PDA

View Full Version : யார் இந்த இனியவள்………?சுடரவன்
07-08-2008, 08:01 AM
யார் இந்த இனியவள்………?

மீட்ட முடியாத இராகங்களும்
கேட்டிடாத கதைகளும்
எண்ணப்படாத நட்சத்திரங்களும்
ஒன்றாக சேர்ந்த
எவளோ ஒருத்தியின் இனிமை
எனக்குள்ளே புகுந்து
சுகங்களின் பாதியை
உறிஞ்சிக் கொண்டேயிருந்தது………

அச்சாணி உடைந்து
நொருங்குண்ட சில்லை
பக்குவமாய்ப் பொறுக்கி
பரிசுத்தமாக்கி
பாவனைக்கு உரியதாய் மாற்றுவதான
குற்றாலமொன்று
அவளின் இனியையிலிருந்து பிரிந்து
எனக்குள் கலந்துகொண்டேயிருந்தது………

யாகங்கள் செய்து
வரங்களைப் பெற்று
அவளிற்கெதிராக
அம்பெய்தும் துணிவு கூட
துளிர்விட முடியாது போனதாய்
ஊசலாடியது என் மனது………

எழுந்து நின்று………
இனிமையின் சொந்தக்காரி
எங்கே எனக் காணப்; புறப்பட்டு
பின் தோற்றுப்போவதை
என் கண்களும் கால்களும்
சதா சொல்லிக் கொண்டேயிருந்தது………
இருந்தும்
அந்த இனியவளை
சுற்றும் முற்றும் தேடிக்கொண்டேயிருந்தேன்………

என் தொலைவு வரை சிக்கிடாத
இனியவளும் இனிமையும்
தொலைந்துவிட்டதாக எண்ணி
கண்ணீர் வடித்து
கதறி அழ முற்படுகிறேன்;………

(தொடரும்….)

அன்புடன்
எஸ். சுடரவன்

shibly591
07-08-2008, 08:04 AM
அழகாக வார்த்தைகளை கோர்த்த விதம் வியக்க வைக்கிறது....

வார்த்துக்கள நண்பரே..
தொடருங்கள்...ஆவலாயுள்ளேன்...

விகடன்
07-08-2008, 08:17 AM
கவிதை அழகாக உள்ளது. அதற்கு எமது பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.

விரைவில் அடுத்த பாகத்தையும் போட்டுவிடுங்கள்.

சுகந்தப்ரீதன்
07-08-2008, 11:00 AM
தொடருங்கள் சுடரவன்..!!

தெளிவான வார்த்தை அமைப்பில் உணர்வுகளை வடித்தவிதம் அருமையாக இருக்கிறது...!! வாழ்த்துக்கள்..!!

சுடரவன்
07-08-2008, 11:16 AM
வணக்கம்.......
கவிதைக்கு வரவேற்புத்தந்த shibly, தோழர் விராடன் மற்றும் சுகந்தப்ரிபன் அவர்களுக்கு எனது நன்றிகள்......... வெகு தொலைவில் அல்லாது வெகு விரைவில் தொடர்ச்சியை வடித்திட முயலுகிறேன்.....

இந்த இனியவள்..................... தொடரும்

அன்புடன்,
எஸ். சுடரவன்

பூமகள்
07-08-2008, 12:35 PM
யார் இந்த இனியவள்………?
மீட்ட முடியாத இராகங்களும்
கேட்டிடாத கதைகளும்
எண்ணப்படாத நட்சத்திரங்களும்
ஒன்றாக சேர்ந்த
எவளோ ஒருத்தியின் இனிமை
எனக்குள்ளே புகுந்து
சுகங்களின் பாதியை
உறிஞ்சிக் கொண்டேயிருந்தது………
யாருமே தொட்டுணர முடியாத ஓர் அழகிய தேவதை மனதுக்குள் வந்தமர்ந்து கொண்டு இம்சை புரிகிறாள்..

இராகங்களில் புதியதாகவும்..
கதைகளில் இதுவரை கண்டிராத கருவாகவும்..
நட்சத்திரங்களில் இதுவரை அளவீட்டில் கொணரப் படாததாகவும்..

முற்றிலும் புதுமையானவள்.. புதிதாய் பிறந்தவள்.. எல்லாவற்றையும் விட வித்தியாசமும் விசித்திரமும் வாய்ந்தவள்.. என்ற எல்லா கருத்தையும் இங்கே சொல்லிய விதம் அருமை..!!

அச்சாணி உடைந்து
நொருங்குண்ட சில்லை
பக்குவமாய்ப் பொறுக்கி
பரிசுத்தமாக்கி
பாவனைக்கு உரியதாய் மாற்றுவதான
குற்றாலமொன்று
அவளின் இனியையிலிருந்து பிரிந்து
எனக்குள் கலந்துகொண்டேயிருந்தது………
மரத்தின் அச்சாணி ஒன்று உடைந்து.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு..
குற்றாலச் சாரலாய் குளிர்வித்து.. அதை இனிமையானதாய்.. பயனுள்ள பொருளாய் மாற்றுவது போல தாமும் அவளால் இனிமையாய் மாறிவருவதைச் சொல்ல விதம் அற்புதம்..

யாகங்கள் செய்து
வரங்களைப் பெற்று
அவளிற்கெதிராக
அம்பெய்தும் துணிவு கூட
துளிர்விட முடியாது போனதாய்
ஊசலாடியது என் மனது………
அவளைக் காணத் தவமிருந்து வரம் அமைந்து காணப்பெற்றாலும்.. அவளிடம் அன்பைச் சொல்ல துணிவின்றி.. தடுமாறும் மனம்..

நல்ல வரிகள்..!

எழுந்து நின்று………
இனிமையின் சொந்தக்காரி
எங்கே எனக் காணப்; புறப்பட்டு
பின் தோற்றுப்போவதை
என் கண்களும் கால்களும்
சதா சொல்லிக் கொண்டேயிருந்தது………
இருந்தும்
அந்த இனியவளை
சுற்றும் முற்றும் தேடிக்கொண்டேயிருந்தேன்………
இனிமையானவள்.. வாழ்வில் வந்து சென்ற பின்பும்..
அவளைத் தேடித் தேடியே கண்.. கால்கள் வலுவிழந்து போவதை அவையே சொல்வதாகச் சொல்லியது அருமை..

ஆயினும்.. எங்கேனும் தட்டுப்படமாட்டாளா என்ற அடியாழ மனதின் ஏக்கம் நிரம்பி வழிகிறது..

இங்கே நம்மில் இவ்வரி படித்ததும் பெருமூச்சும் வந்து செல்கிறது..

என் தொலைவு வரை சிக்கிடாத
இனியவளும் இனிமையும்
தொலைந்துவிட்டதாக எண்ணி
கண்ணீர் வடித்து
கதறி அழ முற்படுகிறேன்;………
எத்தனை தொலைவு தேடியும்
கிட்டாத அவளையெண்ணி...
வெள்ளமென கண்ணீர் ஏமாற்றத்தில்
மடைதிறந்து ஓடுகிறது..

வாவ்..... எப்படி சொல்லவென்றே தெரியவில்லை...
மிக அழகான சொற்கட்டுகள்.. பாராட்டுகள் சுடரவன் அவர்களே...

இன்னும் தொடருங்கள்.. உடன் வருகிறோம்...!! :)

சுடரவன்
07-08-2008, 01:26 PM
யாருமே தொட்டுணர முடியாத ஓர் அழகிய தேவதை மனதுக்குள் வந்தமர்ந்து கொண்டு இம்சை புரிகிறாள்..

இராகங்களில் புதியதாகவும்..
கதைகளில் இதுவரை கண்டிராத கருவாகவும்..
நட்சத்திரங்களில் இதுவரை அளவீட்டில் கொணரப் படாததாகவும்..

முற்றிலும் புதுமையானவள்.. புதிதாய் பிறந்தவள்.. எல்லாவற்றையும் விட வித்தியாசமும் விசித்திரமும் வாய்ந்தவள்.. என்ற எல்லா கருத்தையும் இங்கே சொல்லிய விதம் அருமை..!!

மரத்தின் அச்சாணி ஒன்று உடைந்து.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு..
குற்றாலச் சாரலாய் குளிர்வித்து.. அதை இனிமையானதாய்.. பயனுள்ள பொருளாய் மாற்றுவது போல தாமும் அவளால் இனிமையாய் மாறிவருவதைச் சொல்ல விதம் அற்புதம்..

அவளைக் காணத் தவமிருந்து வரம் அமைந்து காணப்பெற்றாலும்.. அவளிடம் அன்பைச் சொல்ல துணிவின்றி.. தடுமாறும் மனம்..

நல்ல வரிகள்..!

இனிமையானவள்.. வாழ்வில் வந்து சென்ற பின்பும்..
அவளைத் தேடித் தேடியே கண்.. கால்கள் வலுவிழந்து போவதை அவையே சொல்வதாகச் சொல்லியது அருமை..

ஆயினும்.. எங்கேனும் தட்டுப்படமாட்டாளா என்ற அடியாழ மனதின் ஏக்கம் நிரம்பி வழிகிறது..

இங்கே நம்மில் இவ்வரி படித்ததும் பெருமூச்சும் வந்து செல்கிறது..

எத்தனை தொலைவு தேடியும்
கிட்டாத அவளையெண்ணி...
வெள்ளமென கண்ணீர் ஏமாற்றத்தில்
மடைதிறந்து ஓடுகிறது..

வாவ்..... எப்படி சொல்லவென்றே தெரியவில்லை...
மிக அழகான சொற்கட்டுகள்.. பாராட்டுகள் சுடரவன் அவர்களே...

இன்னும் தொடருங்கள்.. உடன் வருகிறோம்...!! :)

பூமகள் அவர்களே, மிக்க நன்றி..........
தனித்தனியே பிரித்து மிக அழகாக விளக்கம் தர முற்பட்டது எனக்கு மிகவும் பூரிப்பை உண்டாக்கின்றது.

இது என்னை மேலும் எழுதத்தூண்டுவதாக அமையப்பெற்றுள்ளது........

காத்திருக்கும் உங்களுக்கு படித்திட மீதியையும் தர முயற்சிக்கிறேன்

அன்புடன்
எஸ். சுடரவன்

சுடரவன்
07-08-2008, 01:33 PM
யார் இந்த இனியவள்………? (தொடர்ச்சி....2)

அக்கணப்பொழுதுகள் எல்லாம்
காலவோட்டத்தின் நதியில்………..
தன் கரங்களிலே
அள்ளி அணைத்து
முந்தானைக்குள் மூடி
தாலாட்டுப் பாடி
தூங்கவைத்தாள் ஒருத்தி........
பெண்மை என்ற வடிவத்தில என்னை………

(தொடரும்….)

அன்புடன்
எஸ். சுடரவன்