PDA

View Full Version : காணவில்லை



"பொத்தனூர்"பிரபு
08-08-2008, 01:18 AM
காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காண்வில்லை
தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?
பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?
அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம் மறைத்த
நிலவே - நீ
திருடினாயா?
வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?
பச்சை புல்வெளியில்
படுத்து தூங்கிய
தூக்கத்தில்
தொலைத்தேனோ?
பாவாடை சட்டைக்காரி
பார்த்து சென்ற
ஏக்கத்தில்
தொலைத்தேனோ?
வாடை காற்று
வந்து
வழிப்பறி செய்ததோ?
காளை மாட்டு
கழுத்து மணியோசை
களவாடி சென்றதோ?
ஆற்றங்கரை மண்லை
அள்ளி பார்த்தேன்
ஆகயத்தை கொஞ்சம்
கிள்ளி பார்த்தேன்
எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............

http://priyamudan-prabu.blogspot.com/




http://priyamudan-prabu.blogspot.com/

இளசு
08-08-2008, 06:32 AM
ரசிக்கத் தெரிந்த மனசு கேட்கும் சுகமான கேள்விகள்..

பாராட்டுகள் பிரபு அவர்களே..

சுயமும் இழக்காமல், இணைவதால் '' முழுமையாகவும்'' ஆவதாய் எண்ணி
இயற்கை உயிருக்குள் ஊற்றும் மனமுயற்சி இது..

என்னை இழந்தேன், என்னை உன்னில் கண்டேன் என்பதெல்லாம்
இயற்கை சுற்றும் இனிப்பு உறைகளே!

உறைகள் மட்டுமே முழு உண்மையில்லை!
உறைகள் இல்லாமல் சுவையில்லை.. கவர்ச்சியில்லை!

எல்லாம் இயற்கை மயம்!

வாழ்த்துகள்!

shibly591
08-08-2008, 06:37 AM
ஒரே அடுக்கில் அழகான கவிதை பிறந்திருக்கிறது....

திருட்டு என்பது எப்படியெல்லாம் இருக்கும் என இப்போது தெளிவாக உணர்கிறேன்...

உண்மையில் எல்லோருமே திருடர்கள்தான்....திருடும் இடமும் நோக்கமுமே அதன் உள்ளார்ந்தத்தை நிர்ணயிக்கின்றன இல்லையா...????

அதிலும் காதல் திருட்டு ரொம்பவும் கொடுமை...பொருள் பணம் இழந்தாலும் சம்பாதித்துவிடலாம்...காதலில் மனதை தொலைத்தால்.......அதோ கதிதான்..

அழகாகச்சொன்னீர்கள் பிரபு....வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
09-08-2008, 12:14 AM
நன்றி இளசு,சிப்லி(சரியா எழுதிடெனா?)

சுகந்தப்ரீதன்
09-08-2008, 08:24 AM
எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............
எவ்விடம் தேடியும் கிடைக்கவில்லை என்றால்.. அதில் அவளும் அடக்கம்தானே பிரபு.. அப்புறம் எப்படி அவளிடம் மட்டும் கிடைக்குமாம்..??:fragend005::fragend005:

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்..

அதனால தேடுங்க பிரபு.. தேடுங்க.. தினம்தினம்..!!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

"பொத்தனூர்"பிரபு
09-08-2008, 09:24 AM
அனைவருக்கும் நன்றி

lenram80
09-08-2008, 11:31 AM
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

"பொத்தனூர்"பிரபு
03-09-2008, 12:25 AM
நன்றி லென் ராம்

lolluvathiyar
28-09-2008, 06:19 AM
எவ்விடம் தேடியும் கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால் கிடைக்குமோ?-என்காதலியே............

அவ்விடம் எட்டி பாத்தாலே போதும் கிடைத்துவிடும். அங்கு தேட வேன்டிய அவசியமில்லை. அங்கும் தேட வேன்டி அளவுக்கு ஜனதொகை இருந்தால் அர்த்தமே மாறிவிடும் ஹி ஹி

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 02:57 PM
//////////
அவ்விடம் எட்டி பாத்தாலே போதும் கிடைத்துவிடும். அங்கு தேட வேன்டிய அவசியமில்லை. அங்கும் தேட வேன்டி அளவுக்கு ஜனதொகை இருந்தால் அர்த்தமே மாறிவிடும் ஹி ஹி
///////////

ஐயா!!!!!!!!!!
லொள்ளு வாத்தியாருனு பெயர்வச்சது யாருங்க???????
சரியான பெயர்