PDA

View Full Version : கவிதைத்தோல்வி

shibly591
07-08-2008, 05:52 PM
நீ பல்லிளித்து விட்டுப்போகிறாய்
தோற்றுப்போகின்றன
எனது கவிதைகள்.

நாகரா
08-08-2008, 02:46 AM
நீ பல்லிளித்து விட்டுப்போகிறாய்
தோற்றுப்போகின்றன
எனது கவிதைகள்.

உன் புன்னகையே
என் கவிதைகளின்
வெளிச்சம்

வாழ்த்துக்கள் ஷிப்லி

shibly591
08-08-2008, 06:05 AM
அவசரத்தில் பதிவேற்றப்பட்ட கவிதை இது...

ஆயினும் பாராட்டிய நாகரா... என்றும் நன்றிக்குரியவர்.

இளசு
08-08-2008, 06:24 AM
அவசரமா? என்ன அவசரம் ஷிப்லி?

முகம் என்பதற்கும் மூஞ்சி, முகரை என்பதற்கும்
ஒரே பொருள்தான் -பயன்படுத்தும் இடங்கள் வேறு!

இளகிய மனதும் , இளிச்சவாய்த்தனமும் ஒன்றல்லவே!

Child-like: Childish - போல!
குழந்தைத்தனத்துக்கும், ''சிறுபிள்ளத்தனத்துக்கும்'' - வேறுபாடு உண்டு!

புன்னகை, சிரிப்பு, முறுவல்,மந்தகாசம், முகமலர்தல் - எல்லாம் இருக்க
பல்லிளிப்பு சொல் வந்ததால் நாலு அரிசியில் ஒரு கல்போல் இடறல்..

மற்றபடி சொல்ல வந்த கருத்து அழகே! பாராட்டுகள்..

உன் புன்னகையே
என் கவிதைகளின்
வெளிச்சம்

நாகரா அவர்களே,

உங்கள் அழகிய கவிதை வாசித்தவுடன்,

மன்றத்தில் முன்பு வாசித்த வேறொரு நல்ல கவிதை
நினைவுக்கு வந்தது..

மின்வெட்டு!
விழிகளைத் திற..
தொடர்ந்து வாசிக்க வேண்டும்!!

பாராட்டுகள்!

shibly591
08-08-2008, 06:32 AM

சரியாகப்பிடித்துக்கொண்டீர்கள் இளசு அண்ணா....

பல் எனும் சொல் வரும்போது இளிப்பு என்பதைத்தவிர வேறு ஒழு சொல்லும் எனக்கு அகப்படவில்லை..அதனால்தான் ஒரு மாதிரியான கவிதை பிறந்துவிட்டது..

உங்கள் விளக்கச்சொற்கள் எனக்கு இன்னொரு கவிதை எழுதும் கருவை தந்திருக்கிறது...முயற்சித்து அவசரப்படாமல் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்...

நன்றி அண்ணா...உங்கள் விளக்கம் மிக அருமை....

அவசரம் என்பதை விட அறியாமை என்பதே சரியெனத்தோன்றுகிறது எனக்கு...

நன்றிகள்

இளசு
08-08-2008, 06:36 AM
உன் பல்வரிசை பளிச்சிட்டது
என் கவிதைகள் ஒளிமங்கின

-- இப்படி தேத்தியிருக்கலாமோ ஷிப்லி?

விமர்சனங்களை ''கூட்டு மனதுடன்'' எதிர்கொள்ளும் பாங்குக்கு என் பாராட்டுகள்!

சிவா.ஜி
08-08-2008, 06:37 AM
சிரிப்பைத் தெளித்த
உன் பற்களின் முன்
தோற்றுப்போகிறது
என் கவிதைகள்...!

சொல்ல வந்தது நன்று, உபயோகித்த வார்த்தையில்தான் அவசரம் தெரிகிறது. அவசரமேயில்லாமல் இன்னும் அழகுக் கவிகளைப் படையுங்கள் ஷிப்லி. வாழ்த்துகள்.

நாகரா
08-08-2008, 06:37 AM
மின்வெட்டு!
விழிகளைத் திற..
தொடர்ந்து வாசிக்க வேண்டும்!!

அழகிய குறுங்கவி பகிர்ந்தமைக்கு நன்றி இளசு.

ஷிப்லி, கவிஞர்களுக்கு அவசரங் கூடாது, நிதானம் மிகவும் அவசியம், பொருட் குற்றம் நேர்ந்து விடப்போகிறது, அது பெருங்குற்றம், கவனம்!

இளசுவின் பின்னூட்டத்தை ஊன்றிப் படியுங்கள், ஷிப்லி.

மற்றபடி உம் குறுங்கவிப் பெருக்கு அருமையாய் இருக்கிறது, தொடர்ந்து பகிருங்கள்.

shibly591
08-08-2008, 06:39 AM
நன்றி சிவா.ஜி...

உங்கள் கவி வடிவமும் நேர்த்தியாகத்தான் இருக்கிறது...நன்றிகள்

shibly591
08-08-2008, 06:39 AM
நன்றி இளசு......

அதென்ன "கூட்டு மனப்பாங்கு.."

கொஞ்சம் சொல்லலாமே.......

shibly591
08-08-2008, 06:41 AM
அழகிய குறுங்கவி பகிர்ந்தமைக்கு நன்றி இளசு.

ஷிப்லி, கவிஞர்களுக்கு அவசரங் கூடாது, நிதானம் மிகவும் அவசியம், பொருட் குற்றம் நேர்ந்து விடப்போகிறது, அது பெருங்குற்றம், கவனம்!

இளசுவின் பின்னூட்டத்தை ஊன்றிப் படியுங்கள், ஷிப்லி.

மற்றபடி உம் குறுங்கவிப் பெருக்கு அருமையாய் இருக்கிறது, தொடர்ந்து பகிருங்கள்.

உண்மைதான் நாகரா...

எனது வளர்ச்சியில் விழிப்பாயிருக்கும் மன்ற உறவுகளின் அக்கறையில் நெகிழ்ந்து போகிறேன்..

இளசு
08-08-2008, 06:42 AM
கழிக்கும் மனப்பான்மை - negative mental attitude
கூட்டு மனப்பான்மை - positive mental attitude -PMA

எதிலும் நல்லதைக் கண்டு எடுத்துக்கொள்ளும் மனமே
அழற்சியாகாமல் மேலும் உயரும்.. இல்லையா ஷிப்லி?

பூமகள்
08-08-2008, 06:42 AM
ஏதோ கோபத்தில் காதலியைத் திட்டுவதாக தோற்றம் வருகிறது ஷ்ப்லி அவர்களே...

பெரியண்ணா சொன்ன பின் நான் சொல்ல ஏதும் இல்லை..

கவிதையில் அவசரம் இருந்தாலும் பதிக்கும் முன்பு மறுபடி படித்துத் திருத்தினால் நலம்..

நாகரா அண்ணாவின் முரண்கவி ரசித்தேன்..

அண்ணல் சுட்டிய குறுங்கவி அருமை... என்னே நினைவாற்றல் வியந்தேன் பெரியண்ணா..!!

பாராட்டுகள் அனைவருக்கும்..! :)

shibly591
08-08-2008, 06:46 AM

நன்றி பூமகள்...

இனி அவசரத்தில் நான் கவிதைக்கோலங்களை அள்ளித்தெளிக்கப்போவதில்லை..

கவனமாக இயம்புகிறேன்..

நல்லதொரு பாடம் படித்திருக்கிறேன் சகலரின் வழியாகவும்..

நன்றிகள்