PDA

View Full Version : இப்போது உலகம் எப்படி இருக்கு சார்?



mukilan
05-08-2008, 05:34 PM
16-08-08 சக்தி விகடனில் சுகி.சிவம் கேள்வி பதிலில்


இப்போது உலகம் எப்படி இருக்கு சார்?

- வந்தனா

ஓர் அழகான SMS செய்தி.

ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் மக்களிடம் சென்று, நேரடியாகத் தகவல் அறிய ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

''தயவுசெய்து உலகின் பல பாகங்களில் உள்ள மக்கள், உணவுப் பற்றாக்குறையினால் படும் துன்பம் பற்றி, தங்களது நேர்மையான- சுதந்திரமான கருத்தைச் சொல்ல முடியுமா?'' - இதுதான் அந்தக் கேள்வி.

பலன் பூஜ்யம். யாரும் பதிலளிக்கவில்லை!

காரணம், பல நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு இந்தக் கேள்வி முழுமையாக புரியவில்லை.

'உணவுப் பற்றாக்குறை' என்பது குறித்து அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்களுக்குப் புரியவில்லை.

ஆப்பிரிக்க மக்களோ நேர் எதிர்! அவர்களுக்கு, 'உணவு என்றால் என்ன?' என்பதே தெரியவில்லை.

'சுதந்திரமான கருத்து சொல்லுதல்' என்பதைச் சீனர்கள் அறியவே இல்லை.

கேள்வியில் இடம்பெற்றிருந்த 'நேர்மையான' என்ற வார்த்தையால், இந்தியர்கள் பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டனர்.

'தயவுசெய்து' என்கிற வார்த்தை, அரேபிய நாடுகளுக்கு விளங்கவே இல்லை.

உங்களது கேள்விக்கு இந்த 'SMS'தான் சரியான பதில் என்று நினைக்கிறேன்!

பாலகன்
05-08-2008, 05:57 PM
கேள்வியில் இடம்பெற்றிருந்த 'நேர்மையான' என்ற வார்த்தையால், இந்தியர்கள் பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டனர்.

சுகி சிவம் இருப்பதும் இந்தியாவில் தானே,

இந்தியாவில் நேர்மையாக பதில் சொல்பவர்கள் இல்லை என்று சொல்ல முடியாதே,, இப்போ இருப்பவர்களிடம் நேர்மையில்லை அவ்வளவே

இது என்னுடைய கருத்தே, நல்ல தகவலுக்கு நன்றி முகில்

மனங்கவர்ந்தவர் ஆனதற்கு பாராட்டுக்கள்

அன்புடன்

பூமகள்
05-08-2008, 06:06 PM
ஒவ்வொரு நாடும் இப்போது எப்படி இருக்கிறது என்பதை மிக எதார்த்தமான ஒரு மிகச் சிறிய பதிலில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டார்...

சுகி சுவம் அவர்கள் பேச்சு கேட்க அத்தனை ஆர்வமெனக்கு..

மிகப் பிடித்த பேச்சாளர்.. சிந்தனாவாதி..

பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் முகிலன் அண்ணா..!! :)

mukilan
05-08-2008, 06:12 PM
சுகி சிவம் இருப்பதும் இந்தியாவில் தானே,

இந்தியாவில் நேர்மையாக பதில் சொல்பவர்கள் இல்லை என்று சொல்ல முடியாதே,, இப்போ இருப்பவர்களிடம் நேர்மையில்லை அவ்வளவே

இது என்னுடைய கருத்தே, நல்ல தகவலுக்கு நன்றி முகில்

மனங்கவர்ந்தவர் ஆனதற்கு பாராட்டுக்கள்

அன்புடன்

நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது நல்லதில்லைதான். ஆனால் சுகி. சிவம் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

தல பில்லாவின் வாழ்த்துக்கு என் நன்றி.

mukilan
05-08-2008, 06:15 PM
ஒவ்வொரு நாடும் இப்போது எப்படி இருக்கிறது என்பதை மிக எதார்த்தமான ஒரு மிகச் சிறிய பதிலில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டார்...

சுகி சுவம் அவர்கள் பேச்சு கேட்க அத்தனை ஆர்வமெனக்கு..

மிகப் பிடித்த பேச்சாளர்.. சிந்தனாவாதி..

பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் முகிலன் அண்ணா..!! :)


பகிர்ந்ததுக்கும் பாராட்டா! முடியலை தங்கச்சி முடியலை!

ச்சும்மா! லுலுவாயிக்கு.... அழக் கூடாது சரியா!

அக்னி
05-08-2008, 06:17 PM
நகைச்சுவைக்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதும், சீண்டிக் கொள்வதும் உண்டு.
நிஜமாகா வரை நன்று.

பகிர்தலுக்கு நன்றி முகில்ஸ் ஜி...

பாலகன்
05-08-2008, 06:20 PM
நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது நல்லதில்லைதான். ஆனால் சுகி. சிவம் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

தல பில்லாவின் வாழ்த்துக்கு என் நன்றி.

மிக்க நன்றி முகில்ஸ்

சீனர்களை விட அரேபியர்களை விட இந்தியர்கள் எவ்வளவோ மேல்,,,, நாம் அண்டை நாட்டை அபகரிக்கவுமில்லை (இது ஒன்றே நமது நேர்மைக்கு ஒரு உதாரணம்),,, வளங்கள் இன்றைய தேதிகளில் குறைவாக இருந்தும் நம்முடைய அறிவை கொன்டே அந்நியர்களுக்கு உதவுகிறோமே.

ஆனால் சுகி சிவம் கருத்துக்கள் உண்மையிலேயே அணைவரையும் சென்றடைய வேன்டும், மிகவும் வித்தியாசமான கருத்துக்களை கொன்டவர்....

அன்புடன்

அறிஞர்
05-08-2008, 07:57 PM
சில வருடங்களுக்கு இதை மின்னஞ்சலில் படித்துள்ளேன்...

இதைப்போல சிந்திக்க பல விசயங்கள் உள்ளன..

நன்றி முகிலன்

arun
05-08-2008, 08:20 PM
சுகி சிவம் பேசினாலே கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றும் அது போல தான் இதுவும் யோசிக்க வைத்த ஒன்று

பகிர்வுக்கு நன்றி

சிவா.ஜி
06-08-2008, 04:53 AM
ரத்தினச்சுருக்கமாக பல நாட்டுமக்களின் இயல்பை அறியவைத்த பதில். அதிலும் அரேபிய நாட்டினருக்கு தெரியாத அந்த "தயவுசெய்து" என்ற வார்த்தை....நிஜமாகவே என்னால் உணரமுடிகிறது. பகிர்வுக்கு நன்றி முகிலன்.

இதயம்
06-08-2008, 05:32 AM
சுகிசிவத்தின் கருத்தை ஏற்கிறேன். இந்தியர்களின் பெரும்பான்மையினர் நேர்மையின் பொருள் அறியாதவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியாவில் இருப்பதால் அதன் அவலங்களை இந்தியன் சொல்வதில் தவறில்லை அ.மணவாளன்..! அதை திருத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நம்முடைய கடமை என்பதை உணர வேண்டும். நேர்மை மட்டுமல்ல, தற்பெருமையிலும் இந்தியர்கள் குறைந்தவர்களில்லை.

அன்புரசிகன்
06-08-2008, 06:24 AM
இலங்கை மக்கள் அவ்வளவு நல்லவங்களா??? ஒரு வார்த்தை கூட வரல... :D :D :D :D

பகிர்வுக்கு நன்றிகள்.

இதயம்
06-08-2008, 06:34 AM
யானையும், எறும்பும் நண்பர்கள். ஒரு நாள் யானை போய் ஒரு தென்னை மரத்தை தலையால் முட்டிச்சாம். அந்த அதிர்ச்சியில் மரத்தில் இருந்த தேங்காய்கள் உதிர்ந்ததில் சில யானையின் தலையில் விழ அந்த அதிர்ச்சியில் யானை "ஆஆஆ...!"னு கத்தியதாம்..!! அப்ப யானையின் முதுகில் இருந்த எறும்பு சொன்னிச்சாம், "என்ன நண்பா.. நான் விளையாட்டுக்குத்தானே உன்னை கடிச்சேன்... இது போயி இப்படி கத்தறே..?"ன்னு..!!

அன்புக்கு இந்த கதை தான் என் பதில்..!!

பாலகன்
06-08-2008, 06:42 AM
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் மக்களிடம் சென்று, நேரடியாகத் தகவல் அறிய ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.


இந்தியாவில் இருப்பதால் அதன் அவலங்களை இந்தியன் சொல்வதில் தவறில்லை அ.மணவாளன்..!

நண்பரே இதயம் உங்களுக்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன்,,,

இதோ மேலே பாருங்கள் சுகிசிவம் சொன்னாலும் கேள்வி எழுப்ப பட்ட இடம் ஐக்கிய நாடுகள் சபை............. அங்கேயும் நம்மை தாழ்த்தி பேசவேன்டுமா என்று தான் நான் கேட்டேன்,,, தவறாய் இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்

அன்புடன்

நேசம்
06-08-2008, 01:59 PM
அந்தந்த நாட்டு மக்களின் இயல்பை அழகாக எடுத்து காட்டுகிறது.சுகி.சிவம் எடுத்து காட்டாதான் சொல்லி இருக்கிறார் தவிர இந்தியர்களின் நேர்மை பற்றி அவருடைய கருத்தாக எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் அவர் நல்ல ஆன்மிகவாதி, சிந்தனைவாதி மற்றும் தேசப்பற்று உடையவர்

சுகந்தப்ரீதன்
07-08-2008, 11:18 AM
சீனர்களை விட அரேபியர்களை விட இந்தியர்கள் எவ்வளவோ மேல்,,,,
தங்களின் நாட்டுபற்றுக்கு நான் தலைவணங்குகிறேன் மணவாளன் அண்ணா..!! ஆனால் உண்மையில் மேப்பில்கூட சீனாவும் அரேபியாவும் இந்தியாவுக்கு மேலேதான் உள்ளது..!!

நாம் அண்டை நாட்டை அபகரிக்கவுமில்லை (இது ஒன்றே நமது நேர்மைக்கு ஒரு உதாரணம்),,, நேர்மைக்கு நீங்கள் சொன்ன உதாரணம் உண்மையிலேயே உண்மையா என்று சற்று ஆராய்ந்து பாருங்கள் அண்ணா..!!

விகடன்
07-08-2008, 11:33 AM
ஒவ்வொரு நாடிலிருக்கும் குறைபாட்டால் அந்தக்கேள்வியின் ஆழம் புரியப்படாமலிருப்பதை சுட்டிக்காட்டும் நகைச்சுவையுடன் கூடிய பகிர்வு இரசிக்க மட்டும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி