PDA

View Full Version : தேடல் (பால் ராசய்யா கவித்தொடர்)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-08-2008, 12:02 PM
நிமிர வேண்டும் என நினைத்து
வயலில் குனிகிறாள்
நாற்று நடும் பெண்
- ஐரேனிபுரம் பால் ராசய்யா

இளசு
04-08-2008, 12:10 PM
முரண்காட்சிப் பா. நன்று!

இதே திரியில் தொடருங்கள்.. நண்பர் பால் ராசய்யா அவர்களே!


(தொடர்கவிதைகள் பகுதிக்கு நகர்த்துகிறேன்.. நன்றி..)

சிவா.ஜி
04-08-2008, 01:14 PM
நிமிரமுடியுமா...? நிகழ்கால சூழலால் கேள்வி தொக்கி நிற்கிறது. வாழ்த்துகள் ராசய்யா.

poornima
04-08-2008, 01:54 PM
காட்சிப்பா (ஹைக்கூ) சார்ந்த கவிதைகள் உங்களுக்கு நன்றாய்
வருகிறது கருத்தாழத்துடன்

அதிலும் இந்த காட்சிப்பா இளசு அவர்கள் சொன்னதுபோல் முரண்காட்சிப் பா வகைதான்..

இன்னும் தேடல் தொடரட்டும்

Keelai Naadaan
04-08-2008, 04:09 PM
நல்ல கவிதை.

நிமிர வேண்டும்
என நினைத்து தான்
பிள்ளையின் முதுகில்
புத்தக சுமையை
ஏற்றுகிறார்... பெற்றோர்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
05-08-2008, 09:50 AM
உழுத மண்ணில் நீர்!
யாருக்கும் தெரிவதில்லை
நாற்று நடுபவளின்
கண்ணீரும்
அதில் கலந்திருப்பது!
- ஐரேனிபுரம் பால் ராசய்யா

poornima
06-08-2008, 10:50 AM
அன்பு ஐ.பா.ராசய்யா,

அழகு குறும்பாக்கள் உங்களது தேடல்கள்.. கொஞ்சம் திருத்திப்
பாருங்களேன்.. இன்னும் அழகான ஹைக்கூ ஆக்க முடியும் இந்த கவிதைகளை..

உழுத மண்ணில் நீருடன்
நாற்று நடுபவளின்
கண்ணீரும்

என சொல்ல இயலும் எனில் இன்னும் அழகாய்த் தெரியும் உங்கள்
கவிதை என்பது என் தாழமையான அபிப்ராயம்..
தொடரட்டும்தேடல்

Mano.G.
06-08-2008, 04:08 PM
அன்பு ஐ.பா.ராசய்யா,


உழுத மண்ணில் நீருடன்
நாற்று நடுபவளின்
கண்ணீரும்



வளர்ந்தவுடன்
கதிர்களாய்
நட்டவளின் வியர்வையும்


மனோ.ஜி