PDA

View Full Version : அறிவுரை - ஐ.டி. தொழில் துறையினருக்கு



அறிஞர்
05-08-2008, 08:04 PM
விகடனில் வெளியான கேள்வி-பதில்
(நன்றி - மின்னஞ்சல் குழு/மன்மதன்)

இந்த கேள்வி-பதில் ஐ.டி. துறையினருக்கு மட்டுமன்றி.. பலருக்கும் பொருந்தும்.
-------------------------------------------------------

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான். என்னைப் போன்றோருக்கு தாங்கள் தரும் அறிவுரை?


நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா ? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள்.கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும் ; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு,ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, '' என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும்தபால்காரனைநோகமுடியாது.

arun
05-08-2008, 08:18 PM
மாறி வரும் காலத்துக்கு ஏற்ப அனைவருக்கும் கொடுக்கப்பட்ட அறிவுரை என்றே தான் நினைக்கிறேன்

பகிர்வுக்கு நன்றி

மதி
06-08-2008, 03:23 AM
எக்காலத்திலும் எல்லோருக்கும் தேவைப்படும் அறிவுரை.
பகிர்ந்தமைக்கு நன்றி அறிஞரே..

சிவா.ஜி
06-08-2008, 04:17 AM
நிதர்சனங்கள் அப்பட்டமாக உரைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆம் வகுப்பே பெரிய படிப்பு என்றிருந்த காலத்திலேயே பொறியியல் படித்து, நல்ல பெரும் பதவில் இருந்தவர்களைக்கூட 6 மாத கணிணி படிப்பு படித்துவிட்டு அதிகம் சம்பாதிக்கும் சிலர் ஆணவத்தில் எள்ளிநகையாடுவதைப் பார்த்து வேதனையடைந்திருக்கிறேன். அவர்கள் உணரவேண்டும். பகிர்வுக்கு நன்றி அறிஞர்.

இதயம்
06-08-2008, 05:49 AM
உடல், மனம் இரண்டையும் மனதில் கொண்டு வடிக்கப்பட்ட கட்டுரை. பணமே எல்லாமாக ஆகிப்போன உலகில் பணமும், அதன் சொகுசுகளும் சுகமல்ல, அது பெரும் சோகமென புரியும் இக்கட்டுரையை படித்தால்..! ஐ.டி தொழிலில் இருந்து ஆணவத்தில் அறிவிழந்து நடப்போர், அவர்களின் கஷ்டம் தெரியாமல் பொறாமை தீயில் வேகுவோர் அவசியம் படிக்கவேண்டும். இதை படித்த நானும் கருத்துக்களை மனதில் கொள்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி அறிஞர்..!!

aren
06-08-2008, 05:57 AM
தபால்காரர் அறிஞருக்கு நன்றிகள் இந்தப்பதிவை இங்கே பதித்ததற்கு.

நிச்சயம் அனைவரும் படித்து அதன்படி நடந்துகொண்டால் உலகமே சொர்க்கமாகிவிடும்.

மன்மதன்
06-08-2008, 02:37 PM
நான் மன்றத்தில் பதிக்கணும்னு நினைச்சேன்.. நன்றி அறிஞரே..

அறிஞர்
06-08-2008, 02:48 PM
நான் மன்றத்தில் பதிக்கணும்னு நினைச்சேன்.. நன்றி அறிஞரே..
மெயில வரதில் நல்லதை இங்கு பதிங்க....

ஆன்சைட் மெயிலை இங்கு பதிங்க..

பூமகள்
06-08-2008, 06:19 PM
மிக முக்கியமான பதிவு...!!

வாழ்க்கையைத் தொலைத்து எதை வாங்கி என்ன நன்மை??!!

உணர்ந்து கொள்வார்கள் நம் நாட்டின் இளம்தளிர்களென நம்புகிறேன்..!!
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அறிஞர் அண்ணா.
:)

shibly591
06-08-2008, 06:22 PM
நிதர்சனங்கள் அப்பட்டமாக உரைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆம் வகுப்பே பெரிய படிப்பு என்றிருந்த காலத்திலேயே பொறியியல் படித்து, நல்ல பெரும் பதவில் இருந்தவர்களைக்கூட 6 மாத கணிணி படிப்பு படித்துவிட்டு அதிகம் சம்பாதிக்கும் சிலர் ஆணவத்தில் எள்ளிநகையாடுவதைப் பார்த்து வேதனையடைந்திருக்கிறேன். அவர்கள் உணரவேண்டும். பகிர்வுக்கு நன்றி அறிஞர்.

சரியாகச்சொன்னீங்க

நன்றிகள்

இளந்தமிழ்ச்செல்வன்
06-08-2008, 08:15 PM
நன்றி நண்பரே. மிகவும் தேவையான பதிவு.

உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் மதிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.

தாமரை
07-08-2008, 01:59 AM
பணிபுரிவோரை விட பணிபுரிவோரைச் சார்ந்தோருக்கு இந்த அறிவுரை மிக மிக அவசியம்.

aren
07-08-2008, 02:03 AM
நன்றி நண்பரே. மிகவும் தேவையான பதிவு.

உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் மதிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.

வாங்க இதசெ. சுகமாக இருக்கீங்களா?

rajatemp
07-08-2008, 03:50 AM
அப்பட்டமான உண்மை.
கெட்டவர்கள் திருந்துவார்களாக
இதுவரை கெடாதவர்கள் உணர்வார்களாக.
இதுபோல் உண்மை கசக்கவே செய்யும்.

இங்கு வெளியிட்டமைக்கு நிர்வாகி அவர்களுக்கு நன்றி.

மயூ
07-08-2008, 04:08 AM
நச்சென்று இருந்த்து. ஐடி துறையில் இருக்கும் ஒருவர் இருவர் செய்யும் சில வேலைகள் எல்லாரும் செய்வது என்றாகாது... ;)

சுகந்தப்ரீதன்
07-08-2008, 11:09 AM
பணத்தை விட ரத்தம் கனமானது..சிறுவாக்கியத்தில் முழுவாழ்க்கையும் அடங்கிவிடுகிறது..!!

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியண்ணா..!!