PDA

View Full Version : ஏன்

shibly591
06-08-2008, 03:26 PM
நீ ஏன் ஒளி கொடுக்கிறாய்
பௌர்ணமி தினம் மட்டும்
நிலவுக்கு......??

நாகரா
06-08-2008, 03:40 PM
நீ ஏன் ஒளி கொடுக்கிறாய்
பௌர்ணமி தினம் மட்டும்
நிலவுக்கு......??

அமாவாசையிலும்
புவியில் நடமாடும்
பௌர்ணமி நிலவாய் நீ!

shibly591
06-08-2008, 04:04 PM
பின்னூட்டம் ரசிக்கும்படியிருந்தது...நன்றி நாகரா

ஓவியன்
01-09-2008, 02:04 AM
நீ ஏன் ஒளி கொடுக்கிறாய்
பௌர்ணமி தினம் மட்டும்
நிலவுக்கு......??

எல்லாத் தினத்திலும்
நிலவுக்கு வானுக்கு
எல்லாவற்றுக்கும்
ஒளி கொடு, உலகிற்கே
உதவி செய்த
புண்ணியமாகப் போகட்டும்..!! :)

இளசு
18-10-2008, 12:14 PM
நடுவில் நந்தியாய்
நான் மறைக்காத
அந்த ஒருநாள்
அழகொளி முழுதாய்..!

நல்ல பின்னூட்டங்களை நாகரா, ஓவியன் தரவைத்த
தரமான கவிதைக்கு வாழ்த்துகள் ஷிப்லி!

தீபா
18-10-2008, 07:46 PM
பெளர்ணமி மாத்திரமல்ல, நிலவு தெரியும் எல்லா நாட்களிலும் ஒளி இருக்கத்தான் செய்கிறது.

பெளர்ணமி என்பது முழுமை
அமாவாசை என்பது இல்லாமை அல்லது மறைவு ஆனால் நிறைவின்மை கிடையாது..

சில விசயங்களை இப்படி ஒப்பிடவே முடியாது..

இதில் நாகரா அவர்கள் எழுதிய முறையே எனக்குப் பிடித்தமானதும் சரியானதும் கூட....

ஆர்.ஈஸ்வரன்
19-10-2008, 11:05 AM
நீ ஏன் ஒளி கொடுக்கிறாய்
பௌர்ணமி தினம் மட்டும்
நிலவுக்கு......??

ஒரு நாளாவது புன்னகையுடன் இருக்கட்டுமென்றுதான்

shibly591
20-10-2008, 09:45 AM
நடுவில் நந்தியாய்
நான் மறைக்காத
அந்த ஒருநாள்
அழகொளி முழுதாய்..!

நல்ல பின்னூட்டங்களை நாகரா, ஓவியன் தரவைத்த
தரமான கவிதைக்கு வாழ்த்துகள் ஷிப்லி!

நன்றி அண்ணா...உண்மையில் கவிதையை விட பின்னூட்டங்களே வலுவாயுள்ளன..

shibly591
20-10-2008, 09:46 AM
பெளர்ணமி மாத்திரமல்ல, நிலவு தெரியும் எல்லா நாட்களிலும் ஒளி இருக்கத்தான் செய்கிறது.

பெளர்ணமி என்பது முழுமை
அமாவாசை என்பது இல்லாமை அல்லது மறைவு ஆனால் நிறைவின்மை கிடையாது..

சில விசயங்களை இப்படி ஒப்பிடவே முடியாது..

இதில் நாகரா அவர்கள் எழுதிய முறையே எனக்குப் பிடித்தமானதும் சரியானதும் கூட....

ஏற்கக்கூடிய கருத்தை நானும் ஏற்கிறேன்..

நன்றி தென்றல்..