PDA

View Full Version : என் யோக்கியத்தனம்!



நாகரா
08-08-2008, 08:33 AM
நான் வடிகட்டின அயோக்கியன் என்று
ஒளிவு மறைவின்றி பகிரங்கமாய்
என்னை உங்கள் முன் அவிழ்க்கிறேன்!
(இது முற்றிலும் உண்மையே!)

shibly591
08-08-2008, 12:05 PM
முரண்தொடை வாக்கியம் போல ஒரு பிரமை ஏற்படுத்துகிறது நண்பரே.

கவித்துவத்தை இன்னும் கொஞ்சம் கலந்திருக்கலாம்...

இன்னொரு முறை படித்துப்பாருங்கள்...

வாழ்த்துக்கள்...

நாகரா
08-08-2008, 03:15 PM
முரண்தொடை வாக்கியம் போல ஒரு பிரமை ஏற்படுத்துகிறது நண்பரே.

கவித்துவத்தை இன்னும் கொஞ்சம் கலந்திருக்கலாம்...

இன்னொரு முறை படித்துப்பாருங்கள்...

வாழ்த்துக்கள்...

நான் ரொம்பவும் யோக்கியன் என்ற பிரமையிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்ளக் கவித்துவத்தைக் கைவிட்டு
உண்மையைச் சொல்லியிருக்கிறேன், ஷிப்லி, அவ்வளவே!

சுகந்தப்ரீதன்
09-08-2008, 08:32 AM
நான் வடிகட்டின அயோக்கியன் என்று
ஒளிவு மறைவின்றி பகிரங்கமாய்
என்னை உங்கள் முன் அவிழ்க்கிறேன்!
(இது முற்றிலும் உண்மையே!)
அப்படியா அண்ணா..??

ஒருவன் தன் தவறை உணர்ந்து திருத்தும் கணமே அவன் நல்வழிக்கு திரும்பி விடுகிறான் என்று எங்கோ படித்த ஞாபகம்..!!:mini023:

அப்படியானால் அயோக்கியன் என்று ஒப்புக்கொண்ட கணமே தாங்கள் யோக்கியமானவராகி விடுகிறீரே..!! அப்புறம் எப்படி அது முற்றிலும் மெய்யாகும்... மாறாக அதுவே பொய்யாகும்..!!:wuerg019:

நாகரா
09-08-2008, 10:51 AM
அயோக்கிய அண்ணனை யோக்கியனாக்க மெய்யைப் பொய்யாக்கும் உன் அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ், சுகந்தத் தம்பி! ப்ரீதன் எனும் பிரியமானவன் உன் பெயருக்குப் பொருந்துது தம்பி!

அமரன்
09-08-2008, 01:14 PM
வடிகட்டல் இருவேறு பொருள் தருகிறது..
வடிகட்டப்பட்ட அயோக்கியன் - யோக்கியன் தானே..

பாராட்ட வயதில்லை.. ஆனாலும் அது தடையில்லை.. மெச்சினேன் அய்யா..

இளசு
09-08-2008, 01:21 PM
நான் அயோக்கியன் என சுயமுணர்தலும் இல்லாத
அயோக்கியர்களுக்கு ஓர் ஆங்கிலப்பெயர் உண்டு -
Psychopath..

இவை இவை என்னிடம் சரியில்லை எனச் சுயக்கணக்கிடும் நபர்களால்
அடுத்தவர் இன்னல்படுதல் குறைவே!

நான் எண்ணி எழுத வந்ததை சுகந்தனும் அமரனும் சொல்லிவிட்டதைக் கண்டு என்னுள் ஆனந்தம்..

வாழ்த்துகள் (அ)யோ(க்)கியருக்கு!

பூமகள்
09-08-2008, 02:08 PM
வடிகட்டல் இருவேறு பொருள் தருகிறது..
வடிகட்டப்பட்ட அயோக்கியன் - யோக்கியன் தானே..
இந்தக் கவிதையில் நான் கண்டதும் இதுவே...!!
மேற்கோள் காட்டிய அமரன் அண்ணாவுக்கு பாராட்டுகள்..!!

வடிகட்டப்பட்ட தூய கவிதைக்கு வாழ்த்துகள்..!! :)

நாகரா
09-08-2008, 04:40 PM
அமரன், இளசு, பூமகள், உம் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.