PDA

View Full Version : சின்னஞ்சிறு கவிதை



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-08-2008, 04:46 PM
குப்பை மேட்டு
காகிதங்களை
புரட்டி படிக்கிறது
காற்று.

அக்னி
08-08-2008, 04:51 PM
புரட்டிப் படித்த காகிதங்களைக்
குப்பையிற் சேர்க்கின்றது
காற்று...

சிவா.ஜி
08-08-2008, 08:04 PM
சமூகத்திற்கு சேர்க்கப்படாத செய்திகள் குப்பைமேட்டில்தான் சேகரிக்கப்படுகின்றன. உண்மைகள் பலவும் அங்குதான் குடியிருக்கின்றன. அனைவருக்கும் பொதுவான காற்று அதைப் புரட்டிப்பார்த்ததில் ஆச்சர்யமென்ன? கூடியவிரைவில் அந்த உண்மைகள் காற்றால், காற்றில் பரப்பப்படும். விதையூன்றிய ஜுனைத்துக்கு பாராட்டுகள்.

அமரன்
08-08-2008, 08:17 PM
குப்பை மேட்டைக் கிளறினால்
கிளம்புகிறது உயிர்வாயு-
கொல்லி வால் பிசாசெனும் நாமத்துடன்

rajatemp
08-08-2008, 08:17 PM
நன்றாயிருக்கிறது இருவரின் கவிதையும்

மூடாத வீட்டு கணக்குகளை
சரி பார்க்கிறது
மின்விசிறி (சீலிங் ஃபேன்)

நன்றி

அமரன்
08-08-2008, 08:21 PM
குப்பை மேட்டு
காகிதங்களை
புரட்டி படிக்கிறது
காற்று.

பென்சண்ணா எழுதி இருப்பார்
மனக்குப்பையிலிருந்து என்று..
அந்த நினைவுடன் படித்தேன்..
அர்த்த புஷ்டியாகக் கவிதை..
கலக்கல் கவிதை

பூமகள்
09-08-2008, 08:43 AM
குப்பையில் ஒளிந்திருக்கும்
கோமேதகங்கள் பல.. - அதை
நமக்குக் காட்ட.
முயல்கிறதோ காற்று??!!
__________________________________________________________________
கவிதை அருமை ஜூனைத் அண்ணா..

அடுத்தடுத்து வந்த காற்றின் வீச்சும்.. வைரத் தெறிப்புகள்.
பாராட்டுகள். :)

நாகரா
09-08-2008, 10:46 AM
குப்பை மேடு - இகத்தின் இன்றைய அவல நிலை
காகிதங்கள் - அவல நிலையில் ஆழ்ந்திருக்கும் உலக உயிர்த்திரள்(குறிப்பாக மனிதம்)
புரட்டி - அவல நிலையைத் திருத்தி, பரத்தின் உன்னத நிலைக்கு இகத்தைப் புரட்சிகரமாய்ப் பரிமாற்றி
படிக்கிறது - அவ்வுன்னத நிலையில் ஆழ்கிறது
காற்று - பரிசுத்த ஆவி, ஆதி சக்தி, புனித ரு

நல்ல குறியீட்டுக் குறுங்கவி, வாழ்த்துக்கள் ஹஸனீ.

நாகரா
09-08-2008, 10:59 AM
உன்னுள்ளே வந்து
அன்பொளியாம் உயிர் தந்து
வெளியே போய்
உன்னை மெய் வெளியில்
சேர்க்கும் மூச்சுக் காற்று

நாகரா
09-08-2008, 11:05 AM
குப்பை மேட்டு
காகிதங்களை
புரட்டி படிக்கிறது
காற்று.

வன்பெனும் குப்பை மேட்டில்
தேங்கிய மனிதத்தைப் புரட்டி
அன்பெனும் குணக் குன்றில்
ஓங்கச் செய்யும் அருட் காற்று

யவனிகா
09-08-2008, 12:57 PM
மீட்புப்பணி

உதிர்ந்த இலையை
மீட்டு,மீண்டும்
மரத்திடம் சேர்த்தது
காற்று....

இளசு
09-08-2008, 01:32 PM
இது மிக நல்ல கவிதை..

இத்தனை நல்ல கவிதைகளை உற்பத்தி செய்ததால்..

ஜூனீத்துக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள்!


----------------------------
கண்டதைக் கற்று
பண்டிதனாக ஆசை
கொண்டதோ காற்று?

-----------------------------
மெய்ப்பொருள் கண்டிட
குப்பையைக் கிண்டிடும்
திருக்குறள் அறிந்த காற்று!

-------------------------------

நாகரா
09-08-2008, 03:19 PM
மெய்ப்பொருள் கண்டிட
குப்பையைக் கிண்டிடும்
திருக்குறள் அறிந்த காற்று!

குப்பையைக் கிண்டி
மெய்ப்பொருள் கண்டு
திருக்குறள் போதிக்கும் காற்று

இளசு அவர்களின் இரண்டு பின்னூட்டக் கவிதைகளும் அருமை

எம்மைக் கிளறி
எமக்குள் உணர்வைப் புரட்டிக்
கவிதை படிக்கிறது
ஹஸனீக் காற்று!

ஓவியன்
09-08-2008, 04:04 PM
குப்பை மேட்டு
காகிதங்களை
புரட்டி படிக்கிறது
காற்று.

படிக்காததால் குப்பையிலும்
தேடிப் படிக்கிறது
இந்தக் காற்று..!!


புரட்டிப் படித்த காகிதங்களைக்
குப்பையிற் சேர்க்கின்றது
காற்று...

படித்ததால் திமிர் முற்றி
குப்பையில் தள்ளுகிறது
இந்தக் காற்று..!!

ஓவியன்
09-08-2008, 04:06 PM
மீட்புப்பணி

உதிர்ந்த இலையை
மீட்டு,மீண்டும்
மரத்திடம் சேர்த்தது
காற்று....

உதிர்ந்தவை உதிர்ந்தவையாகவே
இருக்கட்டுமென மரம்
உதாசீனம் செய்யவே
மரத்தினடியிலும் குப்பை மேடு..!!

நாகரா
09-08-2008, 04:16 PM
வித்தியாசமான பார்வைகளை வீசிச்
சின்னஞ்சிறு கவிதைகளைப் புரட்டுகிறது
ஓவியக் காற்று

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-08-2008, 10:48 AM
அற்புதமாய் கண நேரத்தில் கவிதைகளைத் தந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் கோடி நன்றிகள்.