PDA

View Full Version : கதவு தட்டப்படும் சப்தம்...



shibly591
05-08-2008, 07:38 AM
பக்கத்து வீட்டுக்கதவு தட்டப்படுகிறது...
நீணட நேர தட்டலுக்குப்பின்
கதவு உடைக்கப்படுகிறது...

குழந்தைகளின் கூக்குரல்
பெண்களின் கதறல்
சில ஆண் குரல்களின் அதட்டல்
எல்லாமும் ஒரு சில துப்பாக்கி வேட்டுக்கள்
தீரக்கப்படும் சப்தத்தின் பின்
அடங்கிப்போனது..

சிறிது நேரம் நகர்ந்திருக்கும்..

இப்போது
எனது வீட்டுக்கதவு தட்டப்படுகிறது..

poornima
05-08-2008, 08:01 AM
வரிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையான பதட்டம் ஏதோ செய்தாலும் இதை சற்றே மாற்றித் திருத்த இன்னும் அதிகமான அழுத்தம்
கவிதைக்கு கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

தட்டப்படும் கதவுகள் திறக்கப்பட ஒரு சமாதான பூங்கொத்து நீட்டப்படும் நாளுக்கு நான் பிரார்த்திக்கிறேன் நண்பர் ஷீப்லி

ஓவியன்
05-08-2008, 08:06 AM
பக்கத்து வீட்டுக்கதவு தட்டப்படுகிறது...
நீணட நேர தட்டலுக்குப்பின்
கதவு உடைக்கப்படுகிறது...

குழந்தைகளின் கூக்குரல்
பெண்களின் கதறல்
சில ஆண் குரல்களின் அதட்டல்
எல்லாமும் ஒரு சில துப்பாக்கி வேட்டுக்கள்
தீரக்கப்படும் சப்தத்தின் பின்
அடங்கிப்போனது..

சிறிது நேரம் நகர்ந்திருக்கும்..

இப்போது
எனது வீட்டுக்கதவு தட்டப்படுகிறது..

என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகையில்
நான் அங்கு இருக்கவில்லை
பக்கத்து வீட்டு நண்பனுடனிணைந்து
பயணித்துக் கொண்டிருந்தேன்
அகால வேளைகளில் கதவு தட்டி
உயிர் கொல்லும் பேய்களை
அடக்கி ஒடுக்கும் வேள்வி செய்யும் நோக்குடன்...!!

______________________________________________________________________________________________

நல்லதோர் கவிதை ஷிப்லி,
வரிக்கு வரி வலிகளும் யாதார்த்தமும் இணைந்து நின்று வாழ்வியல் துன்பமொன்றை இடித்துரைக்கிறது...

shibly591
05-08-2008, 08:43 AM
நன்றி பூர்ணிமா...

உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள் விரவில் மலரவேண்டும்...

shibly591
05-08-2008, 08:44 AM
நன்றி ஓவியன்...

எதுவரை உடைக்கப்படும் நமது கதவுகள்...?????

நாகரா
05-08-2008, 11:03 AM
பக்கத்து வீட்டுக்கதவு தட்டப்படுகிறது...
நீணட நேர தட்டலுக்குப்பின்
கதவு உடைக்கப்படுகிறது...

குழந்தைகளின் கூக்குரல்
பெண்களின் கதறல்
சில ஆண் குரல்களின் அதட்டல்
எல்லாமும் ஒரு சில துப்பாக்கி வேட்டுக்கள்
தீரக்கப்படும் சப்தத்தின் பின்
அடங்கிப்போனது..

சிறிது நேரம் நகர்ந்திருக்கும்..

இப்போது
எனது வீட்டுக்கதவு தட்டப்படுகிறது..

இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?

வன்பின் வேதனை உணர்த்தும் உம் கவிதை அருமை ஷிப்லி. கதவு தட்டலை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் எழுதத் தூண்டிய உம் கவிதைக்கு நன்றி, உமக்கு வாழ்த்துக்கள்

அமரன்
05-08-2008, 11:14 AM
ஈரம் சுரக்கும் வரிகளில்
ஈரம் வரண்ட வலிகள்..

ஷிப்லி..
தொடாதிருக்க தொடுங்கள்..
தொடராதிருக்க தொடருங்கள்.

சிவா.ஜி
05-08-2008, 11:31 AM
கதவு தட்டப்படுகிறது..இதயத்தில் அதிர்கிறது... திறப்போமா, திறந்தால் இறப்போமா என்று அச்சத்திலேயே, வாழ்க்கையின் மிச்சமிருக்கும் மகிழுணர்வுகளும் மடிந்துபோகிறது. இனி கதவு தட்டப்படுவது, சந்தோஷம் சொல்வதற்காக மட்டுமே இருக்கட்டும். வாழ்த்துகள் ஷிப்லி.

ஆர்.ஈஸ்வரன்
05-08-2008, 11:51 AM
வாழ்த்துகள்

shibly591
06-08-2008, 06:06 AM
இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?



நன்றி நாகரா...

அருமையான பின்னூட்டம் அழகான கவிதையோடு..

நீங்கள் ஆன்மிகத்தோடு அணுகியிருக்கிறீர்கள்...

நான் வன்முறையோடு அணுகியிருக்கிறேன்...

இரண்டிற்குமிடையில் மலையளவு வித்தியாசம் இருந்தாலும் உங்கள் பார்வை அழகு.

நன்றி

shibly591
06-08-2008, 06:08 AM
ஆர்.ஈஸ்வரன்
சிவா.ஜி
அமரன்

அனைவரதும் பின்னூட்டத்துக்கு கோடான கோடி நன்றிகள்..

வலிகள் இன்னும் தொடரும்

கலைவேந்தன்
13-04-2012, 04:26 AM
வாசிக்கும் போதே பகீரெனத் தாக்கியது... உண்மை..!