PDA

View Full Version : அடக்கி வைக்கும் காதல்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
04-08-2008, 06:35 PM
சில் வண்டுகளின் ரீங்காரத்தில்
அமுங்கிப் போகும்
சிங்கத்தின் கர்ஜனைகளாய்
என் லொட லொட பேச்சை
உன் ஒற்றை வார்த்தை
முடித்து விடுகிறது.

மணிக்கணக்கான உபாயசஙகள்
உட்புகுத்த முடியா ஞானோதயங்களை
சில இரகசிய காதோதல்கள்
பெற்றுத் தருவதைப் போல்
என் முயலின் மூன்று காலை
இறுக்கிப் பிடித்திருந்தாலும்
ஒவ்வொரு விடை பெறுதல்களின் போது
என் காதை கடித்துச் செல்கையில்
கொள்கைகள் பஞ்சு பஞ்சாய் பறக்கின்றன.

சில தாகங்களை தணிக்கவியலா
பல பான விருந்துகள்
கையாலாகாமால் போகையில்
அதை வென்று காட்டும்
சில காம விருந்துகளைப் போல்
ஒவ்வொரு முறை
நீ குனிந்தெழும் போதும்
உண்ட மயக்கம்
என் தொண்டையை தட்டுகிறது

வாள் முனைகளில் தப்பிப் பிழைத்த
பல இரண களங்கள்
பேனா முனைகளில்
சிக்கி சீரழிவதைப் போல்
என் வட்டாரத்தின் சண்டியனாய்
காலரை தூக்கி விட்டுக்கொண்டாலும்
எப்பொழுதாவது உன் கடிதங்களை
தூசி தட்டி வாசித்து
சொந்த செலவில் சூனியத்தையம்
செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

இளசு
04-08-2008, 06:44 PM
கால்கட்டு, மூக்கணாங்கயிறு....

பலபெயர்கள் உண்டு இதற்கு..

சண்டியரும் ஒடுங்கும் அதிசயம் நிகழ்த்தும் காதல்!

பாராட்டுகள் ஜூனைத்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-08-2008, 08:02 AM
மிக்க நன்றி இளசு அண்ணா