PDA

View Full Version : ஆற்றங்கரையோர ஆலமரமே...



"பொத்தனூர்"பிரபு
06-08-2008, 12:33 AM
ஆற்றங்கரையோர ஆலமரமே...

உன் காதலை வணங்குகிறேன்
கரைகடந்து போன
காதலிக்காக நீ
காத்து நிற்க்கிறாயோ?
கரையொதுங்கும் படகிலேனும்
காதலி வருவாளென
பூத்து நிற்கிறாயோ?
உரசிபோன தென்றலை
உதவிக்கு கூப்பிட்டு
தேவதையின் தாவணிவாசம்
காற்றில் கலந்துவந்தால்
கண்டுபிடித்து கூறச்சொல்..........
கிளையில் கூடுகட்டிய
கிளியிடம் கேள்
உன் காதலியின் குரலை
கேட்டால் கூறச்சொல்.........

உன் வழிசென்ற
வயோகிதரிடம் கேள்
வண்ணப்பறவையை
வழியிலேனும் கண்டீரா?-என்று
உன் வேரினை நனைத்த
காவேரியிடம் கேள்
அந்த தாமரையேதும்
தண்ணீராட வந்ததா?-என்று
உன் விழுதுகளை
தூதுவிட்டு -அந்த
மண்ணிடம் விசாரி
பாவையின் பாதம்
பட்டயிடம் எதுவென்று........
வானத்தை கேள்
வையத்து நிலவதுசென்ற
வழியெதுவென்று......

ஆற்றங்கரையோர ஆலமரமே
உன் காதலை வணங்குகிறேன்



http://priyamudan-prabu.blogspot.com/

mukilan
06-08-2008, 12:47 AM
அடேங்கப்பா! அந்த ஆலமரத்திற்கும் காதல் மணம் இருப்பதைக் கண்ட உங்கள் கற்பனைக்கு சபாஷ்!
ஆலமரத்திற்கு தூது செல்ல எத்தனை எத்தனை பேர்?.

விழுதுக் குழந்தைகள் வந்த பிறகும் காதலா?

மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத மரக் காதல் வாழ்க!

"பொத்தனூர்"பிரபு
06-08-2008, 01:00 AM
சுடச்சுட பாரட்டியதுக்கு நன்றி