PDA

View Full Version : காற்றே



ஆர்.ஈஸ்வரன்
05-08-2008, 11:27 AM
காற்றே உன்னில் நாங்கள் நலம்
எங்களில் நீ நலமா?

காற்றே நீயும் கடவுள் தான்
கண்ணுக்குத் தெரியாததில் மட்டுமல்ல
மறைந்திருந்து நன்மை செய்வதிலும்

நீயில்லாமல் உலகம் ஏது காற்றே
நீயில்லாமல் உயிர் ஏது காற்றே

நீ சிறைப்பட்டாலும் நல்லதே செய்கிறாய்
எங்களைப் போல் இல்லாமல்

தென்றலாய் எப்போதும் தவழ்கிறாய்
உருவமில்லாமல் தொடு உணர்வாகிறாய்

மேகங்களுக்கு கால்களாய் இருப்பதும்
கதிரவனின் வெப்பத்தை குறைப்பதும்
மரங்களை அசைத்து சிரிக்க வைப்பதும்
நஞ்சையுண்டு அமிர்தத்தைக் கொடுப்பதும்
ஒலியை இசையாய் மாற்றித் தருவதும்
மின் உற்பத்திற்குப் பயன்படுவதும் நீதானே

நீயில்லாவிட்டால் வாகனங்கள் ஏது?
புகையே உனக்குப் பகைதான்
உன்னையே கலப்படம் செய்கிறோம்
நாங்கள் உணர்வது எப்போது?
நீ மரணம் ஆகும்போதா?
இல்லை எங்களின் மரணத்தை
தவணையில் ஆழ்த்தும்போதா?

நாகரா
06-08-2008, 03:55 AM
மூச்சுக் காற்றென்னும்
பன்முகப் பரிமாணப் பாலத்தினூடே
பரமனைச் சென்றடைந்து
அவனை இகத்தில் சேர்த்திடுவோம்!!

காற்றுக் கவிதை நன்று, வாழ்த்துக்கள் ஈஸ்வரன்

ஆர்.ஈஸ்வரன்
14-08-2008, 01:46 PM
நன்றி நாகரா அவர்களே

செல்வா
15-08-2008, 11:33 AM
காற்று உயிர் வாழ மூலாதாரம்.
காற்றும் கறைப்படுகிறது.
வாழ்வின் ஆதாரமான காற்றையே
ஆறா ரணமாக்கிக் கொண்டிருக்கிறோம்...
எப்போது விழிக்கப் போகிறோம்...

சிந்தனைகள் தேக்கிய காலத்துக்கேற்ற கவிதை
வாழ்த்துக்கள் ஈஸ்வரன் அவர்களே..

மின்னிதழுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இளசு
15-08-2008, 12:48 PM
உணவின்றி பல நாள்..
நீரின்றி சில நாள்..

காற்றின்றி?
இன்றியமையா வாழ்வாதாரங்களின் முதல் - காற்று!

அதை வந்தனை செய்த நல்ல கவிதை!

வாழ்த்துகள் ஈஸ்வரன்!

poornima
16-08-2008, 09:03 AM
Nothing But Wind என்றொரு இளையராஜாவின் ஆல்பம் நினைவுக்கு வந்தது உங்கள் இக்கவிதை படித்தபோது..

காற்றே என் வாசல் தந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் -காதல் என்றாய் -
என்ற பாடலும் நினைவாடலில்..

காற்றின்றியும் அமையாது உலகு. பாராட்டுகள்

Keelai Naadaan
16-08-2008, 10:00 AM
காற்றே நீயும் கடவுள் தான்
கண்ணுக்குத் தெரியாததில் மட்டுமல்ல
மறைந்திருந்து நன்மை செய்வதிலும்
காற்றின்றி அமையாது உலகு. வாழ்த்துக்கள் ஈஸ்வரன்.
காற்றின் இருத்தலை எப்போதும் அறிந்து உணர முடிகிறது. ஆனால் கடவுளைத்தான்...?

ஆர்.ஈஸ்வரன்
03-09-2008, 01:53 PM
இப்போதுதான் கவிதையின் விமர்சனத்தைப் பார்த்தேன்.
நன்றி. நன்றி.