PDA

View Full Version : எம்.பி.ஏ. கல்வி -விபரங்கள் தேவை



shibly591
06-08-2008, 05:35 PM
எம்.பி.ஏ. கல்வி கற்க இந்தியாவிலுள்ள மற்றும் ஏனைய நாடுகளின் பல்கலைக்கழக விபரங்களை பகிர்நது கொள்ளுங்கள்...

முடியுமான விபரங்களை தரவும்

நன்றிகள்

mukilan
06-08-2008, 10:07 PM
அன்பு நண்பர் ஷிப்லி

இத்திரிக்கு இது பொறுத்தமான இடம் போலத் தெரியவில்லை.

MBA படிக்க என முழுவதுமான தகவல்கள் தருவதானால் பெரிய தொடர்தான் எழுத வேண்டும். நான் MBA படிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதால் எனக்கு அத்தகைய தகவல்கள் கொஞ்சம் தெரியும்.

இந்தியாவில் MBAபடிக்க குறைந்த பட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும். (மேலை நாடுகளில் விதி விலக்கு உண்டு).

நுழைவுத்தேர்வு மூலமாகவே தெர்வு பெற முடியும். இந்தியாவின் தலைச் சிறந்த கல்வி நிறுவனங்களான IIM கள் இந்திய அளவில் நடத்தும் பொது சேர்க்கைத் தேர்வு (CAT) எழுத வேண்டும். நுழைவுத் தேர்விலும், பட்ட இறுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைப்பார்கள். பின்னர் நேர்முகத் தேர்வு என வடிகட்டப் பட்டு நாட்டின் தலை சிறந்த மாணாக்கர்களோடு பயிலும் வாய்ப்பு கிட்டும். உலகிலேயே கடினமான சேர்க்கை முறை என எங்கேயோ கேட்டிருக்கிறேன்.

அது தவிர MAT (Managment Admission Test by ATMA) மற்றும் மாநில அரசின் நுழைவுத்தேர்வுகளும் உண்டு. வெளிநாட்டினருக்கு தனி சேர்க்கை முறை இருக்கும் என் நினைக்கிறேன்.

வெளிநாட்டுப் பலகலை கழகங்கள் பெரும்பாலும் GMAT (Graduate Management Aptitude Test) எனப்படும் உலகளாவிய நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள், பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் வேலை பார்த்த முன் அனுபவம், சர்வதேச அனுபவம், தரமான விளக்கக் கட்டுரைகள் (நீங்கள் ஏன் MBA படிக்க விரும்புகிறீர்கள்? ஏன் இந்தப் பல்கலைக் கழகம்? வேலையில் சந்தித்த சவால்கள், உடன் வேலை செய்பவர்களுடன் ஏற்பட்ட பிணக்கு போன்ற கேள்விகள்) இவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்துகின்றன. தொலை பேசி வழி நேர்முகத் தேர்வும் சமயங்களில் இருக்கும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் GMAT தேர்வு கேட்பதில்லை. அவை காசு பார்க்கும் பல்கலைக் கழகங்கள்.

MBA படிப்பதென்று முடிவான பின்னர் நல்ல பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். AACSB எனப்படும் ஒரு அமைப்பு உல்களவில் மேலாண்மை கல்வி நிறுவனங்களை அங்கீகாரம் செய்கின்றது. அவ்வாறான அங்கீகாரம் பெற்ற பள்ளியானால் நல்லது.

பல்கலைக் கழகத்தின் பாட திட்டங்கள் என்னென்ன? எந்த துறையில் நாம் கூடுதல் அறிவு பெறலாம் (நிதி நிர்வாகம், தொழில்நுட்ப வணிக மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனித வள நிர்வாகம் போன்றவை), வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது, உடன் படிக்கும் மாணவர்களின் அறிவு எப்படி (பூவோடு சேர்ந்த நாறு தான் மணக்கும்) என்பனவற்றை ஆராய வேண்டும். எல்லா MBAக்களுக்கூம் வேலை கிடைப்பதில்லை.

வெளிநாடுகளில் MBA படிக்க முடிவு செய்தால் மிகவும் கவனமாக சில விடயங்களை கவனிக்க வேண்டும். படித்தவுடன் வேலை கிடைக்குமா? விசா வாங்குவது எளிதா? தரமான நிறுவனமா? புகழ்பெற்ற மற்ற நிறுவனங்களோடு மாணவர் பரிமாற்றும் திட்டம் இருக்கிறதா? கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே பயிற்சி வேலை வாய்ப்பு கிட்டுமா என ஆராய வேண்டும்.

இந்தியாவில் மட்டும்தான் கல்வி நிறுவனங்களுக்கே வந்து வேலை கொடுக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலையில் முன் அனுபவம் இருப்பவர்களே வேலை பெறுகிறார்கள்(மிகவும் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் விதிவிலக்கு). MBA பட்டம் பெற்றால் மட்டும் போதாது. சிறந்த ஆங்கில அறிவு,உரையாடும் திறன், சந்தையின் தற்பொழுதைய நிலவரம் பற்றிய அறிவு என புறக்காரணிகள் ஏராளம்.

நல்ல நிறுவனங்களில் MBA படித்தால் அதில் படித்த மாணவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வேலைக்கு ஆளெடுக்க பரிந்துரை செய்வார்கள்.உங்கள் நண்பர்கள் நல்ல வேலையில் அமர்ந்த பின்னர் உங்களை அவர்களது நிறுவனத்திற்கு அழைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Professional Networking எனச் சொல்லப் படும் தொழில்முறை நட்புறவு மிக அவசியம். அது புகழ்பெற்ற பலகலைக் கழகங்களில் படிக்கும் பொழுது எளிதாகக் கிட்டும்.

புகழ்பெற்ற மேலாண்கல்வி நிறுவனங்களை Financial Times என்ற இதழ் பட்டியலிடுகிறது. அதில் இவ்வருடம் இந்திடாவின் ISB (Indian School of Business-Hyderabad) 20 வது இடத்தில் வந்தது பெரிய சாதனை.

புகழ்பெற்ற நிறுவனங்களின் பட்டியல் மிகப் பெரியது. எனக்கு மனதில் தோன்றுபவை இவைதான். தரவரிசையில் இல்லை. எனக்கு மனதில் முதலில் வந்தது முதலில்.

அமெரிக்கா:

ஹார்வர்ட்- Harvard Business School
ஸ்டேன்ஃபோர்ட்- Standford Business School
கொலம்பியா- Columbia Business school
வார்ட்டன்- Wharton Business School
சிகாகோ- Chicago Graduate School of Business
கார்னல்- Cornell University
MIT- Massachussets Institute of Technology SLOAN
டார்ட்மெள்த்- Dartmouth College
யேல்- Yale University
கெல்லாக்ஸ்- Kellogs

கனடா

டொராண்ட்டோ- Rotman School of Business-University of Toronto
யார்க்- Schulich School of Business- York University
ரிச்சர்ட் ஐவி- Richrd Ivey Business School- University of Western Ontario
பிரிட்டிஸ் கொலம்பியா- Sauder Business School- University of British Columbia
மெக்கில்- Michael DeSautels School of Business Management- McGill University

ஆஸ்திரேலியா

மெல்போர்ன் பிஸினஸ் ஸ்கூல்- Melbourne Business School
ஆஸ்ட்ரேலியன் கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்- Australian Graduate School of Management -AGSM

இங்கிலாந்து

ஆக்ஸ்ஃபோர்ட்- SAID Business School- Oxford University
ஸ்ட்ராத்கிளைடு- Strathclyde Business School, Glasgow
மான்செஸ்டர்- Manchester Business School
லண்டன் பிஸினஸ் ஸ்கூல்- London Business School
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்- London School of Economics

சிங்கப்பூர்

நான்யாங் பிஸினஸ் ஸ்கூல்- Nanyang Business School
நேஸனல் யூனிவர்ஸிட்டி ஆஃப் சிங்கப்பூர்- National University of Singapore

இந்தியா

ISB- Indian School of Business

IIM கள்- Indian Institute of Management (Ahmedabad, Bangalore, Kolkata, Lucknow, Kozhikode)

XLRI- Xavier Labour Research Institure- Jamshedpur

சிம்பயோசிஸ்- SYMBIOSIS

எஸ்.பி. ஜெயின்- S.P.Jain-Mumbai, Dubai, Singapore

ஜம்னலால் பஜாஜ்- Jamnalal Bajaj

டெல்லி பல்கலைக் கழகம்- Faculty of Management Studies Delhi

IIFT- Indian Institute of Foreign Trade

சில IITக்களின் மேலாண்மைப் பள்ளிகள்(School of Managements at IITs)

I.M.T காஸியாபாத்

தமிழகத்தில்

பாரதிதாசன் (Bharathidasan Institute of Management-BIM)- Trichy

லயோலா- Loyola Institute of Business Administration -LIBA- Chennai

கிரேட் லேக்ஸ்- Great Lakes School of Management- Chennai

பி.எஸ்.ஜி- P.S.G. Coimbatore

மேலும் விபரம் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறேன்

அறிஞர்
06-08-2008, 10:43 PM
நான் IGNOUவில் நுழைவு தேர்வு எழுதி, சேர்ந்து ஒரு வருடம் தபால் மூலம் படித்தேன்... தபால் மூலம் படிக்க இது சிறந்த வழி..

http://www.ignou.ac.in/

35 நாடுகளில் அவர்களுக்கு கிளை உள்ளது. உங்கள் ஊரில் இருக்கிறதா எனப்பாருங்கள்.

aren
07-08-2008, 01:30 AM
இந்தியாவில் வந்து படிக்கவேண்டுமாயின், கீழே கொடுத்துள்ள பள்ளிகள் மிகவும் சிறந்தவை:

Indian Institute of Management (IIM)
Ahmedabad
Bangalore
Calcutta

XLRI Jamshedpur
FMS, Delhi
Jamnalal Bajaj Institute, Mumbai

சென்னையில் படிக்கவேண்டுமாயின்
LIBA (Loyola Institute of Business Administration)
Great Lakes Institute of Management

aren
07-08-2008, 02:01 AM
XLRI Jamshedpurக்கு சிங்கப்பூரிலும் துபாயிலும் கிளைகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றிலும் நீங்கள் சேரலாம்.

சிங்கப்பூரில் படிக்க வேண்டுமாயின் என்னால் ஏற்பாடு செய்யமுடியும்.

mukilan
07-08-2008, 04:23 AM
XLRI Jamshedpurக்கு சிங்கப்பூரிலும் துபாயிலும் கிளைகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றிலும் நீங்கள் சேரலாம்.

சிங்கப்பூரில் படிக்க வேண்டுமாயின் என்னால் ஏற்பாடு செய்யமுடியும்.

உதவ ஓடி வரும் உங்கள் நற்குணம் கண்டு மகிழ்கிறேன். நான்யாங் பிஸினஸ் ஸ்கூல் சேர்க்கை மிகவும் கடினம் எனக் கேள்விப்பட்டேன்? XLRIக்கு அவர்கள் வைக்கும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் அது இந்தியாவில் எழுத வேண்டுமா இல்லை சிங்கப்பூரிலும் உண்டா?

அகத்தியன்
07-08-2008, 04:24 AM
இணையம் மூலமான ஒன் லைன் கல்வி முறையில் படிக்கலாமா? அதில் உள்ள சாதகங்கள் பாதகங்கள், அது பற்றி விபரங்களினையும் தந்து உதவுங்களேன்.


(இது ஷிப்லிக்கும் உதவும்)

mukilan
07-08-2008, 04:35 AM
இணையம் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ கற்பது என்பது சமீபகாலமாக பெருகி வருகிறது. என் கருத்துப் படி அது MBA படிப்பிற்கு ஒத்து வராத விடயமாகக் கருதுகிறேன். MBA படிப்பு என்பது புத்தகத்திலோ அல்லது ஆசிரியர் ஆற்றும் உரையிலோ இல்லை. MBA படிப்பு என்பது ஒரு வியாபார உலகில் ஒரு மேலாண்மை அதிகாரி நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை. அதற்கு நல்ல குழு மனப்பான்மை வேண்டும். அதற்கு குழுவினராக ஒன்று கூடி சில திட்டங்களை முடிக்கலாம். மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தொழில்முறை நட்புறவு என்பதும் நேரடிக்கல்வியில்தான் சாத்தியம். பெயரளவிற்கோ அல்லது ஒரே நிறுவனத்தில் மேற்பதவி பெறவோ வேண்டுமாயின் இணையவழி மற்றும் அஞ்சல் வழி MBA உதவும். ஆனால் சிறந்த வேலைவாய்ப்பு, வேலை பார்க்கும் துறை மாறுதல் போன்றன நேரடிக் கல்வியில் கிட்டவே வாய்ப்பு அதிகம். அஞ்சல் மற்றும் இணையவழி MBA பட்டதாரிகளுக்கு நேரடிக் கல்வி கற்றவர்களைப் போல வாய்ப்புகள் வருவதில்லை.

shibly591
07-08-2008, 05:56 AM
பெறுமதியான பதில்களை வாரி வழங்கிய முகிலனுக்கு என் முதல் நன்றிகள்...பயனுள்ள ஏராளமான விடயங்களை உங்கள் திரியில் காணமுடிகிறது....

மேலும் உடனே ஓடி வந்து உதவுகிறேன் என்று வாக்களித்த ஆரென் அண்ணாவுக்கும் நன்றிகள்...

ஆரென் அண்ணா...உங்களை தனிமடல் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறுகிறேன்...

அறிஞருக்கும் அகத்தியனுக்கும் கூட நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..

நன்றிகள்

aren
07-08-2008, 07:04 AM
உதவ ஓடி வரும் உங்கள் நற்குணம் கண்டு மகிழ்கிறேன். நான்யாங் பிஸினஸ் ஸ்கூல் சேர்க்கை மிகவும் கடினம் எனக் கேள்விப்பட்டேன்? XLRIக்கு அவர்கள் வைக்கும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் அது இந்தியாவில் எழுத வேண்டுமா இல்லை சிங்கப்பூரிலும் உண்டா?

சிங்கப்பூரில் தனியாக நடத்தப்படுகிறது.

shibly591
07-08-2008, 07:06 AM
சிங்கப்பூரில் தனியாக நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் தொழில் செய்து கொண்ஆட படிக்க முடியுமா..???

அல்லது

படிப்பது மட்டும்தான் சாத்தியமா...?

aren
07-08-2008, 07:09 AM
சிங்கப்பூரில் தொழில் செய்து கொண்ஆட படிக்க முடியுமா..???

அல்லது

படிப்பது மட்டும்தான் சாத்தியமா...?

இந்த கோர்ஸ் இங்கே வேலை செய்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படிக்க மட்டுமே விருப்பமுள்ளவர்களும் சேரலாம். அதற்கு வழியிருக்கிறது. ஸ்டுண்டஸ் விசா கிடைக்கும்.

பூமகள்
07-08-2008, 07:14 AM
கொஞ்சம் காலம் முன்பு...
பூவுக்கும் இப்படியொரு ஆசை இருந்தது..

நிறைய நிறைய தேடினேன்...

ஆயினும்.. முகிலன் அண்ணா அளவிற்கு தகவல்கள் என்னால் திரட்ட முடியவில்லை...

எல்லாத் தகவல்களும் ஒருங்கே கொடுத்து.. மிகச் சிறப்பாக விளக்கமளித்த முகிலன் அண்ணாவுக்கு என் பாராட்டுகள்..!!

உதவி கேட்டவுடன் ஓடி வந்து உதவும் உங்கள் பண்பு கண்டு பூரிக்கிறேன் அரென் அண்ணா...

முகிலன் அண்ணா சொன்ன கருத்துகளை அப்படியே வரவேற்கிறேன்.. தொலைநிலைக் கல்வி..(Distance Education) தபாலில் படிக்கும் MBA படிப்புக்கு அத்தனை வரவேற்பைப் பெறவில்லை..

வேலை செய்து கொண்டே.. உயர் பதவி அடையவோ.. அல்லது பெயருக்கு பின்னால் பேருக்கு போட்டுக்கொள்ளவோ தான் பயன்படுவதாக அறிகிறேன்.

நல்ல பயனுள்ள தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் படி திரி ஆரம்பித்த ஷிப்லி அண்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

shibly591
07-08-2008, 07:28 AM
வீட்டில் மேலே படி என்கிறார்கள் (தொழில் செய்யாவிட்டாலும் பரவாயில்லை அதுவெல்லாம் பிறகு பார்க்கலாம் என்பது அவர்களது வாதம்...) எனக்கோ இளமானிப்பட்டத்தின் இறுதிப்பெறுபேறுக்காக காத்திருக்கும் இந்தக்காலகட்டத்திலேயே தொழில் செய்து கொண்டு மேலே படிக்கக்கூடிய இடங்களை குறித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கலாம் என்கிற மனோநிலை....

அதனால்தான் இத்திரியை துவக்கி ஒரு முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன்...

நன்றி பூமகள்...உங்கள் ஆசைக்கு என்ன ஆச்சு..????

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b: