PDA

View Full Version : மானுட மனிதங்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2008, 06:08 PM
குட்ட குட்ட
குனிந்து கொடு

எட்டி உதைக்க
ஏதுவாய்
இசைந்து கொடு

திட்டித் தீர்த்து
வற்றிப் போன தொண்டைகளுக்கு
பானம் ஊற்றிக் கொடு

உன்னை வறுத்தெடுக்க
தங்களை வருத்திக் கொண்ட
எதிராளியின் உறுப்புகளை
இதமாய் அழுத்திக் கொடு

சிதைத்தல்களில்
விடுபட்டுப் போன
அங்கங்களை ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டுக் கொடு

உனக்காய் பாவப்பட்டு
பரிந்துரைக்கிறேன் பேர்வழியென்று
வரிந்து கட்டி வரும்
நாலுபேரிடம் சொல்லி விடு
இது என் சொந்த விஷயமென்று

எல்லாம் கழிந்து போன
பிறிதொரு நாளின்
அலுவலில்லா பொழுதுகளில்
மறக்காமல் அழைப்புக் கொடு
விடுபட்டுப் போன
பழி தீர்த்தல்களை
மீண்டும் தொடர்ந்து கொள்ள

இப்படித்தான் விதைக்கபட்டிருக்கின்றன
மானுட மனிதங்கள்
தன்னைச் சிதைத்து
சார்ந்தவனையும் சிதைக்கும்
அனுகுண்டுகளாய் அல்லாமல்
தன்னை உருக்கி
சார்ந்தவனை பிரகாசிக்கும்
மெழுகுவர்த்திகளாய்
சுடர்விட்டொழிந்து போன
சில மனித புனிதர்களால்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

பென்ஸ்
03-08-2008, 07:00 PM
ஹஸனி...

ஒரு கன்னத்தில் அறிந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....
அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ...????

எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்....

மீண்டும் மீண்டும்.... எது வரை....

மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம்ம், எல்லைவரை.

குடிகார, சாடிஸ்ட் கணவனிடம் இத்தகைய அன்பு வீண் அல்லவா..!!!!
உயிரை குடிக்கும் சைக்கோபாத் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..!!!

துஷ்டனை கண்டால் தூர விலகலாமோ...!!!!

கவிதை இனிமை...நன்று....

சிவா.ஜி
04-08-2008, 04:16 AM
மொத்தத்தில் பேடியாய் இரு!

நாகரா
04-08-2008, 04:58 AM
குட்ட குட்ட
குனிந்து கொடு

எட்டி உதைக்க
ஏதுவாய்
இசைந்து கொடு

திட்டித் தீர்த்து
வற்றிப் போன தொண்டைகளுக்கு
பானம் ஊற்றிக் கொடு

உன்னை வறுத்தெடுக்க
தங்களை வருத்திக் கொண்ட
எதிராளியின் உறுப்புகளை
இதமாய் அழுத்திக் கொடு

சிதைத்தல்களில்
விடுபட்டுப் போன
அங்கங்களை ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டுக் கொடு

உனக்காய் பாவப்பட்டு
பரிந்துரைக்கிறேன் பேர்வழியென்று
வரிந்து கட்டி வரும்
நாலுபேரிடம் சொல்லி விடு
இது என் சொந்த விஷயமென்று

எல்லாம் கழிந்து போன
பிறிதொரு நாளின்
அலுவலில்லா பொழுதுகளில்
மறக்காமல் அழைப்புக் கொடு
விடுபட்டுப் போன
பழி தீர்த்தல்களை
மீண்டும் தொடர்ந்து கொள்ள

இப்படித்தான் விதைக்கபட்டிருக்கின்றன
மானுட மனிதங்கள்
தன்னைச் சிதைத்து
சார்ந்தவனையும் சிதைக்கும்
அனுகுண்டுகளாய் அல்லாமல்
தன்னை உருக்கி
சார்ந்தவனை பிரகாசிக்கும்
மெழுகுவர்த்திகளாய்
சுடர்விட்டொழிந்து போன
சில மனித புனிதர்களால்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

இருதய ஆழத்தில் ஊன்றிய
தெள்ளிய மன இதத்தொடு
மனிதமாய் எழு!

குனிதலும் குட்டலும்
எட்டி உதைத்தலும்
அதற்கு இசைதலும்
திட்டித் தீர்த்தலும்
அதைச் சகித்தலும்
சிதைத்தலும்
சிதைதலும்
பழி தீர்த்தலும்
பழி ஏற்றலுமாகிய
வன்பின்
இருண்ட இருமையிலிருந்து
விடுபட்டு
அன்பின்
தெருளாம் ஒருமைக்குள்
எழு!

இருள் சேர் இருவினையாய்
விதைக்கப் பட்டவைகளை
அருள் விளங்கும் அறிவால்
அறிவு இயக்கும் ஆற்றலால்
வேரோடு பிடுங்கி
பொருள் சேர் புகழ் புரியும்
இறைவனாய் எழு!

இருண்ட இருமைச் சுழலின்
மருட்டும் மாயைப் பொய்யை
சுடச்சுடச் சுடரும் ஒருமையாம்
அன்பறிவாற்றலால் பொசுக்கி
என்றும் அழியாத
மெய்யருட்சித்தனாய் எழு!

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பா விளக்கமாய் அமைந்திருக்கும் உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஹஸனீ. என் பின்னூட்டக் கவிதையில் நவயுகமாம் இஞ்ஞான யுகத்தின் பரிணாமப் பாய்ச்சலைக் காட்டியுள்ளேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
04-08-2008, 07:38 AM
மொத்தத்தில் பேடியாய் இரு!

நம்முடைய பேடித்த்னம் நாலு பேர் நெஞ்சில் ஈரம் வார்க்குமென்றால் அதுவும் போற்றுதலுக்குரியது என்று நினைக்கிறேன். தவறாக இருப்பின் விளக்கம் தரவும் சிவா அண்ணா.

சிவா.ஜி
04-08-2008, 07:50 PM
அஹிம்ஸா தத்துவம் இன்று வழக்கொழிந்து போய்விட்டது ஜுனைத். கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக்கூட்டத்தினரிடமும் நான் கருணைக் காட்டினால்...அது பேடித்தனம் தானே?

“எட்டி உதைக்க
ஏதுவாய்
இசைந்து கொடு”

இந்த வரிகளைப்போல உள்ள உங்கள் கவிதையின் ஏனைய வரிகளிலும் எனக்கு உடன்பாடில்லை.

அன்பு ஜுனைத்....வெட்டுபவன் மனிதனாய் இருந்தால் அவன் முன் மண்டியிடலாம், மிருகமாய் இருந்தாலும் இரக்கத்தை எதிர்பார்க்கலாம்...ஆனால் குரூரர்களிடம் எப்படி குணிந்து போவது. ஒன்று விட்டு விலகு, இல்லையேல் முட்டி மிதித்துவிடு. இதுவும் நான் சொன்னதில்லை. முண்டாசுக்கவிஞன் சொன்னதுதான்.

இளசு
04-08-2008, 09:47 PM
பொறுமை கடலினும் பெரிது Vs அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு..
தானத்தில் சிறந்தது நிதானம் Vs பாத்திரம் அறிந்து பிச்சையிடு..

இரக்கமும் மன்னிப்பும் அஹிம்சை போதித்தலும் Vs
விலகலும் தடுத்தலும் அழிவை அழித்தலும்..

இடம், பொருள், ஏவலுக்கேற்ப
ஏந்துபொருள்: புறா Vs அம்பு!
ஜூனைத் Vs சிவா அணுகல்..!

நாகரா
05-08-2008, 03:17 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற திருக்குறளையும் நினைவுறுத்தி மனதை உறுத்தி இருதய துவாரம் திறக்கிறது உம் கவிதை, வாழ்த்துக்கள் ஹஸனீ.

ஒழிந்து போனதாய்த் தோன்றும்
ஆனால் இன்றும் நம்மை வழி நடத்தும்
அச்சில மனித புனிதர்களால் தான்
இவ்வையகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சில பலவானால்
மண் சொர்க்கமாகும்.

அந்நாள் என்று வரும்?

வெகு விரைவில், நாம் வன்பை விட்டு அன்பில் நிற்கும் போது.

மீண்டும் நல்லதோர் கவிக்கு நன்றி ஹஸனீ.