PDA

View Full Version : மீன் மகத்துவம்



mgandhi
03-08-2008, 06:17 PM
மீன் மகத்துவம்



மீன்கள் உள்ள உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டால் இதய நோய் வரும் வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். ரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் சேர்வதால் பெரும்பாலானவர் களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஸ் (omega3 fatty acids) என்னும் வேதிப்பொருள் மீன்களில் அதிகம் உள்ளது. இது கொலஸ்டிரால் ரத்தக் குழாய்களில் சேர்வதை தடுக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு. ஜப்பானியர்கள் பொதுவாக தங்கள் உணவில் அதிக அளவு மீன்களை சேர்த்து கொள்வார்கள். இதனால் அமெரிக்காவில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது ஜப்பானியர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதய நோய் வராமல் தடுக்க மீன் சாப்பிடுங்கள்.

sadeekali
27-09-2008, 02:22 AM
அன்பர்களே… அது இது என்று சொல்லி மட்டன் சிக்கன் என்று ஆரம்பிச்சு பிச்சு உதரிக்கிட்டு இருக்கிர அய்யரை மீனையும் திங்க வச்சுடாதையா. அப்புறம் நமக்கு கிடைக்காது.

துளசி
10-02-2009, 09:25 PM
சிகப்பிறைச்சிகளை விட மீன் உடலுக்கு நல்லது. ஊட்டச்சத்தும் அதில் அதிகம்தான். சிறுவயதில் வீட்டில் வாரம் இரண்டுமுறை மீன்ணெண்ணை கொடுப்பார்கள். கணகளுக்கு வலிமை சேர்க்கும் என்றும் கூறுவார்கள். R.மோகன் காந்திக்கு நன்றி.