PDA

View Full Version : இலங்கையில் சார்க் மாநாட்டின் போது இப்படியும் நடந்ததுpasaam
04-08-2008, 04:23 AM
:fragend005: இலங்கையில் சார்க் மாநாட்டு கூட்டம் முடிந்ததும் எல்லோரும் வெளியேறி விட்டனர். ஆனால் இந்திய வெளியுறவுச் செயலர் திரு நாராயணனுக்கென ஒதுக்கப்பட்ட வாகனமோ அன்றி பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ யாரும் வரவில்லை. தனிமையில் விடப்பட்ட திரு நாராயணன் தனியார் வாடகைக் காரில் தாஜ்சமுத்திரா ஓட்டலைச் சென்றடைந்தார்.

:icon_rollout: இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் தன் இருப்பிடத்துக்கு திரும்ப ஆயத்தமானார் இந்திய பிரதம மந்திரி. ஆனால் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் அங்கில்லை. அதிர்ச்சியடைந்த பிரதமரின் ஏனைய அதிகாரிகள் பின்னர் இந்தியப் பிரதமரை அழைத்துச் சென்றனர். இதை அறிந்த இலங்கை ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் இன்றைய தினசரிகள் எல்லாவற்றிலும் இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பாசம்.
தமிழ் எநந்தன் உயிருக்கும் மேல்

aren
04-08-2008, 04:49 AM
இது எப்படி சாத்தியமாகும். இந்தியாதான் சார்க் குழுவின் மிகப்பெரிய நாடு. ஆகையால் இந்தியாவின் பிரதம மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு நிச்சயம் இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கவேண்டும்.

இது அஜாக்ரதையினால் வந்ததாகத் தெரியவில்லை, அதிகபிரசங்கித்தனத்தால் வந்திருக்கவேண்டும்.

அன்புரசிகன்
04-08-2008, 05:22 AM
இதைவிட இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. இந்தியப்பிரதமரின் வாகன சாரதி திடீர் என காணாமல் போக பின்பு இந்திய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் வாகனத்தை செலுத்த சற்றுநேரத்தின் பின்பு வந்த அந்த சாரதி வாகனத்தை ஓடித்துரத்தி சென்றிருக்கிறார்.

அவர் சென்று பிரதமரின் வாகனக்கதவை தட்டியிருக்கிறார். அதற்குள் இலங்கைப்படையினர் விரைந்து சென்று அந்த சாரதியை பிடித்துள்ளனர்.

ஓவியன்
04-08-2008, 05:25 AM
இன்னும் ஒரு கூத்து நடந்திருக்கு, நேபாளப் பிரதமர் கெய்யராலா கால் தடக்கி விழுந்திருக்கிறார்...

அகத்தியன்
04-08-2008, 05:32 AM
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாரிக்கே........ :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

பூமகள்
04-08-2008, 06:32 AM
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாரிக்கே........ :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:
"விளையாட்டாக சிரித்தல்" என எல்லா இடங்களிலும் எடுத்துக் கொள்ள முடியாது அகத்தியன் அவர்களே..

இவ்விடத்தில் சொல்லப்பட்ட செய்தியும்.. பரிமாறப்பட்ட செய்தியும் மரியாதை அற்ற போக்கைச் சாடவே அன்றி சிரிக்க அல்ல..!:mad:

ஒரு முக்கிய தலைவருக்கு உகந்த பாதுகாப்பு இல்லாமல் போவதும்.. ஒரு பிரதமர் தடுக்கி விழுவதும்.. நகைப்புக்குரிய விசயம் அல்ல..!:mad:

புரிதலை நாடும்,

அகத்தியன்
04-08-2008, 06:40 AM
"விளையாட்டாக சிரித்தல்" என எல்லா இடங்களிலும் எடுத்துக் கொள்ள முடியாது அகத்தியன் அவர்களே..

இவ்விடத்தில் சொல்லப்பட்ட செய்தியும்.. பரிமாறப்பட்ட செய்தியும் மரியாதை அற்ற போக்கைச் சாடவே அன்றி சிரிக்க அல்ல..!:mad:

ஒரு முக்கிய தலைவருக்கு உகந்த பாதுகாப்பு இல்லாமல் போவதும்.. ஒரு பிரதமர் தடுக்கி விழுவதும்.. நகைப்புக்குரிய விசயம் அல்ல..!:mad:

புரிதலை நாடும்,


எனது சிரிப்பு அவர்களின் சங்கடங்களுக்காக அல்ல.

இலங்கையின் மாநாட்டு ஒழுங்கு குளறுபடிகளுக்காக..

எப்போதும் புரிதலுடன் நடக்கும்

இவன்:icon_b: :icon_b: :icon_b:

பூமகள்
04-08-2008, 06:43 AM
நல்லது..!!

சில வேளைகளில் படிப்பவருக்கு வேறு விதத்தில் புரியும் வாய்ப்பு அதிகம் அமைந்துவிடுகிறது..

புரிதலோடு நடக்கும் உங்கள் பண்பு கண்டு மகிழ்ந்தேன்..!!

தெளிவான விளக்கத்துக்கு நன்றிகள்.

அகத்தியன்
04-08-2008, 06:49 AM
இவர்களின் சார்க் குளறுபடிகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு இதோ...http://bp2.blogger.com/_dSjWyO0FKMc/SJalfGxiInI/AAAAAAAAAEI/oEcA7U4QUx4/s400/saarcnorticeboardsea4.pnghttp://bp0.blogger.com/_dSjWyO0FKMc/SJale9yRdVI/AAAAAAAAAEA/ma047V2G3AU/s400/saarcboardtf0qx6.pngஇது போல் இன்னும் பல.


அதுக்குத்தான் அந்த சிரிப்பு..

ரொம்ப நொந்த பூவூக்கு ஒரு கூல் ட்ரிங்க் குடுங்கப்பா

உதயசூரியன்
04-08-2008, 06:59 AM
இது ரொம்ப கொடுமைங்க..
வாழ்க தமிழ்

aren
04-08-2008, 08:13 AM
17வது சார்க் மாநாட்டையும் அவர்களே தலைமையேற்று நடத்துவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னோட்டமோ என்னவோ?