PDA

View Full Version : VB 6 ல் யுனிகோட்??



rajatemp
04-08-2008, 07:29 AM
VB 6 ல் யுனிகோட் தமிழ் பயன்படுத்த முடியுமா ? ???
நமது Project களில் உள்ள லேபிள் மற்றும் டெக்ஸ்ட் பாக்ஸில்
தெரிந்தவர்கள் விளக்கவும்.
நன்றி

poornima
04-08-2008, 08:07 AM
வருக நண்பரே

முதலில் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பின்னர் இங்கு வந்து
கேட்பது நலம் நண்பரே..

அடுத்து உங்கள் கேள்வி
தாராளமாய் பயன்படுத்தலாம்.வில்லை மற்றும் கட்டளை பெட்டிகளில் (Label and Command Button)பயன்படுத்துவது எளிதுதான்.உயர் நிலை நிரல்கள் எழுதும்போது மட்டும் பயன்பாட்டு நிரல்முறைமை இடைமுகம் (Application Programming Interface - API ) உதவி தேவைப்படும்.

rajatemp
04-08-2008, 08:14 AM
தங்கள் பதிலுக்கு நன்றி

நான் தற்போது பாமினி பயன்படுத்துகிறேன் சரியாக வருகிறது.

ஆனால் யுனிகோட் பயன்படுத்தும் போது கேள்விக்குறி ? மட்டுமே வருகிறது விளக்கவும்.

poornima
04-08-2008, 08:18 AM
முறைப்படியான ஒருங்குறி அமைப்புகளை கட்டுப்பாட்டு பலகையில் செய்து (Control Panel - Font ) முதலில் இதர எழுத்துரு செயலிகளில் (Word Processor - Write , MS Word) தமிழ் நன்றாய் பிரச்னையின்றி தெரிகிறதா என பாருங்கள்.அங்கு எல்லாம் பிரச்னை இல்லை எனில் இங்கும் பிரச்னை இருக்காது.நன்றி

செல்வா
04-08-2008, 08:40 AM
எனக்குத் தெரிந்தவரை நேரடியாக vb 6 text box ல் ஒருங்குறி பயன்படுத்த இயலாது. ஏதாவது third part tools இருக்கிறதா எனத் தேடிப்பாருங்கள்.
கேள்வியைத் தாண்டிய ஒரு அறிவுரை : நீங்கள் புதிதாக உருவாக்குவதாக இருந்தால் ஏன் vb6 பயன்படுத்துகிறீர்கள். vb.net பயன் படுத்தலாமே. ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் மென்பொருள் என்றால் வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தால் சொல்கிறேன்.

rajatemp
04-08-2008, 08:52 AM
vb.net ம் பயன் படுத்துகிறேன். அதில் சரியாக வருகிறது.
விபியில் வருமா என்று தெரிந்து கொள்ளவே.
ஏனெனில் vb.net ஐ விட vb வேகமாக வேலைசெய்யும் அல்லவா

க.கமலக்கண்ணன்
04-08-2008, 09:02 AM
யுனிக்கோடை பொறுத்தவரை VB.NET ல் தான் முழுமையாக உபயோகப்படுத்த முடியும் VB யில் முடியாது...

உதயசூரியன்
05-08-2008, 11:15 AM
எனக்கு மென்பொருள் பற்றி அறிய ஆவல் தான்..
தாங்கள் அனைவரும் பேசுவது என்ன என்று புரியவில்லை...
எனினும் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

சிவா.ஜி
05-08-2008, 11:39 AM
"பயன்பாட்டு நிரல்முறைமை இடைமுகம் (Application Programming Interface - API )"
அருமையான தமிழ் சொற்களைப் பயண்படுத்தியிருக்கிறீர்கள் பூர்ணிமா. பாராட்டுகள்.

poornima
05-08-2008, 01:59 PM
நன்றி திரு.சிவா.. கணிணியில் தமிழ் நாம் தமிழ்வளர்ப்பது போல் கணிணி பற்றியும் தமிழ் வளர்ச்சிக்கு இதுபோன்று நடைமுறை படுத்தத் துவங்கி இருக்கிறேன்

பென்ஸ்
05-08-2008, 02:04 PM
நன்றி திரு.சிவா.. கணிணியில் தமிழ் நாம் தமிழ்வளர்ப்பது போல் கணிணி பற்றியும் தமிழ் வளர்ச்சிக்கு இதுபோன்று நடைமுறை படுத்தத் துவங்கி இருக்கிறேன்

நல்ல செயலுக்கு வாழ்த்துகள்...
மன்றம் வந்து உங்களை போல் தமிழ் பிரியர்களிடம் இருந்தே என் தமிழார்வம் வளர்ந்தது என்றால் மிகையில்லை.

க.கமலக்கண்ணன்
09-08-2008, 02:39 PM
நன்றி திரு.சிவா.. கணிணியில் தமிழ் நாம் தமிழ்வளர்ப்பது போல் கணிணி பற்றியும் தமிழ் வளர்ச்சிக்கு இதுபோன்று நடைமுறை படுத்தத் துவங்கி இருக்கிறேன்

வாழ்த்துக்கள் தோழி உங்களின் தமிழ் ஆர்வத்திற்கு

poornima
10-08-2008, 10:25 AM
மதிப்பிற்குரிய பென்ஸ் - கமலக்கண்ணன் நட்புகளுக்கு,

உங்களது வாழ்த்துகளால் இன்னும் உற்சாகம் பெற்றேன்

இன்று கற்ற இன்னொரு வார்த்தை.

Graphical Designer - வரைகலை வரைவாளர்.