PDA

View Full Version : ஒடும் ரயிலில் தயக்கமின்றி பாலூட்டிய தாய்மார்கள்!



அகத்தியன்
03-08-2008, 12:42 PM
ஒடும் ரயிலில் தயக்கமின்றி பாலூட்டிய தாய்மார்கள்!
நியூயார்க் (ஏஜென்சி), 2 ஆகஸ்டு 2008 ( 14:09 IST )

நியூயார்க்கில் ரயில் ஒன்றில் பயணிகள் கூட்டத்துக்கிடையே 25-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டினர்.

தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை, உடன் வந்த பயணிகள் பலரும் பார்ப்பதைத் தவிர்த்தனர்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், இதற்காக பொது இடத்தில் கூட எவ்வித தயக்கத்தையும் காட்டக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவுமே, நியூயார்க் தாய்மார்கள் இவ்வித முறையைக் கையாண்டனர்.

"உங்களது மதிய உணவுக்காக, சாப்பாட்டு பையை நீங்கள் சுமந்து செல்லும்போது, என்னுடையை குழந்தை தனது உணவை அருந்தக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பினார், ஒரு குழந்தையின் தாயார்.

உலக தாய்ப்பால் வாரம் நேற்று (ஆக.1) தொடங்கியது. குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த, உலக நாடுகள் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக அளவிலான எண்ணிக்கையில், 40 சதவிகிதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கே, பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் புகட்டப்படுகிறது என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

தாய்ப்பால் புகட்டும் கலாச்சாரத்தை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கடைப்பிடிக்கச் செய்வதே, முழுமையான மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் என்றார், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரேட் சான் கூறினார்.

மேலும், குழந்தை பிறந்தது ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகப்பட்டப்படுவது மட்டுமின்றி, முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து அளிப்பதோடு, 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் புகட்டுவதற்கு அனைத்துத் தாய்மார்களுக்கும் உதவிட வேண்டியது கட்டாயம் என்று அவர் தனது அறிக்கையில் அறிவுறுத்தினார்.

(மூலம் - வெப்துனியா)