PDA

View Full Version : திறந்து கிடக்கும் இரவின் கண்கள்...



shibly591
06-08-2008, 03:24 PM
கனவுகள் நிரம்பி வழிய
ஒளி வழியே
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறது
பௌர்ணமி வானம்…….
சலனம் மறந்து போன
புற்தரைகளோடும்...
கடல் அலைகளோடும்..
துகள் சுமக்கும் மண்ணோடும்..
இன்னும்
பூமியில் வயிற்றில்
ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லாவற்றோடும்...

தூக்கம் மறந்து போன
எனது கண்கள் பற்றி
சப்தம் நிர்மூலமான இந்தக்கணம்
என்னதான் சிந்தித்திருக்கும்...????

மிதமான தென்றலோடு
எங்கிருந்தோ வரும் நாயின் ஊளை கூட
இந்த அர்த்த ராத்திரியை என் முன்னே அர்த்தமாக்கிக்கொள்கிறது...

எத்தனை பேரின் நிர்வாணத்தை
இந்தக்காரிருள்
தன் பார்வைச்சிறகில்
சுமந்திருக்கும்...?

திறந்தே கிடக்கின்றன
இரவின் கண்கள்......

பின்னிரவின் மெல்லிழை வாயிலில்
தூங்கிப்போனேன் நான்...

அதன்பின்னும் பௌர்ணமி வானம்
பேசிக்கொண்டேயிருந்திருக்கும்
கதிரொளியொன்று
ஏதோ ஒரு மண்ணின் முனைப்பரப்பை தீண்டியிருக்குமே...
அதுவரை..........!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 03:36 PM
ஆஹா. விளக்கிய விதம் மிக அருமை ஷிப்லி. நிதானிதது வடித்திருக்கிறீர்கள் ஒவ்வொரு வரியையும்.

நாகரா
06-08-2008, 04:05 PM
திறந்து கிடக்கும் இரவின் கண்களை
மறந்து படுக்கும் உறக்கம் துறந்து
தீட்சண்யமாய்க் காட்டும் உம் கவிதையின்
காட்சியில் நானும் விழிக்கிறேன், வியக்கிறேன்

கவிதை அற்புதம், வாழ்த்துக்கள் ஷிப்லி

shibly591
06-08-2008, 04:07 PM
ஆஹா. விளக்கிய விதம் மிக அருமை ஷிப்லி. நிதானிதது வடித்திருக்கிறீர்கள் ஒவ்வொரு வரியையும்.

நன்றி நண்பரே....
உங்கள் விமர்சனம் மகிழ்ச்சி தருகிறது...

shibly591
06-08-2008, 04:08 PM
திறந்து கிடக்கும் இரவின் கண்களை
மறந்து படுக்கும் உறக்கம் துறந்து
தீட்சண்யமாய்க் காட்டும் உம் கவிதையின்
காட்சியில் நானும் விழிக்கிறேன், வியக்கிறேன்

கவிதை அற்புதம், வாழ்த்துக்கள் ஷிப்லி

நன்றி நாகரா...

வழக்கம்போல உங்கள் பின்னூட்டம் அருமை..

நன்றிகள்

shibly591
07-08-2008, 07:02 AM
நேற்றிரவும் இதையே உணர்ந்து கொண்டான்...
கவிதையை இன்னும் செதுக்கியிருக்கலாம் என்று இரவுதான் தோன்றியது..

வேறு கவிதை இதே தலைப்பில் எழுதிப்பாருங்கள்....

இரவை அதி அற்புதமாக உணர்வீர்கள்...