PDA

View Full Version : ஊர்வலம்



ஐரேனிபுரம் பால்ராசய்யா
07-08-2008, 01:04 PM
மரணம் வரும் முன்பே
சவப்பெட்டியில்
ஊர்வலம் போகின்றன
தீக்குச்சிகள்!

- - ஐரேனிபுரம் பால் ராசய்யா

poornima
07-08-2008, 01:47 PM
பார்வைகள் பலவிதம்.. வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும்
ஒரு விதம். பாராட்டுகள் ஐ.பா.ராசைய்யா

நீங்கள் சிந்தித்துப் பிறப்பித்த கவிதையை நானும் சற்றே செதுக்கினேன்

மரணத்திற்கு முன்
ஊர்வலம்
சவப்பெட்டியில் தீக்குச்சிகள்

- இப்படியும் சொல்லலாமோ..?

பென்ஸ்
10-08-2008, 07:10 PM
சின்ன சின்ன செயல்கள்.. சம்பவங்களை , யதார்தங்களை வரிகளில் சரியாக போடும் போது எத்தனை அருமையான கவிதையாகிவிடுகிறது....

பாராட்டுகள்...

பூர்ணிமா... புதுகவிதையின் சிறப்பு இதுதானே... அப்படியும் சொல்லலாம், இப்படியும் சொல்லலாம்...
இதுவும் அழகு....

வாழ்த்துகள் இருவருக்கும்...

தீபன்
12-08-2008, 11:30 AM
நல்ல படைப்பு.

குறுங் கவிதைகளுக்கென தனியான பகுதி இருக்கும்போது பலரும் தம் குறுங் கவிதைகளை பிரதான கவிதைகள் பக்கத்தில் பதிகிறார்கள். நிர்வாகிகளாவது அதை சரியான இடத்துக்கு மாற்றலாமே....!

shibly591
13-08-2008, 11:57 AM
அருமை நண்பரே...

தொடருங்கள்..

ஓவியன்
18-08-2008, 12:00 PM
மரணம் வரும் முன்பே
சவப்பெட்டியில்
ஊர்வலம் போகின்றன
தீக்குச்சிகள்!

- - ஐரேனிபுரம் பால் ராசய்யா

அழகுக் கவிதை, பாராட்டுக்கள் நண்பரே...!!
______________________________________________________________________________________

எரித்து விட்டு
எரிகின்றன-தீக்குச்சிகள்.

இளசு
24-08-2008, 11:43 AM
பெட்டி ஒற்றுமையும்
நிச்சய மரணமும்...

இக்கவிதை அழகைக் கூட்டும் கூறுகள்!

வாழ்த்துகள்!

ஷீ-நிசி
24-08-2008, 01:10 PM
நல்ல கவிதை....

நல்ல சிந்தனை! வாழ்த்துக்கள்!