபோல் பிரச்சனையை திசை திருப்ப விரும்பவில்லை.

நான் வீழ்ந்ததாகவே இருக்கட்டும். தமிழும் தமிழர்களாகிய நாம் அனைவரும் வாழ்ந்தால் போதும்.

உதயசூரியன்
13-08-2008, 02:58 PM
இத்திரிக்கும் பல்டி என்று சொன்ன விஷயத்திற்க்கும் சம்பந்தமில்லை என்பதனால் சொன்னேன்
ரஜினி ஞானி.. பற்றிய திரி என்பதானால்.. அது பற்றி பேசலாம்..

கலைஞரை ஞானி விமர்சித்ததை கண்டுள்ளீர்களா..
இப்பொழுதும் புத்தக கன்காட்சியில் ஞானி உட்கார்ந்து இருப்பார் கேட்டு பாருங்கள்.. அவர் எவ்வளவு.. கலைஞரை சாடியிடுப்பார்.. என்று..

அப்புறம் உங்களின் கேள்வி.. என்ன பல்டி.. ஒரு சிறந்த முதல்வர்.. தமிழர்கள் அங்கே கன்னடர்களால் தாக்கபடுவதை அதை வைத்து ஒரு அரசியல் கட்சி அட்டகாசம் செய்வது கன்டு.. அந்த தீயை அனைத்தார்.. ரஜினி பேசியது போல் கலைஞர் அந்த நேரத்தில் பேசியிருந்தால்...??
பேச வேண்டும் .. இடம் பொருள் ஏவல் பார்த்து...பேச வேண்டும்..
அது புத்தி சாலி தனம் இல்லை அது சுயனலம்..

தான் நடித்த படத்துக்கு.. கன்னடகர்களுக்கு மன்னிப்பு கேட்பாராம்.. அதுவும் கன்னடர்களிடம் இருந்து பாடம் கற்று கொண்டாராம்.. அது பொது நல செயலாம்..உங்கள் பதிவில் கேட்ட பல்டிக்கு தான் கலைஞர் தான் பணிகளை தொடங்கியுள்ளாரே..
இன்றும் மு.க ஸ்டாலின் அப்பணிக்கான தலைவரை நியமித்திருக்கிராரே.. படிக்க வில்லையா.. இதையும் பகிரங்கமாக்கி.. கன்னடர்கலை ரஜினி தூண்டி விட செய்தாலும் செய்வார்..

அப்புறம்
உங்கலை நீங்களெ சொல்லும் சமாதானம்.. தான் ரஜினி செய்த செய்யும் செயலுக்கு அர்த்தமில்லாமல் போனது..
ஒரு கெவலமான நடிக்கவும் தெரியாத நட்கனுக்கே.. பொது வாழ்க்கைக்கு முக்கியம் கொடுத்தால்.. அதன் விமர்சனமும் தாங்கி தான் ஆக வேண்டும்..

கன்னட மக்கள் பாடம் கற்று கொடுத்தனர்..
தமிழர்கள்.. ....கள்..
என்பது அவர்களின் ரசிகளின் மூலம்.. தெரிந்து கொண்டார்..Pஓலும்.. அதனால் தான் தமிழர்கள் பாடம் கற்று தந்தனர் என்று ரஜினி ரசிகர்கள் செய்திருக்க வேண்டாமா..

அப்புறம்.. நீங்கள்.. சொன்ன உதவிகள்.. பற்றிய செய்திகள்.. சமாளிப்பு..
என்பது நன்றாக தெரியும்..
உங்கள் வயது அப்படி..என்ன சொல்வது..

என்னுடிஅய எல்ல கேள்விக்கும் நீங்கள் தந்தது ஆக்க பூர்வமான பதிலா..

ஞானி என்ன சொன்னார்..
ரஜினி பேசியது என்ன அதில் என்ன நியாயம்..
குசேலன் ப்ளப்பிற்கு என்ன காரனம்.. இது தானே. இத்திரியில் பெச படுகிறது..

பெசுவோம்
மற்றவரை, கலைஞரை வம்பிழுக்கலாம் விமர்சிக்கலாம்.. அது போல் விமர்சனங்கள் அரசியல் திரியில் உள்லனவே..
இல்லையென்று சொல்ல வில்லையே..

மன்னிக்கவும்

சிவா.ஜி
13-08-2008, 03:10 PM
உழைத்து சம்பாதிக்கும் ரஜினியும், ஊரைக் கொள்ளையடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பமாய் தன் குடும்பத்தை வளர்த்துக்கொண்ட கலைஞரும் ஒன்றா...? பேசிப்பேசியே மக்களை மடையர்களாக்கி, மானாவாரியாய் சொத்து சேர்த்தது...தெரியாதா? தமிழருக்காக வாழும் தமிழராம்...வெட்ககேடு....

ஆதி
13-08-2008, 03:30 PM

என்ன சிவா அண்ணா இப்படி சொல்லிபுட்டிங்க..

இருவருமே தமிழரில்லையே..

இவர் கன்னடர்
அவர் தெலுங்கர்..

இருவருக்கும் உள்ள..

ஒற்றுமை : - வசனம்

வேறுபாடு :-

இவர் பேசி நடிப்பார்
அவர் எழுதி பேசுவார்

உதயசூரியன்
13-08-2008, 03:31 PM
தற்போது கூட இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டுகிர 200பேர் பட்டியலில்.. கலைஞர் பெயரை காணோமே.. சிவாஜி..

அப்புறம்.. ரஜினி. சம்பாதித்ததும் ஒரு ஏமாற்று வேலை தான்.. அவரை விட கடுமையாக உழைத்த பலராலும் முன்னேற வில்லையே..

சிவா.ஜி
13-08-2008, 03:35 PM
அன்பு உதயசூரியன்...இத்தனை அப்பாவியாக இரூக்கிறீர்களே...எந்த அரசியல்வாதி..உலகத்துக்குத் தெரிந்து சம்பாதிக்கிறார்கள்? மாட்டுக்கே தெரியாமல்...மடியைக் களவாடும் சூத்திரம் தெரிந்தவன்தானே அரசியல்வாதி!

உதயசூரியன்
13-08-2008, 03:47 PM
அப்படிங்களா..??
தகவ்லுக்கு நன்றி.. எப்பொழுதும் இளிச்சவாயன் அரசியல் வாதி மட்டுமே..
நன்றி..

ரஜினி ரொம்ப நல்லவர்..
நேர்மையானவர்..
னேர்மையாக சொத்துக்களை வைத்துள்ளார்..
அவர் ஒரு தெய்வம்..
அப்படி தானே..??

ஞானியும் கலைஞரும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ் நாளில் ஒரு நாள் கூட நல்லது நினைக்காத கெவலமானவர்கள்..
ரஜினி மட்டுமே.. தன் உழைப்பால் இந்த தமிழ் நாட்டு தாகம் தீர்க்கும் தமிழன்.. பச்சை தமிழன் அல்லவா..??

மிக்க நன்றி..

ஆதி தவறை திருத்தி கொள்ளுங்கள்.. தவறான தகவல்களை நீங்களே பதிக்கலாமா..??

அன்புரசிகன்
13-08-2008, 03:57 PM

நண்பர் உதயசூரியனுக்கு...

கோபத்தில் வந்த உங்களது பதிவாக எனக்கு தெரிகிறது. எனக்கு ரஜினி மற்றும் கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை விடையங்கள் தெரியாது. கருணாநிதியை எவ்வாறு ஒரு அரசியல் வாதியாக பார்க்கிறீர்களோ அவ்வாறு ஏன் ரஜினியை பார்க்க தவறுகிறீர்கள்???

அவர் கறுப்புப்பணம் வச்சிருக்கார் என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. அவர் சினிமாவை தவிர உழைக்கிறார் என்றால் அது பற்றி நிச்சயமாக எனக்கு தெரியாது. ஆனால் அவர் கோடி கோடியாக சினிமா மூலம் கூட உழைக்கலாம். அது நான் கண்கூறு பார்த்தவன். சிவாஜி திரைப்படத்திற்கு அவர் கேட்டது சம்பளமல்ல. இலாபத்தில் பங்கு என்பது கேள்விப்பட்டது... அது அவரவர் உழைப்பின் திறமையும் வல்லமையும். அதில் நாம் தலையிடமுடியாது. தவிர அவர் அவரது மானிலத்தில் சொத்து சேர்க்கிறார் என்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். எத்தனையோ அரசியல் வாதிகள் வெளிநாடுகளில் சொத்து சேர்க்கும் போது வெளிமாநிலத்தில் சொத்து சேர்ப்பது தவறா???

தவிர ரஜினி தமிழுக்கு என்னசெய்தார் என்று கேட்பதெல்லாம் தேவையற்றது. அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது தமிழ் மக்களின் ஒருவித வெறி எனலாம். அதற்கு மாற்றீடு அவரிடம் எதிர்பார்ப்பது தவறல்ல. கிடைக்காது விடின் அவரை தூற்றுவது நம் பண்பல்லவே...

வந்தாரை வாழவைப்பது தான் தமிழனின் மரபு... திட்டி தீர்ப்பதல்லவே???? நம்மாண்பை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

ஆதி
13-08-2008, 05:29 PM
ஆதி தவறை திருத்தி கொள்ளுங்கள்.. தவறான தகவல்களை நீங்களே பதிக்கலாமா..??

உதய சூரியன்..

//அவர் தெலுங்கர்..//

இந்த வரியைதானே சொல்றீங்க.. இது தப்பான தகவலில்லை உதய சூரியன்.. உண்மையில் நான் கலைஞரின் தமிழுக்கு பெரும் ரசிகன்.. என் பிதாமகர் அவர்.. அவரே முன்னுரை எழுதிய கறுப்பு தமிழனே கலங்காதே என்னும் நூலிலும் இந்த தகவல் உண்டு... கலைஞரின் பால்ய சிநேகிதரான உவமை கவிஞர் சுரதாவும் இதை பல இடங்களில் கூறியுள்ளார்.. பால்ய சிநேகிதர் னா சும்மா இல்லீங்க.. கவிதை எழுதுவதில் இருந்து குறும்புதனம் வரை இருவரும் பலவற்றை இணைந்தே தான் செய்வார்களாம்.. திருவாரூரில் ஒரு தெருவில் வசித்தவர்கள்.. தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்களில் காமராஜர் அண்ணாவை தவிர மற்ற யாரும் தமிழரில்லை என்றொரு கூற்றுண்டு.. ஆராய்ந்து பாருங்களேன்..

ஸ்ரீதர்
14-08-2008, 06:08 AM
அப்புறம் உங்களின் கேள்வி.. என்ன பல்டி.. ஒரு சிறந்த முதல்வர்.. தமிழர்கள் அங்கே கன்னடர்களால் தாக்கபடுவதை அதை வைத்து ஒரு அரசியல் கட்சி அட்டகாசம் செய்வது கன்டு.. அந்த தீயை அனைத்தார்.. ரஜினி பேசியது போல் கலைஞர் அந்த நேரத்தில் பேசியிருந்தால்...??
பேச வேண்டும் .. இடம் பொருள் ஏவல் பார்த்து...பேச வேண்டும்..
அது புத்தி சாலி தனம் இல்லை அது சுயனலம்..

தயவு செய்து கலைஞர் மீது உள்ள விமர்சனத்தை தாங்க முடியாமல் கோபம் கொண்டு பேசுவதை தவிருங்கள்.

என்னுடைய கேள்வியெல்லாம் உண்ணாவிரதத்த்ற்க்கு முன்புவரை இந்த விஷயமெல்லாம் கலைஞருக்கு தெரியாதா?? இந்த் விஷயம் அவராலேயே பெரிதாக்கப்பட்டு பின்னர் அவரே அதில் இருந்து பின்வாங்குவது என்பது பெரிய தலைவருக்கு அழகல்ல.

நீஙகள் சொன்ன அதே காரணத்துக்காகத்தான் ரஜினியும் சொன்ன விளக்கமும். அதை ரஜினி செய்ததால் தவறு என்று வாதிட்டு பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. ” மாமியார் உடைத்தால் மண் சட்டி , மருமகள் உடைத்தால் பொன்சட்டி” என்பது இதுதான் போலிருக்கிறது.

தவிர கலைஞர் ஒன்றும் அங்கே இருக்கும் தமிழருக்காக ஒன்றும் இந்த பல்டியை அடிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இதனால் எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்ற அரசியல் சந்தர்ப்பவாதம்தான் காரணம் என்பது உங்கள் மன்சாட்ச்சிக்கு தெரியும் , அரசியலில் பால பாடம் படிக்கும் குழந்தைக்கும் தெரியும்.அப்புறம்.. நீங்கள்.. சொன்ன உதவிகள்.. பற்றிய செய்திகள்.. சமாளிப்பு..
என்பது நன்றாக தெரியும்..
உங்கள் வயது அப்படி..என்ன சொல்வது..

சமாளிப்பு அல்ல நண்பரே!! உண்மை !! உண்மை!! . உண்மை எது பொய் எது என்று பகுத்தாயும் வயது எனக்கு உள்ளது என்று எண்ணுகிறேன்.

தவிர நான் கலைஞரை ஒரு தமிழனாகவும் , அவருடைய தமிழுக்காகவும் மிகவும் ரசிக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக அவர் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் அவ்வளவே!!

பூமகள்
14-08-2008, 11:27 AM
//அவர் தெலுங்கர்..//

இந்த வரியைதானே சொல்றீங்க.. இது தப்பான தகவலில்லை உதய சூரியன்.. உண்மையில் நான் கலைஞரின் தமிழுக்கு பெரும் ரசிகன்.. என் பிதாமகர் அவர்.. அவரே முன்னுரை எழுதிய கறுப்பு தமிழனே கலங்காதே என்னும் நூலிலும் இந்த தகவல் உண்டு... கலைஞரின் பால்ய சிநேகிதரான உவமை கவிஞர் சுரதாவும் இதை பல இடங்களில் கூறியுள்ளார்.. பால்ய சிநேகிதர் னா சும்மா இல்லீங்க.. கவிதை எழுதுவதில் இருந்து குறும்புதனம் வரை இருவரும் பலவற்றை இணைந்தே தான் செய்வார்களாம்.. திருவாரூரில் ஒரு தெருவில் வசித்தவர்கள்.. தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்களில் காமராஜர் அண்ணாவை தவிர மற்ற யாரும் தமிழரில்லை என்றொரு கூற்றுண்டு.. ஆராய்ந்து பாருங்களேன்..
ஆதி..
கலைஞர் தமிழரல்ல என்பது ஏற்க இயலவில்லை.... எங்கோ தவறு நடக்கிறது.. நிச்சயம் அவர் தமிழர் தான் என்பது பற்றி நான் அறிவேன்..
ஆனால்.. அவற்றை விளக்க.. ஆதாரம் காட்ட விரும்பவில்லை..

இன, மொழி, ஜாதி பேதங்கள் மன்றத்தில் வேண்டாமே... தமிழரென ஆதாரம் காட்ட... இன்னும் உட்பிரிவுகள் பற்றி ஆராய வேண்டி இருக்கும்.. அவை நல்ல மனிதருக்கு அழகல்லவே..

________________________________

பொதுவாக மன்றத்தினர் அனைவருக்கும்..

உலகில் மனிதர் அனைவரும் சமமே.. இதில் தெலுங்கர்.. கன்னடர்.. தமிழர் என்ற பாகுபாடு வேண்டாம்.. குறைந்த பட்சம் நம்மிலிருந்தாவது அப்படி பார்க்காதிருக்கும் உறுதி மொழியை ஏற்போமா??

மன்றத்தில் தமிழைத் தவிர்த்து வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பலர் சிறந்த முறையில் படைப்பாக்கங்கள் தருகின்றனர்.. தருவார்கள்..

மன்றத்தில் எல்லா மனிதர்களும் சமமே..

இவ்வகை பிரிவினைகள் பற்றிய வாதங்கள் இனி வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

சிவா.ஜி
14-08-2008, 12:20 PM
பூமகள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழரை தமிழரென்றும், தெலுங்கரைத் தெலுங்கரென்றும் சொல்வதில் என்ன தவறு? தெலுங்கராய் இருந்தும் அவர்களின் தமிழார்வமும், தமிழ்புலமையும் மெச்சப்படும்போது, குறிப்பிட்டு சொல்லி சிலாகிப்பதில் தவறில்லையே...அதேபோல அவரே அவரை தெலுங்கர் என்று சொல்லிவிட்ட பிறகு ஆதாரம் எதற்கு? இதில் தமிழ்மன்றம் எங்கிருந்து வந்தது? ஆதி தவறாய் எதுவும் சொல்லவில்லையே?

பூமகள்
14-08-2008, 12:29 PM
சிவா அண்ணா...

ஆதி சொன்னதை நான் குறையாகக் கூறவில்லையே...
எனக்கு பிடித்த கருத்தைச் சொன்னேன்... அவ்வளவே...

சிலாகிப்பதும் கன்னடர்.. தமிழர்.. தெலுங்கர் என்று பேசுவதும் விருப்பமெனில் தாராளமாகச் செய்யுங்கள்.. ஆனால்.. பிரிவுகள் வந்துவிடக் கூடாதென்று தான்.. அவ்வாறு பொதுவான ஒரு வேண்டுகோள் விடுத்தேன்..

இதில் ஆதியின் பதிவைத் தவறாகச் சுட்டிக் காட்ட ஏதும் இல்லையே...

புரிதலை நாடி,

உதயசூரியன்
14-08-2008, 12:46 PM
விட்டு விடுங்கள்..
மனதை காய படுத்தாதீர்கள்..

முதலில் இந்த திரியில்.. கலைஞரை வைத்து பேசியதே தவறு..
பொது வாழ்க்கையில் இருப்பவர் மேல் விமர்சனம் வரலாம்..
அனைத்து விமர்சனமும்.. கலைஞர் மீது தான் என்றால்.. எங்களுக்கே தாங்க வில்லை.. அவர் எப்படி தான்..??

சிறு வயது முதல் பொது வாழ்க்கையிலும் பல துறைகளிலும் இருந்து இன்றும் பணியாற்றும் அவரும் ரஜினியையும் ஒன்றாக கூட அல்ல.. ரஜினியை விட.. கேவலமாக கலைஞரை குறிப்பிட்ட இத்திரியில்.. இனியும் என் மனது பாதிக்க கூடாது.. என்று.. நுழையாமல் பதில் தராமல் பார்த்தேன்..
முடிய வில்லை..
ஆதாரம் பல கண் முன் இருந்த ரஜினி செய்திகளுக்கே அதை சரி செய்யும் நம் தமிழர்கள்..
இவ்வளவு தூரம் போவார்கள் என்று...???

எப்பொழுதும் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களது அருமை.. பல பிள்ளைகளுக்கு தெரியாது..
மன்னிக்கவும்..

இத்திரியில்.. யாருக்காவது புண்படும் கருத்துக்களை.. நான் சொல்லியிருந்தாலும்.. என் பதிப்பிர்க்காக மற்றவர் தவறாக பதித்திருந்தாலும்..
நானே முழு மனதுடன்.. பொறுப்பேற்று.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்...

மன்னிப்பு கோருகிறேன்..
தயை செய்து..... விட்டு விடுங்கள்..
காய படுத்தாதீர்கள்..

பங்கெடுப்பவர்கள் ரஜினிக்கு ஞானி எழுதிய கடிதம் மட்டும் பற்றி விவாதித்து கொள்ளுங்கள்..

வருத்தமென்றாலும்.. வாழ்த்துக்கள்...

வாழ்க தமிழ்

சிவா.ஜி
14-08-2008, 12:47 PM
ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவரைவிட, சிறப்பாகக் கற்று அதில் புலமைப் பெறுபவரைக் குறிப்பிடும்போது...'இவர் இந்த மொழியை தாய்மொழியாய்க் கொண்டவரில்லை என்பது சிறப்பு' என்றும் குறிப்பிடுவதுண்டு. அது அவரைச் சிறப்பு செய்யவே. மேலும் மன்றத்தில் ஒருவருடைய தாய்மொழிபற்றி வில்லங்கமாய் எதுவும் யாரும் சொன்னதில்லை. அதனால்தான் உன்னுடைய பதிவு எனக்கு ஆச்சர்யமளித்தது.

ஆதி
14-08-2008, 03:24 PM
முத்தமிழறிஞரின் தாய் மொழி தெலுங்கென்று தான் சொன்னதற்கு காரணம்.. குறளோவியம் தொல்காப்பிய பூங்கா.. சங்க இலக்கியங்களுக்கு உரை என்று அவரின் தமிழாற்றலை வெளிச்சமாக்கத்தான்.. மற்றபடி வேறெந்த குறுக்கு நோக்கமுமில்லை.. என் பதிப்பு யாரையும் புண்ணாக்கியிருந்தால் மன்னிக்கவும்..

தீபா
14-08-2008, 04:22 PM
இங்கே தேவையில்லாமல் திரி திசை மாறூகிறது என்று நினைக்கிறேன்.

ரஜினியும் கலைஞரும் ஒன்றல்ல.. எத்தனையோ விசயத்தில்..

அதேபோல யாரும் நல்லவருமில்லை, கெட்டவ்ருமில்லை...

//
ஆதியின் இறுதி பதில்கூட புரியவில்லை.. தமிழாற்றலை வெளிச்சமாக்க, ஒருவரை இன்னொரு மொழியான் என்று சொல்லலாமா?? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

ஆதி
14-08-2008, 04:54 PM
ஆதியின் இறுதி பதில்கூட புரியவில்லை.. தமிழாற்றலை வெளிச்சமாக்க, ஒருவரை இன்னொரு மொழியான் என்று சொல்லலாமா?? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

இன்று இலக்கிய உலக்குக்கு வருகிற தமிழை தாய் மொழியாய் கொண்ட எத்தனையோ பேர் சோப்பிப்பதில்லை.. ஆனால் சமீபத்தில் அவரின் நூல்களை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.. அவரின் சட்ட சபை உரைகளும் 2 நாள் முன்பு நூலாக்கப்பட்டது.. அவரின் பிறந்த நாள் பதிப்பாளர்களின் நாளாக அறிவிக்கப் பட்டது.. எல்லாம் எதனால் அவரின் தமிழறிவால்.. நாம் முத்தமிழறிஞர் என்றழைக்கும் அவரின் தாய் மொழி தெலுங்கு.. இலக்கிய வரலாறு என்ன சொல்கிறதென்றால்.. தமிழுக்கு தமிழரைவிட அதிகம் சேவை செய்திருப்பது மற்ற மொழியினர்தான்.. இதுதான் என் பதிவின் மறைமுக கருத்து..

தீபன்
16-08-2008, 03:32 AM

உண்மைதான் ஆதி, தமிழகராதி தந்த வீரமா முனிவரிலிருந்து முத்தமிழறிஞர் வரை தமிழுக்கு தமிழரல்லாதோர் செய்யும் சேவைகள் அதிகம்தான்...!

இன்பா
17-06-2010, 10:50 AM
நான் தான் (பச்சை, மஞ்சள், ப்ளூ, பிங்க்) தமிழன் என்று உணர்ச்சி வசப்பட்டு வாய் கிழிய பேசும் பலருக்கு முன்னால் ரஜினி எவ்வள்ளவோ பரவாயில்லை.

xavier_raja
23-06-2010, 10:15 AM
ரஜினியை பற்றி பேச யாருக்கும் (குறிப்பாக ஞானி என்ற பெயர் கொண்ட அந்த நாய்க்கு) யோக்கியதை இல்லை..