PDA

View Full Version : விருப்பப்படி - மென்பொருள்..!



ராஜா
04-08-2008, 07:44 AM
விருப்பப்படி மென்பொருள் -

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், எடிட் செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப் பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'எடிட்' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'எடிட்' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(எம்.எஸ் ஆபிஸ், கோரல் ட்ரா, பேஜ் மேக்கர்..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.

கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..


http://www.bhashaindia.com/bishared/images/tamil/Articles/Virupapadi.jpg


குறிப்பாக 'ஆட்டோ கரக்ட்' எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "ஃபான்ட் சாம்ப்ளர்" எனபடும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச் சிக்கல்கள், விசைப் பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான 'ஆட்டோ கரக்ட்' வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது.

மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது யுனிக்கோடிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பபடி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
Source : Basha India.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

poornima
04-08-2008, 08:15 AM
அருமை.. தமிழ் இன்னமும் கணிணியில் விரைவாய் தடம் பதித்து பரவும். சோதனைப் பதிப்பு ஏதும் வந்திருக்கிறதா? அறியத் தந்தமைக்கு நன்றி

rajatemp
04-08-2008, 08:40 AM
மிக்க பயனுள்ளதாக உள்ளது.
ஆனால் இது இலவசமாக தருவதா இல்லை தொகையா என்பதையும் தெரியப்படுத்தவும்.

இதனுடைய இணைப்பையும் கொடுக்கவும்.

ராஜா
07-08-2008, 03:40 AM
http://auw.sarma.co.in/

இங்கு சென்று பாருங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றன.

மயூ
07-08-2008, 04:09 AM
அனைத்தும் ஒரு மென்பொருளில்.. இன்னமும் பயன்படுத்திப் பார்க்கவில்லை.. பார்ப்போம் என்னமாதிரி இருக்கின்றது என்று.

shibly591
07-08-2008, 08:16 AM
பயனுள்ள தகவல்கள்...

முயற்சித்துப்பார்க்கிறேன்..

SS_குமார்
26-08-2008, 02:19 PM
சிறப்பான தகவல் முயற்சிக்கிறேன் .....

tamilambu
26-08-2008, 03:08 PM
http://auw.sarma.co.in/

இங்கு சென்று பாருங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றன.


முயன்று பார்த்தேன். இந்த இணையம் வேலை செய்யவில்லை.

இதே போன்ற வேறொரு மெபொருளும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. பெயர் "வரியுருமா".
ஆனால் அதன் விலைதான் அதிகம். 9,000 இந்திய ரூபாய்.

இந்த மென்பொருள் எப்படி?

ஓவியன்
26-08-2008, 03:11 PM
பகிர்வுக்கு நன்றி அண்ணா, பயன்படுத்திய பின்னர்தான் மென்பொருளின் தன்மை பற்றி கூறுவேன்..!! :)

ராஜா
26-08-2008, 03:23 PM
Virupapadi என்று கூகுள் பண்ணிப்பாருங்க அம்பு..!

அறிஞர்
26-08-2008, 03:28 PM
பலருக்கு பயனுள்ள தகவல்கள்.. நன்றி ராஜா..

tamilambu
26-08-2008, 03:42 PM
Virupapadi என்று கூகுள் பண்ணிப்பாருங்க அம்பு..!

பயனுள்ள தகவல் எதுவும் இல்லை.
இந்த மென்பொருள் தொடர்பில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
ஏதாவது மேலதிக விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

selvamurali
29-08-2008, 08:48 AM
நண்பரே
இந்த விருப்ப்படி மென்பொருளைத்தான் நான் பயன்படுத்துகிறேன்.

இதில் இதுவரை வந்துள்ள தமிழ் எழுத்துருக்களுக்கு தேவையான கீபோர்ஐட் லேஅவுட்கள் உள்ளன.
எதில் மாற்றி எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு தமிழ்99 விசைபலகையை ஒரே நேரத்தில் யுனிகோடுக்கும், அல்லது டாம் முறையிலும் பயன்படுத்தலாம்.
இந்த மாதிரி ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

ஆட்டமேட் ஸ்பெல் செக் வசதியானது நீங்கள் எந்த வகையான மென்பொருட்களை பயன்படுத்தினாலும் அதில் தானாகவே சரி செய்யப்பட்டு விடுகிறது.

பாண்ட் அனலைசர் என்ற மென்பொருளானது மிகவும் பயனுள்ளது.

என்ன வகையான எழுத்துரு என்றே தெரியாதவர்கள் இந்த மென்பொருளில் சோர்ஸ் என்ற இடத்தில் இட்டுவிட்டு டெஸ்டினேசன் என்னும் இடத்தில் நமக்கு தேவையான எழுத்துருவை கொடுத்துவிட்டால் போதும்., நமக்கு தேவயான எழுத்துருக்கு வந்துவிடும்

இந்த மென்பொருளின் விலை அதிகமில்லை ரூ.1500 என்று நினைக்கிறேன்.....

praveen
02-09-2008, 04:34 AM
இந்த மென்பொருளின் விலை அதிகமில்லை ரூ.1500 என்று நினைக்கிறேன்.....

இப்படி ஒரு பணத்திற்கு விற்பனை செய்யப்படும் மென்பொருள் பற்றி மன்றத்தில் பதிவது அதற்கு விளம்பரம் செய்வது போல ஆகாதா?.

பொதுவாக இலவச மென்பொருள் பற்றி தானே இங்கே தெரிவிக்க வேண்டும்?!:confused:.

anna
14-11-2008, 01:00 PM
பயனுள்ள தகவல் தான் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் பற்றி சொன்னால் இன்னும் பயனளிக்கும்.