PDA

View Full Version : புரியாத பாதைகள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-08-2008, 08:37 AM
எதுவும் புலப்படவில்லை
சுற்றியிருக்கும் ஓராயிரம் பாதைகளில்
எந்தப் பாதையை ஏறெடுப்பதென்று

கம்பளம் விரித்தாற் போல்
பவுசாய் தெரியும்
பசேலென்ற பாதைகளெல்லாம்
பாதியில் நின்றும் போகலாம்

பாதையே தெரியாத பல பாதைகள்
கொண்டு போயும் சேர்க்கலாம்

எல்லோரும் செல்கிறார்களென்று
எதிலொன்றோ பயணிக்கப்போய்
எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்கையில்
எல்லோரையும் குறைபட்டு லாபமில்லை.

சொல்லாமல் சென்றடைந்தவனிடம்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனென்று
நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை.

இப்படி ஏறி அப்படி இறங்கும்
குறுக்குப் பாதை காட்டுங்கள்
கோடி பணம் தருகிறேனென்று
எக்குத்தப்பாய் சிந்திக்கும்
அறிவு ஜீவிகள் ஒரு புறம்

சென்றவன் வந்து
வழி சொல்வானென்று
செல்லும் பாதையில்
கடை விரித்தமர்ந்திருக்கும்
மேதாவிகள் மறு புறம்

பாதையில் வாய்த்துவிட்டதென்பதற்காய்
கல்லிடமும் மரத்திடமும்
வழித்தடம் கேட்டு புரளும்
மகா மேதாவிகள் மத்தியப் புறம்

பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதையென
நானும் நாலு வார்த்தை
சொல்லப் போனால்
என்னிடமும் ஒருவன் வருகிறான்
மாலையைத் தூக்கிக்கொண்டு
நீங்கள்தான் எனக்கு
நல்லதொரு வழியை காட்டவேண்டுமென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

shibly591
05-08-2008, 08:47 AM
எதுவும் புலப்படவில்லை
சுற்றியிருக்கும் ஓராயிரம் பாதைகளில்
எந்தப் பாதையை ஏறெடுப்பதென்று

கம்பளம் விரித்தாற் போல்
பவுசாய் தெரியும்
பசேலென்ற பாதைகளெல்லாம்
பாதியில் நின்றும் போகலாம்

பாதையே தெரியாத பல பாதைகள்
கொண்டு போயும் சேர்க்கலாம்

எல்லோரும் செல்கிறார்களென்று
எதிலொன்றோ பயணிக்கப்போய்
எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்கையில்
எல்லோரையும் குறைபட்டு லாபமில்லை.

சொல்லாமல் சென்றடைந்தவனிடம்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனென்று
நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை.

இப்படி ஏறி அப்படி இறங்கும்
குறுக்குப் பாதை காட்டுங்கள்
கோடி பணம் தருகிறேனென்று
எக்குத்தப்பாய் சிந்திக்கும்
அறிவு ஜீவிகள் ஒரு புறம்

சென்றவன் வந்து
வழி சொல்வானென்று
செல்லும் பாதையில்
கடை விரித்தமர்ந்திருக்கும்
மேதாவிகள் மறு புறம்

பாதையில் வாய்த்துவிட்டதென்பதற்காய்
கல்லிடமும் மரத்திடமும்
வழித்தடம் கேட்டு புரளும்
மகா மேதாவிகள் மத்தியப் புறம்

பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதையென
நானும் நாலு வார்த்தை
சொல்லப் போனால்
என்னிடமும் ஒருவன் வருகிறான்
மாலையைத் தூக்கிக்கொண்டு
நீங்கள்தான் எனக்கு
நல்லதொரு வழியை காட்டவேண்டுமென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

இதே நிலையை நானும் உணர்ந்திருக்கிறேன்..

அருமை தொடர்க

பூமகள்
05-08-2008, 10:38 AM
மனவோட்டத்தினைக் கவிதையாக்கும் பாங்கு கண்டு அசந்தேன்..!!

பல நேரங்களில்.. இவ்வகை உணர்வு என்னையும் ஆட்கொண்டிருக்கிறது..

எளிய வார்த்தைகளில் ஆழமான கரு கொண்டு கவிதை படைப்பதில் உங்கள் திறம் தெரிகிறது..

பாராட்டுகள் ஜூனைத் அவர்களே..!! :)

சிவா.ஜி
05-08-2008, 11:44 AM
இறைவனை அடைவதற்கான அல்லது சொர்க்கம் ஏகுவதற்கான பாதையைத் தேடி, பணத்துடனும், பரிதவிப்புடனும் அலைபவர்களை ஏமாற்றும் போலிகள் மத்தியில், நல்லது நினைத்தால் எல்லாம் நல்ல பாதையே என்று சொல்பவரையும் விடுவதில்லை...மாலையோடு வந்துவிடுகிறார்கள். அருமையான கருத்து கொண்ட கவிதை வாழ்த்துகள் ஜுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-08-2008, 12:07 PM
அன்பு சிவா. என் தங்கச்சியும் சரியா சொல்லல என்னோட சகோதரரும் சரியா சொல்லல என்னோட கவிதைக் கருவ. நீங்க சரியா சொன்னதுக்கு என்னோட சொத்தையே எழுதி வைக்கலாம். இந்தா பிடிங்க 500 ரூபாய் இனாமா. போய் டீ சாப்டுங்க.

சிவா.ஜி
05-08-2008, 12:41 PM
ஆஹா 500 ரூபாய்க்கு டீயா...? எங்க ஆபீஸ்ல இருக்கிற எல்லாத்துக்குமில்ல வாங்கிக்குடுக்கலாம்...? நன்றி ஜுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-08-2008, 12:45 PM
நாயர் கடையில 2 ரூபாய்க்கு டீ வாங்கி கொடுக்குறதுக்காக கொடுக்கல. போய் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்துல டீ சாப்டுட்டு அப்டியே காசு மிஞ்சுனா டிப்ஸா கொடுத்துட்டு வாங்க சிவா ஜி.

நாகரா
05-08-2008, 03:42 PM
உமக்கு வெளியே விரியும்
பாதைகள் ஏராளம்.
உமக்குள்ளே
கீழே விரிந்து
மேலே குறுகி
நூலேணியாய் ஓங்கும்
பரமனின் ஒரே பாதையாம்
மெய்வழிச் சாலை பிடிக்க
எளிய தயாமார்க்கமாய்
"பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதை"
என்ற உம்கவி வரிகள்
மாலைக்கு உகந்தவையே!

வாழ்த்துக்கள் ஹஸனீ. தொடரட்டும் உம் வழி காட்டுதல்கள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 07:01 AM
மிக்க நன்றி நாகரா உங்கள் வரிகளுக்கும் உங்கள் கவிதைக்கும்.

இதயம்
06-08-2008, 07:10 AM
ஹா..ஹா...!! என் உணர்வுகளை அப்படியே படம் பிடித்து அதை இரசித்து சிரிக்கும் வகையில் எழுதி, கடைசியில் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் முத்தாய்ப்பு தந்திருக்கிறீர்கள் மனிதர்களுக்கு மதம் பிடிக்க வைக்கும் மதத்தை, ஆன்மீகத்தேடல் குறித்த உங்கள் கவிதை வெறி பிடித்தவர்களுக்கு சவுக்கடி..!! சாட்டை தொடர்ந்து சுழலட்டும்..!!!

பாராட்டுக்கள் ஜுனைத்.!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 10:32 AM
பண்பான பாசமான இதயம் அண்ணாவிற்கு நன்றிகள் பல.