PDA

View Full Version : தேடல் கவிதைகள் - 1

poornima
03-08-2008, 03:16 PM
மொட்டவிழ்ந்த
பூவாய் விரியும்
பொக்கை வாய்
சிரிப்புகளிலும்..

பிய்த்துபோட்ட
இறகுகளாய்
குண்டுவெடிப்பு
கோரங்களில்
சிதறிக்கிடக்கும்
உடல் துணுக்குகளிலும்..

தேடலை
பால்யத்திலும்
பருவத்திலும்
முதுமையிலும்
கண்டுணர முயற்சிப்பதிலும்

இளமைத் தினவுகள்
தின்னும் இரவுகளுக்கு
விடிவென்ன
என்று தேடி
முயற்சிப்பதிலும்

மாறி மாறித்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான கடவுளையும்
யாவருக்குமான
சாத்தானையும்...

இளசு
04-08-2008, 12:20 PM
துருவ முரண்கள் சிதறி இருக்கும் உலகம்..
மழலைச் சிரிப்பும், சிதறிய உடல் துணுக்குமாய்..

பிறப்பும் இறப்பும் அருகருகே
இறையும் சாத்தானும் எனக்குள்ளே..

ஊசலாடும் மனதை படம் பிடித்த கவிதை!

மனித வாழ்வின் உச்ச அழகும் அதிசயமும் - இந்த முரண்தொகுப்பே..

வாசித்தவுடன் என்னையும் கவி எழுதத்தூண்டும் படைப்பு..

விரைவில் எழுதி, தேடலைத் தொடர்வேன்..

வாழ்த்துகள் பூர்ணிமா...!

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-08-2008, 12:26 PM
பூர்ணிமா,

இந்த உலகில்
சுவாசிக்க மட்டும்
தேடல் தேவையில்லாமலிருக்கிறது
இல்லையா?

இளமைத் தினவுகள்
தின்னும் இரவுகளுக்கு
விடிவென்ன?

நல்ல நயமான வரிகள்
-ஐரேனிபுரம் பால் ராசய்யா

poornima
04-08-2008, 01:48 PM
துருவ முரண்கள் சிதறி இருக்கும் உலகம்..
மழலைச் சிரிப்பும், சிதறிய உடல் துணுக்குமாய்..

பிறப்பும் இறப்பும் அருகருகே
இறையும் சாத்தானும் எனக்குள்ளே..

ஊசலாடும் மனதை படம் பிடித்த கவிதை!

மனித வாழ்வின் உச்ச அழகும் அதிசயமும் - இந்த முரண்தொகுப்பே..

வாசித்தவுடன் என்னையும் கவி எழுதத்தூண்டும் படைப்பு..

விரைவில் எழுதி, தேடலைத் தொடர்வேன்..

வாழ்த்துகள் பூர்ணிமா...!

மன்றமெங்கும் நிறைந்திருக்கும் இளசு அவர்களின் கருத்துத் தூறல்களுடன்
இந்த கவிதையும் தனக்கான தூறலை பெற்று விட்ட பெருமையில்
பூரிக்கிறது.

உங்களது தேடல் சர்வநிச்சயமாய் எல்லோரையும் கவர்ந்திழுக்க வைக்கும்.சிந்திக்க வைக்கும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி பின்னூட்டத்திற்கும் அதில் உள்ள பொன்னான வார்த்தைகளுக்கும்

poornima
04-08-2008, 01:52 PM
பூர்ணிமா,

இந்த உலகில்
சுவாசிக்க மட்டும்
தேடல் தேவையில்லாமலிருக்கிறது
இல்லையா?

இளமைத் தினவுகள்
தின்னும் இரவுகளுக்கு
விடிவென்ன?

நல்ல நயமான வரிகள்
-ஐரேனிபுரம் பால் ராசய்யா

எல்லோருக்குமான விதவிதமான தேடல்கள்.தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்பது பிரபலமான பாடல் வரி.

வந்து படித்தமைக்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி ஐ.பா.ராசய்யா
அவர்களே..

தீபா
04-08-2008, 02:15 PM
அட சகோதரி... பின்னுகிறீர்களே!!! (கூந்தலையல்ல.)

தேடல்.... எனக்குப் பிடித்த தமிழ் வார்த்தை.

தேடல் எங்கிருக்கிறது? நமக்குள்ளே!

துண்டு துண்டாக மடித்து நம்முள் செறுகி வைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே கிளறி மனக்காகிதத்தை விரிக்கத் தெரிந்தவர்களுக்கு
வாய்க்கப்படும் தேடலின் சூக்குமம்.

எனக்கான மிருகம் உள்ளேயே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
வெளிப்படுத்த முடியாத அதீதம் ஏதோ ஒன்று தடை செய்து அனுபவத்
தேடலுக்கு முட்டுக்கட்டையிடவைக்கிறது. அது என் இளமையைக்
கொன்றுவிட்டது. இது இச்சையின் பால் விளைந்த தேடல்.

உள்ளார்ந்த இறைவனைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறேன்.
தேடலின் வலை விரிந்து பிரபஞ்சம் முட்டியது. அது என் இளமையை
இறுதிக்குக் கொண்டு சென்றது. இறுதிவரையிலும் முதுமையை நான் தேடவே இல்லை... இது என்னவகைத் தேடல். முதிர்ச்சியா?

தேடல்... அது என்னருகே நின்றுகொண்டு கைகொட்டி சிரிக்கிறது.. நானறியாமல்.........

Keelai Naadaan
04-08-2008, 03:52 PM
மாறி மாறித்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான கடவுளையும்
யாவருக்குமான
சாத்தானையும்...
இருவருமே எதிரில் வராமல் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். நல்ல கவிதை.

poornima
05-08-2008, 07:19 AM
துண்டு துண்டாக மடித்து நம்முள் செறுகி வைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே கிளறி மனக்காகிதத்தை விரிக்கத் தெரிந்தவர்களுக்கு
வாய்க்கப்படும் தேடலின் சூக்குமம்.

வாரே வா.. அழகான பார்வை உங்களுடையது

எனக்கான மிருகம் உள்ளேயே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
வெளிப்படுத்த முடியாத அதீதம் ஏதோ ஒன்று தடை செய்து அனுபவத்
தேடலுக்கு முட்டுக்கட்டையிடவைக்கிறது. அது என் இளமையைக்
கொன்றுவிட்டது. இது இச்சையின் பால் விளைந்த தேடல்.

எல்லோருக்குள்ளுமாய் இந்த மிருகம் இருக்கிறது. சிலர் உள் மனத்தை
உற்றுப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

உள்ளார்ந்த இறைவனைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறேன்.
தேடலின் வலை விரிந்து பிரபஞ்சம் முட்டியது. அது என் இளமையை
இறுதிக்குக் கொண்டு சென்றது. இறுதிவரையிலும் முதுமையை நான் தேடவே இல்லை... இது என்னவகைத் தேடல். முதிர்ச்சியா?

உள்ளார்ந்த இறைவனைத் தூண்டிவிட்டு...
மிக இரசித்தேன் இந்த வரிகளை.. மிருகம் வேறு பக்கத்திலிருக்கிறதே..
வெல்லப் போவது எது என்று தேடுவதிலேயே கரைந்து விடுகிறது
இளமை.. வயதுக்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறது.முதுமையை ஒப்புக் கொள்வதேயில்லை நாம்.

தேடல்... அது என்னருகே நின்றுகொண்டு கைகொட்டி சிரிக்கிறது.. நானறியாமல்.........

if u are search of anything that is nearest u.. (ஆங்கிலத்துக்கு மன்னிக்க) இந்த வாக்கியம் ழான் பார்த்தோவோ யாரோ சொன்னது.. நினைவில்லை.ஆங்கிலத்தில் பிழையிருந்தாலும் அது என்னுடையதே..

நன்றி தென்றல்.. இங்கு வந்து வீசியமைக்கு...

poornima
05-08-2008, 07:21 AM
இருவருமே எதிரில் வராமல் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். நல்ல கவிதை.

ஆம்.. யாருடைய ஆதிக்கம் அதிகம் வெளிப்படுகிறதோ அப்போது தான் துவங்குகிறது மனிதனின் நடிப்பு ஆன்மீகத்தில் அல்லது அரசியலில் அல்லது இன்னபிறவற்றில்..

நன்றி நண்பர் கீழை நாடனுக்கு..

shibly591
05-08-2008, 07:48 AM
மாறி மாறித்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான கடவுளையும்
யாவருக்குமான
சாத்தானையும்...

மிக அருமையான தேடல் வரிகள்

கவிதை முடியும் போது முகத்தில் சில அறைகள் விழுகின்றன...

தொடர்க...

poornima
05-08-2008, 08:03 AM
கவிதை முடியும் போது முகத்தில் சில அறைகள் விழுகின்றன...

ஆம்.ஆனால் ஒருவரும் அறியாமல் தடவிவிட்டுக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம்.. உள்ளே இருப்பதன் பயங்கரமும் - படு அமைதியும் அறியாதவாறு