PDA

View Full Version : அந்நியமான அத்தியாயம்..!பூமகள்
08-08-2008, 06:35 AM
அந்நியமான அத்தியாயம்.!


பாதியில் எழுதப்படாமலே
விடப்பட்ட கதை
ஒன்று மீண்டும்
படிக்க முனைகிறேன்..

முதல் பக்கத்தின்
மூலையில் உடைந்து
சிக்குகிறது மனம்..

கொக்கி போட்ட
வார்த்தையாடல்களில்..
மீதியும் அகப்பட்டுக்
கொ(ல்)ள்கிறது..

பக்கங்கள் கடந்து போக..
தாயின் கைவிட்டுப் போகும்
குழந்தை போல..
விலக மறுத்து
முந்தைய பக்கத்திலேயே
மண்டியிட்டு அழுகிறது..

ஓராண்டு கழித்து
அடுத்த அத்தியாயம்
எழுத முற்படுகையில்..
புரிகிறது..
விலகிப் போன
எழுத்துகளுக்கும்
எனக்குமான
அந்நியம்..!

shibly591
08-08-2008, 06:43 AM
பூமகள் கவிதை வழமை போலவே நச்....

அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் இயல்பான ஒரு விடயத்தை...

அந்நியம் களைந்து விட்டு அத்தியாயத்தை தொடருங்கள் தங்கையே.....

வாழ்த்துக்கள்

பூமகள்
08-08-2008, 06:49 AM
நன்றிகள் ஷிப்லி அண்ணா...

புரிந்த பொருள் கொண்டு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.. புரியாத கதைகள் கவிதையில் உறங்குகின்றன..

தட்டி எழுப்ப யாரெல்லாம் முயல்கிறார்கள்.. பார்ப்போம்..!!

ஒரு பத்து நிமிடங்கள் முன்பு கண நேரத்தில் உதித்த கவி இது... கவிதையில் பிழை இருந்தாலும் சுட்டுங்கள் உறவுகளே..

நன்றிகளுடன்,

shibly591
08-08-2008, 06:52 AM
நன்றிகள் ஷிப்லி அண்ணா...

புரிந்த பொருள் கொண்டு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.. புரியாத கதைகள் கவிதையில் உறங்குகின்றன..

தட்டி எழுப்ப யாரெல்லாம் முயல்கிறார்கள்.. பார்ப்போம்..!!

ஒரு பத்து நிமிடங்கள் முன்பு கண நேரத்தில் உதித்த கவி இது... கவிதையில் பிழை இருந்தாலும் சுட்டுங்கள் உறவுகளே..

நன்றிகளுடன்,


கண நேரத்தில் உதித்த கவியாயினும் கலையாத நேர்த்தி விரவிக்கிடக்கிறது...

தொடருங்கள் தங்கையே.

ஆதி
08-08-2008, 06:54 AM
அத்தியாசம் அத்தியாயம் எது சரியான வார்த்தையாடல் ?

சிவா.ஜி
08-08-2008, 06:58 AM
கவிதையில் சில முரண்பாடுகள் தென்படுகின்றன. விளக்கமாக எழுதமுடியாமல் என்னுடைய பைபாஸ் வழிமுறை தடுக்கிறது. என்றோ எழுதி பாதியில் நிறுத்திய கதை, மீண்டும் படிக்க முனைவதாய் முதல் பத்தி....ஆண்டொன்று கழிந்துவிட்டதாய் கடைசி பத்தி...குழப்பமாக இருக்கிறது. மீண்டும் விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறேன் பூம்மா.

பூமகள்
08-08-2008, 07:05 AM
அத்தியாசம் அத்தியாயம் எது சரியான வார்த்தையாடல் ?
அத்தியாயம் தான்...
எழுத்துப் பிழை.. சுட்டியமைக்கு நன்றி..

சிவா அண்ணா,
பாதி எழுதிய கதை ஓராண்டு பின் படிப்பதாக அர்த்தப்படுத்த எழுதினேன்.. ஓராண்டு என்ற வார்த்தை இடம் மாற்றி கடைசியில் எழுதியதால் வந்த குழப்பமெனக் கருதுகிறேன்..:icon_ush:

மறுபடி படித்து ஆலோசனை சொல்லுங்கள் சிவா அண்ணா..:icon_rollout:

ஆதி
08-08-2008, 07:10 AM
அத்தியாயம் - பாகம்

அத்தியாசம் - கற்பனை

அதான் கேட்டேன்..

shibly591
08-08-2008, 07:13 AM
அத்தியாசம் - கற்பனைஇன்றுதான் இந்தச்சொல்லையே கேள்வியுற்றிருக்கிறேன்...

நன்றி ஆதி...

நாகரா
08-08-2008, 07:30 AM
நீ
கடவுளால் எழுதப்பட்ட
பாதிக் கதை.
மீதிக் கதையை
நீ தான்
எழுத வேண்டும்.
பாதிக் கதையான
உன்னுள் ஆழ
ஆழத்தில் அன்பைக் காண
மீதிக் கதை
பிடி படும்.
கால விரயஞ் செய்யாமல்
உன்னுள் ஆழ்ந்து
ஆழத்தில் அன்பைக் கண்டு
முழுக் கதையை முடித்துக்
கடவுளுக்குப் படிக்கக் கொடு.
முழுமையான உன்னைக்
கடவுள் படிக்கும் போது
தன் அன்பின் உன்னத வெளிப்பாடு கண்டு
பெருமிதப் படுவார்
பெருவாழ்வு வரந்தருவார்
நீயென்னும் முழுக்கதையும்
நிசமாகும்
நிசமாகும்
நிசமாகும்!

கவிதை அருமை பூமகள், இப்படி ஒரு பரிமாணம் எனக்குத் தெரிகிறது உன் கதை பற்றிய கவிதையில், வாழ்த்துக்கள் தங்காய்

அமரன்
08-08-2008, 01:46 PM
வாழ்க்கையில் பல உணர்வுகள் புரிந்துகொள்ளபடமாலே கரைந்து விடுகின்றன..

முதல் பக்கத்தில் முடமாகிப் போன மனது வார்த்தையாடல்களில் சிக்கித் தவிக்கிறது.. ஆனாலும் முன்னேறத் துடிக்கிறது.. விசுக்கி விசுக்கி நடந்து கோணல் மாணலாக கீறி பின்பு தப்புச்செய்ததாய் நினைந்து தாயின் முன் மண்டியிட்டு விசும்பியபடி மன்னிப்பு கோருகிறது..

இந்தக்கவிதை முதிர்கன்னியாகாமல் இருக்கக்கடவது..

பூமகள்
08-08-2008, 02:00 PM
ஆதி சுட்டிய வார்த்தை மூலம் நானும் புதிய வார்த்தை கற்றேன்..
அப்படியே விட்டிருந்தாலும் அர்த்தப்படுமோ??!! ;)
சுட்டியமைக்கும் அர்த்தம் தந்தமைக்கும் நன்றி.

நாகரா அண்ணாவின் கவிதை அழகு... எது எழுதினாலும்.. அதை கடவுளோடு மெய்ஞானமாக்கிக் காட்டுகிறீர்கள்..

நன்றி..

அமரன் அண்ணா,
வழமை போல்.. மூன்றாவது கண்ணோட்டப்பார்வை..

உங்கள் பின்னூட்டத்தை புரிந்தும் புரியாமலும் நான் வழக்கம் போல்...!! :D:D

நன்றிகள் அனைவருக்கும்..!

அமரன்
08-08-2008, 02:04 PM
வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால் பக்கங்கள் உறவுகள்.. எழுத்துக்கள் உணர்வுகள்..
இன்னும் இன்னும் எழுதவேண்டும் நான் புரிந்துகொள்வதுக்கு.. நீங்களும்தான்..

mukilan
08-08-2008, 02:53 PM
உடைந்த உறவுகளையும் பாதியில் எழுதப்படாத ஒரு அன்பு இலக்கியத்திற்கு (நன்றி: வாலி) ஒப்பிடலாம்.

அப்படி உடைந்த உறவினை என்றேனும் நினைக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் கடந்து சென்ற அந்த நாட்களின் நினைவுகள் வந்து கொல்லக் கூடும். உறவின் துவக்க நிலை எப்பொழுதுமே மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும்.(அப்பொழுது நாம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அபிப்ராயத்தை ஆழ்ந்து நேசிக்கத் துவங்குவோம்.. அந்த பிம்பம் கலைந்து போனால் உறவும் உடைந்து போகும்)

அப்படியான சுவையான நினைவுகள் நம்மை கொக்கி போட்டு இழுத்து வைத்துக் கொ(ல்)ள்ளும். குழந்தையைப் போன்றதுதான் மனதும். தான் நினைத்தது நடக்காது போனாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த சுவையான நினைவுகளோடு மட்டும் சிநேகம் கொண்டிருக்கும். உணமை அப்படியல்ல என ஒப்புக்கொள்ள இடமளிக்காது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உண்மை புரிந்து உடைந்த மனங்கள் சேர இயலாததையும் சிநேகம் தூரமாகிப் போனதையும் புரிய முற்படலாம்.

இப்படியெல்லாம் என்னை கற்பனை செய்ய வைக்காதே தங்கையே.

எந்த விடயமானாலும் அதை அழகுத்தமிழில் கவிதையாய் வடிக்கும் அரிய கலை கைவரப் பெற்றுள்ளாய். உன் கவித்திறமை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

சுகந்தப்ரீதன்
09-08-2008, 08:43 AM
வாழ்த்துக்கள் முகிலன் அண்ணா..!!

இந்த கவிதையை படிக்கையில் எனக்கு தோன்றிய விடயம் அப்படியே உங்கள் பதிவிலிருக்கிறது.. (எனக்கு எழுத்துவேலையை குறைச்சிட்டீங்க..நன்றி..)

பூமகளே.. இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்.. எழுதிய அன்பு இலக்கியம் இங்கு தவறாகலாம்..(நன்றி:வாலி)... இதெல்லாம் வாழ்க்கையில சகஜமம்மா... போ..போ.. போயி அடுத்த அத்தியாத்தை படிக்கிற வழியை பாரும்மா... அதவிட்டு முதல் அத்தியாத்தை நினைச்சி முகாரி ராகம் பாடிட்டு இருக்கியே..நியாயமா..??

கணநேரத்தில் எப்படித்தான் உங்களுக்கெல்லாம் கவிதை எழுத முடியுதோ.. பொறாமை கலந்த எனது பாராட்டுக்கள்..உங்களுக்கு..!!

செல்வா
09-08-2008, 09:44 AM
அத்தியாயம் - பாகம்

அத்தியாயம் - பாகம் சரியல்லவே....
அத்தியாயம் சிறு பிரிவு. பாகம் பெரும் பிரிவு.
கல்கியின் தொடர் நாவல்கள் சாண்டில்யனின் தொடர் நாவல்கள். அது பாகங்கள்.
ஒவ்வொரு பாகத்திற்குள்ளும் பல அத்தியாயங்கள்.
மன்றத்தில் இது தவறாகக் கையாளப்படுகிறது.

செல்வா
09-08-2008, 09:51 AM
தொடர நினைத்தாலும்.... கருக வைத்த வார்த்தைகள்.
நாவினால் சுட்ட வடுக்கள். மறக்க நினைத்தாலும் நினைக்க வைத்துக் கூத்தாடும் மனது.
நடந்ததை மறந்து நடப்பதை நினைக்க நினைத்தாலும் மறக்க விடாமல் தொடரும் கழிந்த அத்தியாயங்கள்.
ஹ்ம்...
சிக்கலான உறவுகள் அதைவிடச் சிக்கலான மனம்....
எங்கெங்கோ என்னை இழுத்துச் செல்கின்றது கவிதை...
கவிதைக்கு வாழ்த்துக்கள்...
கதை எழுதுபவருக்கும் வாசகருக்கும் நல்ல அனுபவத்தைக் கொடுக்குமென்றால் தொடரலாம்
குழப்பமும் கவலையுமே மிஞ்சுமென்றால் மூடி வைத்துவிட்டு புதியகதை எழுதலாம்.
வாழ்த்துக்கள் பூமகள்.
முந்தைய அத்தியாயங்களின் பாதிப்புகள் இல்லாமல் புதிய அத்தியாயத்தை எழுதுவதென்பது படைப்புகளைப் பொறுத்தவரை இயலாது அல்லவா?
முந்தைய அத்தியாயத்தின் தொடர்ச்சி இல்லாமல் போனால் கதை அந்தரத்தில் .... அல்லவா...?
குழப்பமான உவமையோ எனத் தோன்றுகிறது.
இன்னும் ஒன்று செய்யலாம். அதே கருவை எடுத்துக் கொண்டு புதியதாக எழுதலாம். பழைய கதையை கடாசிவிட்டு.
---- புரியுதாங்க நான் சொல்றது.... :D:D:D

poornima
09-08-2008, 10:11 AM
அப்படி என்ன படித்தீர்கள் பூமகள் அழுத்தமாய் பதிந்து
போகுமளவுக்கு :-)
சற்றே உங்கள் கவிதையை கொஞ்சூண்டு மாற்றிப் பொருள் கொள்ள
இழந்து போன இளமை -முடிவை நோக்கும் பருவம் என்றெல்லாம் பல பரிமாணங்கள் விரிகிறது பூமகள்.. நான் இன்னும் வேறுபட்டு சிந்திக்கிறேன்.

படிமத்தை உள்ளே வைத்து பொருள் பொதிந்த கவிதை.பாராட்டுகள்

ஆதி
09-08-2008, 10:42 AM
அத்தியாயம் - பாகம் சரியல்லவே....
அத்தியாயம் சிறு பிரிவு. பாகம் பெரும் பிரிவு.
கல்கியின் தொடர் நாவல்கள் சாண்டில்யனின் தொடர் நாவல்கள். அது பாகங்கள்.
ஒவ்வொரு பாகத்திற்குள்ளும் பல அத்தியாயங்கள்.
மன்றத்தில் இது தவறாகக் கையாளப்படுகிறது.

அத்தியாயம் - chapter, section, division இப்படி பல அர்த்தம் தருது டா.. அதான் பாகம் னு சொன்னேன்.. நீ சொன்னதும் சரி.. நான் சொன்னதும் சரி.. :)

செல்வா
09-08-2008, 11:28 AM
அத்தியாயம் - chapter, section, division இப்படி பல அர்த்தம் தருது டா.. அதான் பாகம் னு சொன்னேன்.. நீ சொன்னதும் சரி.. நான் சொன்னதும் சரி.. :)
chapetr <> part
அத்தியாயம் <> பாகம்
:D:D:D:D:D

இளசு
09-08-2008, 01:50 PM
பாமகளின் கவிதைக்கும் பலமான பின்னூட்டம் தந்த அனைவருக்கும் பாராட்டுகள்..

எனக்கு யவனிகாவின் இக்கவிதை நினைவுக்கு வந்தது -
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=367763#post367763

யவனிகா
09-08-2008, 03:06 PM
நல்ல கவிதை பூ...

ஆரம்பித்து எழுதாமல் விடப்பட்ட கதையை...எனக்கு ஏனோ காதலுடன் ஒப்பிடத்தோன்றியது...அழகான வரிகள்...

சில நேரத்தில் காதலும் அப்படித்தான் ஆரவாரமான வார்த்தைகள் வந்து விழும் ஆரம்பத்தில்...ஒரு சில காலத்தில் அந்நியப்பட்டு நிற்கும் போது கூட முடிக்கப்படாத கதையானாலும் கூட மனதில் முடிச்சாகத் தங்கிப்போவதுண்டு...சிக்கல் அவிழ்க்கப்படாமலேயே கடைசி வரை இருக்கக்கூடும் சில முடிச்சுகள்...

நீ எதையோ நினைத்து எழுத...நான் எதையோ நினைத்துப் பின்னூட்டமிடுகிறேனோ...தவறென்றால் மன்னித்து விடு தோழியே.

பென்ஸ்
10-08-2008, 07:06 PM
அன்பின் பூமகள்...

பாராட்டுகள்... மனபடிவங்களை கவனமாக தீட்டி கையாண்டமைக்கு....

கதைகள் வாசிக்கபடும்போது, இடையிலே மனம் விட
அவசரம் காரணமாகலாம்.. இல்லை
கதையின் போக்கு பிடிக்காமையாயிருக்கலாம் .. இல்லை
எதாற்சையாய் துவங்கபட்ட கதையாய் இருக்கலாம்.

துவங்கபட்ட கதை தொடர பல காரணங்கள்....

மூடிவைக்கபட்ட கதை மீண்டும் தொரரும் போது, கொக்கி போட்ட வார்த்தைகள் முன் பக்கத்திற்க்கும் , பின் பக்கத்திற்க்கும் அலைக்களிக்கும்....

ஒருவருட இடைவேளி.. நிதானம்...
காலம் சொல்லும் பதில்....

இந்த அந்நியம்.. நியாயம்.....

நான் புரிந்தேன் என்று நீ புரிந்திருந்தால்... நன்று...

இல்லை... கவிதையின் இன்னொரு கருவென்று கொள்....

பூமகள்
13-08-2008, 06:51 AM
முகிலண்ணா...

நேர்த்தியான விமர்சனம்... கருத்துச் செறிவு அதிகம்.. உங்கள் திறன் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது..

நன்றிகள் கோடி முகிலண்ணா..! :)

அன்பின் சுகு..

உனது வரிகளும் மேற்கோளும் அருமை... ஆடிக்கொரு தரம் நமக்கு கவிதை வரும்.. அதையெல்லாம் நம்பி பொறாமைப்படுமளவு திறமை இருக்குன்னு நினைச்சிராதே சுகு....

உன்னோட அன்பான பின்னூட்ட விமர்சனத்துக்கு எனது மனமார்ந்த நன்றி சுகு..!! :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 07:33 AM
ம். பரவாயில்லை. ஏதோ உங்க கவிதைக்கு 99.5 மார்க் போடலாம்.

பூமகள்
13-08-2008, 07:52 AM
வாழ்த்துக்கள் பூமகள்.
முந்தைய அத்தியாயங்களின் பாதிப்புகள் இல்லாமல் புதிய அத்தியாயத்தை எழுதுவதென்பது படைப்புகளைப் பொறுத்தவரை இயலாது அல்லவா?
முந்தைய அத்தியாயத்தின் தொடர்ச்சி இல்லாமல் போனால் கதை அந்தரத்தில் .... அல்லவா...?
குழப்பமான உவமையோ எனத் தோன்றுகிறது.
இன்னும் ஒன்று செய்யலாம். அதே கருவை எடுத்துக் கொண்டு புதியதாக எழுதலாம். பழைய கதையை கடாசிவிட்டு.
---- புரியுதாங்க நான் சொல்றது.... :D:D:D
புரியுதுங்க செல்வா அண்ணா..
முந்தைய அத்தியாயத்தின் படிப்பினைகள் தானே அடுத்த அத்தியாயத்தின் வெற்றிக்கு காரணமாகும்??!!

ஆகவே.. படிக்காமல் விடுவது சாத்தியமில்லை.. வலி கொடுக்கும் என்பதற்காக.. ஊசி போடாமல் இருந்தால் நோய் தீருமா??!!

நலமடைய வலியைப் பொறுத்துப் போவதில்லையா..?? அது போல் சிலப்பல ஊசிகள் மன பலமேற்ற நெஞ்சில் ஏற்றியாக வேண்டியது கட்டாயம் தானே??!!

ஆழமான பார்வையில் பின்னூட்டம்...

நன்றிகள் பலப்பல செல்வா அண்ணா. :)

சற்றே உங்கள் கவிதையை கொஞ்சூண்டு மாற்றிப் பொருள் கொள்ள இழந்து போன இளமை -முடிவை நோக்கும் பருவம் என்றெல்லாம் பல பரிமாணங்கள் விரிகிறது பூமகள்.. நான் இன்னும் வேறுபட்டு சிந்திக்கிறேன்.

படிமத்தை உள்ளே வைத்து பொருள் பொதிந்த கவிதை.பாராட்டுகள்
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த பூர்ணிமா அவர்களுக்கு நன்றி...!!
மன்னிச்சிருங்க பூர்ணிமா...
நினைவாற்றல் கொஞ்சம் குறைவெனக்கு.. ஆகவே படிச்சது என்னவென்று நினைவில் இல்லை...!! :icon_ush::icon_rollout:

பாராட்டி பின்னூட்டமிட்டதுக்கு நன்றிகள். :)

பூமகள்
13-08-2008, 08:09 AM
பாமகளின் கவிதைக்கும் பலமான பின்னூட்டம் தந்த அனைவருக்கும் பாராட்டுகள்..

எனக்கு யவனிகாவின் இக்கவிதை நினைவுக்கு வந்தது -
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=367763#post367763
நன்றிகள் பெரியண்ணா...:)
விமர்சனம் விடுத்து பாராட்டு மட்டும்..:icon_rollout::confused:
ஒருவேளை பெரியண்ணாவின் மனசாட்சி பென்ஸ் அண்ணல் சொல்ல வேண்டுமென்ற வழிகாட்டலோ??!! :confused::icon_ush: :rolleyes:
எப்படியாயினும்.. பின்னூட்டம் பெற்றதே மகிழ்ச்சி..
யவனி அக்காவின் அர்த்தம் பொதிந்த கவிச்சமருக்கு உங்களோடு நானும் பெரும் விசிறி தான் அண்ணா..!!:icon_b:

ஆரம்பித்து எழுதாமல் விடப்பட்ட கதையை...எனக்கு ஏனோ காதலுடன் ஒப்பிடத்தோன்றியது...அழகான வரிகள்...

சில நேரத்தில் காதலும் அப்படித்தான் ஆரவாரமான வார்த்தைகள் வந்து விழும் ஆரம்பத்தில்...ஒரு சில காலத்தில் அந்நியப்பட்டு நிற்கும் போது கூட முடிக்கப்படாத கதையானாலும் கூட மனதில் முடிச்சாகத் தங்கிப்போவதுண்டு...சிக்கல் அவிழ்க்கப்படாமலேயே கடைசி வரை இருக்கக்கூடும் சில முடிச்சுகள்...

நீ எதையோ நினைத்து எழுத...நான் எதையோ நினைத்துப் பின்னூட்டமிடுகிறேனோ...தவறென்றால் மன்னித்து விடு தோழியே.
தங்கையைத் தோழியாக்கிவிட்டீர்களே :eek::eek: யவனி அக்கா...:p:cool::rolleyes:
ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வை கோணத்திற்கேற்ப மாறுகிறது கவிப்பொருள்..:icon_ush:

பெருமிதம் கொள்கிறேன்...:icon_rollout: இதற்கு எதற்கக்கா மன்னிப்பெல்லாம்??!!:fragend005::frown:

முடிச்சுகளோடு விழுந்த உங்கள் அறிவார்ந்தப் பின்னூட்டம்..
பல சிக்கல்களை சிதறடிக்கும் ஆற்றல் பெற்றது..

தங்கையின் கவிதைக்கு விமர்சித்து தங்கையைப் பெருமை அடையச் செய்துவிட்டீர்கள்.. நன்றிகள் யவனி அக்கா. :)

பாராட்டுகள்... மனபடிவங்களை கவனமாக தீட்டி கையாண்டமைக்கு....
நீண்ட நாட்களுக்கு பின்.. வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற உணர்வு..

பென்ஸ் அண்ணாவின் விமர்சனம் சாமானியமாக வராதெனக் கண்டிருக்கிறேன்.. :rolleyes:
நன்றிகள் பென்ஸ் அண்ணா.. :)

கதைகள் வாசிக்கபடும்போது, இடையிலே மனம் விட
அவசரம் காரணமாகலாம்.. இல்லை
கதையின் போக்கு பிடிக்காமையாயிருக்கலாம் .. இல்லை
எதாற்சையாய் துவங்கபட்ட கதையாய் இருக்கலாம்.

துவங்கபட்ட கதை தொடர பல காரணங்கள்....

மூடிவைக்கபட்ட கதை மீண்டும் தொடரும் போது, கொக்கி போட்ட வார்த்தைகள் முன் பக்கத்திற்க்கும் , பின் பக்கத்திற்க்கும் அலைக்களிக்கும்....

ஒருவருட இடைவேளி.. நிதானம்...
காலம் சொல்லும் பதில்....

இந்த அந்நியம்.. நியாயம்.....

நான் புரிந்தேன் என்று நீ புரிந்திருந்தால்... நன்று...

இல்லை... கவிதையின் இன்னொரு கருவென்று கொள்....மன நல நிபுணர்... கவிமனம் புரியாமல் இருக்க இயலுமா என்ன??!! :p:icon_b:

தெளிவாகவே புரிந்திருக்கிறீர்கள்..!! :icon_b::icon_b:

மன அறுவை சிகிச்சை அளித்த பின்னூட்ட வேந்தருக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்..!! :)

பூமகள்
13-08-2008, 08:44 AM
ம். பரவாயில்லை. ஏதோ உங்க கவிதைக்கு 99.5 மார்க் போடலாம்.
தாராளப் பிரபுவே...!!
இத்தனை அதிக மதிப்பெண் கொடுத்து என்னை கலங்கடிக்க வைக்கிறீர்களே...:sprachlos020::sprachlos020: :redface:

திருத்தவே இல்லை அதற்குள் மதிப்பெண் கொடுத்தால் எங்ஙனம் ஏற்க முடியும் சுனைத் டீச்சர்..?? :confused::eek::eek:

கொஞ்சம் பரிச்சைத் தாளைத் திருத்தி விமர்சியுங்களேன்..!! :icon_ush: :icon_rollout:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 09:48 AM
காலேஜ்ல படிச்சு கொடுத்த காலத்துலயே பேப்பர திருத்தாம ஆளைப் பாத்து மார்க் போடுற ஆளு நானு. நல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு. அதுவும் என்னைய பாத்து. ( புரியலங்கறத எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்த பொழப்புக்கு எங்கனாச்சும் போயி அரிசி பருப்பு விக்கலாம்).

வசீகரன்
13-08-2008, 09:58 AM
எதையோ ஒன்றை இழப்படர்க்கு மனது ஒத்துக்கொள்ளவில்லை,
ஏதோ ஒன்று நம்மை விட்டு செல்கிறது, பிரிவதற்க்கு மனம் இயம்பவில்லை, எந்த ஒன்று என்று நீங்கள் கூறாவிட்டாலும் கோர்த்த மாலையாக அமைந்திருக்கிற வரிகள், உட்கரு வைத்து கவிதையாக சொல்லி இருக்கும் விதமும், பூமகளின் இன்னொரு
உணர்வுப்பூர்வமான கவிதையாக அமைந்திருக்கிறது..!
பாராட்டுக்கள் பல உங்களுக்கு, அருமையாக உள்ளது