PDA

View Full Version : தனியறை சகவாசம்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-08-2008, 08:52 AM
அறையின் நாலு ஓரங்களும்
நான்கு திசைகளில்
என்னை நெருக்குகிறது

உயரச் சுழலும் மின் விசிறியின்
சப்தத்தை மிஞ்சுகிறது
என் ஒவ்வொரு இருதயத் துடிப்பும்

அம்புலி மாமா கதைகளில் வரும்
வேதாளங்களுக்கும்
கொல்லி வாய் பிசாசுகளுக்கும்
என் உறுப்புகள்
ஒவ்வொன்றாய் இரையாகின்றன.

சுவற்றில் நகரும் பல்லியும்
கூரையில் கரையும் காகமும்
இன்னும் மெருகேற்றுகின்றன
என் தனிமையின் பீதியை.

சுவற்றில் தெரியும்
என் நிழலில் கூட
எப்போதோ பார்த்த
ஜகன் மோகினியின் சாயல் தெரிகிறது.

ஜன்னலின் பாதியை மறைத்திருக்கும்
ஏதோ ஒரு தாவரக்கொடி
ஆங்கிலப்படங்களில் மிரட்டும்
ஜந்துவாய் தோற்றமளிக்கிறது.

எங்கிருந்தோ பொத்துக்கொண்டு
நாயகியை மீட்க வரும் நாயகனாய்
எவராச்சும் கதவைத் தட்டுவார்களென்று
காதை கூர் தீட்டியும் லாபமில்லை.

விடிவதற்கு எஞ்சியிருக்கும் நேரத்தை
விரல்களை நீட்டியும் மடக்கியும்
தப்புதப்பாய் மணக்கணக்கு இடுகிறேன்.

கையளவு வீட்டில்
தாய்மீது கால் போட்டுத் தூங்கி
பழகிய எனக்கு
திடீர் பணக்கார அப்பாவின்
ஆளுக்கொரு தனியறை வாசம்
இன்னும் என் கட்டுக்குள் வரவில்லை.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனி

shibly591
07-08-2008, 08:57 AM
நல்ல கவிதை..

பாராட்டுக்கள்..

சில லாஜிக் மீறல்கள் மெல்லிய அளவில் இழையோடுகின்றன...

வாழ்த்துக்கள் நண்பரே......

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-08-2008, 09:01 AM
அப்படியா! கொஞ்சம் அது என்னவென்று சொன்னால் திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன்.சொல்வீர்களா ஸிப்லீ.

விகடன்
07-08-2008, 09:07 AM
புதிய இடத்தில் பரீட்சயமிமையால் ஏற்படும் பீதியை சொன்ன விதமும், என்னதான் பணம் புகழ் என்று வந்தாலும் அன்னையின் அரவணப்பிலிருந்தவர்களிற்கு அதை மிஞ்சியோர் உலகமில்லை எனபதை சொல்லிநிற்கும் உங்களின் கவிதையும் அழகே.

பாராட்டுக்கள் எஸ்.எம். சுனைத் ஹஸனீ

shibly591
07-08-2008, 09:07 AM
கவிதையின் முடிவு..

கொஞ்சம் நெருடுகிறது....

நண்பஆர கவலை வேண்டாம்...

தொடர்க இன்னும்...

poornima
07-08-2008, 10:37 AM
அருமை சுனைத்.. திடீர் மாற்றங்கள் தரும் மனவோட்டங்களை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..

கடைசிப் பத்தியின் முதல்வரி கையளவு வீட்டில் தூங்கிப் பழகிய
எனக்கு என்றிருந்தாலே கவிதை இயல்பாகத்தான் இருந்திருக்கும் என்று
எண்ணம் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.

சுடரவன்
07-08-2008, 11:27 AM
நண்பர் எஸ்.எம். ஜுனைத் ஹஸனி அவர்களே.....
அற்புதம்..

ஆரம்ப வரிகள்....
மனத்திரையில் விழுகின்ற ஒரு அற்புதமன பாடலை நினைவுபடுத்துகிறது.......
"நியோர்க் நகரம் உறங்கும் நேரம்.........."


அன்புடன்
சுடரவன்

பூமகள்
07-08-2008, 12:17 PM
ஆரம்ப வரிகள்....
மனத்திரையில் விழுகின்ற ஒரு அற்புதமன பாடலை நினைவுபடுத்துகிறது.......
"நியுயோர்க் நகரம் உறங்கும் நேரம்.........."

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்...!!
தனிமை தனிமையோ...ஓ..
தனிமை தனிமையோ...ஓ
கொடுமை கொடுமையோ..!!

இந்த வரிகளைத் தானே சொல்றீங்க சுடரவன் அவர்களே...

கவிதை அழகு.... பார்க்கும் செய்திகளை கவிதையாக்கும் வித்தை கண்டு வியந்தேன்..

தொடருங்கள்..!!
பாராட்டுகள்...! :)

சிவா.ஜி
08-08-2008, 06:52 AM
தனியறை வாசத்தின் தவிப்பை உணர்த்திய வரிகள். கதவைத் தட்ட கதாநாயகனை எதிர்பார்ப்பதில் லாஜிக் இல்லை. அப்பா திடீர் பணக்காரராகிவிட்டாரென்றால் அங்கு அம்மாவும் இருப்பாரே. கதவுதட்ட காத்திருக்காமல், எப்போது வேண்டுமானாலும் எழுந்துபோய் அம்மாவுக்கு அருகில் உறங்கலாமே? வாழ்த்துகள் ஜுனைத்.

shibly591
08-08-2008, 06:54 AM
தனியறை வாசத்தின் தவிப்பை உணர்த்திய வரிகள். கதவைத் தட்ட கதாநாயகனை எதிர்பார்ப்பதில் லாஜிக் இல்லை. அப்பா திடீர் பணக்காரராகிவிட்டாரென்றால் அங்கு அம்மாவும் இருப்பாரே. கதவுதட்ட காத்திருக்காமல், எப்போது வேண்டுமானாலும் எழுந்துபோய் அம்மாவுக்கு அருகில் உறங்கலாமே? வாழ்த்துகள் ஜுனைத்.

எனக்குத்தோன்றியதை அழககாகச்சொல்லியிருக்கிறீர்கள் சிவா.ஜி...

இருந்தாலும் பாடுபொருள் நேர்த்தியுமு;...படிமயிவலும் அழகாக இருக்கின்றன...

தொடரட்டும் நண்பரின் கவிதா பவனி

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-08-2008, 04:32 PM
பின்னூட்டமளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக சிவா அண்ணணுக்கும் சகோதரர் ஷிப்லிக்கும் முத்தாய்ப்பான நன்றிகள்.

நாகரா
08-08-2008, 05:22 PM
அறையின் நாலு ஓரங்களும்
நான்கு திசைகளில்
என்னை நெருக்குகிறது

உயரச் சுழலும் மின் விசிறியின்
சப்தத்தை மிஞ்சுகிறது
என் ஒவ்வொரு இருதயத் துடிப்பும்

அம்புலி மாமா கதைகளில் வரும்
வேதாளங்களுக்கும்
கொல்லி வாய் பிசாசுகளுக்கும்
என் உறுப்புகள்
ஒவ்வொன்றாய் இரையாகின்றன.

சுவற்றில் நகரும் பல்லியும்
கூரையில் கரையும் காகமும்
இன்னும் மெருகேற்றுகின்றன
என் தனிமையின் பீதியை.

சுவற்றில் தெரியும்
என் நிழலில் கூட
எப்போதோ பார்த்த
ஜகன் மோகினியின் சாயல் தெரிகிறது.

ஜன்னலின் பாதியை மறைத்திருக்கும்
ஏதோ ஒரு தாவரக்கொடி
ஆங்கிலப்படங்களில் மிரட்டும்
ஜந்துவாய் தோற்றமளிக்கிறது.

எங்கிருந்தோ பொத்துக்கொண்டு
நாயகியை மீட்க வரும் நாயகனாய்
எவராச்சும் கதவைத் தட்டுவார்களென்று
காதை கூர் தீட்டியும் லாபமில்லை.

விடிவதற்கு எஞ்சியிருக்கும் நேரத்தை
விரல்களை நீட்டியும் மடக்கியும்
தப்புதப்பாய் மணக்கணக்கு இடுகிறேன்.

கையளவு வீட்டில்
தாய்மீது கால் போட்டுத் தூங்கி
பழகிய எனக்கு
திடீர் பணக்கார அப்பாவின்
ஆளுக்கொரு தனியறை வாசம்
இன்னும் என் கட்டுக்குள் வரவில்லை.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனி

என்னை நெருக்கும் தனியறையின்
ஓரங்களைத் தாண்டி என் மெய்ம்மை
அன்பில் உயிர் நிலை கொண்டு
அருட்தலைமையின் கீழ்
தயவாய் இயங்கும்!

தனியறை வாசத்தின் மாயத் தோற்றங்கள் தாண்டி
தனித்தலைமை நாயகன் அருளாளன் அல்லாவின்
தயவை அன்புடன் இகத்தில் இறைப்பீர், ஹஸனீ