PDA

View Full Version : சார்க் மாநாடு - மேலும் சில செய்திகள்



pasaam
06-08-2008, 06:11 AM
சந்ததிரிகா ஆசனமின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா அவர்கள் சார்க் மாகாட்டுக்கு வந்திருந்தார். அவருக்கென ஆசனம் ஓதுக்கப்படாமையால் இருப்பிடம் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். இதை அவதானித்த சபாநாயகரும் எதிர்கட்சித் தலைவரும் பின்பு அவருக்கு ஒரு ஆசனம் வழங்க ஏற்பாடு செய்தனர். முன்னாள் இரு பிரதமர்களின் புதல்வி. இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறீப்பிடத்தக்கது.

எதிர்கட்சி தலைவருக்கும் உரிய ஆசனம் ஒதுக்கப்படவில்லை.
எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்ரமசிங்காவுக்கும் உரிய ஆசனம் ஒதுக்கப்படவில்லை. நீண்ட நேரத்தின் இழுபறியின் பின்பே அவருக்கு முன்வரிசை ஆசனம் தரப்பட்டது.

திறமையான பாதுகாப்பு ஏற்பாடு
சார்க் மாநாட்டின் போது சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையினால்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு நாராயணன் அவர்கள் எதுவித பிரச்சினையுமின்றி வாடகை வாகனத்தில் தாஜ்சமுத்ரா ஓட்டலுக்க செல்லக்கூடியதாகவிருந்தது என இலங்கையின் அமைச்சர் ககலிய ரம்புக்வெல அவர்கள் கூறியுள்ளார்.

இவைகள் யாவும் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தின் போது பேசப்பட்டதாக இன்றைய பத்திரிகைகளில் காணப்பட்டன.

தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்.

அன்புரசிகன்
06-08-2008, 06:17 AM
நகைச்சுவையாகவே உள்ளது... செய்தியாக பார்க்க முடியவில்லை...

உதயசூரியன்
06-08-2008, 07:35 AM
செய்த குளறு படிக்கு சொல்லிய காரணம்.. படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது..
இதை போல்.. ஜெயலலிதா பேசும் பேச்சாக தென் பட்டது..

வைகோவை பொடாவில் 19 மாதம் அடைத்தது..கலைஞர் தான் அவரை வெளியே கொண்டு வந்தார்..


கடைசியில் ஜெ வைகோ கூட்டு என்ற செய்திக்கு அப்புறம்.. ஜெ சொன்னது.. வைக்கோவின் உயிருக்கு வெளியில் ஆபத்து இருந்தது அதனால் தான் ஜெயிலில் அடைத்து வைத்தேன்.. என்று அடித்த அந்த ஜோக் தான் இப்பொழுது சார்க் மானாட்டு சம்பவங்கலை அந்த நாட்டு மந்திரி சமாளித்ததை படித்ததும் நினைவுக்கு வந்தவை..
வாழ்க தமிழ்

shibly591
06-08-2008, 05:28 PM
சிரிக்கும்படியாகிவிட்டதே சார்க் மாநாடு...

பாவம் சந்திரிக்கா.....

வேண்டுமென்றே புறந்தள்ளப்படுகிறார்...