PDA

View Full Version : எந்த மொழி...?



shibly591
06-08-2008, 06:06 PM
பெண்ணே...!
உன் கண்கள் பேசும் மொழி
எந்த அகராதியில் இருக்கிறது..???
எதுவுமே எனக்குப்புரிவதாயில்லையே......

ஆதி
06-08-2008, 06:23 PM
இதோ பதில் ஷிப்லி :D என்னுடையதில்லை வள்ளுவனுடையது.. :)


பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

சும்மா விளையாட்டுக்கு..

சிவா அண்ணா கூட தேவையொரு அகராதி என்றார்.. கூட்டு முயற்சி செய்து பாருங்களேன் இருவரும் :).. ஓய்வுகிடைக்கும் போது நானும்
இணைந்து கொள்கிறேன்.. செல்வாவும் உதவுவான்.. ;)


---------------------------------------


மென்மையான கேள்வி ஷிப்லி.. குறும்கவிதையென்பதால் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாமோ ?

வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
06-08-2008, 07:41 PM
கண் பேசும் மொழியறிந்திருந்தால்
நான் கண்ணனாய் இருந்திருப்பேன்
அறியாத காரணத்தால் இப்போது
நான் மண்ணனாய் இருக்கிறேன்...

ஆதி நினைவுபடுத்தியதைப்போல, பெண்டிரின் நயனமொழி அகராதி யார் படைப்பாரோ....?

அமரன்
06-08-2008, 10:44 PM
அதுக்கு முதல்ல கண்ணைப் பார்த்து பேசவேண்டும் ஷிப்லி.. :)
இல்லைன்னா பென்சண்ணாவின் கண்பேசும் வார்த்தைகள் திரியைப் படியுங்கள்.. அவள் கண்மொழியை உணர உதவியாக இருக்கும்.

shibly591
07-08-2008, 06:54 AM
மென்மையான கேள்வி ஷிப்லி.. குறும்கவிதையென்பதால் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாமோ ?

வாழ்த்துக்கள்...

இப்படித்தான் மறைவிமர்சனம் இருகக வேண்டும் என்பதே எனது வாதம்...

நன்றி ஆதி...

இன்னும் செதுக்கியிருக்கலாம்...

அடுத்த கவிதைகளில் திருத்த முயல்கிறேன்...

shibly591
07-08-2008, 06:55 AM
கண் பேசும் மொழியறிந்திருந்தால்
நான் கண்ணனாய் இருந்திருப்பேன்
அறியாத காரணத்தால் இப்போது
நான் மண்ணனாய் இருக்கிறேன்...

ஆதி நினைவுபடுத்தியதைப்போல, பெண்டிரின் நயனமொழி அகராதி யார் படைப்பாரோ....?

மண்ணன் என்பதன் பொருள் என்ன...?

shibly591
07-08-2008, 06:56 AM
அதுக்கு முதல்ல கண்ணைப் பார்த்து பேசவேண்டும் ஷிப்லி.. :)
இல்லைன்னா பென்சண்ணாவின் கண்பேசும் வார்த்தைகள் திரியைப் படியுங்கள்.. அவள் கண்மொழியை உணர உதவியாக இருக்கும்.

கண்களைப்பார்த்தால் பேச்சே வருதில்லையே......

ஆதி
07-08-2008, 10:46 AM
மண்ணன் என்பதன் பொருள் என்ன...?

மந்தன் என்று அர்த்தம்..

ஓவியன்
01-09-2008, 04:56 AM
கண் பேசும் போழி அறிந்திட்டால் நீங்கள் அவள் காதலன்...
இல்லையெனில் வெறும் கவிஞன்..!!

இளசு
01-09-2008, 12:52 PM
முந்தைய கவிஞர்கள் எவருக்கும் கைகூடாக் கலை!
உங்களுக்கு மட்டும் எளிதில் வசப்படுமா என்ன?

முயற்சிகள் தொடரட்டும்!
கூட்டு முயற்சி கதைக்குதவாது!

வாழ்த்துகள் ஷிப்லி!