PDA

View Full Version : துள்ளி விளையாடுதே



shibly591
06-08-2008, 03:21 PM
எனது 17 வது வயதில் நான் என்ன விலை அழகே....என்ற காதலர் தினப்படப்பாடலுக்காக எழுதிய வரிகளை பகிர்கிறேன்...

(ரொம்ப நாள் கழித்து எனது 2002 இல் நான் கவிதை என கீறிக்கிழித்த தொகுப்பு அகப்பட்டது..அதலிருந்து இதோ...)


துள்ளி விளையாடுதே
உன் முகத்தில் உனது கண்கள்
அது பதியமாச்சு நெஞ்சில்
உன் விழியின் அசைவு நடனந்தானடி....
அதை ஆடவிட்டு கொல்வதேனடி....

அடியே விழிநீர் தினமும்...
உன்னால் கன்னம் கழுவும்...
எனக்குள் இருந்த உயிரின் உயிரும்
எங்கேயோ போச்சு என்னமோ ஆச்சு
மனதின் வலிiயில் தூக்கமும் இல்லை ஏக்கமே தொல்லை..எதுவோ எல்லை
கனவினில் உனை பார்க்கிறேன்
குளிரிலும் உடல் வேர்க்கிறேன்..
உயிர் கொண்டு சென்ற பறவையே
தந்து விடு உந்தன் உறவையே..
உன்னில் நான் என்னை தொலைக்க
என்னில் நீ உன்னை தொலைக்க
காதலால் கன்னம் நனைக்க..
உயிரே....நீ பருவம் பூக்கும் செடியா.....????

காற்றில் இல்லை என் சுவாசம்
துடிப்பில் இல்லை என் இதயம்
எனது உயிரும் எனது நிழலும்
நீதானே தேவி...காதலின் ராணி
மனதின் வெளியில் கனவின் கரையில்
எப்போதும் தோன்றி கொன்றிடும் தீ நீ
உணர்வுகள் உன்னைத்தேடுதே
எப்போதும் உனை நாடுதே..
உலகமே உந்தன் கைகளில்
சுற்றுதடி இது கனவில்லை
காதிலி உன் மௌனமும்
வதைக்கிது எனை தினந்தினம்
காதலியே உனது மனம்
கல்லென்றால் பிழையில்லையே
உயிரே உனைச்சேரும் நாளும் என்றோ...

யாரும் திட்ட வேண்டாம் அழகான பாடலை கொன்று விட்டேன் என்று....

அமரன்
13-08-2008, 08:32 AM
நன்றாக உள்ளது.. மெட்டுக்குள் அமைந்துள்ளது.

கவியோட்டத்தை தொடரும்போது மட்டும்
உணர்வோட்டம் சிக்கு சக்கு சிக்கு சக்கு ரயில்..

வாழ்த்துக்கள் ஷிப்லி.