PDA

View Full Version : ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்!



Pages : [1] 2

ராஜா
05-08-2008, 05:11 AM
http://www.jamaipanese.com/gallery/thumbs/lrg-385-olympic_logo_beijing_2008.gif


உலக அமைதியை வலியுறுத்தியும் நல்லொழுக்கத்தை வற்புறுத்தியும் மக்களை ஒன்றிணைக்க ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடம் கிரீஸ். முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடந்ததும் ஏதென்ஸில்தான். அது 1896 இல் தொடங்கப்பட்டது.

பெய்ஜிங் 2008 29 ஆவது ஒலிம்பியாட்! இந்த சின்னத்தில் தடகள "போஸ்' " ஒன்று இடம் பெற்றுள்ளது.

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருதப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.

உலகின் பெரும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்ஸ் துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பெய்ஜிங் வரலாறு காணாத உற்சாகமும், விழாக்கோலமும் பூண்டுள்ளது.

இதுநாள் வரை ஒலிம்பிக்கில் அமெரிக்காவே அதிக அளவு பதக்கங்களை குவித்து தனிக்காட்டு ராஜாவாக விளங்கி வந்தது. சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு சரியான சவாலாக விளங்கினாலும், அது சிதறுண்ட பிறகு போட்டியே இல்லாமல் இருந்த தனிக்காட்டு ராஜாவுக்கு, "தண்ணி காட்டும் ராஜா"வாக மக்கள் சீனக் குடியரசு உருவெடுத்துள்ளது. கடந்த ஏதென்ஸ் ஒலிம்பியாடில் இருநாடுகளுக்கும் இடையே இருந்த பதக்க வேறுபாடு மிகக் குறைவுதான்.

இம்முறை தன் சொந்த மண்ணில் தன்னம்பிக்கையோடு ஒலிம்பிக்கை எதிர்கொள்ளும் சீனாவை மிஞ்ச அமெரிக்கா தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும்..!

ராஜா
05-08-2008, 05:18 AM
http://tamil.webdunia.com/sports/olympic2008/articles/0807/29/images/img1080729057_1_1.jpg

சீனத் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 8ஆம் தேதி துவங்கவுள்ள 29வது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணி வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் தங்களுக்கு நிச்சயம் உள்ளது என்று கூறியுருப்பது நம்பிக்கையையும் எதிர்பார்பையும் உருவாக்கியுள்ளது.


http://tamil.webdunia.com/sports/olympic2008/articles/0807/29/images/img1080729057_1_2.jpg

உலக சாம்பியன் பட்டம் வென்ற டோலா பானர்ஜி!


கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் நடந்த மகளிர் வில் வித்தைப் போட்டியில் தனி நபர் ‘ரீகர்*வ்’ பிரிவில் கடுமையான போட்டிக்கு இடையே டோலா பானர்ஜி தங்கம் வென்று உலக வாகையர் பட்டத்தைப் பெற்றார்.

இப்போட்டிகள் உலகின் சில நாடுகளே கலந்துகொண்டு அதில் போட்டிகள் குறைவாக இருந்து டோலா ஜெயித்துவிடவில்லை. மாறாக, துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவில் துவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்து, இறுதிப் போட்டிகள் துபாயில் நடந்தன.

இதில்தான் டோலா பானர்ஜி அரை இறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108 - 106 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதிபெற்று, அதில் கொரிய வீராங்கனை யூன் யங் சோய்யின் கடும் சவாலை எதிர்கொண்டு 110 -109 என்று புள்ளிகள் கணக்கில் வென்று உலக வாகையர் பட்டத்தை வென்றார்.

தங்கம் வென்றபின் செய்தியாளர்களிடம் பேசிய டோலா, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வேன் என்று அறிவித்தார். எனவே, இந்தியாவின் முதல் தங்க வாய்ப்பாக டோலா செல்கிறார்.
____________________________________________________________________


http://tamil.webdunia.com/sports/olympic2008/articles/0807/29/images/img1080729057_1_3.jpg

துப்பாக்கிச் சுடுதலில் அசரவைத்த மனாவ்ஜித் சிங்!

2004ஆம் ஆண்டு ஏதன்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தினார் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர். அத்தோடு அந்த பாரம்பரியம் முடியவில்லை என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார் மனாவ்ஜித் சிங் சாந்து.

2006ஆம் ஆண்டு ஜாக்ரெப் நகரில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் டிராப் சூட்டிங் பிரிவில் 150 புள்ளிகளுக்கு 143 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்றார் மனாவ்ஜித்.

அதுமட்டுமின்றி, அணிப்போட்டியில் மனாவ்ஜித், மான்செர் சிங், அன்வர் சுல்தான் ஆகியோர் இந்தியாவிற்கு வெள்ளி வென்று பெருமை சேர்த்தனர்.

இவர்களோடு அஞ்சலி பகவத் உள்ளிட்ட திறமை வாய்ந்த ஒரு அணி செல்கிறது. எனவே இந்தியாவின் பதக்க வாய்ப்பு பீஜிங்கில் மேலும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜா
05-08-2008, 05:23 AM
http://tamil.webdunia.com/sports/olympic2008/articles/0807/29/images/img1080729057_2_1.jpg

குத்துச் சண்டையில் பெருமை சேர்த்த விஜிந்தர், அகில் குமார்!

ஒலிம்பிக் போட்டிகளில் கால் இறுதிவரை எத்தனையோ முறை இந்திய குத்துச் சண்டை வீரர்கள் முன்னேறியுள்ளனர். உலகின் மிகச் சிறந்த வீரர்களிடம் சிறிய வித்தியாசத்தில் தோற்று பதக்க வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இந்த வரலாறு பீஜிங்கில் மாற்றி எழுதப்படவுள்ளது. மிடில் வெய்ட் (75 கி.கி.) பிரிவில் விஜிந்தரும், பாண்டம் வெய்ட் (54 கி.கி.) பிரிவில் அகில் குமாரும் நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுததப் போகிறார்கள்.

கடந்த மே மாதம் தைப்பீ நகரில் உலக குத்துச்சண்டை சங்கம் நடத்திய போட்டியில் ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கசகஸ்தான் வீரர் பக்தியார் ஆர்தேயீவை காலிறுதியில் தோற்கடித்தார் விஜேந்தர். போட்டி கடுமையாக இருந்தாலும் மிகச் சிறப்பாக சண்டை செய்து 12 - 7 என்று புள்ளிக்கணக்கில் விஜேந்தர் வெற்றி கண்டது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தது.

அதன்பிறகு பல சர்வதேசப் போட்டிகளில் விஜேந்திரின் வெற்றி, உலகளாவிய அளவில் 75 கி.கி. பிரிவிலுள்ள சிறந்த பாக்ஸர்களில் ஒருவர் இவர் என்பதை மெய்ப்பித்தது.

இவரைப் போலவே பாண்டம் வெய்ட் பிரிவில் தகுதிபெற்றுள்ள அகில் குமாரும் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீரராவார். ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டையிடக்கூடிய அகில் குமாரை பதக்க வரிசையில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இவர்களுடன் லைட் ஹெவி பிரிவில் ஜித்தேந்தர், ,தினேஷ் குமார் ஆகியோரும் பீஜிங்கில் களமிறங்குகின்றனர்.
_________________________________________________________________________


http://tamil.webdunia.com/sports/olympic2008/articles/0807/29/images/img1080729057_2_2.jpg

தொடர் ஓட்டத்தில் சாதனை புரிந்த மகளிர் அணி!

உலக அளவில் இந்தியாவின் ஆடவர்களைவிட மகளிர் தொடர்ந்து சிறந்து விளங்குவது தடகளத்தில்தான். ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீராங்கனைகள் இறுதிவரை வந்தும் பதக்கம் பெறாத குறை இன்றுவரை நீடிக்கிறது.

இக்குறையை இம்முறை போக்குவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது நமது 4 x 400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்ட அணி.

கடந்த மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசிய கிராண்ட் பிரீ தடகளப் போட்டிகளில் சித்ரா சோமன், ராஜா பூயம்மா, மன்தீப் கவுர், எஸ். கீதா ஆகியோர் கொண்ட மகளிர் தடகள அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 28.29 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றது மட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில் சீன மகளிர் அணி 2வது இடத்தைப் பெற்றது.

இந்த அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜா
05-08-2008, 05:40 AM
கீழ்க்கண்ட வகைகளில் விளையாட்டுகள் நிகழவுள்ளன..

தட கள விளையாட்டுக்கள் (47)

ஓடுதல்
விரைவோட்டம்
தொடர் ஓட்டம்
தடை தாண்டும் ஓட்டம்
மாரத்தான்
நடைப்போட்டி
பாய்தல்
மும்முறைப் பாய்ச்சல்
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
தடியூன்றிப் பாய்தல்
எறிதல்
பரிதி வட்டம் எறிதல்
சம்மட்டி எறிதல்
ஈட்டி எறிதல்
குண்டெறிதல்
Triathlon (2)
Modern pentathlon (2)

நீர் விளையாட்டுக்கள் (46)

Diving (8)
நீச்சல், நீந்துதல் - Swimming (34)
ஒருங்கிணைந்த ஒய்யார நீச்சல் Synchronized swimming (2)
Water polo (2)

சீருடற்பயிற்சிகள் (18)

floor exercis
horizontal bar
horse vault
parallel bar
pommel horse
ring
asymmetric bars
balance beam
Rhythemic
Trampoline

தற்காப்புக் கலைகள்..

குத்துச்சண்டை (11)
டைக்குவாண்டோ (8)
யுடோ - Judo (14)
மல்யுத்தம் - Wrestling (18)

ஊர்தி ஓட்டங்கள்..

படகோட்டம் Rowing (14)
பாய்மரப் படகோட்டம் - Sailing (11)
Canoeing (16)
மிதிவண்டியோட்டம் - Cycling (18)

குழு விளையாட்டுக்கள்..

அடிப்பந்தாட்டம் (பேஸ்பால்) - Baseball (1)
கூடைப்பந்தாட்டம் - Basketball (2)
காற்பந்தாட்டம் - Football (soccer) (2)
கைப்பந்தாட்டம் - Volleyball (4)
வளைதடிப் பந்தாட்டம் (2)
மென்பந்தாட்டம் - Softball (1)
மேசைப்பந்தாட்டம் - Table tennis (4)
பூப்பந்தாட்டம் - Badminton (5)
டென்னிஸ் - Tennis (4)
Handball (2)

கருவி விளையாட்டுக்கள்..

அம்பெய்தல் - Archery (4)
வாளோச்சும் கலை - Fencing (10)
குறி பார்த்துச் சுடல் - Shooting (15)
பாரம் தூக்குதல் - Weightlifting (15)
Equestrian (6)

ராஜா
05-08-2008, 06:25 AM
முதன்முதலில் தங்கம் வென்ற ஆசிய அணி என்ற பெருமை படைத்த இந்தியா..!


http://bp1.blogger.com/_HUXNbxQdt24/R9VG8VthNuI/AAAAAAAAAPY/7iGIzbyyyws/s320/hockey.jpg




மார்ச் 10, 1928 ஆம் ஆண்டு ஹாக்கிப்போட்டிகளில் இந்திய அணிக்கான பொற்காலத்தை துவக்கும் ஒரு பயணம் கெய்சர் - இ - ஹிந்த் என்ற கப்பலில் தொடங்கியது.


1928 ல் ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் பங்கேற்க புறப்படும் முன் பம்பாய் அணியுடன் ஆன பயிற்சி ஆட்டத்தில் பிரிட்டிஷ் இந்திய அணி தோற்றுப்போனது. இந்திய அணியை வழியனுப்ப வந்திருந்தவர்கள் மொத்தம் மூன்றே பேர்.ஹாக்கி சங்கத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஹாக்கி மீது ஆர்வம் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாளர்.

ஆம்ஸ்டர்டம் செல்லும் வழியில் இங்கிலாந்தில் கால்பதித்த இந்திய அணி , ஆடிய 11 பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. அந்தக்காலக்கட்டங்களில் இப்படி சொல்லப்படுவதும் உண்டு. "ஹாக்கி மந்திரவாதி" என அழைக்கப்பட்ட தயான் சந்த் , பிரிட்டன் ராணியின் குடையின் கைப்பிடியைக்கொண்டு ஆடி கோல்கள் அடித்தார். ஹாலந்து செல்லும் முன் ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் பயிற்சி ஆட்டங்கள் ஆடிய இந்திய அணி 9 நாடுகளுடன் ஒலிம்பிக் போட்டியில் காலடி எடுத்து வைத்தது.[ இந்த ஆம்ஸ்டர்டம் போட்டிகளில் தான் முதன்முறையாக பெண்கள் களப்போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்]

முதல் போட்டி ஆஸ்திரியாவுடன் 6 - 0 என்ற கணக்கில் எளிதாக வென்றது. தயான்சந்த் 4 கோல்கள் அடித்து இருந்தார்.

அடுத்து பெல்ஜியமுடன் 9 - 0 கணக்கிலும் தொடர்ந்து டென்மார்க்கை 5- 0 கணக்கிலும் வென்று அரை இறுதிக்கு அட்டகாசமாக நுழைந்தது. அரை இறுதியில் 6 - 0 என்று சுவிட்சர்லாந்தை சுருட்டிய இந்தியா இறுதிப்போட்டியில் ஹாலந்தை சந்தித்தது.

50000 பேருக்கு முன்னால் சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்ற தைரியத்தில் ஆடிய ஹாலந்து அணியை 3 - 0 கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவின் கோல்கீப்பர் ரிச்சர்ட் அலன் இந்தப் போட்டிகளில் ஒரு கோல்கள் கூட பெறாதவர் என்ற பெருமையைப்பெற்றார்.
அரை இறுதி வரை ஜெய்பால்சிங் அணித்தலைவராகவும், இறுதிப்போட்டிக்கு மட்டும் எரிக் பின்னிகர் தலைவராக இருந்தார்.

மூன்று பேரினால் வழியனுப்பப்பட்ட இந்திய அணி ஆயிரக்கணக்கானோர் வரவேற்கப்பட இந்தியா வந்து சேர்ந்தனர்.

வெறும் மூன்று பேரால் வழியனுப்பப்பட்ட அணியை, முப்பது கோடி மக்களும் திரும்பிப்பார்க்க வைத்தது வெற்றி.. வெற்றி மட்டுமே..

சிவா.ஜி
05-08-2008, 07:00 AM
மிக மிக அருமையான தகவல்களுடன், அனைவரையும் ஒலிம்பிக்கை எதிர் நோக்க வைத்துவிட்டீர்கள் ராஜா சார். இந்திய ஹாக்கி அணியின் முதல் வெற்ரியைப்பற்றிய விவரங்கள் பெருமூச்சு விட வைக்கின்றன. நன்றி.

இளசு
05-08-2008, 07:19 AM
அன்பு ராஜா அவர்களே,

மிக நல்ல திரிக்கு என் பாராட்டுகள்.

காற்றையும் சுத்தமாக்கி ( மாசு செய்யும் தொழிற்சாலைகளை மூடி)
அதிகபட்ச சீன வீரர்கள் தயாராய்க் காத்திருக்க
குளிர்நாட்டு வீரர்கள் சீனாவின் கோடையில் வியர்த்திருக்க
அதிர்ஷ்ட எண் நம்பிக்கை பலத்துடன் சீனா...

பார்க்கலாம் முடிவுகளை!

1928 - நினைத்து சிலிர்க்க வைக்கிறது!

கடந்தகால அனுபவங்கள் நம்மவர் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைக்கவேண்டாம் எனச்சொன்னாலும் -
உங்கள் ஆர்வமான முன்னோட்டங்களால் நானும் உற்சாகமாகிறேன்..

வெல்லட்டும் நம் வீரர்களும்!

பூமகள்
05-08-2008, 07:43 AM
ஒலிம்பிக் போட்டிகளின் உற்சாகம் ஒவ்வொருவருடமும் தவறாது மனதில் வந்து முகிழும்..!

போட்டி நாடுகள் யாராயினும்.. திறமையான சாதனைகள் நினைத்து மனம் பூரிக்கும்..!!

நம் வீரர்களும் அவ்வகை பூரிப்பைத் தருவார்களென்ற நம்பிக்கை மனதில் உருவாக்கும் பதிவு..!!

மிகச் சிறந்த பதிவுகளுக்கும் அதனோடான அரிதான பல செய்தித் தொகுப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் ராஜா அண்ணா. :)

shibly591
05-08-2008, 07:46 AM
ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை ஒலிம்பிக் வீரர்களின் பெயர்ப்பட்டியலை தேசிய ஒலிம்பிக் சபை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 வீராங்கணைகள் மற்றும் 3 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய நீச்சல் போட்டித் தொடர்பில் ஒரு வீரரும், ஒரு வீராங்கணையும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மயூம் ரஹீம் மற்றும் டெனியல் லீ ஆகியோர் நீச்சல் போட்டிகளுக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

சுசந்திகா ஜயசிங்க, நதீகா லக்மாலி, திலினி ஜயசிங்க, ஈ.எம். சேனாநாயக்க மற்றும் அனுருத்த ஜயசிங்க ஆகிய வீர, வீராங்கணைகள்; இலங்கையின் சார்பில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நீச்சல் போட்டியாளாகள் தெரிவு தேசிய தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் (ஜூன் 25) பெயரிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறெனினும், சர்வதேச நீச்சல் பேரவையின் தேர்வுக்கு அமைய இலங்கை தேசிய நீச்சல் தெரிவுக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்தள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

ராஜா
05-08-2008, 08:27 AM
அன்பு ஷிப்லி..!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுசந்திகா என்னும் வீராங்கனை, கடந்த முறை இலங்கைக்கு புகழ் தேடித்தந்த அதே சுசாந்திகா தானே..?

ராஜா
05-08-2008, 08:39 AM
http://www.theage.com.au/ffximage/2006/03/16/svRATHORE_wideweb__470x275,0.jpg

ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்..!


ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore; பிறப்பு: ஜனவரி 29, 1970 ஜெய்சால்மர், இராஜஸ்தான்) துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றார். இந்தியாவின் முதலாவது தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004 ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜரான சிங், டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 179புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஐக்கிய அரபு நாடுகளின் ஷேக் அகமத் அல்-மக்தும் 189 புள்ளிகள் வென்று தங்கப் பதக்கத்தைவென்றார். சீனாவின் வாங் ஷாக் வெண்கலம் வென்றார்.

shibly591
05-08-2008, 08:41 AM
அன்பு ஷிப்லி..!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுசந்திகா என்னும் வீராங்கனை, கடந்த முறை இலங்கைக்கு புகழ் தேடித்தந்த அதே சுசாந்திகா தானே..?

ஆம் நண்பரே...அவரேதான்..

ராஜா
05-08-2008, 09:04 AM
http://www.trinicenter.com/Sports/images/Karnam2.jpg


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி..!

கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறிக்ககுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம் தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.
___________________________________________________________________________


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Leander_Wimbledon.jpg/300px-Leander_Wimbledon.jpg

1996 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற* லியாண்டர் பயஸ் (பி. ஜூன் 17, 1973)

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரர். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.

ராஜா
05-08-2008, 09:09 AM
http://www.asiantribune.com/files/images/Susanthika%20Jayasinghe%202.img_assist_custom.jpg

இலங்கையின் பெருமை : சுசாந்திகா ஜெயசிங்கே

arun
05-08-2008, 08:34 PM
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் என்ற முழக்கத்தோடு இந்திய அணியை வாழ்த்துவோம்

இந்த முறை கண்டிப்பாக தங்க பதக்கம் கிடைக்கும் என நம்புவோம்

அறிஞர்
05-08-2008, 09:06 PM
இன்று 110 கோடி உள்ள இந்தியா.... ஒலிம்பிக் வரலாற்றில் 120 ஆண்டுகளில் 17 பதக்கங்கள்.. பெற்றுள்ளது.

இந்த தடவை குறைந்து ஒரு சில தங்க பதக்கங்களையாவது பெறுமா..... என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது....

mukilan
05-08-2008, 09:21 PM
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கம் பற்றிய தகவல்..

ஏனைய நாடுகளின் பங்களிப்பு..

இந்திய வீரர்களின் வெற்றி நிலவரம்...

இலங்கையின் வெற்றி மங்கை...

என ஏராளமான சுவையான தகவல்கள் கொடுத்து ஒலிம்பிக் விளையாட்டின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படித்தியிருக்கிறீர்கள். சுவைபடத் தகவல்கள் அளித்தமைக்கு என் நன்றிகள்.

ரகுபதி
07-08-2008, 07:59 PM
இன்று(08/08/08) தொடங்கும் பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா பதக்கங்கள் பல பெற இறைவனை வேண்டிக்கொள்வோம் ,,,,:080402gudl_prv:

பூமகள்
08-08-2008, 07:12 AM
இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஒலிம்பிக் துவக்க விழா ஆரம்பமாக இருக்கிறது..

துவக்க விழாவின் கோலாகளமான நிகழ்ச்சிகளைக் காண ஆவலாக உள்ளேன்..

இந்தியா நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வீரர்களும் பதங்களோடு திரும்ப வாழ்த்துகிறேன்..!!

rajatemp
08-08-2008, 11:44 AM
இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை நிச்சயமாக பார்த்துவிட்டு வருவார்கள் கவலை வேண்டாம்

பூமகள்
08-08-2008, 11:47 AM
இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை நிச்சயமாக பார்த்துவிட்டு வருவார்கள் கவலை வேண்டாம்
பார்த்து விட்டா??!! :eek::eek:

ஆரம்பிக்கும் போதே இப்படி ஏங்க பேசுறீங்க.. :redface::icon_ush: :eek:
முடிச்சதுக்கப்புறம் பேசிக்கலாம்.. :rolleyes:

நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்..! :icon_b::icon_rollout:

rajatemp
08-08-2008, 12:30 PM
நினைப்போம் மறப்போம்

பூமகள்
08-08-2008, 12:54 PM
அச்சச்சோ.... மறக்க மாட்டோம்..
மறப்போம் அல்ல
முனைவோம்..!!

அது கிடக்கட்டும்..
ஒலிம்பிக் ஆரம்பச்சாச்சே.. கலை நிகழ்ச்சிகளில் சீனப் பெண்கள்... மெழுகு பொம்மை போல ஆடும் அழகே அழகு...

கவலையை விடுத்து கண்டு களியுங்கள்..!! :)

ராஜா
09-08-2008, 07:45 AM
முதல் தங்கம் : செக் குடியரசின் எம்மான்ஸ்.

பிரிவு : மகளிர் 10 மீ துப்பாக்கி சுடுதல்.

முக்கியச் செய்தி : இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அஞ்சலி பகவத், இப்பிரிவு தகுதிச் சுற்றிலேயே வெளியேற்றம்..!

ராஜா
09-08-2008, 03:37 PM
ஒலிம்பிக்கில் இன்று...

மகளிர் ஜுடோ: ருமேனியா தங்கம் "அடிச்சுடுச்சு !"

சைக்கிள் பந்தயம்: ஸ்பெயினை நோக்கி உருண்டோடியது தங்கம்!

10 மீட்டர் ஏர்-பிஸ்டல்: சீனா தங்க பதக்கம் சுட்டுடுச்சு!

பளுதூக்குதல்: தங்கம் தூக்கினார் சீனா வீராங்கனை!

ஒலிம்பிக்: ஜூடோவில் இந்திய வீராங்கனை டோம்பி தேவி தோல்வி! (டோம்பி, தேம்பி தேம்பி அழுதாரான்னு தெரியாது..!)

ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் இந்திய மகளிர் அணி! (இலக்கு தவறாமல் இருக்குமா..?)

ஓவியா
09-08-2008, 04:11 PM
சூப்பர் பதிவு ராஜா அண்ணா.

இந்த சுட்டியில் மொத்த பதங்கங்களையும் காணலாம். நாட்டின் பெயர்களை தட்டி எந்த விளையாட்டில், யார், எந்த பதக்கம் என்றும் சுலபமாக காணலாம். இங்கு போட்டியாளர்களின் படம் மற்றும் பல அரிய விசயங்கள் பொதிந்துள்ளன. ஒரு சுற்று சுற்றி பாருங்களேன். ஃடாஃடா ஃபேசை நன்கு செய்துள்ளனர்.

நன்றி யாஃகூ


சுட்டி

http://sports.yahoo.com/olympics/beijing/medals;_ylt=AgSb7jc2hG41SnkaxMTSxseVTZd4


நன்றி

அக்னி
09-08-2008, 04:15 PM
ஒலிம்பிக்ஸ் தொடர்பான சுவாரசியமான விடயங்களைத் தொகுத்துத் தந்த ராஜா அண்ணாவுக்கு நன்றி...
ஓவியா அக்காவின் சுட்டிக்கும் நன்றி...

ராஜா அண்ணாவின், பதக்க வர்ணிப்புக்கள் :icon_b:

தீபன்
10-08-2008, 02:41 AM
ஒலிம்பிக்கின் முடிவில் தனியாக ஒரு தங்கப்பதக்கம் தயார்பண்ணி வையுங்க மன்ற நிர்வாகிகளே... ராஜா அண்ணனுக்கு கொடுப்பதுக்கு... அருமையான பதிவு. தொடருஙள் அண்ணரே.

அருமையானா சுட்டியை பரின்ட்துரைத்த ஓவியாக்கும் நன்றிகள்.

rajatemp
10-08-2008, 11:08 AM
இந்தியா எப்பவும் போல் தோல்வியுடன் ஒலிம்பிக்கை தொடங்கிவிட்டது

ராஜா
10-08-2008, 11:21 AM
வில் வித்தை : குறி தவறிய அம்புகள்..

இந்திய மகளிர் அணி கால் இறுதிப்போட்டியில் சீன அணியிடம் தோல்வி.

சீனா : 211 புள்ளிகள்.

இந்தியா : 206 புள்ளிகள்.

ராஜா
10-08-2008, 12:39 PM
http://tamil.webdunia.com/sports/olympic2008/news/0808/09/images/img1080809048_1_1.jpg
மிடில் வெயிட் குத்துச்சண்டை: முதல் சுற்றில் விஜேந்தர் வெ*ற்*றி!


பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த மிடில் வெயிட் 75 கிலோ ஆடவர் குத்துச்சண்டையின் முதல் சுற்றில், இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவரான விஜேந்தர் குமார் அசத்தல் வெற்றி பெற்றார்.

இப்போட்டியில் ஜாம்பியா வீரர் படோவு ஜாக் உடன் மோதிய விஜேந்தர் துவக்க முதலே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி முன்னிலையில் இருந்தார். மொத்தம் 4 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் விஜேந்தர் (1, 5, 3, 4) 13-2 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

ராஜா
10-08-2008, 12:42 PM
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த மகளிர் முதல்சுற்று பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சா*ய்னா நேவால், ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

ராஜா
11-08-2008, 09:15 AM
அதே சாய்னா நேவால் இன்று நடந்த போட்டியிலும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

தனி நபர் படகு வலிக்கும் போட்டி காலிறுதியில், இந்தியாவின் பஜ்ரங் லால் தாக்கர், 5 ஆவதாக வந்ததால்.. அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்..!

ராஜா
11-08-2008, 09:18 AM
பளு தூக்கும் போட்டிகளில் சீன வீராங்கனைகள் பதக்கங்களைக் குவிக்கிறார்கள்..!

ஓவியா
11-08-2008, 02:57 PM
204 நாடுகள் பங்குபெரும் விளையாட்டு விழாவில்,

நோர்த் கொரியா & சவுத் கொரியா இரண்டுமே பதக்க பட்டியளில் முதல் பத்து இடங்களில்.

கொரியர்களில் வெற்றியை நினைத்தால் உண்மையிலே ஆச்சர்யம் தான் வருகிறது.

அறிஞர்
11-08-2008, 03:11 PM
ஆஸ்திரேலிய மங்கையின் நீச்சல் சாதனையும்...
ஜப்பானிய மைந்தனின் நீச்சல் சாதனையும் கண்டு ரசித்தேன்.

பதக்கப்பட்டியலில் இந்தியா..
பெரிய விசயம் தான்..

rajatemp
11-08-2008, 04:46 PM
உண்மையில் பெரிய விசயம் தான்..

ராஜா
11-08-2008, 04:50 PM
http://img04.beijing2008.cn/20080811/Img214528417.jpg
அபினவ் பிந்த்ரா..!
ஆம்.. இதுதான் 110 கோடி இந்தியரும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர். இந்தியாவின் பெருமையை ஓரளவேனும் உயர்த்திய மந்திரவாதியின் பெயர்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் பெயரில் முதல் தனிநபர் தங்கத்தை வென்ற அபினவ், அதிகம் பேசாதவர். அமைதியானவர்.

2002 ம் ஆண்டில் கேல் ரத்னா விருது பெற்ற பிந்த்ரா, 2006 ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் உலக வாகையர் பட்டம் வென்றவர். எனினும் பீகிங் ஒலிம்பிக்ஸில் அவரது வாய்ப்பு ஒன்றும் மிகப்பிரகாசமாக இல்லை.

கடந்த (ஏதென்ஸ்) ஒலிம்பிக்ஸில் ஏழாவது இடத்தையே பெறமுடிந்த அபினவின் தற்போதைய வெற்றி மயிர்க்கூச்செரியும் விதத்தில் அமைந்திருக்கிறது.

தகுதிச் சுற்றில் அபினவ் நான்காவது இடத்தையே பெற்றிருந்தார்..இறுதி அடிக்கு முன்புவரை ஹாக்கினென் கையே ஓங்கியிருந்தது. தனது இறுதி அடியில், ஹாக்கினென் மிகச் சாதாரணமான சுடுதல் மூலம் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

அடுத்து அடிக்க வந்த நம் அபினவ், ஒரு முழுமையான சுடுதல் மூலம் 9.7 புள்ளிகள் பெற்றார். தற்போது, இரண்டாம் இடம் பிடித்திருக்கும் சீன வீரர், ஜூ, 10.9 புள்ளிகள் பெற்றால் முன்னிலை பெற்றுவிடலாம் என்ற
நிலையில் சுட வந்தார். 2004 ஒலிம்பிக் முதலே இப்பிரிவில் தங்கம் வெல்லவேண்டும் என்ற முயற்சியில், கடும் பயிற்சி எடுத்திருந்த ஜூ, தேவைப்படும் புள்ளிகளை குவிக்கமுடியாமல் போக...

மிகுதிக் கதை தற்போது உலகம் அறிந்ததே..!

செய்தியாளர் கூட்டத்தில் பதக்கர்கள் பகர்ந்தது...


அபினவ் * (தங்கம்) : நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விவரிக்க இயலவில்லை.

ஜூ (வெள்ளி) : ( பெரும் கதறல்களுக்கு இடையே..) என் தாயகத்தில் தங்கம் வெல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிட்டது. நான் இறுதியாக சுட வந்தபோது பெரும் அழுத்தத்தில் இருந்தேன்.

ஹாக்கினென் (வெண்கலம்) : முதலில் இருந்து கடைசிவரை முன்னணியில் இருந்தால்தான் தங்கம் கிடைக்கும். இன்று எனக்கான நாள் அல்ல.
__________________

http://www.youtube.com/watch?v=8GT42jMdgZo

ராஜா
12-08-2008, 08:01 AM
இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளான, சானியா மிர்ஸா, ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் ஆகியோர் தோல்வி.

ராஜா
12-08-2008, 05:14 PM
ஒலிம்பிக் பேட்மின்டன்: ஸ்ரீதர் வெளியேற்றம்
துப்பாக்கி சுடும் போட்டி: ரத்தோர்-சம்ரேஷ் வெளியேறினர்
வில் வித்தையில் பிரனிதா போராடி தோல்வி

அறிஞர்
12-08-2008, 05:19 PM
இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளான, சானியா மிர்ஸா, ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் ஆகியோர் தோல்வி.





ஒலிம்பிக் பேட்மின்டன்: ஸ்ரீதர் வெளியேற்றம்
துப்பாக்கி சுடும் போட்டி: ரத்தோர்-சம்ரேஷ் வெளியேறினர்
வில் வித்தையில் பிரனிதா போராடி தோல்வி
ஒரே தோல்வி செய்தியா இருக்கு....
இன்னும் போராடனும்..

பூமகள்
12-08-2008, 05:27 PM
ப்ரனிதா போட்டியைப் பார்த்தேன்... கொஞ்சம் பதட்டமாக விளையாடினாரென நினைக்கிறேன்..

இன்னும் எத்தனை இந்திய வீரர்கள் விளையாட பாக்கி இருக்கிறார்கள் ராஜா அண்ணா??

பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது??

ராஜா
13-08-2008, 04:34 AM
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

பேட்மின்டன் - மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி சாய்னா நெஹ்வால்

வில்வித்தை - ஆடவர் தனி நபர் - மங்கள் சிங் சம்பியா.

டென்னிஸ் - ஆடவர் இரட்டையர் - பயஸ்- பூபதி vs ஆன்ட்ரி -மார்செலோ மெலோ

சானியா மிர்ஸா-சுனிதா ராவ் vs ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா-டினாரா சபீனா

படகுப் போட்டி - நச்தர் சிங் ஜோஹல்.

ராஜா
13-08-2008, 04:38 AM
இன்னும் எத்தனை இந்திய வீரர்கள் விளையாட பாக்கி இருக்கிறார்கள் ராஜா அண்ணா??

பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது??


ஆடவர் குத்துச்சண்டையில் ஒரு வெண்கலம், ஆடவர் டென்னிசில் ஒரு வெண்கலம் வந்தால் இந்தியாவின் நல்லூழ் எனக் கொள்ளலாம்.

தட களத்தில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

சானியா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.

ராஜா
13-08-2008, 04:59 AM
http://www.hinduonnet.com/2003/08/02/images/2003080200072001.jpg

இன்று நிகழவிருக்கும் ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியாவுடன் இணைந்து ஆடவிருக்கும் சுனிதா ராவ் இவரே..!

இந்திய வம்சாவளி அமெரிக்கர். இந்தியாவுக்காக ஆட விருப்பம் தெரிவித்து, சில வருட*ங்களுக்கு (2003 ல்) முன் விண்ணப்பித்திருந்தார்.

2003 ல்....

மகளிர் தர வரிசையில் 162 ம் இடம்.

அமெரிக்க மகளிர் தர வரிசையில் 24 ம் இடம்.

அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்திடம், இவரது தந்தை மனோகர் ராவ் சில கோரிக்கைகள் வைத்திருந்தார்..

1) இதுவரை சுனிதாவுக்காக செலவழித்த தொகையைத் தரவேண்டும்..

2) இனியும் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் பயிற்சி உதவித்தொகை தரவேண்டும்.

ராவோட ராவா ராவிட்டுப் போக பார்க்கறாவோ..!

ராஜா
13-08-2008, 06:10 AM
மகளிர் பேட் மிண்டன்..கால் இறுதி.

இந்தியாவின் பதக்க நம்பிக்கை சாய்னா நெய்ல்வால் தோல்வி.

இந்தோனேஷியாவின் யுலியாந்தி மரியா கிறிஸ்டினிடம்

(26-28 , 21-14 , 21_15) என்ற கணக்கில் தோல்வியுற்றார்.


நீச்சல்..

அமெரிக்க வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், 4 வது தங்கம் வென்றார்.

பூமகள்
13-08-2008, 06:25 AM
ஆடவர் குத்துச்சண்டையில் ஒரு வெண்கலம், ஆடவர் டென்னிசில் ஒரு வெண்கலம் வந்தால் இந்தியாவின் நல்லூழ் எனக் கொள்ளலாம்.
தட களத்தில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
சானியா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.
நன்றிகள் ராஜா அண்ணா...

சானியா பதக்கம் வாங்கினாலொழிய நம்பிக்கை வைப்பதாக இல்லை..
அம்பு எய்தலில் வாங்கியிருக்கலாம்...
டென்னிசிலாவது பார்ப்போம்??

ஆமாம் ஹாக்கி விளையாட்டு என்னாச்சுனா??

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி... இன்று.. ஒலிம்பிக் செல்லும் தகுதி கூட இல்லாமல் ஒடிந்துவிட்டதா?? :eek::eek:

என்ன கொடுமை ராஜா சார் இது??!! :mad::traurig001::traurig001:

ராஜா
13-08-2008, 06:31 AM
நீச்சலில் அமெரிக்கர்களின் ஆதிக்கம் தொடர்கிறது..

ஃபெல்ப்ஸ் பங்கேற்ற 4 200 தொடர் நீச்சலில் அமெரிக்காவுக்கு மேலும் ஒரு தங்கம்.

7 நிமிடங்களுக்குள் 800 மீட்டர் கடந்து புதிய சாதனை.

ராஜா
13-08-2008, 06:35 AM
ஹாக்கி விளையாட்டு என்னாச்சுனா??

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி... இன்று.. ஒலிம்பிக் செல்லும் தகுதி கூட இல்லாமல் ஒடிந்துவிட்டதா?? :eek::eek:

என்ன கொடுமை ராஜா சார் இது??!! :mad::traurig001::traurig001:

இயற்கையான புல் களத்தில் விளையாடிய வரையிலும், இந்தியா ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தியது.

செயற்கை களம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு "வழுக்க" ஆரம்பித்துவிட்டது.

ராஜா
13-08-2008, 07:18 AM
2. கி.மீ தனிநபர் படகு வலிக்கும் போட்டியில் பஜர*ங்லால் தக்கர் தோல்வி..!

ராஜா
13-08-2008, 07:26 AM
மகளிர் நீச்சல் ..100 மீ.

ஃபெடரிகா பெலெக்ரினி (இத்தாலி) தங்கம் வென்றார்.a

அமரன்
13-08-2008, 08:24 AM
சுடச் சுட வரிபரப்பும் அண்ணனுக்கு ஜே! எனை போன்றவர்களுக்கு உங்கள் இந்த உதவி பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர்.

ராஜா
13-08-2008, 09:42 AM
லியாண்டர் பயஸ் _ மகேஷ் பூபதி இணை கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

ஒலிம்பிக் வரலாற்றில் ( அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரே பிரிவில் ) 11 தங்கம் வென்று மைக்கேல் ஃபெல்ப்ஸ் (அமெரிக்கா) உலக சாதனை.

shibly591
13-08-2008, 01:38 PM
நன்றிகள் ராஜா அண்ணா...

சானியா பதக்கம் வாங்கினாலொழிய நம்பிக்கை வைப்பதாக இல்லை..
அம்பு எய்தலில் வாங்கியிருக்கலாம்...
டென்னிசிலாவது பார்ப்போம்??

:

சானியா உபாதை காரணமாக வெளியேறிவிட்டாரே....?????

:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

அறிஞர்
13-08-2008, 01:47 PM
எப்படியோ இந்தியாவுக்கு இன்னும் ஒரு வெண்கலம் கிடைத்தாலே போதும்..

மதுரகன்
13-08-2008, 05:45 PM
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோற்றுவிட்டரே..
நான் போட்டியை பார்த்தேன் முதல் சுற்றை போராடி கைப்பற்றிய சாய்னா பின்னர் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..

ராஜா
13-08-2008, 06:44 PM
http://thatstamil.oneindia.in/img/2008/08/Mangal%20Champia250_13082008.jpg
பெய்ஜிங்: வில்வித்தையில் இந்திய வீரர் மங்கள் சம்பியா ஒரு புள்ளி வித்தியாசத்தில், ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.

ஆடவர் தனி நபர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மங்கள் சம்பியா இன்று ரஷ்யாவின் பயர் படெனோவுடன் மோதினார்.

மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி தோன்றியது. ஆனால் அதிர்ஷ்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில், 108-109 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்.

இந்தத் தோல்வியுடன் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் வாய்ப்புகள் முடிந்து போய் விட்டன.

இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் சம்பியா. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுகளிலும் சிறப்பான நிலையில் இருந்தார். இருப்பினும் அதிர்ஷ்டம் துணை நிற்காததால் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

அறிஞர்
13-08-2008, 07:11 PM
சோகச்செய்தி தான்...

குறைந்தது முயற்சி செய்தார்களே என திருப்திப் பட்டுக்கொள்ளவேண்டியது தான்.

ராஜா
14-08-2008, 05:46 AM
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 14/08. நாள் ஆறு.


இன்று ஒலிம்பிக்கில் 17 தங்கப்ப தக்கங்கள் யாருக்கு என்று தீர்மானிக்கப்படவிருக்கின்றன..


கனாட்பெக் பெகாலியேவ்...(கிர்கிஸ்தான்)

66 கி.கி. கிரேக்கோ ரோமன் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.

shibly591
14-08-2008, 05:48 AM
http://thatstamil.oneindia.in/img/2008/08/Mangal%20Champia250_13082008.jpg
பெய்ஜிங்: வில்வித்தையில் இந்திய வீரர் மங்கள் சம்பியா ஒரு புள்ளி வித்தியாசத்தில், ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.

ஆடவர் தனி நபர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மங்கள் சம்பியா இன்று ரஷ்யாவின் பயர் படெனோவுடன் மோதினார்.

மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி தோன்றியது. ஆனால் அதிர்ஷ்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில், 108-109 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்.

இந்தத் தோல்வியுடன் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் வாய்ப்புகள் முடிந்து போய் விட்டன.

இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் சம்பியா. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுகளிலும் சிறப்பான நிலையில் இருந்தார். இருப்பினும் அதிர்ஷ்டம் துணை நிற்காததால் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

கவலைதான்....
முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்...

வாழ்த்துக்கள்

ராஜா
14-08-2008, 05:49 AM
பேஸ் பால்..!

அமெரிக்காவை தென் கொரியா வீழ்த்தியது.

பேஸ் பால் இந்த ஒலிம்பிக்கில் கடைசியாக ஆடப்படுகிறது. அடுத்த ஒலிம்பிக்கில் கிடையாதாம்..!

அமரன்
14-08-2008, 07:18 AM
பேஸ்பாலில் அமெரிக்காவை தென்கொரியா...!!!!! பலே தென்கொரியா..

ராஜா
14-08-2008, 07:53 AM
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 14, 2008

படகுப் போட்டி: காலை 10.30 - நச்தர் சிங் ஜோஹல்.

டென்னிஸ்: பிற்பகல் 1.30 - ஆடவர் இரட்டையர் காலிறுதி

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி vs ரோஜர் பெடரர் - ஸ்டான்சிலாஸ் வாவ்ரின்கா

நீச்சல்: மாலை 5.33 - ஆடவர் 100 மீட்டர் பட்டர்பிளை - ஆங்குர் போசரியா, விர்த்வால் கோடே.

மாலை 6.19 - ஆடவர் 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல்.

ராஜா
14-08-2008, 07:56 AM
துப்பாக்கி சுடுதல்: மீண்டும் அஞ்சலி-அவ்நீத் தோல்வி

பெய்ஜிங்: துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சலி பகவத் மற்றும் அவ்நீத் கெளர் சித்து ஆகியோர் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.

ஏற்கனவே தனி நபர் பிரிவில் தோல்வியைத் தழுவியவர்களான அஞ்சலி பகவத்தும், அவ்நீத் கெளர் சித்துவும் இன்று 50 மீட்டர் ரைபிள் பிரிவின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மோதினர்.

இதிலும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. அஞ்சலி பகவத் 571 புள்ளிகளைப் பெற்று 32வது இடத்தைப் பிடித்தார். அவ்நீத்தோ 552 புள்ளிகளை மட்டுமே பெற்று42வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 43 என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
14-08-2008, 03:52 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

ஒலிம்பிக் டென்னிஸ்.. ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி..!

காலிறுதிப் போட்டி ஒன்றில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக்கைச் சந்தித்தார். இதில் 6_4, 7_6, என்ற நேர்செட்டுகளில், ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்..!

ராஜா
14-08-2008, 04:05 PM
காலிறுதியில் பயஸ்பூபதி! சானியா சுனிதா "அவுட்'

ஒலிம்பிக் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அக்னி
15-08-2008, 07:36 PM
சுடச்சுட ஒலிம்பிக் நிலவரங்களைத் தொகுத்துத் தரும் ராஜா அண்ணாவுக்கும்,
மற்றும் அனைவருக்கும் நன்றிகள்...

இன்னிக்கு யாரையுமே காணலியே... :icon_shades:

அறிஞர்
15-08-2008, 07:46 PM
காலிறுதியில் பயஸ்பூபதி! சானியா சுனிதா "அவுட்'

ஒலிம்பிக் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தோல்வி செய்திகள் மத்தியில் சற்று சந்தோசமான செய்தி..
பதக்கத்துடன் நாடு திரும்பவேண்டும்..

ராஜா
16-08-2008, 03:43 AM
http://www.dinamalar.com/images/olimpic.png

பூபதி_ பயஸ் இணை காலிறுதியில் தோல்வி.

பதக்கம் வெல்ல திறமையுடன் நல்லூழும் வேண்டும். ஏற்கனவே ஒற்றையர் போட்டியில் அதிர்ச்சி தோல்வியுற்ற பெடரர் இணையை காலிறுதியில் இந்திய இணை சந்திக்கும்படி நேர்ந்தது. இரட்டையர் பிரிவிலாவது பதக்கம் வெல்லும் குறிக்கோளுடன் மோதிய, ஸ்விஸ்ஸின் பெடரர்_ஸ்தனிஸ்லாஸ் இணை 6_2, 6_4 என்ற நேர் செட்டுகளில் பூபதி, பயஸ் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது..!

ராஜா
16-08-2008, 03:47 AM
http://www.dinamalar.com/images/olimpic.png

பெய்ஜிங்-6வது தங்கம் வென்றார் பெல்ப்ஸ்..

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 6வது தங்கப் பதக்கத்தை வென்றார் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இதன் மூலம் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இவர் 6 தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பெய்ஜிங்கிலும் 6 தங்கத்தை வென்றுவிட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதன் மூலம் உலகிலேயே மிக அதிக தங்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுவிட்டார்.

அதே நேரத்தில் 1972ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் 7 தங்கம் வென்று, ஒரே ஒலிம்பிக்ஸில் அதிகபட்ச தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ்.

இன்று மேலும் ஒரு போட்டியிலும் பங்கேற்கவுள்ள பெல்ப்ஸ் இன்னொரு தங்கம் வென்றால் ஸ்பிட்சின் சாதனையை ஈடு செய்துவிடுவார். கடைசியாக நாளைய 400 மீட்டர் போட்டியிலும் பங்கேற்கும் இன்னொரு தங்கமும் வென்றால் உலகிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் மிக அதிக தங்கம் வென்றவர் என்ற பெருமையையும பெறுவார் பெல்ப்ஸ்.

200 மீட்டர் நீச்சல் போட்டியில் பெல்ப்ஸ் அந்த தூரத்தை 1:54:23 நிமிடங்களில் கடந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முன் அமெரிக்காவில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தான் படைத்த 1:54.80 நிமிடங்கள் என்ற சாதனையை அவரே முறியடித்தார்.

ராஜா
16-08-2008, 04:01 AM
http://www.dinamalar.com/images/olimpic.png


குத்துச்சண்டை : அகில் குமார் பரபரப்பு வெற்றி..!

ஆடவர் பேன்டம் 54கிலோ பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அகில்குமார் உலக சாம்பியனான ரஷ்ய வீரரைச் சந்தித்தார். ஆரம்பத்தில் 1_6 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த அகில், பின்னர் சுதாரித்து ஆக்ரோஷமான குத்துகளை எதிராளியின் முகத்தில் இறக்கினார். ஆவேசமாக இருவரும் மோதிக்கொண்டனர். சுற்றுகளின் இறுதியில், இருவருமே தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

எனினும், ரஷ்ய வீரர் புரிந்த தொழில்நுட்பத் தவறு காரணமாக இந்திய வீரர் அகில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அகில் கும்மாளம் போட, ரஷ்ய வீரர் கண்ணீருடன் வெளியேறினார்.

ராஜா
16-08-2008, 02:27 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

75 கி. ஆண்கள் குத்துச்சண்டை..

இந்தியாவின் விஜேந்தர் குமார், தாய்லாந்து வீரர் அங்கானை 13 _ 3 என்ற புள்ளிகள் வேறுபாட்டில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

ராஜா
16-08-2008, 02:35 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

ஆண்கள் 100 மீ. மின்னல் ஓட்டம்..!


ஜமாய்க்கா வீரர் தங்கம் வென்றார்..!

ட்ரினிடாட் & டுபேகோ வீரர் ரிச்சர்ட் தாம்சன் வெள்ளி வென்றார்..!

அமெரிக்க, கனடா ஆதிக்கம் வீழ்ந்தது.

ராஜா
16-08-2008, 02:43 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

அமெரிக்க வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 7 வது தங்கம் வென்று, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் பெற்றவர் என்ற* சாதனை படைத்தார்.

இன்னும் ஒரு தங்கம் வென்றால், ஒரே ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனை படைப்பார்.

அறிஞர்
16-08-2008, 03:11 PM
http://www.dinamalar.com/images/olimpic.png


குத்துச்சண்டை : அகில் குமார் பரபரப்பு வெற்றி..!
.
பர பரப்பு வெற்றி தொடர்ந்து.. பதக்கம் பெற வாழ்த்துக்கள்

ராஜா
16-08-2008, 03:25 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டி.

இந்தோனேஷியாவின் சேதியவான் _ கிடோ இணை தங்கம் வென்றது.

ராஜா
18-08-2008, 06:30 AM
http://www.dinamalar.com/images/olimpic.png

ஒலிம்பிக் டிரிப்பிள் ஜம்ப்-ரெஞ்சித் படுதோல்வி..

http://www.aol.in/tamil/img/2008/08/Renjith-Maheswary250_18082008.jpg

பெய்ஜிங்: ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் ரெஞ்சித் மகேஸ்வரி தகுதிச் சுற்றில் மிக மோசமாக விளையாடி வெளியேறினார்.

வெறும் 15.77 மீட்டர்கள் மட்டுமே தாவி, மொத்தமுள்ள 37 போட்டியாளர்களில் 35வது இடத்தைப் பிடித்தார். கேரளத்தைச் சேர்ந்தவரான ரெஞ்சித் குவஹாத்தியில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் 17.04 மீட்டர்கள் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ஒலிம்பிக்கில் இன்று நடந்த போட்டியில் 15.77 மீட்டரே தாவி தோற்றார்.

ராஜா
18-08-2008, 06:57 AM
Monday's Olympic Scores

BASEBALL

Japan 1, Canada 0

BASKETBALL

Men

Croatia 91, Iran 57

Australia 106, Lithuania 75

FIELD HOCKEY

Women

Germany 1, Japan 0

South Korea 5, South Africa 2

SOFTBALL

Netherlands 4, Taiwan 2

TEAM HANDBALL

Men

Iceland 32, Egypt 32

Spain 36, Brazil 35

VOLLEYBALL

Men

Bulgaria 3, Venezuela 1 (23-25, 25-19, 25-16, 25-22)

WATER POLO

Men

Italy 13, Serbia 12

Hungary 12, Canada 3

ராஜா
18-08-2008, 07:42 AM
http://www.dinamalar.com/images/olimpic.png


ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்-நேகா தோல்வி..

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்சின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நேகா அகர்வால் முதல் தகுதிச் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். டெல்லியைச் சேர்ந்த நேகா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சீனப் பெண்ணான ஜியாங் பாங் லேவை இன்று காலை எதிர் கொண்டார். முதல் சுற்றில் 12-10க்கு என்ற நிலைக்கு முன்னேறிய நேகா அடுத்தடுத்த 4 சுற்றுகளிலும் ஜியாங்கிடம் தோற்றார். 34 நிமிடங்களில் முடிவடைந்த இந்தப் போட்டியில் நேகா தோற்றதால், டேபிள் டென்னிசில் இந்தியாவின் பதக்கக்கனவு தகர்ந்தது. .

ராஜா
18-08-2008, 07:55 AM
http://www.dinamalar.com/images/olimpic.png

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று ..

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

தடகளம்: ஆடவர் டிரிபிள் ஜம்ப் - ரஞ்சித் மகேஸ்வரி..( புட்டுகிச்சு)

குத்துச்சண்டை: ஆடவர் பேன்டம் (54 கிலோ) - காலிறுதி - அகில் குமார்.

டேபிள் டென்னஸ் - மகளிர் ஒற்றையர் முதல் சுற்று - நேஹா அகர்வால் - ஜியான் பாங்க் லே.. ( இதுவும் பூட்ட கேஸ்)

ராஜா
19-08-2008, 02:03 PM
http://www.dinamalar.com/images/olimpic.png


• 54கி.கி. குத்துச்சண்டை: அகில்குமார் தோல்வி!


• மல்யுத்தம் காலிறுதி: யோகேஸ்வர் தோல்வி!


ஒலிம்பிக் நீளம் தாண்டுதல்: சோபிக்கவில்லை அஞ்சு!

பீஜிங் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்றிலேயே இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் விலகியுள்ளார்.

இன்று காலை நடந்த ‘பி’ பிரிவு தகுதிச்சுற்றுப் போட்டியில், வழங்கப்பட்ட 3 வாய்ப்புகளிலும் அஞ்சு பாபி ஜார்ஜ், பந்தயக் கோட்டிற்கு வெளியே சென்று தாண்டியதால் (ஃபவுல்) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறத் தவறினார்.

‘பி’ பிரிவில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரீஸ் 6.87 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதேபோல் ‘ஏ’ பிரிவு போட்டியில் பிரேஸில் வீராங்கனை 6.79 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார்.

ராஜா
19-08-2008, 02:08 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

டேபிள் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு சரத்கமல் தகுதி!

பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் அச்சன்டா சரத்கமல், ஸ்பெயின் வீரரை வீழ்த்தினார்.

இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் நடந்து முடிந்த இப்போட்டியில், ஸ்பெயின் வீரர் ஆல்ப்ரெடோ கர்நிரோஸ் உடன் மோதிய சரத்கமல், முதல் செட்டில் 6-11 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றார்.

எனினும் 2வது, 3வது செட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவற்றை 12-10, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் சரத்கமல் வென்றார். ஆனால் 4வது செட் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் 11-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

எனினும், 5வது மற்றும் 6வது செட்களை 11-6, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியதன் மூலம் 4-2 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு சரத்கமல் முன்னேறினார்.

ராஜா
20-08-2008, 04:09 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவின் சுஷில் குமாருக்கு வெண்கலம்..!

பீஜிங் ஒலிம்பிக்கின் ஃப்ரீ ஸ்டைல் 66 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கஸகஸ்தானின் லியானோயிட் ஸ்பிரிடோனோவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இப்பதக்கத்தை சுஷில் குமார் கைப்பற்றினார்.

கடந்த 1952-ம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றிருப்பது, இதுவே முதன்முறை.

ராஜா
20-08-2008, 04:13 PM
http://www.dinamalar.com/images/olimpic.png


ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்தியாவின் சரத் தோல்வி..!

பீஜிங் ஒலிம்பிக்கின் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றில், இந்தியாவின் சரத் கமல் தோல்வியுற்றார்.

இன்று நடந்த போட்டியில், ஆஸ்திரியாவின் வீங்சிங் சென்னுடன் அவர் மோதினார்.

இதில் சரத், 5-11, 12-14, 2-11, 11-8, 10-12 என்ற புள்ளிகள் கணக்கில், 1-4 என்ற செட்களில் வீங்செங் சென்னிடம் தோல்வியைத் தழுவினார். 32 நிமிடங்களிலேயே இப்போட்டி முடிவுக்கு வந்தது.

ராஜா
20-08-2008, 04:16 PM
http://www.dinamalar.com/images/olimpic.png


ஒலிம்பிக் குத்துச்சண்டை : விஜேந்தர்குமார் வெற்றி !

பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் விஜேந்தர்குமார் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆடவர் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவின் காலிறுதிச் சுற்றில், ஈகுவேடர் நாட்டைச் சேர்ந்த கர்லோஸ் கொன்கோராவுடன் இன்று மாலை மோதினார் இந்தியாவின் விஜேந்தர்குமார்.

இதில் தனது அதிரடி குத்துக்களால் ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய விஜேந்தர்குமார், 9-4 என்ற என்ற கணக்கில் கொன்கோராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

விஜேந்தர்குமாரின் இந்த வெற்றி மூலம் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி விட்டது.

ராஜா
22-08-2008, 04:09 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

அரையிறுதியில் விஜேந்தர் தோல்வி; கிட்டியது வெண்கலம்..!

பீஜிங் ஒலிம்பிக்கில் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவு குத்துச்சண்டையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் குமார் தோல்வியுற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அரையிறுதியில் தோல்வியுற்றது, கோடானுகோடி இந்திய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே என்றாலும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க, விஜேந்தர் வித்திட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

இன்று நடந்து முடிந்த அரையிறுதிச் சுற்றில், கியூபாவின் எமிலியோ கோரியா பயாக்ஸை எதிர்கொண்டார், விஜேந்தர்.

இப்போட்டியில், விஜேந்தர் மொத்தம் 4 சுற்றுகளில் 5-8 என்ற புள்ளிகள் கணக்கில், கியூபா வீரரிடம் போராடி தோல்வியுற்றார்.

முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் தலா 2 புள்ளிகளையும், மூன்றாவது மற்றும் 4-வது சுற்றுகள் முறையே 3 மற்றும் ஒரு புள்ளியைச் சேர்த்தார், கியூபா வீரர் எமிலியோ.

ஆனால், இந்திய வீரர் விஜேந்தர் இரண்டாவது சுற்றில் மட்டும் 3 புள்ளிகளைச் சேர்த்தார். 4-வது சுற்றில் 2 புள்ளிகள் கிடைத்தன. மூன்றாவது மற்றும் கடைசி சுற்றுகளில் கடுமையாக போராடிய விஜேந்தரின் குத்துகள், வெற்றிக்குத் தேவையான புள்ளிகளாக மாறவில்லை.

விஜேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றதும் ஒரு மகத்தான சாதனையே. ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை.

அத்துடன், ஒரே ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்கள் வென்றது, இந்த பீஜிங் ஒலிம்பிக்கில்தான் என்பது சிறப்புக்குரியது.

பீஜிங் ஒலிம்பிக்கின் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றதும், மல்யுத்தத்தில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

அறிஞர்
22-08-2008, 05:47 PM
இந்தியா 1 தங்கம்.. 2 வெண்கலம்..... ரொம்ப பெரிய விசயம்....

வாழ்த்துக்கள்...

இளசு
22-08-2008, 06:25 PM
நல்ல திரிக்கு நன்றி ராஜா அவர்களே!

சுஷீல்குமார், விஜேந்தர் - அபினவைத் தொடர்ந்து பதக்க வரவுக்கணக்கை
களைகட்ட வைத்த வீரர்களுக்கு வாழ்த்துகள்.

இந்தியாவுக்கு பல முதல்கள் -
குத்துச்சண்டையில் முதல் பதக்கம்
இரு தனிநபர் பதக்கங்கள் பெறுவது - முதல்!

இனி எதிர்காலம் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் ஒளிமயக் காலம்!

ராஜா
24-08-2008, 03:52 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

தோல்வி: 'சத்தமே' காரணம்-வில்வித்தை பயிற்சியாளர்..!

ஜாம்ஷெட்பூர்: இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு ஸ்டேடியங்களில் காணப்பட்ட ரசிகர் கூட்டமும், அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமுமே காரணம் என இந்திய வில்வித்தைப் பயிற்சியாளர் சஞ்சீவ சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டிகள் நடந்த ஸ்டேடியத்தில் பெரும் கூட்டம் கூடியது. அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமே, நமது வீரர்கள் சரிவர கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம்.

தங்களது இலக்கில் நமது வீரர், வீராங்கனைகளால் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவே நமது தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்.

சஞ்சீவ சங்கின் கருத்தை பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளரான பூர்ணிமா மஹதோவும் ஆமோதித்தார். நமது வீரர், வீராங்கனைகள் மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பும் விளையாடக் கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ராஜா
24-08-2008, 04:03 PM
http://www.dinamalar.com/images/olimpic.png

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன..!

பெய்ஜிங்: கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடந்தன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.

கடந்த 8ம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உலக நாடுகளின் அணிகளின் அணிவகுப்புடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்.

204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

உலகின் பார்வையை தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு (சீன நேரப்படி இரவு 8 மணி) நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. 2 மணி நேரம் நடக்கும் கோலாகல நிகழ்ச்சியில் கண்கவர் வாண வேடிக்கைகளும் இடம் பெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. கென்ய வீரர் வன்சிரு தங்கப் பதக்கம் வென்றார்.

நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.

நிறைவு விழாவின் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக் கொடி, அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் நாட்டிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. பெய்ஜிங் மேயர் ஜின்லாங்கிடம் இருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் கலந்து கொள்கிறார்.

பதக்கங்களை வாரிய சீனா ...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவே முதலிடம் பிடித்துள்ளது.

51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை சீனா வென்றது.

தங்கப் பதக்கங்களின் அடிப்படையில், பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடம் கிடைத்தது. அமெரிக்கா 36 தங்கம், 38 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்களைப் பெற்றது. மொத்தப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.

23 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலத்துடன் மொத்தம் 72 பதக்கங்களுடன் ரஷ்யா 3வது இடத்தைப் பிடித்தது.

ஒலிம்பிக் துளிகள்...

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய அம்சம் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது.

- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் விசேஷமாக அமைந்தது. இதுவரை இல்லாத அளவு ஒரு தங்கம், இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது இந்தியா.

இந்தியா சார்பில் 56 பேர் பங்கேற்றனர். இதில் அபினவ் பிந்த்ரா தங்கமும், சுஷில்குமார், விஜேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பெருமை சேர்த்தனர்.

- 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் போல்ட்டுக்கு தங்கம் கிடைத்தது.

- மாரத்தான் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்தனர்.

- கால்பந்தில் அர்ஜென்டினா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

- ஜிம்னாஸ்டிக்ஸில் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. மொத்தம் உள்ள 18 தங்கப் பதக்கங்களில் சீனா 11ஐ அள்ளியது.

- நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கலந்து கொண்டன.

இளசு
24-08-2008, 04:43 PM
நிறைவான செய்திகளுக்கு நன்றி ராஜா அவர்களே!

வெள்ளையர்கள் அதிகம் வெல்கிறார்கள் - எல்லாவற்றிலும்
கறுப்பின மக்கள் - ஓட்டத்தில்!
மஞ்சளின மக்கள் - ஜிம்னாஸ்டிக்கில்..

பழுப்பு இனமான நாம் இடையில் இதில் எதிலும் சேராமல் இருக்கிறோமோ?

மூன்று பதக்கம் இம்முறை ஒரு தொடக்கம் என ஆகி,
வருங்காலத்தில் நமக்கும் ஒரு பெருங்கணக்கு வைப்போமோ?

அறிஞர்
25-08-2008, 01:59 PM
பல தகவல்களுக்கு நன்றி ராஜா...

16 நாள் திருவிழா சிறப்பாக முடிந்தது...

இன்னும் 4 வருடத்தில் லண்டனில் கலக்கப்போகிறார்கள்....

இந்தியா - 3 பதக்கம்... பெரிய சாதனை.... இன்னும் சில போட்டிகளில் கவனம் செலுத்தி பல பதக்கத்தை வெல்லவேண்டும்.. .

ராஜா
22-07-2012, 04:46 PM
நன்றி இளசு & அறிஞர்..!

அடுத்த சீசனைத் துவக்குவோமா..?

ராஜா
22-07-2012, 04:50 PM
ஒலிம்பிக் ஜோதி லண்டனுக்கு வந்து சேர்ந்தது..

http://sports.dinamalar.com/SportsImages/olympi-flame-(2)-336.jpg

லண்டன்: ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி லண்டன் வந்து சேர்ந்தது.
லண்டனில் வரும் 27ம் தேதி 30வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான ஜோதி ஓட்டம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடந்தது வந்தது. இதனிடையே ஒலிம்பிக் துவங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ஜோதி லண்டன் நகரை வந்து சேர்ந்தது.

நேற்று முன்தினம் லண்டனில் சூரியன் மறையத் துவங்கியதும், தேம்ஸ் நதிக்கரையில் கடற்படையின் ஹெலிகாப்டர் வட்டமிடத் துவங்கியது. சிறிது நேரத்தில் அதிலிருந்து "பெல்ட்' மூலம் இணைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அப்படியே தொங்க விடப்பட்டது. பின், 2008 ஆப்கன் போரில் காயமடைந்து மீண்ட வீரர் வில்லியம்ஸ், 23, என்பவரிடம் இருந்து, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் (800, 1500 மீ.,) வென்ற கெல்லி ஹோல்ம்ஸ் ஜோதியை பெற்றுக்கொண்டார். இதைப் பார்ப்பதற்கு "ஹாலிவுட்' அதிரடி சினிமாவைப் போல இருந்தது.

இந்த ஜோதியை இந்தவாரம் முழுவதும் லண்டனில் அனைத்து பகுதிகளுக்கும், 982 பேர் எடுத்துச் செல்வர். கடைசியாக எடுத்து செல்பவர், ஒலிம்பிக் துவக்க விழாவின் போது, மைதானத்துக்குள் கொண்டு வருவார்.

ராஜா
22-07-2012, 05:04 PM
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய மூவர்ணக்கொடி

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_513213.jpg

: ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய மூவர்ணக்கொடி திட்டமிட்டப்படி நேற்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும். இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அஜித் பால் சிங் மற்றும் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை. எனவே, கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை லண்டன் ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று தேசிய கீதம் முழங்க, ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியுடன் சேர்த்து, இந்திய மூவர்ணக் கொடியும் ஏற்றப்பட்டது. இதில் ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன், இந்திய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் முரளிதரன் ராஜா கலந்து கொண்டனர்.

இந்தியக் குழு முழுமையாக வராததால் வெறும் 35 வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றனர். வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி, போபண்ணா, குத்துச்சண்டை அணியினர் மற்றும் ஹாக்கி வீரர்கள் சிலர் பங்கேற்றனர். கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பயிற்சிக்காக ஜெர்மனி சென்றிருப்பதால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

வீரர்களை வரவேற்று சார்லஸ் ஆலன் கூறுகையில்,"" பல்வேறு கலாசாரத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள். என்றும் மறக்கமுடியாத நினைவுகளோடு திரும்பிச் செல்வீர்கள் என நம்புகிறேன். இந்திய குழுவினர் முழுமையாக வராததால், இந்நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டுமென்ற நிர்வாகிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டோம். ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. இந்தியாவை போல பங்வேறு நாடுகளும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாற்றி அமைக்க வலியுறுத்தின. இதனை ஏற்றுக் கொண்டால் ஒட்டுமொத்த போட்டிக்கும் இடையூறு ஏற்படும்,''என்றார்.

ராஜா
22-07-2012, 05:25 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : நவீன பென்டத்லான்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_506255.jpg

"பென்டத்லான்' போட்டியில் குதிரையேற்றம், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், நீச்சல் மற்றும் ஓட்டப் பந்தயம் என ஐந்து வகையான போட்டிகள் நடத்தப்படும். புள்ளிகள் அடிப்படையில் பதக்கம் வழங்கப்படும். ஆக., 11-12ம் தேதிகளில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 2 பதக்கம் (ஆண் 1, பெண் 1) வழங்கப்படுகிறது. இதற்காக தலா 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான நவீன பென்டத்லான் போட்டிகள் முதன்முதலில் 1912ல் ஸ்டாக்ஹோமில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான நவீன பென்டத்லான் போட்டிகள், சிட்னியில் 2000ல் நடந்த ஒலிம்பிக் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:27 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : டிரையத்லான்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_506254.jpg


"டிரையத்லான்' போட்டியில் சைக்கிள் பந்தயம், நீச்சல், ஓட்டப் பந்தயம் என மூன்று வகையான போட்டிகள் நடத்தப்படும். புள்ளிகள் அடிப்படையில் பதக்கம் வழங்கப்படும். "ஹைடு பார்க்' என்ற இடத்தில் ஆக., 4-7ம் தேதிகளில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம் இரண்டு (ஆண் 1, பெண் 1) பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக தலா 55 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

"டிரையத்லான்' போட்டிகள் முதன்முதலில் சிட்னியில் 2000ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:29 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : சைக்கிள் பந்தயம்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_506253.jpg

சைக்கிள் பந்தயத்தில், "பைசைக்கிள் மோட்டோகிராஸ்' (பி.எம்.எக்ஸ்.,), "மவுன்டைன் பைக்', "ரோடு', "டிராக்' என நான்கு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக மொத்தம் 18 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதில் பி.எம்.எக்ஸ்., மற்றும் "மவுன்டைன் பைக்' பிரிவில் தலா 2, "ரோடு' பிரிவில் 4, "டிராக்' பிரிவில் 10 பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

* பி.எம்.எக்ஸ்., பிரிவு போட்டிகள் 2008ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
* "மவுன்டைன் பைக்' பிரிவு போட்டிகள் அட்லான்டாவில் 1996ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* "ரோடு' பிரிவு போட்டிகள் 1896ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் நடந்த மூன்று (1900, 1904, 1908) ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை. மீண்டும் 1912ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான "ரோடு' பிரிவு போட்டிகள் 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

* "டிராக்' பிரிவு போட்டிகள் 1896ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து நடத்தப்படுகிறது. பெண்களுக்கான "டிராக்' பிரிவு போட்டிகள் 1988ல் தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:31 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : சிறு படகுப் போட்டி

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_506252.jpg

சிறு படகுப் போட்டி என்று அழைக்கப்படும் "கனோயி' போட்டியில் "ஸ்லாலோம்' (தடுப்பு) மற்றும் "ஸ்பிரின்ட்' என இரண்டு வகை போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் "ஸ்லாலோம்' பிரிவில் 4, "ஸ்பிரின்ட்' பிரிவில் 12 பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

* "ஸ்லாலோம்' பிரிவு போட்டிகள் முதன்முதலில் 1972ல் முனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1992ல் பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டி முன் வரை தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை.

* "ஸ்பிரின்ட்' வகை போட்டிகள் ஒத்திகைக்காக 1924ல் பாரிசில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின், 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:33 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : டேபிள் டென்னிஸ்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505396.jpg

லண்டன் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகள் "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 8ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், மொத்தம் நான்கு பதக்கம் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதற்காக 86 வீரர்களும், 86 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டிகள் முதன்முதலில் 1988ல் தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மொத்தம் 24 தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனா சார்பில் 20 தங்கம் கைப்பற்றப்பட்டது. தென் கொரியா 3, சுவீடன் ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றன.

ராஜா
22-07-2012, 05:35 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : துப்பாக்கி சுடுதல்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505395.jpg

லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் "ராயல் ஆர்டிலரி பாராக்ஸ்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 6ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 15 பதக்கம் வழங்கப்படுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் "ரைபிள்', "பிஸ்டல்' மற்றும் "ஷூட்கன்' என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 223 வீரர்களும், 143 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

1904 (செயின்ட் லூயிஸ், அமெரிக்கா), 1928 (ஆம்ஸ்டர்டாம்) ஒலிம்பிக் போட்டியை தவிர, மற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:37 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : மல்யுத்தம்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505394.jpg

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகள் "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஆக., 5-12ம் தேதிகளில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 18 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. "கிரிகோ-ரோமன்', "பிரீஸ்டைல்' என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதற்காக 266 வீரர்களும், 72 வீராங்கனைகளும் மோதுகின்றனர்.

ஏதென்ஸ் நகரில் 1896ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் "கிரிகோ-ரோமன்' பிரிவு மல்யுத்தப் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது. "பிரீஸ்டைல்' பிரிவு மல்யுத்தப் போட்டிகள் 1904ல் அமெரிக்காவின் செயின்ட் லூசியா நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் 2004ல் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:40 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : வாலிபால்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505393.jpg


லண்டன் ஒலிம்பிக் வாலிபால் போட்டிகள் "ஏர்ல்ஸ் கோர்ட்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் இரண்டு (ஆண்கள் 1, பெண்கள் 1) பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.
வாலிபால் போட்டிகள் முதன்முதலில் 1964ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கா, பெண்கள் பிரிவில் பிரேசில் தங்கம் வென்றன.

ராஜா
22-07-2012, 05:42 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : வாட்டர் போலோ

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505392.jpg

லண்டன் ஒலிம்பிக் "வாட்டர் போலோ' போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள "வாட்டர் போலோ அரினா'வில் நடக்கிறது. ஜூலை 29 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், மொத்தம் இரண்டு பதக்கம் (ஆண்கள் 1, பெண்கள் 1) வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் பிரிவில் 12, பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்களுக்கான "வாட்டர் போலோ' போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இருந்து நடத்தப்படுகிறது. பெண்களுக்கான "வாட்டர் போலோ' போட்டிகள் ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:44 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : பாய்மரப் படகு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505391.jpg

லண்டன் ஒலிம்பக் பாய்மரப் படகுப் போட்டிகள், "வேமவுத்', "போர்ட்லேண்ட்' மற்றும் "டார்சட்' என மூன்று இடங்களில் நடக்கிறது. ஜூலை 29 - ஆக., 11ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 10 (ஆண்கள் 6, பெண்கள் 4) பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 237 வீரர்களும், 143 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ல் நடந்த ஒலிம்பிக்கில் பாய்மரப் படகுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் 1904ம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் நடந்த ஒலிம்பிக்கில் மட்டும் இப்போட்டிகள் நடத்தப்படவில்லை.

ராஜா
22-07-2012, 05:46 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : துடுப்புப் படகு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505390.jpg

லண்டன் ஒலிம்பிக் துடுப்புப் படகுப் போட்டிகள், "ஏடன் டர்னி' மற்றும் "பக்கிங்ஹாம்ஷயர்' என இரண்டு இடங்களில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 4ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 14 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 353 வீரர்களும், 197 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான துடுப்புப் படகுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான துடுப்புப் படகுப் போட்டிகள் 1976ல் மான்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:47 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்)

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505389.jpg

லண்டன் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்) போட்டிகள் "நார்த் கிரீன்விச் அரினா' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 7ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 14 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 196 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்) போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1924ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் குழு மற்றும் தனிநபர் என இரண்டு பிரிவில் நடத்தப்பட்டது. பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்) போட்டிகள் 1928ல் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குழு பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்களுக்கான தனிநபர் பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்) போட்டிகள் 1952ல் பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:50 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : ஜிம்னாஸ்டிக்ஸ் (ரிதமிக்)

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505388.jpg

லண்டன் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (ரிதமிக்) போட்டிகள் "வெம்பிளே அரினா' என்ற இடத்தில் நடக்கிறது. ஆக., 9 - 12ம் தேதிகளில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 2 பதக்கம் வழங்கப்படுகிறது. தனிநபர் "ஆல்ரவுண்டு' மற்றும் குழு "ஆல்ரவுண்டு' என இரண்டு பிரிவுகளாக பெண்களுக்கு மட்டும் நடத்தப்படும் இப்போட்டியில் மொத்தம் 96 பேர் பங்கேற்கின்றனர்.

முதன்முதலில் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் ரிதமிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1963ல் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட்டில் நடத்தப்பட்டது. ஆனால் 21 ஆண்டுகளுக்கு பின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1984ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தனிநபர் பிரிவில் மட்டும் போட்டி நடந்தது. குழு பிரிவு போட்டிகள் அட்லாண்டாவில் 1996ல் நடந்த ஒலிம்பிக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:51 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : நடன நீச்சல்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505387.jpg

லண்டன் ஒலிம்பிக் நடன நீச்சல் போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள "அக்குவாடிக் சென்டர்' என்ற இடத்தில் நடக்கிறது. ஆக., 5-10ம் தேதிகளில் நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 2 பதக்கம் வழங்கப்படுகிறது. "டுயட்' மற்றும் "குழு' பிரிவில் பெண்களுக்கு மட்டும் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க 104 பேர் பங்கேற்கின்றனர்.

நடன நீச்சல் போட்டிகள் முதன்முதலில் 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:52 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : ஹேண்ட் பால்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505386.jpg

லண்டன் ஒலிம்பிக் "ஹேண்ட் பால்' போட்டிகள் ஒலிம்பிக் பார்க்கில் உள்ள "காப்பர் பாக்ஸ்' (லீக் சுற்று, பெண்கள் காலிறுதி) மற்றும் "கூடைப்பந்து அரினா' (ஆண்கள் காலிறுதி, ஆண்+பெண் அரையிறுதி, பைனல்) என இரண்டு இடங்களில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் இரண்டு (ஆண்கள் 1 + பெண்கள் 1) பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்களுக்கான "ஹேண்ட் பால்' போட்டிகள் பெர்லினில் 1936ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போட்டிகள் வெளிப்புற நீர் நிலைகளில் நடத்தப்பட்டது. 1972ல் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து, உள்ளரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்களுக்கான "ஹேண்ட் பால்' போட்டிகள் 1976ல் மான்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:54 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : வாள் சண்டை

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505376.jpg

லண்டன் ஒலிம்பிக் வாள் சண்டை போட்டிகள், "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் மொத்தம் 10 பதக்கங்கள் (ஆண்கள் 5 + பெண்கள் 5) வழங்கப்படுகிறது. இதற்காக 105 வீரர்களும், 107 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான வாள் சண்டை போட்டிகள் முதன்முதலில் 1900ம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான வாள் சண்டை போட்டிகள் முதன்முதலில் 1924ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

ராஜா
22-07-2012, 05:55 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : குதிரையேற்றம்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505375.jpg

லண்டன் ஒலிம்பிக் குதிரையேற்றப் போட்டிகள், கிரீன்விச் பார்க் என்ற இடத்தில் நடக்கிறது. இதில் டிரஸ்சேஜ், ஈவன்டிங், ஜம்பிங் என மூன்று வகை போட்டிகளை தனிநபர் மற்றும் அணிகள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில் ஆறு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ராஜா
22-07-2012, 05:57 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : டைவிங்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_505374.jpg

லண்டன் ஒலிம்பிக் "டைவிங்' போட்டிகள் ஒலிம்பிக் பார்க்கில் உள்ள அக்குவாடிக் சென்டரில் நடக்கிறது. ஜூலை 29 - ஆக., 11ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 8 பதக்கங்கள் (ஆண்கள் 8 + பெண்கள் 8) வழங்கப்படுகிறது. இதற்காக 136 வீரர், வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.

"டைவிங்' போட்டிகள் முதன்முதலில் 1904ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான "டைவிங்' போட்டிகள் 1912ல் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. "நடன டைவிங்' போட்டிகள் சிட்னியில் 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 05:58 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : பளுதூக்குதல்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503876.jpg

லண்டன் ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டிகள், "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 7ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், 15 பதக்கங்கள் (ஆண்கள் 8 + பெண்கள் 7) வழங்கப்படுகிறது. இதற்காக 156 வீரர்களும், 104 வீராங்கனைகளும் விளையாடுகின்றனர்.

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் முதன்முதலில் 1896ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் சிட்னியில் 2000ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:00 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : ஜூடோ

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503875.jpg

லண்டன் ஒலிம்பிக் ஜூடோ போட்டிகள், "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 3ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், 14 பதக்கங்கள் (ஆண்கள் 7 + பெண்கள் 7) வழங்கப்படுகிறது. இதற்காக 221 வீரர்களும், 145 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

ஜூடோ போட்டிகள் 1964ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் பார்சிலோனாவில் 1992ல் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:03 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : டென்னிஸ்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503874.jpg

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள், பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் டென்னிஸ் அரங்கில் நடத்தப்படுகிறது. ஜூலை 28 - ஆக., 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், ஐந்து பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் தவிர கலப்பு இரட்டையரிலும் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக 172 பேர் (ஆண்கள் 86 + பெண்கள் 86) விளையாடுகின்றனர்.

ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிகள் முதன்முதலில் 1896ல் நடத்தப்பட்டது. பாரிசில் 1924ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு பின் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 64 ஆண்களுக்கு பின் சியோலில் 1988ல் நடந்த ஒலிம்பிக்கில் நடத்தப்பட்டது. இதில் இரண்டு ஒற்றையர் பிரிவு பதக்கங்கள் மட்டும் வழங்கப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:04 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : நீச்சல்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503873.jpg

லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் ஒலிம்பிக் பார்க்கில் உள்ள "அக்குவாடிக் சென்டர்' என்ற இடத்தில் நடக்கிறது. மாரத்தான் நீச்சல் போட்டி மட்டும் "ஹைடு பார்க்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 4ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 34 பதக்கம் (ஆண்கள் 17 + பெண்கள் 17) வழங்கப்படுகிறது. இதற்காக 950 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் கடல், ஏரி உள்ளிட்ட திறந்தவெளி நீர்ப்பகுதிகளில் நடத்தப்பட்டது. லண்டனில் 1908ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து, நீச்சல் குளத்தில் முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான நீச்சல் போட்டிகள் 1912ல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:06 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : கால்பந்து

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503872.jpg

லண்டன் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள், இங்கிலாந்தில் உள்ள சிட்டி ஆப் கோவன்ட்ரி ஸ்டேடியம் (கோவன்ட்ரி), மில்லினியம் ஸ்டேடியம் (கார்டிப்), ஹாம்ப்டன் பார்க் (கிளாஸ்கவ்), ஓல்டு டிராபோர்டு (மான்செஸ்டர்), செயின்ட் ஜேம்ஸ் பார்க் (நியூகாசில்), வெம்பிளே ஸ்டேடியம் உள்ளிட்ட ஆறு முக்கிய மைதானங்களில் நடத்தப்படுகிறது. ஜூலை 25 - ஆக., 11ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இரண்டு பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்கின்றன.

ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் முதன்முதலில் 1900ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி தங்கம் வென்றது. 1904ம் ஆண்டுக்கு பின், ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படவில்லை. கடந்த 1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான கால்பந்து போட்டி அட்லாண்டாவில் 1996ல் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் நடத்தப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:07 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : ஹாக்கி

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503871.jpg

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள "ரிவர்பாங்க் அரினா' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 29 - ஆக., 11ம் தேதி வரை நடக்கவுள்ள இப்போட்டியில், இரண்டு பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகள் முதன்முதலில் 1908ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான போட்டிகள் மாஸ்கோவில் 1980ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:09 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : தடகளம்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503865.jpg

லண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. மாரத்தான் மற்றும் நடை ஓட்டப்பந்தயம், மத்திய லண்டனில் உள்ள "தி மால்' என்ற இடத்தில் நடத்தப்படுகிறது. ஆக., 3 - 12ம் தேதி வரை நடக்கும் தடகளப் போட்டியில், மொத்தம் 47 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள், 1896ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. ஆம்ஸ்டர்டாமில் 1928ல் நடந்த ஒலிம்பிக்கில், தடகளப் போட்டியில் முதன்முதலில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

ராஜா
22-07-2012, 06:10 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : குத்துச்சண்டை

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503864.jpg

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகள், "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 13 பதக்கங்கள் (10 ஆண்கள், 3 பெண்கள்) வழங்கப்படுகிறது. இதற்காக 250 வீரர்களும், 36 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகள் 1904ல் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் இம்முறை முதன்முதலில் நடத்தப்படுகிறது.

ராஜா
22-07-2012, 06:12 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : பீச் வாலிபால்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503863.jpg

லண்டன் ஒலிம்பிக் பீச் வாலிபால் போட்டிகள், "ஹார்ஸ் கார்ட்ஸ் பரேடு' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 9ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இரண்டு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஒலிம்பிக்கில் பீச் வாலிபால் போட்டிகள், முதன்முதலில் 1996ல் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:14 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : கூடைப்பந்து

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_503862.jpg

லண்டன் ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள கூடைப்பந்து அரினா (லீக் சுற்று, பெண்கள் காலிறுதி) மற்றும் நார்த் கிரீன்விச் அரினா (ஆண்கள் காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல்) என இரண்டு இடங்களில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இரண்டு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஒலிம்பிக்கில் கூடைப்பந்து போட்டிகள், முதன்முதலில் 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் மட்டும் விளையாடினர். பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் 1976ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

ராஜா
22-07-2012, 06:15 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : பாட்மின்டன்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_502137.jpg

லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிகள், வெம்பிளே அரினாவில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், ஐந்து பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் தவிர கலப்பு இரட்டையர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 172 பேர் (86 ஆண்கள், 86 பெண்கள்) பங்கேற்கின்றனர்.ஒலிம்பிக்கில் பாட்மின்டன் போட்டிகள், 1992ல் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜா
22-07-2012, 06:17 PM
http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2007/06/04/logo128s.jpg

முக்கிய போட்டிகள் : வில்வித்தை

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_502136.jpg

லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. ஜூலை 27 - ஆக., 3ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், நான்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 128 பேர் (64 ஆண்கள், 64 பெண்கள்) விளையாட உள்ளனர்.

ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டி முதன்முதலில் 1900ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அறிமுகம் செய்யப்பட்டது. லண்டனில் 1908ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு பின், நீக்கப்பட்டது. பின் 1920ல் மட்டும் நடத்தப்பட்டது. சுமார் 52 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இடம் பிடித்த வில்வித்தை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ராஜா
23-07-2012, 12:25 PM
இந்திய ஹாக்கி அணிக்கு சிக்கல் * முன்னணி வீரர்கள் காயம்

http://sports.dinamalar.com/SportsImages/hockey-336_86.jpg

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்களான சர்தாரா சிங், இக்னேஸ் டிர்க்கி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. பீஜிங்கில் 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய ஹாக்கி அணி, இம்முறை வாய்ப்பு பெற்றுள்ளது. சமீபத்தில் இந்திய அணி, முத்தரப்பு தொடரில் பங்கேற்க ஸ்பெயின் சென்றது. இத்தொடரின் போது முன்னணி இந்திய வீரர்களான இக்னேஸ் டிர்க்கி (கணுக்கால்), சர்தாரா சிங் (முழங்கால்) ஆகியோர் காயமடைந்தனர். இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் கூறுகையில், ""ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பது வருத்தமான விஷயம். அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் இக்னாஸ் டிர்கே, 2004ல் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவம் உள்ளவர். இருப்பினும் இவர்களது காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால், விரைவில் குணமடைந்து போட்டியில் விளையாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார்.

ராஜா
23-07-2012, 12:28 PM
ஒலிம்பிக்கில் முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே இலக்கு' - மயூக்கா..

http://sports.dinamalar.com/SportsImages/Mayookha-Johny-336.jpg

""ஒலிம்பிக்கில் முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே இலக்கு'' என, இந்திய தடகள வீராங்கனை மயூக்கா தெரிவித்தார்.
லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய "டிரிபிள் ஜம்ப்' பிரில் மயூக்கா பங்கேற்கிறார். பதக்கம் வாய்ப்பு குறித்து இவர் கூறியது: ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு குறித்து உறுதி கொடுக்க விரும்பவில்லை. இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதே மிகப்பெரிய விஷயம். முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே என் இலக்கு. பெர்லினில் நடந்த போட்டியில் 14.10மீ., வரை தாண்டினேன். எனவே லண்டனில் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன்.
எங்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை. ஆனால் எங்களை ஏன் உடற்தகுதி குறித்து நிரூபிக்க சொல்கிறார்கள் என தெரியவில்லை. பெர்லின் போட்டியில் என் தகுதியை நிரூபித்துவிட்டேன். பயிற்சியாளரையும், ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளிக்கவில்லை. இவர் லண்டனுக்கு வரவில்லையெனில், போட்டியில் என்னுடைய செயல்பாடு பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மயூக்கா பயிற்சியாளர் ஷியாம் குமார் கூறுகையில்"" ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு பின், இவருக்கு குதிகாலில் காயம் ஏற்பட்டது. ஆனால் பயிற்சியின் போது, 14மீ., மேல், தாண்டுகிறார். இதைவிட, ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுலில் போட்டியிட்டு, திறமையை வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கிற்கு "டிரிபிள் ஜம்ப்பில்' தகுதி பெற்றார். நீளம் தாண்டுதலை விட, "டிரிபிள் ஜம்ப்' போட்டியில் சிறப்பாக செயல்படுவார்'' என்றார்.

ராஜா
23-07-2012, 12:32 PM
மூன்றாவது அதிர்ஷ்ட வாய்ப்பு: ககன் நரங்

http://sports.dinamalar.com/SportsImages/Gagan-Narang-336.gif

""லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது மூன்றாவது முறையாக கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பு. இதில் பதக்கம் வென்று "ஹீரோ'வாக ஜொலிக்க வேண்டும்,'' என, இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் விருப்பம் தெரிவித்தார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைபிள்) வீரர் ககன் நரங் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். முன்னதாக 2004 (ஏதென்ஸ்), 2008ல் (பீஜிங்) நடந்த ஒலிம்பிக்கில் விளையாடினார். ஆனால் பதக்கம் வெல்ல தவறினார்.

சமீபகாலமாக "சூப்பர் பார்மில்' உள்ள இவர், 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நான்கு தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பாங்காக்கில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 703.5 புள்ளிகள் பெற்ற இவர், தகுதிச் சுற்றில் 600க்கு 600 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார்.

ராஜா
24-07-2012, 07:35 AM
செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!

http://tamil.oneindia.in/img/2012/07/24-shanthi-12-300.jpg

கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.

இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.

ஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தனது பதக்கம் பறிக்கப்பட்டு வேலையில்லாமல் இருந்த சாந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு தமிழக தடகள வீரர்களுக்கு பயிற்சியாளராக மாதம் ரூ.5,000 சம்பளத்தில் வேலை பார்த்தார். அதுவும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றும் அவருக்கு ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து அவரது தந்தை சவுந்திரராஜனும், தாய் மணிமேகலையும் தினமும் ரூ.500 சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த வருமானத்தை வைத்து 6 பேர் இருக்கும் குடும்பத்தை ஓட்டுவது கடினம் ஆகும். அதனால் சாந்தி கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளையில் தினமும் ரூ.200 கூலிக்காக வேலை பார்க்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

செங்கல் சூளையில் வேலை பார்க்கிறேன். வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் முடியாது, எந்த பொருளையும் தொடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கைகள் வீங்கி வலிக்கும். தோல் உரிந்து கொப்புளங்களாக இருக்கும். நான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து பியூன் வேலை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாததால் எனக்கு அந்த பணியைத் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.

நான் ஒரு தடகள வீராங்கனையாக செய்த சாதனைகளைக் கூறியும், எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியும் எனக்கு வேலை தர மறுத்துவிட்டார். நான் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.
நான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக கலைஞர் கொடுத்த பரிசு பணம் ரூ.15 லட்சம் எனது சகோதர, சகோதரிகளின் படிப்புக்கும், சகோதரியின் திருமணத்திற்கும் செலவாகிவிட்டது. எனது சகோதரர் இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார். சில சமயம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். அல்லது யாரும் காணாத இடத்திற்கு சென்றுவிடலாமா என்று தோன்றும். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். என் கையில் இல்லாத விஷயத்திற்காக நான் ஏன் தண்டிக்கப்பட்டேன் என்றார்.

மீண்டும் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொள்ள சாந்தி விரும்பினாலும், தற்போது அவருக்குத் தேவை குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வரும் ஒரு வேலை தான்.

ராஜா
24-07-2012, 07:38 AM
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைக்கும்-விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை

http://tamil.oneindia.in/img/2012/07/24-viswanathan-anand300.jpg

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணிக்கு 5 பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ராஜா
24-07-2012, 07:40 AM
லண்டன் ஒலிம்பிக் கிராமத்தின் முன் ஈழத்தமிழ் இளைஞர் சிவந்தன் உண்ணாவிரதம்

http://tamil.oneindia.in/img/2012/07/23-sivanthan-2-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இலங்கையில் இருந்தும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஈழ தமிழர்களின் பிரச்சனையை முன் நிறுத்தியும், ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், ஒலிம்பிக் கிராமத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சிவந்தன் தலைமையிலான இப்போராட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராஜா
24-07-2012, 07:43 AM
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மலேசிய கர்ப்பிணி வீராங்கனை நூர் சூர்யானி

http://tamil.oneindia.in/img/2012/07/23-nur-suryani-malaysia-preganant-shooter600.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மலேசிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் மூலம் மலேசியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் கர்ப்பணி பெண் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் சில வி்த்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. தற்போது அந்த பட்டியலில் மலேசியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரும் இணைந்துள்ளார்.

மலேசியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி முகமது தயாபி. தற்போது 8 மாத கர்ப்பணியாக உள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 10 மீட்டர் ஏர் ரேபில் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மலேசியாவில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக தகுதி பெற்றுள்ள நூர் சூர்யானி, மற்ற வீராங்கனைகளை போலவே, பதக்கம் பெறும் ஆர்வத்துடன் களமிறங்குவதாக கூறியுள்ளார்.

ராஜா
24-07-2012, 09:15 AM
லண்டன் ஒலிம்பிக்: எளிய பிரிவில் உள்ள இந்தியாவின் சாய்னா நேவால் பதக்கம் பெறுவாரா?

http://tamil.oneindia.in/img/2012/07/24-saina-nehwal2.jpg

ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகளின் பிரிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் 'குரூப்-இ' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகின் 4ம் நிலை வீராங்கனையான சாய்னா லீக் போட்டிகளில், 55வது இடத்தில் உள்ள பெல்ஜியம் வீராங்கனை லியானே, 65வது நிலையில் உள்ள சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுயட் ஆகியோருடன் மோத உள்ளார். அதேபோல 2ம் சுற்றில் 14ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் யோ ஜி உடன் மோத உள்ளார். முதல் சுற்றில் சாய்னா நேவால் வெற்றிப் பெற்றால், காலிறுதி போட்டியில் டென்மார்க்கின் டின் பன் அல்லது ஜப்பானின் சையாகா சாடோ ஆகியோரில் யாராவது ஒருவருடன் சாய்னா நேவால் மோதலாம்.

இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்று எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் சுற்றுகள் கடினமாகி கொண்டே செல்லும். ஆனால் லீக் போட்டிகளில் கொரிய வீராங்கனைகளுடன் மோதாமல் இருப்பது பெரிய ஆறுதலாக உள்ளது என்றார்.

ராஜா
24-07-2012, 02:07 PM
பாஸ்போர்ட் இல்லாத மாரத்தான் வீரர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி

http://tamil.oneindia.in/img/2012/07/24-london-olympics-2012-logo.jpg

சூடான் நாட்டை சேர்ந்த அகதியான குயர் மரியல். 28 வயதான இவர் ஒரு சிறந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் வீரர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வீரர்களை அனுப்ப சூடான் நாடு மறுத்துவிட்டது. இதனால் அவரால் சூடான் குடியரிமை வைத்து கொண்டு, விளையாட முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்துள்ள அவருக்கு முழு குடியரிமை இல்லாததால், அந்த நாட்டிற்காகவும் குயர் மரியல் விளையாட முடியாது. இந்த நிலையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் களமிறங்க தீர்மானித்த குயர் மரியல், அதற்காக மனுவை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பிற்கு அனுப்பி வைத்தார். இந்த மனுவை பரிசீலித்த சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு, குயர் மரியல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து குயர் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜா
25-07-2012, 05:41 AM
அக்காவுக்காக ஒலிம்பிக் பதக்கம் * ராகுல் பானர்ஜி நம்பிக்கை

http://sports.dinamalar.com/SportsImages/Rahul-Banerjee-336_13.jpg

""என் அக்கா டோலா பானர்ஜிக்காக, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதிப்பேன்,'' என, இந்திய வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி தெரிவித்தார்.
லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில், ஆண்களுக்கான குழு பிரிவில் ராகுல் பானர்ஜி, தருன்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

இதுகுறித்து ராகுல் பானர்ஜி கூறியது: லண்டன் ஒலிம்பிக் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இம்முறை என் அக்கா டோலா பானர்ஜிக்காக பதக்கம் வெல்ல போராடுவேன். ஏனெனில் சிறந்த வில்வித்தை வீராங்கனையான இவரது ஆதரவு இல்லாமல், இந்த அளவுக்கு என்னால் உயர்ந்திருக்க முடியாது. முன்னதாக இவர், போட்டிகளில் வெற்றி பெற்று அதன்மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையில், எனக்கு தேவையான வில்வித்தை பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கித் தருவார். வில்வித்தை போட்டியை பொறுத்தவரை இவர் தான் எனது தாயார்.

கடந்த 2004, 2008ல் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற டோலா, இம்முறை லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒருவேளை இவர் தகுதி பெற்றிருந்தால், ஒலிம்பிக்கில் இணைந்து பங்கேற்பது என்ற எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கும். தவிர ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அக்கா-தம்பி ஜோடி என்ற பெருமை கிடைத்திருக்கும். ஒலிம்பிக் போட்டியை காண டோலா பானர்ஜி நிச்சயம் வருவார். தற்போது இவரது "விசா' பிரச்னையால் தாமதமாகி வருகிறது. இருப்பினும் வில்வித்தை போட்டி துவங்குவதற்கு முன் லண்டன் வந்தடைவார் என எதிர்பார்க்கிறேன்.

ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். சமீபத்திய போட்டிகளில் பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தியிருப்பதால், பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் போட்டியின்மூலம், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவரது போராடும் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது. பெடரரின் ஆட்டத்தை நேரில் சென்று பார்க்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு டென்னிஸ், வில்வித்தை போட்டிகள் ஒரே நாளில் நடக்காமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் பானர்ஜி கூறினார்.

ராஜா
25-07-2012, 05:44 AM
லண்டன் ஒலிம்பிக் இன்று கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

http://sports.dinamalar.com/SportsImages/FIFA-Soccer-Ball_5.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இன்று கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகிறது. லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி முதல் ஆக., 12ம் தேதி வரை நடக்கிறது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கால்பந்து போட்டிக்கான லீக் சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பாகிறது.

இன்று பெண்களுக்கான லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கிறது. கார்டிப் நகரில் உள்ள மில்லேனியம் மைதானத்தில் இன்று "இ' பிரிவில் நடக்கவுள்ள முதலாவது லீக் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதனை தொடர்ந்து இதே பிரிவில் உள்ள காமரூன் - பிரேசில் அணிகள் விளையாடுகின்றன.
கோவென்ட்ரி நகரில் உள்ள "சிட்டி ஆப் கோவென்ட்ரி' மைதானத்தில் "எப்' பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான் - கனடா, சுவீடன் - தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று லீக் சுற்றில் மோதுகின்றன.

கிளாஸ்கோவ் நகரில் உள்ள "ஹாம்ப்டன் பார்க்' மைதானத்தில் "ஜி' பிரிவில் உள்ள அமெரிக்கா - பிரான்ஸ், கொலம்பியா - வட கொரியா அணிகள் இன்று லீக் போட்டியில் விளையாடுகின்றன. நாளை, ஆண்களுக்கான லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளன. கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை.

ராஜா
26-07-2012, 04:35 AM
ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு செல்ல சுரேஷ் கல்மாடிக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம்

http://tamil.oneindia.in/img/2012/07/25-kalmadi-300.jpg

ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு செல்ல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு அனுமதி மறுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட 10 மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ராஜா
26-07-2012, 04:44 AM
ஒலிம்பிக் கால்பந்து: பிரேசில் வெற்றி

லண்டன் ஒலிம்பிக் போட்டி பெண்கள் கால்பந்தின் லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி, கேமரூன் அணியை வீழ்த்தியது.லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. ஈ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் அணி, கேமரூன் அணியை சந்தித்தது. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது.எப் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் பெண்கள் அணி 2-1 என கனடா அணியையும், சுவீடன் 4-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவையும் வென்றன. ஜி பிரிவு போட்டிகளில் அமெரிக்கா 4-2 என பிரான்சையும், வட கொரியா 2-0 என கொலம்பியா அணியையும் வீழ்த்தின.

ராஜா
26-07-2012, 05:56 AM
வில்வித்தையில் எத்தனை பதக்கம் * கணிக்கிறார் இந்திய பயிற்சியாளர்

http://sports.dinamalar.com/SportsImages/archery-336_74.jpg

""வில்வித்தையில் இந்தியாவுக்கு மூன்று பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக,'' இந்திய வில்வித்தை பயிற்சியாளர் லிம்பா ராம் கணித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தீபிகா குமாரி, ராகுல் பானர்ஜி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இவர்களுடன், இந்திய வில்வித்தை பயிற்சியாளர் லிம்பா ராம் சென்றுள்ளார். மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்த இவர், வில்வித்தையில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு குறித்து கூறியது: இந்திய வில்வித்தை நட்சத்திரங்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இம்முறை எப்படியும் பதக்கம் வென்று சாதிப்போம் என்ற நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கையில், மூன்று பதக்கம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

லண்டனில் உள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ப இந்திய நட்சத்திரங்கள் மாறி விட்டனர். இது மகிழ்ச்சியான விஷயம். இந்திய நட்சத்திரங்களில் சமீபத்திய செயல்பாடு மற்றும் பயிற்சி முறை திருப்தி அளிக்கிறது.பெண்களுக்கான தனிநபர் போட்டியில் தீபிகா குமாரி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடைசி அம்பு வரை போராடும் குணமுடைய இவர், சிறந்த முறையில் தயாராகி வருகிறார். இதேபோல பெண்களுக்கான அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்கலாம். ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அசத்திய ஆண்கள் அணியினர், ஒவ்வொரு போட்டியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் பதக்கம் வெல்லலாம்.

ஒலிம்பிக் போட்டிக்கு பின், இந்திய பயிற்சியாளர் பதவிக்கான காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் உள்ளது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது எனது கவனம் முழுவதும் வில்வித்தையில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவதே. இதன்மூலம் பயிற்சியாளர் பதவியை வெற்றியுடன் முடிக்க காத்திருக்கிறேன்.
இவ்வாறு லிம்பா ராம் கூறினார்.

ராஜா
26-07-2012, 04:50 PM
வெளிநாட்டவரை திருமணம் செய்ததால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த லிதுவேனியா வீராங்கனை

http://tamil.oneindia.in/img/2012/07/26-donata-rimsaite-300.jpg

வெளிநாட்டவரை திருமணம் செய்ததால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பென்டதன் வீராங்கனை ஒருவருக்கு, லிதுவேனியா ஒலிம்பிக் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர் டுனடா ரிம்சையிட். இவர் ஒரு பென்டதன் வீராங்கனை. பென்டதன் என்பது உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தடை தாண்டுதல் போன்ற 5 போட்டிகளை ஒரே போட்டியாக விளையாடுவது ஆகும்.

இவர் பென்டதன் விளையாட்டில் கடந்த 2008, 2009 ஆண்டுகளில் உலக கோப்பை வென்றவர். மேலும் கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் பென்டதன் சர்வதேச தரவரிசையில் தற்போது 19வது இடத்தில் டுனடா உள்ளார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் டுனடா, லிதுவேனியா நாட்டிற்காக விளையாடினார். ஆனால் கடந்த ஆண்டு ரஷ்ய நாட்டவர் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு ரஷ்ய குடியரிமை கிடைத்தது.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் லிதுவேனியா அணியில் இருந்து டுனடாவின் பெயரை அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி நீக்கியது. இதை எதிர்த்து வழக்கு தொடர டுனடா முடிவு செய்துள்ளார்.

ராஜா
26-07-2012, 04:54 PM
ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லும் உலக பிரபலங்களில் அமிதாப் பச்சனும் ஒருவர்!

http://tamil.oneindia.in/img/2012/07/26-amitabh-bachchan-smile.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை பிரமாண்ட துவங்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு முன்னதாக இன்று காலையில் ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லும் ஓட்டம் லண்டனில் நடைபெறுகிறது. 32.7 மைல் தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் உலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் இந்தியாவில் இருந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சனும் கலந்து கொள்ள உள்ளதாக டுவிட்டர் இணையதளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது, லண்டன் ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லும் ஓட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு, ஒலிம்பிக் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். நான் லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி செல்வது எனக்கும், நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜா
26-07-2012, 04:57 PM
ஒலிம்பிக்: பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

http://tamil.oneindia.in/img/2012/07/26-londonolympicgames-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை நடைபெறும் துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னோடியாக பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் நேற்று இரவு துவங்கியது. இதில் கார்டிப் மில்லெனியம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் 'இ' பிரிவை சேர்ந்த இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்டெபைன் ஹட்டன் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு கடைசி வரை இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டியின் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல 'எப்' பிரிவை சேர்ந்த ஜப்பான், கனடா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'எப்' பிரிவை சேர்ந்த சுவீடன், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஸ்வீடன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ராஜா
27-07-2012, 03:35 AM
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/arjun/AmitabhBachchan-4.jpg

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா இன்று (27.07.2012) நடைபெறுகிறது. இப்போட்டியை பிரபலப்படுத்துவதற்காக ஒலிம்பிக் ஜோதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது லண்டனை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றனர்.

அந்த வகையில் 69-வது நாளாக நேற்று (26.07.2012) லண்டனில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு, ஜோதியை ஏந்திச் சென்றார். அவர் வெள்ளை நிற உடை அணிந்து சவுத்வார்க் சாலையில் 300 மீட்டர் தூரம் வரை சென்றார். அப்போது அங்கு உற்சாகமாக திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடியே சென்றார். ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக அமிதாப் கூறினார்.

ராஜா
27-07-2012, 03:37 AM
தங்கமழையில் குளிக்கலாம்: இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் சகாரா நிறுவனம்

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 110 கோடி இந்திய மக்களின் கனவுகளை சுமந்து கொண்டு 81 வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் 'தங்கமழையில் குளிக்கலாம்' என்ற அறிவிப்பை சகாரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்திய, வீரர், வீராங்கனைகளுக்கு 5 கிலோ சுத்த தங்கப்பதக்கங்கள் அளிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்ரதா ராய் தெரிவித்துள்ளார். இதே போல் வெள்ளிப்பதக்கம் வெறுவோருக்கு 3 கிலோ தங்கப்பதக்கங்களும், வெண்கலம் வெல்வோருக்கு 2 கிலோ தங்கப்பதக்கங்களும் வழங்கப்படும். குழு போட்டியில் தங்கம் வென்றால் 5 கிலோ தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜா
27-07-2012, 03:38 AM
மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்: 2 கால்களும் இல்லாத முதல் வீரர் ஆஸ்கர் பங்கேற்பு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். இவர் 11 மாத குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயில் இரு கால்களையும் இழந்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்று துடித்த ஆஸ்கர், செயற்கை கால்கள் (கால் போன்ற கம்பிகள்) பொருத்தி கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதில் பல முறை அவரது கால்களில் ரத்தம் வந்தது உண்டு, பல முறை தவறி விழுந்துள்ளார். ஆனால் அவரது உற்சாகம் மட்டும் குறையவில்லை. தனது நீண்டகால பயிற்சியின் பயனாக, இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் ஆஸ்கர் ஓட உள்ளார். மாற்றுத் திறனாளிகளின் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர்கள் 'பிளேடு ரன்னர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

ராஜா
27-07-2012, 03:41 AM
சச்சின் வந்தால் இந்திய அணியினருக்கு உற்சாகம் ஏற்படும்: ஹாக்கி பயிற்சியாளர் கோரிக்கை

ஒலிம்பிக் போட்டிகளுக்கான லண்டன் சென்றுள்ள இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதமாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தங்களுடன் இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆஸ்திரேலிய வில்வித்தை அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் லண்டன் வந்துள்ளார். அது அந்த அணியினரை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அதே போல், சச்சினும் வந்தால், அது இந்திய அணியினருக்கு உற்சாகம் அளிப்பதுடன், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜா
27-07-2012, 06:22 AM
ஒலிம்பிக் கால்பந்து போட்டி: எகிப்தை 3-2 கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. அதேபோல ஐக்கிய அரபு எமிரேட் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் உருகுவே வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து-கேபான், இங்கிலாந்து-செனகல் அணிகள் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தது.

ராஜா
27-07-2012, 06:30 AM
http://tamil.oneindia.in/img/olympics-300x50-tamil.gif

ஒலிம்பிக் போட்டி: யூரோ சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்

நேற்று ஹம்டன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 'டி' பிரிவை சேர்ந்த ஸ்பெயின், ஜப்பான் அணிகள் மோதின. இதில் யூரோ சாம்பியன் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் போட்டியின் 34வது நிமிடத்தில் ஜாப்பான் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஜப்பான் வீரர் ஓட்சூ யூகி ஒரு கோலை அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்பெயின் அணியினர் பதில் கோல் அடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஜப்பான் அணியின் கோல் கீப்பரின் சிறப்பான தடுப்பாட்டத்தில், ஸ்பெயின் அணியின் முயற்சி வீணாது. இதனால் போட்டியின் முடிவில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணியை ஜப்பான் வீழ்த்தியது ஸ்பெயின் கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜா
27-07-2012, 06:47 AM
சாதிப்பாரா தீபிகா குமாரி * இன்று வில்வித்தை துவக்கம்

http://sports.dinamalar.com/SportsImages/Deepika-Kumari_42.jpg

லண்டனில் இன்று ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில், வில்வித்தை போட்டியில், "ரிகர்வ்' பிரிவு மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் ஆண், பெண்கள் தனிநபர் மற்றும் குழு என, மொத்தம் நான்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டி முறைப்படி இன்று இரவு தான் துவங்கும். இதற்கு முன், காலையில் வில்வித்தை போட்டிகள் துவங்குகின்றன.

போட்டி எப்படி:

முதலில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் அணி பிரிவில், "ரேங்கிங் ரவுண்டு' துவங்குகிறது. இதில் ஒவ்வொரு வீரருக்கும் 72 வாய்ப்புகள் தரப்படும். இதில், அவர்கள் எடுக்கும் புள்ளிகள் மொத்தமாக கணக்கிடப்பட்டு, "டிரா' முடிவு செய்யப்படும். இதில் முதல் இடத்தை பெறும் வீரர், கடைசி இடத்தில் வரும் (64வது) வீரரை எதிர்த்து களமிறங்குவார். அணியாக வரும் போது, மூன்று வீரர்கள் எடுத்த ஸ்கோர் மொத்தமாக கணக்கில் வைக்கப்படும். முதல் நான்கு இடத்தை பெறும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு செல்லும். மீதமுள்ள 8 அணிகள், அடுத்த 4 இடத்துக்கு போட்டியிடும்.

இந்தியா சார்பில் ஜெயந்தா தாலுக்தர், தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி ஆகிய வீரர்களும், பெண்கள் தனிநபர் மற்றும் குழு பிரிவில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் தீபிகா குமாரி, பம்பயலா தேவி, சுவாரோ ஆகியோர் "ரேங்கிங் ரவுண்டில்' பங்கேற்கவுள்ளனர்.

முதன் முதலாக...

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்தன. முதன் முறையாக ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகள் இங்கு நடக்கிறது.

ராஜா
27-07-2012, 07:07 AM
ஒலிம்பிக் மைதானத்தில் "அதிசய தீவு!' * இன்று புதுமையான துவக்க விழா

http://sports.dinamalar.com/SportsImages/sp-fp-colour-336.jpg

பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இதற்கான வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் டேனி பாயல் தலைமையிலான குழு நடத்துகிறது. மூன்றரை மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு "அதிசய தீவுகள்' என, பெயரிடப்பட்டுள்ளது. 27 முறை மணி ஓசை ஒலிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் துவங்கும்.

வருகிறார் "007':

அடுத்து இங்கிலாந்தின் பல்வேறு துறையில் பிரபலமானவர்களை மைதானத்தில் தோன்ற உள்ளனர். "ஜேம்ஸ்பாண்ட்' டேனியல் கிரெக் என்பவர் நடித்த "தி அரைவல்' என்ற குறும்படம் காண்பிக்கப்படும். பி.பி.சி.,யால் தயாரிக்கப்பட்ட இதில், ஜேம்ஸ்பாண்ட் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்து, அப்படியே ஒலிம்பிக் மைதானத்துக்கு, பாராசூட்டில் மேலிருந்து கீழே இறங்குகிறார். அப்போது ஹெலிகாப்டருடன் இணைக்கப்பட்ட கயிற்றில் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வரப்படும்.

உண்மை விலங்குகள்:

பின் "கிரீன் அண்டு பிளசன்ட்' என்ற நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் பிரிட்டனின் பசுமையான கிராமப்புறமாக போல் மைதானம் மாறும். இதில் உண்மையான குதிரைகள், ஆடுகள், வாத்துகள், மாடுகள் பங்கேற்கும்.

பாரம்பரிய நிகழ்ச்சி:

இதன்பின், இங்கிலாந்தின் வரலாறு குறித்து, மைதானத்தில் விரிவாக காண்பிக்கப்பட உள்ளது. அப்போது நூற்றுக்கணக்கில் வீரர்கள் அரங்கில் தோன்றுவர். இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியை நினைவுபடுத்தும் வகையில், "சிம்னி' விளக்குகளுடன் தோன்றுவர்.

வீரர்கள் அணிவகுப்பு:

இதையடுத்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளில் அகர வரிசைப்படி, மைதானத்தில் அணி வகுத்து வருவர். இதில் முதல் அணியாக கிரீசும், கடைசியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வீரர்களும் வருவர்.

உறுதி மொழி:

பின், லண்டன் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் செபாஸ்டியன் கோ, அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்ஸ் ரோகி என, இருவரும் துவக்க உரை ஆற்றுவர்.

அடுத்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். பின், போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வர். பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும். இது ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் துவக்க விழா நிறைவு பெறும்.

ராஜா
27-07-2012, 07:12 AM
"டுவிட்டரில்' இனவெறி கருத்து : க்ரீஸ் வீராங்கனை நீக்கம்

http://sports.dinamalar.com/SportsImages/Greek-athlete--Paraskevi-33.jpg

:"டுவிட்டர்' இணைதளத்தில் இனவெறியை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்ட கிரீஸ் வீராங்கனை, ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

கிரீஸ் நாட்டின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை பராஸ்கெவி பபாகிறிஸ்டோ, 23. தற்போது லண்டனில் உள்ள கிரீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கிரீசில் தற்போது பரவி வரும் வைரஸ் காயச்சலில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் ஆஸ்பத்திரியில் உள்ளனர். இதுகுறித்து பராஸ்கெவி வெளியிட்ட "டுவிட்டர்' செய்தி, இனவெறியை தூண்டும் வகையில் இருந்தது.

இதனால், ஒலிம்பிக் போட்டிக்கான கிரீஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கிரீஸ் அணியின் தலைவர் இசிடோரோஸ் கூறுகையில்,"" ஒலிம்பிக்கின் அடிப்படை விதியைக் கூட மதிக்காமல் நடந்து, தவறு செய்துள்ளார். வேறு வழியின்றி கிரீஸ் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்,'' என்றார்.

இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பராஸ்கெவி கூறியது:

எனது "டுவிட்டரில்' வெளியான செய்திக்காக, எனது நண்பர்கள் சக வீரர், வீராங்கனைகளிடம் இதயப்பூர்வமான முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவு, நிறைவேறாமல் போய்விட்டது. எனது தவறை ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் மக்களும், அணியும் எனது தடகள வாழ்க்கைக்கு உதவ வேண்டும். இதுகுறித்து எனது குடும்பத்தினரிடமும், பயிற்சியாளரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ராஜா
27-07-2012, 12:12 PM
விரல் நகங்களில் தேசம்... ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளின் தேசப்பற்று!

http://tamil.oneindia.in/img/2012/07/27-london-olumpics-300.jpg

அமெரிக்க டென்னிஸ் கவர்ச்சிப் புயல் வீனஸ் வில்லியம்ஸ், தனது விரல் நகங்களில் அமெரிக்க தேசியக் கொடியின் நிறத்தை இடம் பெற வைத்துள்ளார். அமெரிக்க தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அனைத்து நிறங்களும் அவரது நகங்களில் ஜம்மென்று உட்கார்ந்துள்ளன. இதன் மூலம் மேலும் தூக்கலாக தெரிகிறார் வீனஸ். இதேபோல ஹங்கி நீச்சல் வீராங்கனை சுஸானா ஜேக்கபஸ் தனது நாட்டு தேசியக் கொடியை விரல் நகங்களில் விளையாட வைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஆலிசன் வில்லியம்சன் தனது விரல் நகங்களில் தேசியக் கொடியான யூனியன் ஜாக்கை அப்படியே இடம் பெயர்த்துக் கொண்டு வந்துள்ளார்.

இப்படிப் பலரும் விதம் விதமான முறையில் தங்களது நகங்கள் மூலம், உடைகள் மூலம், தலை முடியலங்காரம் மூலம் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராஜா
27-07-2012, 01:10 PM
18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதனை முறியடிக்கப்படுமா?

http://tamil.oneindia.in/img/2012/07/27-larisa-latynina--300.jpg

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் இதுவரை அதிக பதக்கங்களை (18 பதக்கம்) பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் ரஷ்ய வீராங்கனை லரிசா லெட்டினா ஆவார். இவரது சாதனை கடந்த 56 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது.

கடந்த 1934ம் ஆண்டு உக்ரைனின் கேர்சன் பகுதியில் பிறந்தார் லரியா. முதலில் பாலே விளையாட்டு வீராங்கனையாக இருந்த இவர், பயிற்சியாளர் இல்லாததால் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கு மாறினார். லரியாவின் 20வது வயதில் சர்வதேச அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 1954ம் ஆண்டு நடைபெற்ற ரோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் கடந்த 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற லரியா, 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார்.

இதன்பிறகு 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற லரிசா, 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார். கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார். கடந்த 1966ம் ஆண்டோடு உலக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் லரியா மொத்தம் 18 பதக்கங்களை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டுகளில் கலந்து கொண்டு 18 பதக்கங்கள் இதுவரை யாரும் வாங்கவில்லை. அதேபோல லரிசா ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 9 தங்கப்பதக்கங்களை பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனை என்ற பட்டியலிலும் லரிசா தான் முதலிடத்தில் உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் பெற்றவர்களில் லரிசாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 16 பதக்கங்களுடன் உள்ளார். இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ராஜா
28-07-2012, 02:51 AM
ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை போட்டி: 2 உலக சாதனைகள்-இந்தியாவிற்கு பின்னடைவு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், கொரிய வீரர்களால் 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்திய வில்வித்தை அணியினர் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தனர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 64 பேர் பங்கேற்ற ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஒவ்வொரு அணியினரும் மொத்தம் 72 அம்புகள் எய்தனர்.

தென் கொரியாவை சேர்ந்த 3 வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இதில் டாங் ஹூயன் இம் 699 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பூப்மின் கிம் 698 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஜின் ஹைக் ஹோ 690 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்தனர். போட்டியின் முடிவில் இந்திய வீரர் தருன்தீப் ராய் 664 புள்ளிகளுடன் 31வது இடத்தை பெற்றார். ராகுல் பானர்ஜி 664 புள்ளிகளுடன் 46வது இடத்தையும், ஜெயந்தா தாலூக்தார் 53வது இடத்தையும் பெற்றார். அணிகளின் பட்டியலில் இந்தியா 1969 புள்ளிகளை பெற்று 12வது இடத்தை பிடித்தது.

இதன்மூலம் தென் கொரியா அணி மொத்தம் 72 அம்புகளை எய்து 2087 புள்ளிகளை பெற்று, புதிய உலக சாதனை படைத்தது. அதேபோல டாங் ஹூயன் இம் தனி வீரர்கள் புள்ளியில், தனது முந்திய உலக சாதனையை முறியடித்து புதிய 699 புள்ளிகளுடன் புதிய உலக சாதனையை படைத்தார். முதல் சுற்றின் முடிவில் இந்தியாவின் தருன்தீப் ராய்(31வது இடம்) மட்டுமே, அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுகிறார். மற்ற 2 பேரும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றனர். அணிகளின் பட்டியலில் கொரியா(2087 புள்ளிகள்) முதலிடத்திலும், பிரான்ஸ்(2021 புள்ளிகள்) 2வது இடத்தையும், சீனா (2019 புள்ளிகள்) 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

ராஜா
28-07-2012, 02:58 AM
வண்ணமிகு க*லைநிகழ்ச்சிகளுடன் லண்டனில் ஒலிம்பி்க் போட்டி கோலாகலமாக துவக்கம்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_517169.jpg

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியது. இங்கலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30-வது ஒலி்ம்பிக் போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

http://l2.yimg.com/bt/api/res/1.2/OtGystrLN6l.JLzZgOs_2Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yNzc7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T235000Z_1_CBRE86Q1U7E00_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT3.JPG

ராஜா
28-07-2012, 03:01 AM
ஒலிம்பி்க் போட்டி கோலாகலமாக துவக்கம்

http://l2.yimg.com/bt/api/res/1.2/WLo5DvKcP_IKIr1M5DeHpw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zNDI7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T234636Z_1_CBRE86Q1U1Q00_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT3.JPG

http://l1.yimg.com/bt/api/res/1.2/mUMNIcHDoygA8_y2oqQ.aA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yOTk7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T234323Z_1_CBRE86Q1TWE00_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT3.JPG

http://l3.yimg.com/bt/api/res/1.2/UscY38J24a8W3E.C3Nxcdg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yNjk7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T234112Z_1_CBRE86Q1TSS00_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT3.JPG

ராஜா
28-07-2012, 03:04 AM
ஒலிம்பி்க் போட்டி கோலாகல துவக்கம்

http://l1.yimg.com/bt/api/res/1.2/lxHr2xdnc56VjrG.E7qPZA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yOTk7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T232920Z_1_CBRE86Q1T9700_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT2.JPG

http://l3.yimg.com/bt/api/res/1.2/h_0dtB4JnEvNLPZzFLI_ZA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yODI7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T232920Z_1_CBRE86Q1T9000_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT3.JPG

http://l3.yimg.com/bt/api/res/1.2/XACUGYFBQo19OM2ByV4NYA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0yOTg7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T232920Z_1_CBRE86Q1T9200_RTROPTP_2_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT2.JPG

ராஜா
28-07-2012, 03:06 AM
இந்திய வீரர்களின் அணிவகுப்பு..

http://l.yimg.com/bt/api/res/1.2/0faKJ7LHUXHk3pWzvfU4Qw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD02MzA7cT04NTt3PTQ0OQ--/http://l.yimg.com/os/156/2012/07/28/india-olympics-01-280712-6301-jpg_020202.jpg

மல்யுத்த வீரர் சுசீல் குமார் கொடி தாங்கிச் செல்கிறார்..

ராஜா
28-07-2012, 03:08 AM
http://l3.yimg.com/bt/api/res/1.2/8gLe4GzOvqWPnTpUNjikjA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NTI7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T224316Z_1212204493_LM2E87R1R3TZ8_RTRMADP_3_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT2.JPG

http://l.yimg.com/bt/api/res/1.2/S7WtV3tzHnEBzQnRm_yt_A--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NTc7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T222535Z_7058424_LM2E87R1QACUT_RTRMADP_3_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT2.JPG

ராஜா
28-07-2012, 03:13 AM
http://l3.yimg.com/bt/api/res/1.2/thDCJkyWvk7VsTczYfACVQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zOTY7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149366533-jpg_020203.jpg

இந்தியா சாதிக்குமா..? இரவிலும் விழித்திருந்து துவக்கவிழாவைக் காணும் இந்தியக் குடும்பம்..

ராஜா
28-07-2012, 03:18 AM
ஒலிம்பிக் துவக்கவிழா.. கண்கவர் நிகழ்ச்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/jbu5lx_6DDIwx41wrLrHfA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTM7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T220936Z_1526286206_GM1E87S0FYV02_RTRMADP_3_OLY-OPEN-CEREMONY-DAY0-ACT1.JPG

http://l2.yimg.com/bt/api/res/1.2/x.GxLQXX7rQnJE5ymD6nDQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTQ7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T223626Z_640089239_GM1E87S0I4Y01_RTRMADP_3_OLY-AROUNDTOWN-DAY0.JPG

http://l1.yimg.com/bt/api/res/1.2/Oa2sKNirF8LzhJTZ4g2KcQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDQ7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-27T224545Z_2083192381_LR1E87R1R89A7_RTRMADP_3_OLY-OPEN-CEREMONY-DAY0.JPG

ராஜா
28-07-2012, 07:13 AM
இந்தியா : இன்று பங்கேற்கும் போட்டிகள்..

இன்று 2வது நாளாக இந்திய வீரர்கள் பல போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் குத்துச்சண்டை, பளு தூக்குதல், துடுப்பு படகு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீ்ரர்கள், வீராங்கனைகள் குறித்த விபரம் வருமாறு:

வில்வித்தை:

வில்வித்தை போட்டியில் நேற்று முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இன்று ஆண்களுக்கான 2வது சுற்று முதல் இறுதிப் போட்டி வரையுள்ள போட்டிகள் நடைபெற உள்ளது.

துடுப்பு படகு:

துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வரன் சிங் இன்று மாலை 5 மணி களமிறங்க உள்ளார்.

பளுத்தூக்குதல்:

பெண்களுக்கான பளுத்தூக்குதல் போட்டியில் இன்று இந்தியாவின் சோனியா சானு(48) பங்கேற்க உள்ளார். இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் மொத்தம் 14 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வீராங்கனை அங்கிதா தாஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று மாலை 4.30 மணிக்கு களமிறங்குகிறார். அதேபோல ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் சவும்யாஜித் கோஷ் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இவர்கள் இருவரும் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை:

இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இன்று களம் காண உள்ளனர். இதில் கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற விரேந்தர் சிங் 75 கிலோ பிரிவில் களமிறங்க உள்ளார். விரேந்தர் சிங் முதல் சுற்றில் கசகிஸ்தானின் தனபிக் சூகானோ உடன் மோத உள்ளார். 56 கிலோ பிரிவில் சிவ தபா களமிறங்க உள்ளார். இவர் முதல் சுற்றில் மெக்சிகோ வீரர் ஆஸ்கார் வால்டிஸ் பிரோவை சந்திக்க உள்ளார்.

ராஜா
28-07-2012, 07:56 AM
ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை போட்டி: தீபிகா குமாரிக்கு 8வது இடம்-இந்திய அணிக்கு 9வது இடம்

http://tamil.oneindia.in/img/2012/07/28-deepika-kumari4-300.jpg

நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான வில்வித்தை போட்டியில், 12 அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் தலா 72 அம்புகளை எய்தனர்.போட்டியின் முடிவில் தென் கொரியாவின் போ பாய் கி 671 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அதே புள்ளியுடன் தென் கொரிய வீரர் சங் ஜின் லீ 2வது இடத்தை பிடித்தார். இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார்.

இந்தியாவின் பம்பாய்லா தேவி 651 புள்ளிகளுடன் 22வது இடத்தையும், சக்ரோவோலு ஸ்வரோ 625 புள்ளிகளுடன் 50 இடத்தையும் பிடித்தார். மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு (1938 புள்ளிகள்) 9வது இடம் கிடைத்தது. இதன் மூலம் அடுத்த சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த அணியுடன் இந்தியா மோத உள்ளது.

தனி நபர் போட்டியில் 8வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இங்கிலாந்தை சேர்ந்த அமி ஒலீவரை சந்திக்க உள்ளார். மேலும் இந்தியாவின் பம்பாய்லா, கிரீஸ் வீராங்கனை இவாஞ்லியா சாராவை சந்திக்க உள்ளார். 50வது இடத்தை பிடித்த சக்ரோவோலு, அமெரிக்காவின் ஜெனீபர் நிக்கோலஸை சந்திக்க உள்ளார்.

ராஜா
28-07-2012, 07:58 AM
ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கலக்க உள்ள தமிழக குழுவினர்

http://tamil.oneindia.in/img/2012/07/28-olympics21-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்கம் மற்றும் நிறைவு விழாக்களில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதை தவிர போட்டிகளுக்கு இடையே பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள கலை குழுவினருக்கு தேர்வு நடைபெற்றது. இதற்காக உலகம் எங்கும் உள்ள கலை குழுக்களை சேர்ந்த சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். இந்தியாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை சேர்ந்த கலை குழுவினர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பங்களில் மொத்தம் 79 பேர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தி.நகரை சேர்ந்த பரதாஞ்சலி நடன பள்ளியை சேர்ந்த இவர்கள் மியூசிக் பேண்ட், பரதநாட்டியம், கதக், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நமது கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற உள்ளனர். மேலும் டெல்லி, மும்பை இளைஞர்கள் பாங்ரா நடனம் ஆட உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஜெய் ஹோ பாடலுக்கு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் மேற்கத்திய நடனமாட உள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் உள்ள இடைவெளி நேரங்களில், இந்திய கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் வரும் 31 மற்றும் ஆகஸ்டு 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ராஜா
28-07-2012, 03:57 PM
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் ; முதல் தங்கம் சீனாவுக்கு..!

http://l1.yimg.com/bt/api/res/1.2/D2cskc_rUUzPTd4e_5yL.A--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zMDA7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-28T113250Z_1_CBRE86R0W2X00_RTROPTP_2_OLY-SHOO-SHW10R-MEDALS-DAY1.JPG

10 மீ ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்ற சீன மங்கை, யி சிலிங்..

ராஜா
28-07-2012, 04:32 PM
நாள் ஒன்று..

மகளிர் உதைபந்து : பிரிவு - அ / ரஷ்யா எதிர் அங்கோலா..

http://l1.yimg.com/bt/api/res/1.2/EsxHoPkLvF1SfZO5MTb9wA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00Mzg7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149433124-8-jpg_140120.jpg

அங்கோலா காப்பாளர் நெய்டி பார்போஸாவின் பகீரத பிரயத்தனத்தையும் மீறி பந்தை வலைக்குள் அடிக்கும் ரஷ்ய வீராங்கனை இகட்டெரினா டேவிடென்கோ..!

ராஜா
28-07-2012, 04:35 PM
மகளிர் கைப்பந்து ; ஜப்பான் எதிர் அல்ஜீரியா..

http://l1.yimg.com/bt/api/res/1.2/dnNr5u6VMY1CwVJFXKUIzw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTc7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149433576-8-jpg_140121.jpg

அல்ஜீரிய வீராங்கனைகளை ஏமாற்றி, இடம்பார்த்து பந்தை அடிக்கும் ரீசா ஷின்னபே..

ராஜா
28-07-2012, 04:41 PM
டேபிள் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் ஆரம்ப சுற்று.. டோகோ எதிர் ஆஸ்திரேலியா..

http://l2.yimg.com/bt/api/res/1.2/X1rT1gJMIMC4Zw0gxJu3sw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zOTY7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149433607-8-jpg_140121.jpg

மாவுசி அல்பெடோக்லோவின் இலாவகமான ஃபோர்ஹேண்ட் திருப்பல்.. ஆஸி வீரர் ஜஸ்டின் ஹானுக்கெதிராக..

ராஜா
28-07-2012, 04:45 PM
ஆடவர் கூடைப்பந்து - சீனா எதிர் செக். குடியரசு..

http://l1.yimg.com/bt/api/res/1.2/.23R7igpfx2WQxE1k1SFvw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTY7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149433644-8-jpg_140127.jpg

இலோனா பர்க்ரோவாவிடம் அகப்படாமல் பந்தைக் கடத்தும் சீன வீரர் நான் சென்..!

ராஜா
28-07-2012, 04:48 PM
ஆடவர் நீச்சல் - 400 மீ மெட்லி - பூர்வாங்கச் சுற்று..

http://l1.yimg.com/bt/api/res/1.2/NV._O.JWzYnnHh5nV4dVmQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zOTY7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/28/149433813-8-jpg_140128.jpg

போட்டிக்குப்பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமெரிக்க சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஃபெல்ப்ஸ்..

ராஜா
29-07-2012, 03:31 AM
ஒலிம்பிக் பாட்மிண்டன்: கலப்பு இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி!

http://tamil.oneindia.in/img/2012/07/28-diju-badmitton-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியாக கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, வி.டிஜூ ஜோடி, இந்தோனேஷியாவின் டான்டவி அஹ்மது, லிலியானா நட்சிர் ஜோடியை எதிர் கொண்டது. பரபரப்பான போட்டியில் இந்தியா ஜோடி வெற்றி பெற கடுமையாக போராடியது. ஆனால் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இப்போட்டியில், இந்தோனேஷியா ஜோடி 21-16, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

கலப்பு இரட்டையர் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளது. அடுத்த போட்டியில் இந்திய ஜோடி, டென்மார்க்கை சேர்ந்த ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது.

ராஜா
29-07-2012, 03:34 AM
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் விஜய் குமார் தகுதி சுற்றுடன் 'அவுட்'

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் உட்பட மொத்தம் 52 வீரர்கள் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் 26 வயது விஜய் குமார் துவக்கத்தில் சிறப்பாக புள்ளிகளை சேர்த்தார். முதல் நிலையில் 94 புள்ளிகளை சேர்த்தார். 2வது நிலையில் 92 புள்ளிகளும், 3வது நிலையில் 94 புள்ளிகளும் சேர்த்தார். அதன்பிறகு 4வது நிலையில் 97 புள்ளிகளை சேர்த்தார். இதன்மூலம் 4 நிலைகளில் 400க்கு 380 புள்ளிகளை சேர்த்தார்.

ஆனால் 5வது நிலையில் 97 புள்ளிகளும், 6வது மட்டும் கடைசி நிலையில் 93 புள்ளிகளும் சேர்த்தார். இதனால் மொத்தம் 600க்கு 570 புள்ளிகளை மட்டுமே விஜய் குமாரால் சேர்க்க முடிந்தது. இதன்மூலம் இந்திய வீரர் விஜய்குமார் புள்ளிப் பட்டியில் 31வது இடத்தை பெற்று பெளியேறினார்.

ராஜா
29-07-2012, 03:36 AM
ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய ஆண்கள் அணி போட்டியில் இருந்து 'அவுட்'

http://tamil.oneindia.in/img/2012/07/28-28-rahul-banerjee-archer-600.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று வில்வித்தை போட்டிகள் துவங்கியது. இதில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய அணியின் சார்பாக தரூண்தீப் ராய், ராகுல் பார்னஜி, ஜெயந்தா தாலுக்தார் ஆகிய 3 பேர் கலந்து கொண்டனர்.நேற்று நடைபெற்ற அணிகளுக்கான போட்டியில் இந்தியா அணி 1969 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தது. இதனையடுத்து அடுத்த சுற்றிற்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பான் அணி உடன் மோதியது. இதில் இரு அணிகளும் 214 புள்ளிகள் பெற்றன. ஆனால் ஜப்பான் அணி 29-27 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதனால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் தனி நபர் போட்டிகளில் இந்தியாவின் 3 வீரர்களும் அடுத்த சுற்றில் விளையாட வாய்ப்புள்ளது.

ராஜா
29-07-2012, 03:38 AM
ஒலிம்பிக் பாட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரருக்கு முதல் வெற்றி

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காசப், பெய்ஜியன் வீரர் டான் யூஹனை எதிர்த்து ஆடினார். போட்டியின் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் காசப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 நிமிடங்கள் தொடர்ந்த முதல் ஆட்டத்தை காசப் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். 2வது ஆட்டத்தில் அதிக உற்சாகத்துடன் ஆடிய காசப் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

இதன் மூலம் மொத்தம் 35 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில் 21-14, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் இன்னொரு போட்டியில் கலந்து கொள்ள உள்ள கசாப் அதில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவார்.

ராஜா
29-07-2012, 07:20 AM
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சௌம்யஜித் கோஷ் வெற்றி- அங்கிதா அவுட்

http://tamil.oneindia.in/img/2012/07/29-table-tennis-300.jpg

நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் கோஷ் பிரேசிலின் குஸ்டவோ சுபோயுடன் மோதினார். முதல் இரண்டு செட்கள் 11-9, 14-12 என்ற செட் கணக்கில் கோஷ் வசமானது. 3வது செட்டில் 7-11 என்ற புள்ளிகளால் அது பிரேசில் வீரருக்கு போனது. 4வது செட்டிலும் பிரேசில் வீரர் கடுமை காட்டினாலும் கோஷ் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். 5வது செட்டில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 5-11 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் பிரேசில் வீரர் வசமானது. ஆனால் கடைசி செட்டை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக ஆடி 4-2 என்ற கணக்கில் பிரேசில் வீரரை கோஷ் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் 2-வது சுற்றில் கொரியாவின் கிம் ஹியோக் பாங்குடன் மோதுகிறார் கோஷ்.

முன்னதாக, மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அன்கிதா தாஸ், ஸ்பெயினின் சாரா ரமிரிஸிடம் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஸ்பெயின் வீராங்கனைதான் ஆதிக்கம் செலுத்தினார். முதல் 3 செட்களை 11-9, 11-8, 11-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயினின் சாரா கைப்பற்றினார். 4-வது சுற்றில் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய வீராங்கனை 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை 11-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினின் சாரா கைப்பற்றினார். இதையடுத்து 4-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை இந்தியாவின் அன்கிதா தாஸை வீழ்த்தினார். இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து அவர் வெளியேறினார்.

ராஜா
29-07-2012, 07:25 AM
சானியா மிர்ஸா, ருஷ்மி சக்கரவர்த்தி 'அவுட்'-படுதோல்வியடைந்து வெளியேறினர்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-sania-rushmi-300.jpg

ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, ருஷ்மி ஜோடி முதல் சுற்றில் தைபே ஜோடி சு வீ ஷே, சியா ஜங் சுவாங் ஜோடியை சந்தித்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த முதல் சுற்றுப் போட்டியில் சானியா ஜோடி 1-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் இந்தியாவின் இரட்டையர் டென்னிஸ் பதக்கக் கனவு முதல் சுற்றோடு முடிந்து போனது. ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்பும் முன்பே பதக்கத்தையெல்லாம் நாங்கள் உறுதி சொல்ல முடியாது என்று அபசகுனமாக பேசியிருந்தார் சானியா என்பது நினைவிருக்கலாம். மேலும் நேற்றைய ஆட்டத்தில் சானியாவும் சரி, ருஷ்மியும் சரி போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவே இல்லை என்பதும் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இனி டென்னிஸ் பிரிவில், ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில்தான் இந்தியா எதையாவது எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை.
கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து சானியா மிர்ஸா ஆடவுள்ளார். இரட்டையர் பிரிவில் இரண்டு ஜோடிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்த்தன் ஒரு ஜோடியாகவும், மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா இன்னொரு ஜோடியாகவும் கலந்து கொண்டுள்ளனர். சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் பிரிவில் போட்டியிடுகிறார்.

ராஜா
29-07-2012, 10:12 AM
மகளிர் பளு தூக்குதல் - 48 கிலோ பிரிவு..

http://l3.yimg.com/bt/api/res/1.2/uNKfoF.dbqd6.uOB8K2U8A--/YXBwaWQ9eW5ld3M7Y2g9MTYwMTtjcj0xO2N3PTE2ODE7ZHg9MjY7ZHk9MjIwO2ZpPXVsY3JvcDtoPTYwMDtxPTg1O3c9NjMw/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-28T165532Z_1289193926_LM2E87S1B09QF_RTRMADP_3_OLY-WEIG-WLW48K.JPG

ஒரு வெற்றிகரமான முயற்சியைக் கொண்டாடும் சீன வீராங்கனை மிங் யுவான் வாங்..!

ராஜா
29-07-2012, 10:16 AM
ஜிம்னாஸ்டிக்ஸ் - ரோமன் ரிங்ஸ்..

http://l.yimg.com/bt/api/res/1.2/q81eEoZw87mtmW_RgmOEzQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDk7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-28T170943Z_251081022_LM2E87S1BNXR4_RTRMADP_3_OLY-GYMN-GAMTEA-GAM499902.JPG

தன் செயல்திறனின் நிறைவாக சுழன்று தரையிறங்கும், ஜப்பான் வீரர் கொஹெய் உச்சிமுரா..!

ராஜா
29-07-2012, 10:23 AM
மகளிர் உதை பந்து - பிரிவு உ. காமரூன் எதிர் இங்கிலாந்து..

http://l1.yimg.com/bt/api/res/1.2/T6pDhbBjgsBrVcq1676xew--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NTA7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-28T163943Z_207768038_LR1E87S1A9WZO_RTRMADP_3_OLY-SOCC-FBWSOC-FBW400E04.JPG

அணியின் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும், கேமரூன் வீராங்கனை மெடலீன் மனி (9) மற்றும் இங்கிலாந்து வீராங்கனை அனிதா அசாந்தே..

ராஜா
29-07-2012, 10:27 AM
டேபிள் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் - முதல் சுற்று..

http://l.yimg.com/bt/api/res/1.2/0sbXxbLBWAT.nTE29hV9MQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zODU7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-28T164400Z_841584100_LR1E87S1AHCZY_RTRMADP_3_OLY-TABT-TTMSIN-TTM001708.JPG

பிரேசில் வீரருக்கு செர்வ் செய்யும் இந்திய வீரர் சௌம்யஜித் கோஷ்..!

Keelai Naadaan
29-07-2012, 01:33 PM
அபாரம்...! ராஜா சார். தொலைக்காட்சியே வேண்டாம்.

ராஜா
29-07-2012, 05:36 PM
நன்றி கீழை நாடான்..!

சிவா.ஜி
29-07-2012, 05:47 PM
அட்டகாசமான படங்களுடனும், நிறைய தகவல்களுடனும் அசத்துறீங்க ராஜா சார். ஒலிம்பிக்ஸை நேரில் பார்த்த திருப்தி. உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்.

ராஜா
29-07-2012, 06:14 PM
நன்றி சிவா..!

ராஜா
29-07-2012, 06:16 PM
லண்டன் ஒலிம்பிக்: துடுப்பு படகுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்வரன்சிங்

http://tamil.oneindia.in/img/2012/07/29-rower-swarn-300.jpg

ஆண்களுக்கான ஒற்றையர் 'ஸ்கல்' பிரிவின் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 35 வீரர்கள் கலந்து கொண்டனர். 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்கள் கால் இறுதிக்கு தகுதி பெறுவார்கள். மற்ற வீரர்கள் இன்னொரு தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு தகுதி பெறுவர்.

இந்திய வீரரான ஸ்வரன் சிங் முதல் பிரிவில் இடம் பெற்றிருந்தார். இப்பிரிவில் பெல்ஜியம், கியூபா, மெக்சிகோ, சிலி, ஈரான் நாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் பெல்ஜியம் வீரர் மியென்ஸ் முதலிடம் பெற்றார். இந்திய வீரர் 4வது இடத்தை பெற்றார். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இலக்கு நேரத்தை கடந்தால் காலிறுதிக்கு ஸ்வரன்சிங் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இன்றைய போட்டியில் தென்கொரிய வீரரை பின்னுக்குள் தள்ளி ஸ்வரன்சிங் வெற்றி பெற்றார். இதையடுத்து காலிறுதிக்கு ஸ்வரன்சிங் தகுதி பெற்றிருக்கிறார்.

ராஜா
29-07-2012, 06:18 PM
லண்டன் ஒலிம்பிக்: டென்மார்க்கிடம் தோற்று வெளியேறிய இந்திய வில்வித்தை மகளிர் அணி

http://tamil.oneindia.in/img/2012/07/29-archers-india-300.jpg

வில்வித்தை பெண்கள் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய தகுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பெண்கள் அணி டென்மார்க் அணியுடன் மோதியது. டென்மார்க் அணி 211-201 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. டென்மார்க் அணி காலிறுதியில் தென்கொரியா அணியுடன் மோதுகிறது. தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

ராஜா
29-07-2012, 06:20 PM
ஒலிம்பிக்: லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்!!

விளையாட்டுப் போட்டிகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது என்ற பெயரைப் பெற்ற விளையாட்டு பீச் வாலிபால் போட்டிதான். அதிலும் மகளிர் போட்டிக்குத்தான் செம கூட்டம் கூடும். அதே போல லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பீச் வாலிபால் போட்டிக்குத்தான் நிறைய டிக்கெட் விற்பனையாகியிருந்தது.

தற்போது பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளிலேயே பெரும் கூட்டம் கூடியது. ஹார்ஸ் கார்ட்ஸ் பரேட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிந்றன. 19 டிகிரி அளவுக்கு குறைந்த வெப்ப நிலை நிலவியபோதும், அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் வீராங்கனைகளை ரசிக்கவும், விளையாட்டைப் பார்க்கவும் கூடியிருந்தனர்.

ராஜா
29-07-2012, 06:40 PM
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் வீழ்ந்தார்

நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் கோஷ் பிரேசிலின் குஸ்டவோ சுபோயுடன் மோதினார். முதல் இரண்டு செட்கள் 11-9, 14-12 என்ற புள்ளிக் கணக்கில் கோஷ் வசமானது. 3வது செட்டில் 7-11 என்ற புள்ளிகளால் அது பிரேசில் வீரருக்கு போனது. 4வது செட்டிலும் பிரேசில் வீரர் கடுமை காட்டினாலும் கோஷ் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.

5வது செட்டில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 5-11 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் பிரேசில் வீரர் வசமானது. ஆனால் கடைசி செட்டை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக ஆடி 4-2 என்ற கணக்கில் பிரேசில் வீரரை கோஷ் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இன்று வடகொரியாவின் கிம் ஹியோக் பாங்குடன் மோதினார் செளம்யஜித் கோஷ். முதல் செட்டில் மட்டும் நன்றாக ஆடி வென்ற கோஷ், அடுத்த நான்கு செட்களிலும் தோ்ல்வியைத் தழுவினார். இப்போட்டியில், 11-9, 6-11, 5-11, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று வெளியேறினார் கோஷ்.

ராஜா
29-07-2012, 06:50 PM
.....................GOLD SILVER BRONZE TOTAL

1 China 6 3 2 11
2 United States 3 3 2 8
3 Italy 2 3 2 7
4 South Korea 2 1 2 5
5 Kazakhstan 2 0 0 2
6 Brazil 1 1 1 3
6 Hungary 1 1 1 3
30 India 0 0 0 0

ராஜா
29-07-2012, 06:58 PM
மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் - பீம்..

http://l.yimg.com/bt/api/res/1.2/7RrP_EVZBmr0A0Qh9lE70Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MzQ7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/29/000-DV1229571-jpg_150623.jpg

மெக்சிகோ வீராங்கனை எல்சா கார்சியா ரோட்ரிகஸ்..

ராஜா
29-07-2012, 07:02 PM
மகளிர் ஒருங்கிணைந்த 3 மீ ஸ்ப்ரிங் போர்ட் டைவிங்..

http://l.yimg.com/bt/api/res/1.2/J7hfCK2UX1XaM4UswNbWOA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MjA7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/29/000-DV1231412-jpg_150632.jpg

அமெரிக்க வீராங்கனைகளின் வினாடி பிசகாத துல்லியம்..

ராஜா
29-07-2012, 07:05 PM
http://l3.yimg.com/bt/api/res/1.2/5N9gtmdC3cPtI_CWAuBB2w--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTQ7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/29/149464310-10-jpg_141502.jpg

விண்ட்சர் ஏரியில், ஒற்றையர் படகு வலிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரருக்குத் துணையாக ஒளி வீசும் நிலவு..

கீதம்
30-07-2012, 12:12 AM
அபூர்வப் படங்களுடன் ஒலிம்பிக் செய்திகளையும் நிகழ்வுகளையும் அழகாய்த் தொகுத்தளிக்கும் தங்களுக்கு நன்றிகள் பல.

ராஜா
30-07-2012, 06:49 AM
நன்றி கீதம்..!

ராஜா
30-07-2012, 06:52 AM
லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி இன்று நெதர்லாந்து உடன் மோதுகிறது

http://tamil.oneindia.in/img/2012/07/30-london-olympics-2012-hockey.jpg

லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. ஒலிம்பி்க்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் 12 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், பாகிஸ்தான், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, தென் கொரியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் பி பிரிவில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஆண்களுக்கான ஹாக்கி அணிகள் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி பலமிக்க அணியாக உள்ளது. இந்தியா, தரவரிசையில் 10வது இடத்தில் இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 8 முறை தங்கப்பதக்கம் வென்ற அணி என்பதால் இந்த முறை அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ராஜா
30-07-2012, 06:56 AM
லண்டன் ஒலிம்பிக்ஸில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள்

http://tamil.oneindia.in/img/2012/07/30-india-flag-olympics.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான போட்டிகளின் முதல் சுற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

வில்வித்தை: இந்திய வீராங்கனை பம்பாய்லா தேவி இன்று நடைபெற உள்ள தகுதி சுற்று போட்டியில் கிரீஸ் வீராங்கனை கட்ரீனா பலிகாவை எதிர் கொள்ள உள்ளார். பெண்களுக்கான தனி நபர் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாட்மிண்டன்: பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் இ பிரிவை சேர்ந்த இந்தியாவின் சாய்னா நேவால், பெல்ஜியத்தின் லியன் தனை எதிர்கொள்ள உள்ளார். இந்தியர்களில் பதக்க வாய்ப்பு கொண்டவர்களில் சாய்னா நேவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பாட்மிண்டன் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பி பிரிவை சேர்ந்த இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வின் போண்ணப்பா ஜோடி, சீனாவின் ச்சிங்-செய்ன் ஜோடி உடன் மோத உள்ளது.

குத்துச்சண்டை: ஆண்களுக்கான 81 கிலோ கொண்டவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் சுமத் சுவகன், பிரேசில் வீரர் யாமாகுசி பால்கோ பிளோரின்டோவை எதிர் கொள்ள உள்ளார்.

துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நாரங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஹாக்கி: இந்திய அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ராஜா
30-07-2012, 07:08 AM
ஒலிம்பிக் அணிவகுப்பில் ஊடுருவியவர் தொடக்க விழாவில் டான்ஸ் ஆடச் சென்ற பெங்களூர் பெண்!


http://tamil.oneindia.in/img/2012/07/30-madhura-nagendra-300.jpg

ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது இந்திய அணியினருடன் இணைந்து நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிவப்பு நிற டாப்ஸில் முதல் வரிசையில் அணிவகுத்து நடந்து வந்தார் இந்தப் பெண். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவர் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நேற்று இவர் குறித்த விவரங்கள் தெரிய வந்தன. இவரது பெயர் மதுரா நாகேந்திரா. பெங்களூரைச் சேர்ந்தவர். அங்குள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். நடனம் தெரிந்தவர். இவர் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இயக்குநர் டேணி பாயிலின் நேரடி மேற்பார்வையில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதாவது நடனம் ஆடியுள்ளார். இதற்காகவே அவர் லண்டன் சென்றிருந்தார்.

போன இடத்தில், ஆர்வக் கோளாறால், இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து அணிவகுப்பில் நடந்து வந்துள்ளார். அதேசமயம், இவர் அணிவகுப்பு நடந்த இடத்தில் ஊடுறுவிச் செல்லவில்லை. முறையான பாஸுடன்தான் இவர் சென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், இந்திய அணியினரோடு இணைந்து நடந்து போய் விட்டார்.

இதுகுறித்து மதுராவின் தந்தை நாகேந்திரா கூறுகையில், டேணி பாயில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடத்தான் எனது மகள் போயிருந்தார். அவர் அணிவகுப்பில் ஊடுறுவிச் செல்லவில்லை. அவர் அப்போது மைதானத்தில்தான் இருந்தார். இந்திய அணியினர் வந்தபோது ஆர்வத்தால் அவரும் உடன் போயுள்ளார். இருப்பினும், நமது அணியினரின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். நானும் லண்டனில்தான் இருந்தேன். சனிக்கிழமைதான் திரும்பி வந்தேன். எனது மகள் அடுத்த இரண்டு நாட்களில் வரவுள்ளார் என்றார் நாகேந்திரா.

ராஜா
30-07-2012, 07:12 AM
செய்னா, துவக்க சுற்றில் வெற்றி

http://sports.dinamalar.com/SportsImages/Saina-Nehwal-336_80.jpg

நேற்று நடந்த பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் "இ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுயட்டை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய செய்னா 21-9, 21-4 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றார். இன்று நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் செய்னா, பெல்ஜியம் வீராங்கனை லியானே டானை சந்திக்கிறார்.

ராஜா
30-07-2012, 07:17 AM
விஜேந்தர் அபாரம்:

ஆண்களுக்கான குத்துச்சண்டை "மிடில் வெயிட் 75 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஜேந்தர் சிங், கஜகஸ்தானின் டனாபெக் சுஜானோவை சந்தித்தார். இதில் விஜேந்தர் சிங் 14-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆக., 2ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது சுற்றில் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெர்ரல் கவுஷாவை எதிர்கொள்கிறார்.

ராஜா
30-07-2012, 07:18 AM
ஜெய்பகவான் முன்னேற்றம்:

ஆண்களுக்கான குத்துச்சண்டை "லைட் வெயிட் 60 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெய் பகவான், செசல்ஸ் வீரர் ஆன்ட்ரிகுயி ஆலிசாப்பை சந்தித்தார். இதில் அசத்தலாக ஆடிய ஜெய் பகவான் 18-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆக., 2ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது சுற்றில் ஜெய் பகவான், கஜகஸ்தானின் கானி ஜாய்லாவோவை சந்திக்கிறார்.

ராஜா
30-07-2012, 07:19 AM
ஹீனா-அனுராஜ் "அவுட்:

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீ., "ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் ஹீனா சித்து, அனுராஜ் சிங் பங்கேற்றனர். பைனலுக்கான தகுதிச் சுற்றில் மொத்தம் 382 புள்ளிகள் பெற்ற ஹீனா சித்து 12வது இடம் பிடித்தார். அனுராஜ் சிங் 378 புள்ளிகள் பெற்று 23வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினர்.

ராஜா
30-07-2012, 08:17 AM
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வெல்ல நியூமராலஜி கை கொடுக்குமா?

http://tamil.oneindia.in/img/2012/07/30-abhinav.jpeg

அபினவ் பிந்த்ராவின் கடந்த 1982ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தார். சூரியன் மற்றும் வியாழன் கிரகங்களின் பார்வையில் அபினவ் பிந்த்ரா உள்ளார். நியூமராலஜி படி, சூரியனுக்கு ஒன்றும், வியாழன் கிரகத்திற்கு 3வது எண்ணும் வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் (ஜூலை 30ம் தேதி) 3 என்ற எண் வருகிறது. மேலும் இந்த ஆண்டின் (2012) கூட்டு தொகையின் மூலம் 5 என்ற எண் கிடைக்கிறது. இது அபினவ் பிந்த்ராவிற்கு சாதகமாக அமையலாம்.

அபினவ் பிந்த்ராவின் பிறந்த தேதியின் கூட்டு தொகை (28) மூலம் 1 என்ற எண் கிடைக்கிறது. மேலும் 2008 என்ற ஆண்டின் கூட்டு தொகையின் மூலமும் 1 என்ற எண் கிடைக்கிறது. இதனால் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல இந்த ஆண்டும் அபினவ் பிந்த்ரா மீண்டும் தங்க பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்று எண்ணியல் அறிஞர்கள் கருத்திட்டுள்ளனர்..

பெங்களூரை சேர்ந்த நியூமராலஜி நிபுணர் வரூண் அதித்யா கூறியதாவது,

நட்சத்திரங்கள் அபினவ் பிந்த்ராவிற்கு சாதகமாக உள்ளதால், அவர் இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ககன் நராங் பொறுத்த வரை நட்சத்திரங்கள் நடுநிலையில் உள்ளன. இதனால் அபினவ் பிந்த்ராவை போல பதக்க வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இல்லை.
வெள்ளி மற்றும் மெர்குரி கிரகங்களின் பார்வையில் ககன் உள்ளார். இதில் மெர்குரி அவருக்கு சாதகமாக இருந்தாலும், வெள்ளி கிரகம் சாதகமாக இல்லை. இதனால் ககன் நராங் இன்று பதக்கம் வெல்லவதை கணிக்க முடியாது என்றார்.

ராஜா
30-07-2012, 08:30 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l1.yimg.com/bt/api/res/1.2/dgbvptUMIwoWBLJnrTjg0Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MjA7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/30/000-DV1232480-jpg_053516.jpg

போட்டியாளரின் அனுப்புகையை எதிர்கொள்ளும் சாய்னா நேவால்

ராஜா
30-07-2012, 08:33 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l2.yimg.com/bt/api/res/1.2/f7e_huQRSOc9HRnds3ofGg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD02MzA7cT04NTt3PTQ0Ng--/http://l.yimg.com/os/156/2012/07/30/crop149483112-11-jpg_054644.jpg

ஜூடோவில் வெண்கலம் சாதித்தமகிழ்வுடன் இத்தாலிய வீராங்கனை ரோஸல்பா ஃபோர்சினிட்டி..

ராஜா
30-07-2012, 08:36 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l2.yimg.com/bt/api/res/1.2/H184gcSIyRzLIO.NN9WljA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MjA7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/30/149472952-10-jpg_053516.jpg

ஆஸி. பங்கேற்பாளர் ஆஷ்லீ ப்ரென்னனின் சாகச முயற்சி..

ராஜா
30-07-2012, 08:39 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/jBT6GA6QbahYGWCFdsYgbw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MjA7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/30/149490497-10-jpg_053525.jpg

ஆடவர் வாள்சண்டை அரையிறுதி ; ரஷ்ய-ஹங்கேரி வீரர்களின் செயல்வேகத்தைப் பதிவு செய்வதில் காமிரா திணறித்தான் போனது..

ராஜா
30-07-2012, 08:42 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/_b2VvJavFdU9MfSmbB20ig--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NDY7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/30/2012-07-29T193209Z-431679736-LR1E87T1I9AP3-RTRMADP-3-OLY-WEIG-WLM56K-DAY2-jpg_053517.jpg

ஆடவர் பளு தூக்குதல் 56கி. பிரிவு ; தூக்கும் முயற்சி தோல்வியுற்றதால் துவண்டுபோன உஸ்பெக் வீரர் ருஸ்லான் மாகரோவ்..

ராஜா
30-07-2012, 08:46 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/zSqs80w.cS9WzAvzKakdaQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NDQ7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-29T135706Z_1790969707_TB3E87T12R122_RTRMADP_3_OLY-BOXI-BXM60K-ROUNDS-DAY2.JPG

ஆடவர் குத்துச்சண்டை, 60கி. பிரிவு - சீஷெல்ஸ் வீரர் ஆண்ட்ரிக் ஆலிசோப்புக்கு இந்திய வீரர் ஜெய் பகவான் அளிக்கும் பரிசு..

ராஜா
30-07-2012, 08:54 AM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 2 - சில காட்சிகள்..

http://l3.yimg.com/bt/api/res/1.2/gmcnomn8w6IliJPUhnorVg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD01MTA7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-29T221256Z_2013060599_LM2E87T1PPAE1_RTRMADP_3_OLY-SWIM-SWM4X1-SWM411101.JPG

ஆடவர் 4 X 100 தொடர் நீச்சல், சக வீரரை உற்சாகப்படுத்தும் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (இடது) உள்ளிட்ட அமெரிக்க அணியினர்..

ராஜா
30-07-2012, 11:20 AM
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வெல்ல நியூமராலஜி கை கொடுக்குமா?

பெங்களூரை சேர்ந்த நியூமராலஜி நிபுணர் வரூண் அதித்யா கூறியதாவது,

நட்சத்திரங்கள் அபினவ் பிந்த்ராவிற்கு சாதகமாக உள்ளதால், அவர் இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ககன் நராங் பொறுத்த வரை நட்சத்திரங்கள் நடுநிலையில் உள்ளன. இதனால் அபினவ் பிந்த்ராவை போல பதக்க வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இல்லை.
வெள்ளி மற்றும் மெர்குரி கிரகங்களின் பார்வையில் ககன் உள்ளார். இதில் மெர்குரி அவருக்கு சாதகமாக இருந்தாலும், வெள்ளி கிரகம் சாதகமாக இல்லை. இதனால் ககன் நராங் இன்று பதக்கம் வெல்லவதை கணிக்க முடியாது என்றார்.

மண்ணைக் கவ்விய எண்ணியல் மேதைகள் : ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் தகுதி சுற்றுடன் அபினவ் பிந்த்ரா 'அவுட்'-பைனலில் ககன் நராங்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, தகுதி சுற்றுடன் வெளியேறினார். ஆனால் மற்றொரு இந்திய வீரர் ககன் நராங் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ராஜா
30-07-2012, 11:50 AM
ஒலிம்பிக் போட்டி: விம்பிளே கால்பந்து மைதானத்தின் பாதுகாப்பு சாவிகளை தவறவிட்ட இங்கிலாந்து போலீசார்

http://tamil.oneindia.in/img/2012/07/30-london-statdium-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள விம்பிளே மைதானத்தின் பாதுகாப்பு சாவிகளை தவறவிட்ட இங்கிலாந்து போலீசார், செய்வதறியாமல் திகைப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.பாதுகாப்பு சாவிகள் தொலைந்தாலும், மைதானத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதி
30-07-2012, 11:50 AM
முதல் வெண்கலம் வாங்கித் தந்த ககன் நராங்-க்கு வாழ்த்துகள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா...!!

ராஜா
30-07-2012, 11:51 AM
10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ககன் நரங்குக்கு வெண்கலம் கிடைத்தது

ராஜா
30-07-2012, 12:30 PM
கிடைத்தது இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்குக்கு வெண்கலம்!

http://tamil.oneindia.in/img/2012/07/30-gagan-narang1-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.

இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா.ஜி
30-07-2012, 12:58 PM
ககன் நராங்குக்கு வாழ்த்துக்கள்.

பிரமாதமான கவரேஜ் அளிக்கும் ராஜா டி.விக்கு நன்றிகள்.

ராஜா
31-07-2012, 04:08 AM
நன்றி சிவா..!

ராஜா
31-07-2012, 04:10 AM
ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா

லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.

லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான "பி' பிரிவு ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு 20வது நிமிடத்தில் ராபர்ட் வான் டெர் ஹார்ஸ்ட் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய நெதர்லாந்து அணிக்கு 29வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை ரோடரிக் வியஸ்தோப் கோலாக மாற்றினார். இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு தரம்வீர் சிங் (45வது நிமிடம்), ஷிவேந்திரா சிங் (48வது) தலா ஒரு கோல் அடிக்க, 2-2 என சமநிலை அடைந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட நெதர்லாந்து அணிக்கு 51வது நிமிடத்தில் மின்க் வான் டெர் வீர்டன் கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆக., 1ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

கொரியா வெற்றி:

மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தென் கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பாக்., "டிரா':

மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.

ராஜா
31-07-2012, 04:11 AM
பூபதி-போபண்ணா, வெற்றி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, அலெக்சாண்டர் பர்ரி ஜோடியை சந்தித்தது. இதில் பூபதி-போபண்ணா ஜோடி 7-6, 6-7, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

ராஜா
31-07-2012, 04:12 AM
செய்னா நேவல் வெற்றி

ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவலின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று இரவு நடந்த கடைசி லீக் போட்டியில் உலகின் 5ம் நிலை வீராங்கனையான செய்னா, பெல்ஜியத்தின் டான் லியானியை சந்தித்தார். இதில் அசத்தலாக ஆடிய செய்னா முதல் செட்டை 21-4 என்ற கணக்கில் 9 நிமிடங்களில் வென்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 21-14 என்ற கணக்கில் 15 நிமிடங்களில் வென்றார். இறுதியில் செய்னா 21-4, 21-14 என்ற நேர் செட்களில் வெறும் 24 நிமிடங்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ராஜா
31-07-2012, 04:13 AM
பயஸ்-விஷ்ணு வெற்றி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அபாரமாக ஆடிய பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜீன்-ஜுலியன் ரோஜர் ஜோடியை 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

ராஜா
31-07-2012, 04:16 AM
வில்வித்தை: பம்பயலா தேவி "அவுட்'

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_518771.jpg

வில்வித்தை தனிநபர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பம்பயலா தேவி தோல்வி அடைந்தார்.

லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை பெண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்தியாவின் பம்பயலா தேவி, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இவான்ஜெலியா பசாராவை 6-4 என வீழ்த்தினார். பின் இரண்டாவது சுற்றில் பம்பயலா, மெக்சிகோவின் அய்டா ரோமனை சந்தித்தார். இதில் துவக்கத்தில் இருந்தே சொதப்பிய பம்பயலா தேவி 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ராஜா
31-07-2012, 04:17 AM
குத்துச்சண்டை: சுமித் சங்வான் தோல்வி

குத்துச்சண்டை 81 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் சங்வான் தோல்வி அடைந்தார்.

லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டை "லைட் ஹெவிவெயிட்' 81 கி.கி., எøட்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் சங்வான், பிரேசிலின் புளோரன்டினோ யமாகுசி பால்கயோவை சந்தித்தார். இதில் சங்வான் 14-15 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ராஜா
31-07-2012, 04:18 AM
டென்னிஸ்: விஷ்ணு வர்தன் தோல்வி

டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இளம் இந்திய வீரர் விஷ்ணு வர்தன் தோல்வி அடைந்தார்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஷ்ணு வர்தன், சுலோவேனியாவின் பிளாஸ் காவ்சிச்சை சந்தித்தார். இதில் விஷ்ணு வர்தன் 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ராஜா
31-07-2012, 04:19 AM
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

பாட்மின்டன் காஷ்யப் (ஆண்கள் ஒற்றையர்) மதியம் 1.00 மணி
வில்வித்தை ஜெயந்த் தாலுக்தர் (ஆண்கள், தனிநபர்), நேரம் மதியம் 1.43 மணி
ஜூடோ கரிமா சவுத்ரி (63 கி.கி.,) நேரம் மதியம் 2.07 மணி
பாட்மின்டன் ஜுவாலா-திஜு ஜோடி (கலப்பு இரட்டையர்) மதியம் 2.12 மணி
பளுதூக்குதல் ரவி குமார் (69 கி.கி.,) நேரம் மதியம் 2.30 மணி
துடுப்பு படகு சந்தீப் குமார், மன்ஜீத் சிங் (ஆண்கள் இரட்டையர்) நேரம் மதியம் 3. 00 மணி
வில்வித்தை சுவாரோ (பெண்கள், தனிநபர்) நேரம் மதியம் 3.14 மணி
துடுப்பு படகு சுவர்ன் சிங் விர்க் (ஆண்கள் ஒற்றையர், காலிறுதி) நேரம் மதியம் 3. 30 மணி
குத்துச்சண்டை தேவேந்திரோ சிங் ("லைட் பிளைவெயிட்', 49 கி.கி.,) நேரம் இரவு 7.00 மணி
வில்வித்தை ராகுல் பானர்ஜி (ஆண்கள், தனிநபர்), நேரம் இரவு 7.30 மணி
வில்வித்தை தருண்தீப் ராய் (ஆண்கள், தனிநபர்), நேரம் இரவு 7.48 மணி
பாட்மின்டன் ஜுவாலா-அஷ்வினி ஜோடி ( இரட்டையர்) இரவு 11.00 மணி
குத்துச்சண்டை மனோஜ் குமார் ("லைட் வெல்டர்வெயிட்', 64 கி.கி.,) நேரம் அதிகாலை 2.15 மணி

ராஜா
31-07-2012, 05:02 AM
பேட்மின்டன்: ஜூவாலா-அஷ்வினி ஜோடி வெற்றி

மகளிர் இரட்டையர் பேட்மின்டனில் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜூவாலா- அஷ்வினி ஜோடி வெற்றி பெற்றது. இந்த ஜோடி தைபே ஜோடியை , 25-23 ,16-21,21-18 பள்ளி கணக்கில் வீழ்த்தியது.

ராஜா
31-07-2012, 05:06 AM
ஒலிம்பிக் மோசடிகள்

ரன்னிங்கில் கன்னிங்:

கடந்த 1904ம் ஆண்டு செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் பிரிட் லார்ஸ் போட்டியில் மாரத்தான் போட்டியி்ல் கலந்து கொண்டார். போட்டியின் முடிவில் உலக சாதனை படைத்த லார்ஸ் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆனால் இது குறித்து விசாரித்த போது, போட்டியின் மொத்தம் ஓட்டத்தூரத்தில் இவர் 9 மைல்கள் மட்டும் ஓடிவிட்டு, இடைப்பட்ட 11 மைல்களை காரில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

ராஜா
31-07-2012, 05:08 AM
ஒலிம்பிக் மோசடிகள்

பாலின குளறுபடி:

கடந்த 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர் ஸ்டானிஸ்லாவா வாலஸிவிக்ஸ். போலாந்தை சேர்ந்த இவர் 1932 லாஸ் ஏஞ்சில்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

அதேபோல கடந்த 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 1930களில் இவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகளில் 18 உலக சாதனைகளை செய்தார். சர்வதேச அளவில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த இவர், கடந்த 1980ம் ஆண்டு இறந்தார். அப்போது அவருக்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது, இவருக்கு ஆண் பிறப்புறுப்பு இருந்தது தெரியவந்தது.

ராஜா
31-07-2012, 05:10 AM
ஒலிம்பிக் மோசடிகள்

'ஷாக்' கிங் டிஃபீட்..

கடந்த 1976 கனடா ஒலிம்பிக் போட்டியில் பென்டதலான் போட்டி நடைபெற்றது. இதில் ரஷ்ய வீரர் போரிஸ் ஒனிஸ்சின்கோ பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். பென்டதலான் போட்டியில் தட்டு ஏறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி ஏறிதல், கத்தி சண்டை, தடை தாண்டி ஓடுதல் என்று மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும்.
இதில் வாள் சண்டையின் போது அதிரடியாக ஆடியாக போரிஸ் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றார். இந்த நிலையில் இவரது வாள் மீது சந்தேகமடைந்த இங்கிலாந்து அணியினர், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தனர். இதனால் இவரது வாளுக்கு பதிலாக புதிய வாள் கொடுக்கப்பட்டது.

அப்போது போரிஸ் தோல்வி அடைந்தார். போரிஸின் வெற்றி பயன்படுத்தப்பட்ட வாளை பரிசோதித்த போது, அதில் மின்சாரம் வரும் வகையில் சுவிட்ச் உடன் கூடிய ஓயர் இணைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஷாக் கொடுத்த போரிஸின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

ராஜா
31-07-2012, 05:12 AM
ஒலிம்பிக் மோசடிகள்..

ஆள்மாற்றாட்டம்:

கடந்த 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சில்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் போர்டோ ரிகா நாட்டை சேர்ந்த மேட்லைன் டி ஜிசஸ் கலந்து கொண்டார். அதே ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் நீளம் தாண்டுதல் போட்டியில் காயமடைந்த அவர், அவரது இரட்டை பிறவியான சகோதரி மார்க்ரேட்டை, 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் களமிறங்க செய்தார். இதில் பதக்கம் வென்ற பிறகு கண்டுபிடிக்கப்பட்டதால், போர்டோ ரிகா அணி, இறுதிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.

ராஜா
31-07-2012, 10:59 AM
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல சிறார்களை போட்டு நொறுக்கும் சீனத்து அகோரப் பயிற்சி!

http://tamil.oneindia.in/img/2012/07/31-olympic2342-300.jpg

ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

பார்ப்போர் மனங்களை வேதனைக்குள்ளாக்குகிறது அந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரின் நிலை. கைகளை முறுக்கியும், கால்களை இழுத்துப் பிடித்து வளைத்தும், உடல்களை போட்டு நொறுக்கி அள்ளியும் மிகக் கொடூரமாக பயிற்சி அளிக்கிறார்கள் சீனாவில். ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும், சிறார்களை தேர்வு செய்து அவர்களுக்கு இப்படி கொடூரமான முறையில் பயிற்சி தருகிறார்களாம் சீனாவில். இந்த வயதிலேயே இப்படிக் கடுமையாக பயிற்றுவித்தால்தான், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால் இப்படி சித்திரவதைப் பயிற்சியாம்.

முன்பு கிழக்கு ஜெர்மனியில்தான் இப்படி சித்திரவதைக் கூடங்கள் போன்ற பயிற்சிக் கூடங்களில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறு வயதிலேயே மிகக் கடுமையான முறையில் பயிற்சி அளித்து உருவாக்கி வந்தனர். ஆனால் அதேபோன்ற சித்திரவதைப் பயிற்சிக் கூடங்கள் சீனாவிலும் இருப்பதாக தெரிய வந்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது.

ராஜா
31-07-2012, 11:15 AM
GOLD SILVER BRONZE TOTAL

1 China 9 5 3 17
2 United States 5 7 5 17
3 France 3 1 3 7
4 North Korea 3 0 1 4
5 Italy 2 4 2 8
6 South Korea 2 2 2 6
7 Russia 2 0 3 5
8 Kazakhstan 2 0 0 2
9 Japan 1 4 6 11
10 Australia 1 2 1 4
11 Romania 1 2 0 3
12 Brazil 1 1 1 3
12 Hungary 1 1 1 3
14 Netherlands 1 1 0 2
15 Ukraine 1 0 2 3
16 Georgia 1 0 0 1
16 Lithuania 1 0 0 1
16 South Africa 1 0 0 1
19 Colombia 0 2 0 2
20 Great Britain 0 1 2 3
21 Taiwan 0 1 0 1
21 Cuba 0 1 0 1
21 Germany 0 1 0 1
21 Mexico 0 1 0 1
21 Poland 0 1 0 1
21 Thailand 0 1 0 1
27 Azerbaijan 0 0 1 1
27 Belgium 0 0 1 1
27 Canada 0 0 1 1
27 India 0 0 1 1
27 Indonesia 0 0 1 1
27 Mongolia 0 0 1 1
27 Norway 0 0 1 1
27 Moldova 0 0 1 1
27 Serbia 0 0 1 1
27 Slovakia 0 0 1 1
27 Slovenia 0 0 1 1
27 Uzbekistan 0 0 1 1

ராஜா
31-07-2012, 11:18 AM
கொரியர்கள் தலையில் தீ வைக்க சொன்ன ஸ்விஸ் வீரர்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

http://tamil.oneindia.in/img/2012/07/31-michel-morganella-300.jpg

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தென் கொரிய கால்பந்து அணியினரை, மங்கோலாய்ட்ஸ் (Down's Syndrome பிரச்சனை உள்ளவர்கள்) என்று டுவிட்டர் இணையதளத்தில் விமர்சித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா ஒலிம்பிக் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, உடனடியாக போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

ராஜா
31-07-2012, 11:22 AM
'டோப்' அடிச்சுட்டு நீந்தினார் சீனாவின் 'சூப்பர் கேர்ள்'... அமெரிக்கா பகீர் புகார்!

http://tamil.oneindia.in/img/2012/07/31-ye-shiwen-swimming2-300.jpg

சீனாவைச் சேர்ந்த 16 வயதேயான யே ஷிவான் மகளிருக்கான 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். தனது போட்டியின்போது, கடைசி 50 மீட்டர் ப்ரீஸ்டைல் தூரத்தை அவர் 28.93 விநாடிகளில் நீந்திக் கடந்தார். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காரணம், ஆடவர் பிரிவில் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் லோகேட் 29.1 விநாடிகள் தூரத்தில் போட்டி தூரத்தைக் கடந்ததால், சீன வீராங்கனை ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பாரோ என்று அமெரிக்கத் தரப்பு புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் புகாரை யே மறுத்துள்ளார். நான் எந்த ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை. எனது திறமையை மட்டுமே பயன்படுத்தினேன் என்று அவர் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜா
31-07-2012, 11:34 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l2.yimg.com/bt/api/res/1.2/Q9Qf.TcjwarnszgFC3cIAw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTk7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T123256Z_447139544_TB3E87U0YUQ4P_RTRMADP_3_OLY-SHOO-SHM101R-SHM101101.JPG

சென்னை மெரீனா பீச்சுல பலூனைக் குறிதவறாம சுட்டுத்தள்ளும்போது இவர் வயசு ஆறு.. பொறந்தது மே 6, 1983.
இவர் திறமைய கண்ட நைனா, 14 வயசிலேயே ஏர் பிஸ்டல் வாங்கித்தர, ஹைதராபாத்தில் தன் வீட்டு பின்புறத்திலேயே ஷூட்டிங் ரேஞ்ச் அமைச்சு வேலையத் தொடங்கிட்டாரு..

ராஜா
31-07-2012, 11:40 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l.yimg.com/bt/api/res/1.2/U7QMwiJ2J2VAZ9_PRVkgQg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00Mzk7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T124924Z_1377122396_TB3E87U0ZM65H_RTRMADP_3_OLY-SHOO-SHM101R-SHM101101.JPG

போன ( பெய்ஜிங் ) ஒலிம்பிக்குல ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்துல மெடல் கைநழுவிருச்சு.. இருந்தாலும், காமன்வெல்த், ஏஷியாட், ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தார்.. 2008ல புது உலக சாதனைகூட இவர் நிகழ்த்தினார்..

ராஜா
31-07-2012, 11:44 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l2.yimg.com/bt/api/res/1.2/oYbfFwWJQl4Pr9dZ6qBsXw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zMzA7cT04NTt3PTQ1MA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T135813Z_1_CDEE86T12T300_RTROPTP_2_OLY-SHOO-SHM101R-SHM101101.JPG

2011ல மிக உயரிய விருதான ‘ராஜீவ் காந்து கேல் ரத்னா’ கூட இவருக்கு கெடச்சுது..

ராஜா
31-07-2012, 11:48 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l3.yimg.com/bt/api/res/1.2/srZmdPZjZ.cwxanMciJkiw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zOTk7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T122155Z_1690853139_TB3E87U0YCD4B_RTRMADP_3_OLY-SHOO-SHM10R-SHM101101.JPG

2008ல, 10 மீ ஏர் ரைஃப்ள் உலக சாதனையை இவர் நிகழ்த்திய அதே நாளில்தான் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானார்.. அதனாலோ என்னவோ ககனுக்கு ஒபாமாவை ரெம்ப பிடிக்குமாம்..

ராஜா
31-07-2012, 11:52 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l1.yimg.com/bt/api/res/1.2/87ac0ylVCRSjiHus24cyyw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD03NTc7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T124855Z_2144352967_TB3E87U0ZLD5E_RTRMADP_3_OLY-SHOO-SHM101R-SHM101101.JPG

’கன் ஃபார் க்ளோரி’ங்கற பேர்ல துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு பயிற்சிப்பள்ளியை புனேல நடத்துறாரு.

ராஜா
31-07-2012, 11:58 AM
ககன் நரங் - ஒரு சிறப்புப் பார்வை..!

http://l.yimg.com/bt/api/res/1.2/Fyx.USNJgisKZdpng6iUOQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTg7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T124655Z_297034343_TB3E87U0ZI159_RTRMADP_3_OLY-SHOO-SHM101R-SHM101101.JPG

ககன், முதன்முதலா மெடல் அடிச்சது 2006 தோஹா ஏஷியன் கேம்ஸ்ல.. 50 மீ ரைஃப்ள் போட்டில வெண்கலம் கெடச்சுது.. அதுவரைக்கும் வேற இந்தியர் யாரும் மெடல் அடிச்சதில்ல.. (க)கன் ஃபார் க்ளோரி..!

ராஜா
31-07-2012, 03:41 PM
தற்போதைய செய்தி..

பாட்மிண்டனில், பாருபள்ளி கஷ்யப், குத்துச்சண்டையில் தேவேந்த்ரோ இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்..

ராஜா
31-07-2012, 03:46 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l1.yimg.com/bt/api/res/1.2/SNLGFXr8yILCz0LgYSAHvw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00OTM7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T191606Z_1161762945_LM2E87U1HILIA_RTRMADP_3_OLY-EQUE-EQXI3D-EQX003301.JPG

க்ராஸ் கண்ட்ரி ஈக்வஸ்ட்ரியன் - ஜெர்மனியின் மைக்கேல் ஜங் தன் குதிரை சாம் உடன்..

ராஜா
31-07-2012, 03:49 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/eze3tKi2XccwOFSuO7hP4A--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDY7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T192556Z_209730384_LR1E87U1HYX4I_RTRMADP_3_OLY-WEIG-WLM62K-DAY3.JPG

ஆடவர் பளு தூக்குதல், 62 கிலோ பிரிவு. வடகொரிய வீரர் உன் குக் கிம், உலக சாதனையைத் ’தூக்கிய’ உற்சாகத்தில்..

ராஜா
31-07-2012, 03:52 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l2.yimg.com/bt/api/res/1.2/Q7meXCxtlaj.Zh8waDgSjQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDU7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T180514Z_223574871_LM2E87U1E8H6R_RTRMADP_3_OLY-EQUE-EQXI3D-EQX003301.JPG

க்ராஸ் கண்ட்ரி ஈக்வஸ்ட்ரியன் - ஆஸி. வீராங்கனை க்ளேட்டன் ஃப்ரெடரிக்ஸை வீழ்த்திய சோகத்தில் அவரது குதிரை ’பெண்டிகோ’..

ராஜா
31-07-2012, 03:57 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l.yimg.com/bt/api/res/1.2/iXgrwmNclklhnCyJmqflTQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD03NjI7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T163506Z_729312745_LM2E87U1A28QY_RTRMADP_3_OLY-JUDO-JUM73K-JUM073101.JPG

ஆடவர் ஜூடோ - 73 கி. பிரிவு - ஜப்பான் வீரர் ரிக்கி நகாயாவை வீழ்த்திய களிப்பில் ரஷ்ய வீரர் மன்சூர் இசயேவ்..

ராஜா
31-07-2012, 04:00 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l1.yimg.com/bt/api/res/1.2/FjbCaPz4H_Rm3meNjNJmCw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NTU7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/Reuters/2012-07-30T164203Z_2136138276_LM2E87U1ADUSV_RTRMADP_3_OLY-HOCK-HOMHKY-ROUNDS-DAY3.JPG

ஆடவர் ஹாக்கி / இந்திய வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நெதர்லாந்து அணித்தலைவர் சாண்டர் டி விய்ன்..

ராஜா
31-07-2012, 04:06 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l1.yimg.com/bt/api/res/1.2/FQrj.gJBX7eKwNgtk5dqHw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MTc7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/30/149523210-8-jpg_135803.jpg

மகளிர் கைப்பந்து ; சீன அணிக்கெதிராக போராடிப்பெற்ற ஒரு புள்ளிக்காக உற்சாகக் கூச்சல் எழுப்புகிறார் துருக்கி வீராங்கனை கய்டன் கயலர்..

ராஜா
31-07-2012, 04:13 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l1.yimg.com/bt/api/res/1.2/dk4IiT2S2o_hjSbcegQwEw--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zODg7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/30/149521842-8-jpg_135755.jpg

மகளிர் கரப்பந்து ; க்ரோஷிய வீராங்கனை க்றிஸ்டினா முன்னேற்றத்தைத் தடுக்கும் அங்கோலா பெண்மணி..

ராஜா
31-07-2012, 04:17 PM
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

http://l2.yimg.com/bt/api/res/1.2/SepB2FOgXrKf.3sNORnr8A--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zODQ7cT04NTt3PTU5NA--/http://l.yimg.com/os/156/2012/07/30/149523223-8-jpg_135803.jpg

ஆடவர் டேபிள் டென்னிஸ் ; ஆட்ட இடைவெளியில் அணி வீரருக்கு வியூகங்களைக் கற்பிக்கும் சீனப் பயிற்சியாளர்..

ராஜா
01-08-2012, 04:04 AM
குத்துச்சண்டை: தேவந்திரோ சிங் வெற்றி

லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தேவேந்திரோ சிங்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 49 கிலோ லைட் ஃபிளைவெயிட் பிரிவில் பங்கேற்ற தேவேந்திரோ சிங் முதல் சுற்றில் மங்கோலியாவின் பெய்ரான் மொலினாவை சாய்த்து வெற்றி கண்டார்.

ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். இதன்பிறகு அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், தேவேந்திரோ சிங் வெற்றிபெற்றதாக அறிவித்தார். அப்போது தேவேந்திரோ சிங் 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் முதல் சுற்று 2 நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார்.

தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியர் தேவேந்திரோ சிங். முன்னதாக விஜேந்தர் சிங், ஜெய் பகவான் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜா
01-08-2012, 04:05 AM
பதக்கப் பட்டியல்
நாடு தங் வெ வெண் மொ

1 சீனா 10 6 3 19
2 அமெரிக்கா 6 7 5 18
3 பிரான்ஸ் 4 1 4 9
4 தென் கொரியா 3 2 2 7
5 வட கொரியா 3 0 1 4
6 கஜகஸ்தான் 3 0 0 3
7 இத்தாலி 2 4 2 8
8 ஜெர்மனி 2 3 1 6
9 ரஷியா 2 1 4 7
10 ஜப்பான் 1 4 7 12


32 இந்தியா 0 0 1 1