PDA

View Full Version : எப்போது...??



shibly591
06-08-2008, 06:02 PM
உன் பார்வை வருடிச்செல்லும்
எல்லாமே அழகாகி விடுகின்றன...
நான் எப்போது அழகாவது...?


:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

:mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

அமரன்
06-08-2008, 10:47 PM
அவள் பார்த்திட்டுப் போனாலும் பார்க்காமல் போனாலும் பார்த்துக்கிட்டே இருங்க.. முதலில் அழுக்காவீர்கள்.. பிறகு அழகாவீர்கள்..:icon_b:

நாகரா
07-08-2008, 03:20 AM
உன் பார்வை வருடிச்செல்லும்
எல்லாமே அழகாகி விடுகின்றன...
நான் எப்போது அழகாவது...?


:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

:mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

உன் பார்வை நீர்க் குளியலின்றி
இன்னும் எத்தனை நாள்
நான் மனம் புழுங்கி அவதிப்பட...?!

குறுங்கவி அருமை, வாழ்த்துக்கள் ஷிப்லி

rajatemp
07-08-2008, 05:33 AM
ரசிக்கும் வகையில் உள்ளது
மென்மேலும் பதியவும்

shibly591
07-08-2008, 05:59 AM
அமரன்...

நாகரா...

ராஜாடெம்ப்

மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

உங்கள் ஆசிகளோடு இன்னும் தொடர்வேன்..

நன்றிகள்

சிவா.ஜி
07-08-2008, 06:01 AM
அவள் பார்வை பட்டு அழகாக மாறிவிட இன்னும் பலவும் வரிசையில் காத்திருக்கின்றன. உங்கள் முறை நிச்சயம் அடுத்த முறை வரும். காத்திருங்கள். அழகிய குறுங்கவி. வாழ்த்துகள் ஷிப்லி.

shibly591
07-08-2008, 06:45 AM
அவள் பார்வை பட்டு அழகாக மாறிவிட இன்னும் பலவும் வரிசையில் காத்திருக்கின்றன. உங்கள் முறை நிச்சயம் அடுத்த முறை வரும். காத்திருங்கள். அழகிய குறுங்கவி. வாழ்த்துகள் ஷிப்லி.

நன்றி சிவா.ஜி

அதற்கிடையில் வேறு எவனாவது அpகாகிவிட்டால் என் செய்வதாம்....??????

:confused::confused::confused::confused::confused::confused::confused::confused:

சிவா.ஜி
07-08-2008, 06:50 AM
அடிக்கடி அவளுடைய கவனத்தைக் கவருமாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருங்கள். வேறு யாரும் நெருங்குமுன் முந்திக்கொள்ளுங்கள். வெற்றிபெற வாழ்த்துகள்..ஹி...ஹி.....

shibly591
07-08-2008, 06:58 AM
அடிக்கடி அவளுடைய கவனத்தைக் கவருமாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருங்கள். வேறு யாரும் நெருங்குமுன் முந்திக்கொள்ளுங்கள். வெற்றிபெற வாழ்த்துகள்..ஹி...ஹி.....

முயற்சிக்கிறேன்....

ஹி ஹி ஹி

(எனக்கு வேற வேலையே இல்லை என்பதை எப்படி தெரிஞ்சி கிட்டீங்க...)

சுகந்தப்ரீதன்
07-08-2008, 10:46 AM
அவள் உன்னை பார்க்கும் தருணத்தில் எல்லாம் நீ அழகுதான் ஷிப்லி...:lachen001:
ஆனால் அதை நீ பார்க்க முடியாது என்பதுதான் உன் தோல்வி..!!:sprachlos020:

வாழ்த்துக்கள்..!!:icon_b:

ஓவியன்
01-09-2008, 02:17 AM
உன் பார்வை வருடிச்செல்லும்
எல்லாமே அழகாகி விடுகின்றன...
நான் எப்போது அழகாவது...?

அழகாகி விட மட்டும் தான்
பார்க்கச் சொல்லிக் கேட்கிறேன்,
சத்தியமான என்னை
நம்பி விடு.....!! :D:D:D

தீபன்
01-09-2008, 02:24 AM
உன் பார்வை வருடிச்செல்லும்
எல்லாமே அழகாகி விடுகின்றன...
நான் எப்போது அழகாவது...?


:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

:mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:
உன்னை அழகாக்கி விடத்தான் நினைத்தேன்..
ஆனால்,
அழகானபின் நீ
என் அழகான தோழியையல்லவா
பார்க்கத் தொடங்கிவிடுவாய்...!:lachen001::lachen001::lachen001: